மணி ஐந்தடித்தது...,
ஒவ்வொருத்தராக வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள். நிர்மலா இன்னும்
கம்ப்யூட்டருக்குள் தலையை விட்டுக்கிட்டு இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்ட
லதா, நிர்மலாவின் கேபினுக்குள் சென்றாள்.
நிர்மலா, மணி ஐந்தடிச்சிடுச்சுப்பா.எல்லாரும் போறாங்கப்பா
ம்ம்ம், பார்த்தேன் பார்த்தேன்..,
ஏய், கிளம்புப்பா, இன்னிக்கு லவ்வர்ஸ்டே... எனக்காக என் ஹப்பி
காத்திக்கிட்டு இருப்பார்.
சரி, நீ கிளம்புறதுன்னா கிளம்பு யார் வேண்டாம்ன்னு சொன்னாங்க.
ஏய் என்னடி ஒரு மாதிரி பேசுற. இன்னிக்கு லவ்வர்ஸ்டே மட்டுமில்லைடி.
உன்னோட பிறந்தநாளும் கூட. உனக்கு நினைவில்லையா?
ம்ம்ம் இருக்கு இருக்கு. ஸோ வாட்?
என்னது ஸோ வாட்? என்னடி ஒரு மாதிரியா பேசுற. நீ முதல்ல எழுந்திரு. நாம
கெளம்புலாம். போற வழில பேசிக்கிட்டே போகலாம்ன்னு நிர்மலாவை ஆபீஸை விட்டு கூட்டி வருவதற்குள் லதாவுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
ஏன்? என்னாச்சு? இன்னிக்கு லவ்வர்ஸ்டே. கூடவே உன் பொறந்த நாளும்கூட
உனக்கு. திருமணமாகி மூணு மாசம்தான் ஆகியிருக்கு. தனித்தனியா இந்த மூணும் வந்திருந்தாலும் இதுதான் சாக்குன்னு கொண்டாடுவாங்க நியூலி மேரிடு கப்பிள்ஸ். உனக்கு மூணும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கு செலிபரேட் பண்ணாம ஆபீசுக்கு வந்திருக்கே. காலைல இருந்தே நீ சரியில்லை. முகமே வாட்டமா இருந்துச்சு. காலையிலேயே கேட்கனும்ன்னு நினைச்சேன். வொர்க் லோட் அதிகமா இருந்ததால் பேச முடியலை. ம் ம் சொல்லு என்ன உன் பிரச்சனை?
என்னன்னு சொல்றது.நீ சொல்றதுப் போல இன்னிக்கு மூணு ஸ்பெஷலும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கே. நல்லா செலிபரேட் பண்ணனும்ன்னு நானும் ஒரு வாரமாவே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், அவர் என்ன ஏதுன்னு கண்டுக்கலை. சரி, சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு நைட் 12 அடிக்கும்போது எதாவது கிஃப்ட் தந்து விஷ் பண்ணுவாருன்னு தூங்குறமாதிரி நடிச்சுக்கிட்டு ஆசையோடு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ம்ஹூம் நான் நினைச்சமாதிரி ஏதும் நடக்கலை. கும்பகர்ணனோட வாரிசுபோல தூங்கறார்.
ஐயோ, அப்புறம்...,
காலையில விஷ் பண்ணுவாருன்னு என்னை நானே தேத்திக்கிட்டு தூங்கிட்டேன்.நான் எந்திரிக்குறதுக்கு முன்னாடியே எந்திரிச்சு, டைனிங்க் டேபிள்ல லெட்டர் எழுதி வச்சுட்டு ஆபீஸ் போய்ட்டார். இந்த டைம் வரைக்கும் போன் பண்ணி விஷ்ஷும் பண்ணலை சாரியும் கேட்கலை. ஒரே வெறுப்பா இருக்குப்பா.
ம்ம்ம். சந்துரு ஏன் இப்படி நடந்துக்குறார். நான் ஒண்ணு கேட்பேன். உண்மையை சொல்வியா நிர்மலா?
ம்ம் கேளு லதா.
உனக்கும், சந்துருக்கும் ஏதும் சண்டையா?
அப்படிலாம் ஏதுமில்லைப்பா. அப்படி இருந்தால் உன்கிட்ட சொல்லியிருப்பேனே.
சந்துரு வீட்டுல இருந்தால் எதாவது பேசிக்கிட்டு சீண்டிக்கிட்டும், கொஞ்சிக்கிட்டும் இருப்பார். நேத்து நைட்ல இருந்துதான் சைலண்டா இருக்கார். என்ன காரணம்ன்னும் தெரியலை. ரெண்டு நாளா சீரியஸா ஏதோ திங்க் பண்ணிக்கிட்டே இருக்கார். இந்த ரெண்டு நாளில் நான் சந்துருவை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.
