Friday, February 24, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (24.2.2012) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

போன வாரம் மாதிரி இந்த வாரம் பெரிய படங்களோ, எதிர்பார்ப்புக்குரிய படங்களோ ரிலீஸ் ஆகலை.

http://www.tamilcinemalive.com/wp-content/uploads/2011/10/kaadhal-paadhai-posters-004.jpg


1. காதல் பாதை - என் நெருங்கிய நண்பர் பாடல் ஆசிரியர் கம் உதவி இயக்குநர் முருகன் மந்திரம் 4 பாடல்கள் எழுதிய  படம்.. இவர் ஏற்கனவே  தேநீர் விடுதி படத்தில் பாடல்கள் எழுதியதோடு இசை அமைப்பாளர் கம்  இயக்குநர் எஸ் எஸ் குமரன் அவர்களிடம் உதவி இயக்குநராக ஒர்க் பண்ணியவர்

ஸ்ரீபாலாஜி பிரேம்ஸ் சார்பில் தங்களது முதல் படைப்பாக "காதல் பாதை" என்ற படத்தை தயாரிக்கின்றனர். புதுமுகம் வினோத்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், ரஞ்சனா, நீலிமாராணி, நெல்லை சிவா, சுமன் ஷெட்டி ரேணிகுண்டா கில்லி, தீக்குச்சி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


http://moviegalleri.net/wp-content/gallery/kaadhal-paadhai-audio-launch-pictures/kaadhal_paadhai_audio_launch_1849.jpg


இளம்வயதில் ஏற்படும் காதலால் ஹீரோ-ஹீரோயின் சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை. புதிய பாதை படம் போல், இப்படத்தையும் வெற்றி படமாக்கும் முனைப்போடு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் வியாஸ். எஸ்.எஸ்.குமரன் இசையமைக்க, ரவிசீனிவாஸ் ஒளியூட்ட, சிவா எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீ பாலாஜி பிரேம்ஸ் சார்பில் வென்ராஜ் தயாரிக்கிறார்.

தமிழ்நாட்டில் கொடைக்கானலில் துவங்கி, ஐதராபாத், சார்மினா வழியாக சென்று ஆக்ரா, தாஜ்மஹால் வரை சூட்டிங் நடத்தியுள்ளனர்.  ஈரோடு அண்ணா தியேட்டரில் ரிலீஸ்..

http://g.ahan.in/tamil/Kaadhal%20Paadhai%20Stills/Kaadhal%20Paadhai%20(44).jpg

 இந்தப்படத்துக்கான போஸ்டர் டிசைனும் முருகன் மந்திரம் அவர்களே... 

2. விருதுநகர் சந்திப்பு - ஒரு கல்லூரியில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், "விருதுநகர் சந்திப்பு". புதுமுகங்கள் சந்துரு, கேரள அழகி தென்னா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSd4o_tmuH8u4vqqXq1OeHhDR4qzG5oCxNaCGgTLhhGuquE2V5uCRZ8elLFDNjg_q0Vb7B2dSW8AoBxL7oQNaciw_ICs5edIybx03be98FX_1xhXO9ZHx4H2vnoOgv3BJUzwvVoTle5ZQ2/



 விருதுநகரை சேர்ந்த ராஜானந்த் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் பொன்னம்பலம், முத்துக்காளை, காதல் சுகுமார், நெல்லை சிவா, ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். சஞ்சய் நிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு எல்லாவற்றையும் கவனித்து இருக்கிறார் வி.எஸ்.டி.ரெங்கராஜன்.


 ஏ.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது. சென்னை, விருதுநகர், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய இடங்களில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்

http://www.cinespot.net/gallery/d/649393-1/Virudhunagar+Sandhippu+photos+_54_.jpg
 3.மதனா? மன்மதனா? -
madhana-manmadhana-preview
ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ப்ளீஸ் சாரி தேங்க்ஸ்’ என்ற தெலுங்கு படத்தினை, தமிழில் மொழிமாற்றம் செய்து ‘மதனா மன்மதனா’ என்ற பெயரில் கோகுல் ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. 


இந்த படத்தில் ஆதித்யா, வந்தனா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். நீரஜ் ஒளிப்பதிவு செய்ய, ராஜசேகர் இசையமைத்து இருக்கிறார். எஸ்.எஸ்.நிவாஸ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ஆர்.பி.பாலா தமிழில் வசனம் எழுதியிருக்கிறார்.


இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் கதாநாயகனை, அதே அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் காதலிக்கிறாள். ஆனால் நாயகன் அவளுடைய காதலை ஏற்க மறுத்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.