சரி சரி அழாதேப்பா. கண்ணை தொடைச்சுக்கோ எல்லாரும் பார்க்குறாங்க பாரு. அவனுக்கு என்ன பிரச்சனையோ? தெரியலையே. இன்னிக்கு ஏதும் கேட்காதே. அப்புறம் பர்த்டேதான் உனக்கு முக்கியமா போச்சான்னு கத்துவான். நாளைக்கு கேட்டுக்கோ. ஓக்கே. மனசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காம தெளிவா இரு. எனக்கு பஸ் வந்துட்டுது. நான் வரேன். பை நிர்மலா.
குட்பை ப்பா.ன்னு சொல்லிவிட்டு மனம் அமைதிப்பட நடந்தே வீடு வந்து சேர்ந்தாள். தன்னிடமிருந்த சாவியால் பூட்டை திறந்து உள்ளே சென்று ஆயாசமாய் சோஃபாவில் விழுந்தவள் அப்படியே தூங்கி போனாள்.
ஹேப்பி பர்த்டே டூ யூ..., ஹேப்பி பர்த்டே டூ யூ நிர்மலா ந்னு சத்தம் கேட்டு எழுந்தவளை வாரி அணைத்தவனை கோபத்துடன் தள்ளி விட்டாள். இந்த பாழாப்போன விஷ்ஷை காலையிலேயே சொல்றதுக்கென்ன? நான் எப்படி ஏமாந்துப்போனேன் தெரியுமாடா? மறந்துட்டு இப்போ ஆசை இருக்குற மாதிரி நடிக்குறியா? என்று காலையில இருந்து தேக்கிவைத்த ஏமாற்றத்தை கோவமாய் கொட்ட தொடங்கினாள்
நிர்மலா குட்டி கோச்சுக்காதடா. என் செல்லத்தோட பர்த்டே வை மறப்பேனா? உன் பர்த்டே, அதுவும் இருபத்தைந்தாவது, அதலயும் லவ்வர்ஸ்டே அன்னிக்கு
வந்திருக்கு. அதானால இந்த ஸ்பெஷல் டேவை நம்ம வாழ்நாள் முழுக்க மறக்க கூடாதுன்னு ஒரு வாரமா பிளான் பண்ணவனை இப்படிலாம் பேசலாமா டார்லிங்.
”அப்படி பிளான் பண்ணி என்னத்தை கிழிச்சே” என்றாள் சற்றும் கோவம் குறையாமல்...,
சர்தான் போடி நானும் எவ்வளவோ கெஞ்சுறேன். என்னமோ பெரிய இவளாட்டம் முறைச்சுக்கிட்டு இருக்கியே, நீயெல்லாம் பொறந்து என்னத்த சாதிச்சே.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் போய்டுச்சு. மானே, தேனே, தேவதைன்னு கொஞ்சிட்டு இப்போ பொறந்து என்ன சாதிச்சேன்னா கேட்குறே. இந்த ஆம்பிளைங்களே இப்படிதாண்டா.
ஆமாண்டி, என்னத்த பண்ணி தொலைக்குறது. கல்யாணம் ஆன புதுசுல எல்லா
ஆம்பிளங்களும் செய்ற அதே தப்பைதான் நானும் செஞ்சு தொலைச்சேன். அதான் இப்படி தலை மேல ஏறி உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடுறே. தலை வலிக்குது. போய் காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வாடி
ம்க்கும், இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும். நீயே போய் போட்டு குடிடா.
ம்க்கும், இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும். நீயே போய் போட்டு குடிடா.
ஏய், என்னடி வாய் நீண்டுக்கிட்டே போகுது. ஒரு அறை விட்டேன்னா நாலு
நாளைக்கு எந்திரிக்க மாட்டே. பொறந்த நாளாச்சேன்னு பார்க்குறேன்ன்னு
ஓங்கிய கையை மடக்கியவனை பயத்துடன் பார்த்துக்கொண்டே சமையலறைக்குள் போனவளை,
ஏய், சனியனே! நீ இப்போ கட்டி இருக்குறது நான் வாங்கி குடுத்தது. விலை
2,750 ரூபாய். கிச்சனுக்கு போய் அதை பாழாக்காதே. போய் நைட்டி மாத்திக்கிட்டு வந்து காஃபி போட்டு குடு.
என்ன ஆச்சு இவனுக்கு என்று எண்ணி வியந்தவாறே பெட்ரூமுக்குள் சென்றவளை தொடர்ந்து வந்தவன் சட்டென்று இழுத்து ஆக்ரோஷமாய் முகம் முழுக்க முத்தமிட்டவன்...,
உன் இருபத்தைந்தாவது பிறந்த நாளுக்காக இருபத்தைந்து பூக்களால் செய்த
”பொக்கே” இந்தா என்று முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை நீட்டினான். இருபத்தைந்து ரக ஸ்வீட், இருபத்தைந்து டிரெஸ்ன்னு எல்லாமே இருப்பத்தைந்தாக பரிசா தரனும்தான் ரெண்டு நாளா அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேண்டி என் அருமை பொண்டாட்டி. பொக்கே வரதுக்குதான் லேட்டாகிடுச்சு அதுக்குள்ள இந்த குதி குதிக்குறியேடி கேணை கிறுக்கச்சி.
போடா, என்று சினுங்கியவளின் உதடுகளில் அவன் இட்ட தாய் முத்தம்
இருபத்தைந்து குட்டி முத்தங்களை பிரசவித்து ஓய்ந்தது.
டேய் பொறுக்கி, என்னை காலைல இருந்து அலைக்கழிச்சதுக்காக உனக்கு தண்டனை தரப்போறேண்டா.
சொல்லுங்க மகாராணி, என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று நாடக பாணியில் குத்துக்காலிட்டு அமர்ந்தவனிடம்
“உன் மீசை குத்தி என் கன்னம் சிவக்கும்வரை நீ முத்தமிட்டு கொண்டே
இருக்கனும்” என்றாள் குறும்பாக.
அடிப்பாவி, இப்போதானேடி ஷேவ் பண்ணேன் என்று அப்பாவியாய் கூறிக்கொண்டே முத்தமிட தொடங்கினான்...,
21 comments:
முதல் வடை
சிறுகதை நல்லா இருக்கு.
என்னாச்சு...? கதை பெரிய டிவிஸ்ட் எதும் இல்லாம சப்புனு இருக்கு.பழைய ஃபார்முலா.
இருப்பினும் எழுத்து நடை ஓகே...க்ரைம் கதை எதிர்பார்க்கிறேன்..சஸ்பென்ஸ்,திரில்லர்..அப்புறம் குட்டி கதைகள் சுஜாதா பாணியில் எழுதுங்க...!
இப்படிக்கு-உண்மையான விமர்சகன்...
சிறுகதை நல்லா இருக்கு.
பாதி தண்டனையை எனக்கும் தரசொல்லுங்க மாப்பு....
Kadhainu solli joke yeazhudhi erukkinga CPS Sir?
K.ANANDAN
B.PALLIPATTI.
ஊடலுடன் கூடலைக் கேட்டு ஆனந்தமாவது சுகம்..சுகம்...சுகம்!
: ))
நல்லா இருக்கு.14ஆம் தேதி வெளியிட்டிருக்கலாமே!
அருமையான குட்டிகதை
வணக்கம் சி.பி சார்!கடல் அலை வந்து ஹார்ட்டை அழிச்சிடாது?கொஞ்சம் தூரமா கீறிப்புட்டு போட்டோ புடிக்கிறது தானே?சரி,சரி கதை நல்லாருந்திச்சு,கங்கிராட்ஸ்!
14-th february?????
மாப்ள தமிழ்மணத்தில் ரெண்டவது ஓட்டு...
சண்டையில் ஆரம்பித்து,சந்தோஷமாக முடித்துவிட்டீர்களே. கதை நன்றாக இருக்கு.
பரவாயில்லையே? அறுபது வயசுல கூட இந்த மாதிரி இளமையா கதை எழுத வருதே உங்களுக்கு :-))
அண்ணே இன்னைக்கு தான் பிப்ரவரி ஆரம்பம்... அதுக்குள்ள காதலர்தினம் ஸ்பெஷல் ஆரம்பமா?
கதை சந்தோஷம்....
அட நல்ல தண்டனையாக இருக்கே கொடுத்தா இப்படி கொடுக்கனும் தண்டனை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல சிறுகதை பாஸ் தொடர்ந்து இப்படி சில கதைகள் எழுதுங்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கு
வணக்கம் பாஸ்,
சான்ஸே இல்லை!
25வது பொறந்த நாள் கொண்டாடி அனுபவித்தவர் போல எழுதியிருக்கிறீங்க.
உங்களுக்கும் கூர் மீசை இருக்கில்லே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல எழுத்து நடை!
கொஞ்சம் திருப்பம் கலந்து காதல் கனி ரசம் ஊற வைத்திருப்பது அருமை.
சிறுகதை நல்லாநல்ல சிறுகதை
வாவ் ... சூப்பரான கதை. அனுபவிச்சு எழுதின மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.
ரொம்ப அருமையா இருக்கு.. செந்தில் ஜி... ஹி ஹி ஹி...........
Post a Comment