தனக்கு கிடைக்காத கதாநாயகன், இன்னொருத்தியுடன் மகிழ்ச்சியாக இருக்க்கூடாது என்று நினைக்கும் அப்பெண், அவனுடைய முதல் இரவை நடக்க விடாமல் சதி செய்கிறாள்.


தனக்கு நேரும் பிரச்சினைகளை கதாநாயகன் எவ்விதம் எதிர்கொள்கிறான். அவனது மனைவியுடன் நிம்மதியாக குடும்பம் நடத்தினானா? என்பதை திடீர் திருப்பங்களுடன், கவர்ச்சி கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.



madhana-manmadhana1
இப்படத்தில் வரும் முதலிரவு காட்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்குமாம். அது மட்டுமின்றி, கணவன், மனைவி இருவரும் எவ்விதம் இல்லறத்தை போற்ற வேண்டும் என்பதை இப்படத்தில் முக்கிய கருத்தாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தை 20 நாட்களூக்கு முன் சென்னை சென்றிருந்த போதே பார்த்துட்டேன், பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரீவ்யூ ஷோ.. முதலிரவே வா வா படம் போல் இதுவும் செம காமெடி படம்.. போஸ்டர் தான் முன்னே பின்னே இருக்கும்.. ஆனா நல்ல நகைச்சுவைப்படம் .ஈரோடு பள்ளிபாளையம் கவுரியில் ரிலீஸ்




  http://www.kollytalk.com/wp-content/gallery/madhana-manmadhana-audio-launch-stills/madhana-manmadhana-audio-launch-7.jpg
4. GHOST RIDER - 2  -  SPIRIT OF  VENDEANCE  -  நிக்கோலஸ் கேஜ் நடிச்சு 2011இல் ரிலீஸ் ஆன படம்.. ஏனோ ரொம்ப லேட்டா இப்போதான் தமிழ் நாட்ல ரிலீஸ் ஆகுது..  பேய் மாதிரி ஒரு தீய சக்தியிடம் இருந்து ஒரு சிறுவனை காப்பாற்றும் ஹீரோவின் கதை.. படம் ஃபாரீன்ல ஹிட்.. இங்கே எப்படி?ன்னு தெரில.. ட்ரெயிலர் நல்லாருந்தது.. ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

http://www.dramastyle.com/images/3/3/Ghost-Rider-Spirit-Of-Vengeance_8007_poster.jpg

12 comments:

Unknown said...

படங்களுக்கு சேசன் ச்சே சீசன் டிக்கட் வாங்கி வைத்து பார்க்கப்போகும் அண்ணனுக்கு ஒரு “ஓ” போட்டேனுங்க!

ராஜி said...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை. சிபி சார் சினிமா வேட்டை ஆரம்பமாகிடுச்சு.

rajamelaiyur said...

உங்களை நம்பிதான் தமிழ் பட உலகமே இருக்கு

rajamelaiyur said...

//

Blogger விக்கியுலகம் said...

படங்களுக்கு சேசன் ச்சே சீசன் டிக்கட் வாங்கி வைத்து பார்க்கப்போகும் அண்ணனுக்கு ஒரு “ஓ” போட்டேனுங்க!
//
நானும் ...

rajamelaiyur said...

என்ன கொடுமை
இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?

Admin said...

ஆமாம்..எதிர்பார்த்தபடி படங்கள் இல்லையாதலால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாரற்றம்தான்..ஆனாலும் சிறு படங்கள் வெற்றியடையட்டும்.

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் இன்னும் 2 நாட்களில் வந்துவிடுமா??

Yoga.S. said...

என்னமோ சொல்லி கிலி புடிக்க வச்சுடுங்க!அப்புறமா................!(ஒண்ணுமே இருக்காதுன்னு சொல்ல வந்தேன்)

Yoga.S. said...

RAMVI said...

விமர்சனம் இன்னும் 2 நாட்களில் வந்துவிடுமா??///ரெண்டு மணி நேரம் கழிச்சு வாங்க!

Yoga.S. said...

3.மதனா,மன்மதனா வுக்கு மேல இருக்கிற பிகர் பேரு என்ன?

bandhu said...

ghost rider 2 got released only last week in the US (17th February 2012)

ஹாலிவுட்ரசிகன் said...

எதைப் பார்ப்பது??? சிறு படங்களிலும் நன்றாக இருக்கும் படங்கள் இருப்பதால் சீக்கிரம் விமர்சனங்களைப் போடுங்கள் சி.பி.