Saturday, January 21, 2012

UNDERWORLD -4 AWAKENING - ஹாலிவுட் ஆக்‌ஷன் பட விமர்சனம்

http://scifimafia.com/wp-content/uploads/2012/01/Underworld-Awakening-IMAX-Poster-2.jpg

நம்ம தமிழ் நாட்ல 3 தீய சக்திகள் இருப்பது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் படத்தோட கதையை விளக்க ஒரு முறை மீண்டும் ஞாபகப்படுத்திக்கலாம்..நாடு எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை.. இங்கே இருக்கற தமிழனும் சரி , இலங்கைல இருக்கற ஈழத்தமிழர்களும் சரி எப்படியோ போகட்டும் தானும், தனக்குப்பிறகு தன் குடும்பமும் சாரி குடும்பங்களும் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கற கலைஞர் மாதிரி  வேம்ப்பயர் குரூப் ஒரு பக்கம்.. எல்லா ஊழல்களும், தப்பும் ஒண்ணா சேர்ந்து பண்ணிட்டு கோர்ட் , கேஸ், பிரச்சனை, தண்டனைன்னு வர்றப்ப தோழியை கழட்டி விட்டு எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இன்சிடெண்ட் நல்ல தங்காள் ஆன புரட்சித்தலைவி மாதிரி லைகான் குரூப் இன்னொரு பக்கம், தமிழ் நாட்டில் ஜாதி பிரச்சனையை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைக்கும் ராம்தாஸ் மாதிரி அயோக்கியர்கள் மாதிரி மனிதர்கள் ஒரு குரூப்னு இந்த படத்துல மொத்தம் 3 குரூப் இருக்கு..

வேம்ப்பயர் குரூப்ல இருந்து வந்தவதான் ஹீரோயின்.. இவங்களுக்கு 13 வயசுல தமனாவுக்கு தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு.. அந்த பொண்ணை வேம்ப்பயர்ல அடுத்த கிரேடு மாதிரி இருக்கற லைகான் குரூப் தேடுது.. அவங்க கிட்டே இருந்து அந்த பொண்ணை காப்பாத்த ஹீரோயின் ஒரு போலீஸ் ஆஃபீசர் உதவியோட பண்ற போராட்டம் தான் இந்த படம்.

படத்துல மொத்தம் 178 கேரக்டர்ஸ்.. அதுல 160  பேரை டமால் டுமீல்னு சுட்டு கொல்றாங்க..  எத்தனை கேஸ் போட்டாலும் அசராம ஆஜர் ஆகற புரட்சித்தலைவி மாதிரி  கேட் பெக்கின்சேல்  சூப்பர் விமனா நடிச்சிருக்காங்க.. சாரி சூப்பர் வேம்ப்பயர்.. அவங்க விஜய சாந்தி மாதிரி தெனாவெட்டான நடை, அதிரடி ஆக்‌ஷன்னு பார்க்க நல்லா தான் இருக்கு.. ஒரு கட்டத்துல போர் அடிச்சுடுது..


http://wgtccdn.wegotthiscovered.netdna-cdn.com/wp-content/uploads/underworld_awakening_little_girl.jpg

ஹீரோயினின் பெண்ணா வர்ற சுட்டிப்பொண்ணோட நடிப்பு ஓக்கே ரகம். ஆனா டாக்டரோட ரத்தத்தை அந்த பொண்ணு கடிச்சு உறிஞ்சறதெல்லாம் ஓவர் உவ்வே... ரத்தத்தை காட்றதுலயே நளினம் வேண்டும்.. இந்த படம் எப்படி எல்லாம் ரத்தத்தை காட்டக்கூடாது என்பதற்கு ஒரு உதாரண பாடம் கம் படம்..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. நம்மை யோசிக்கவே விடாமல் பர பரவென நகரும் திரைக்கதை, அதிரடி சண்டைக்காட்சிகள் ஹீரோயின், ஹீரோயின் பெண் கேரக்டர் நடிப்பு..

2. ரொம்ப சோதிக்காம ஒண்ணே கால் மணி நேரத்துல படத்தை முடிச்சது..

http://ak.c.ooyala.com/xpMTNiMzp6NqtMYxCYp7xhqUz2Qn2Uml/promo151183322



இயக்குநர் இடம் சில கேள்விகள் - சும்மா காமெடிக்கு


1.  எங்க கேப்டன் மட்டும் தான் லெக் ஃபைட் போடவும் ஓடி வந்து ஸ்லோ மோஷன்ல சுவர்ல காலை வெச்சு கிக் கொடுக்கவும் ஆல் இந்தியா பர்மிட் எடுத்திருக்காரு.. அப்படி இருக்க ஹீரோயின் அதுவும் ஒரு வேம்ப்பயர் எப்படி அந்த மாதிரி ஃபைட் எல்லாம் போடலாம்?

2.  வேம்ப்பயர்னாலே சூர்ய வெளிச்சத்துல பஸ்பமாகிடுவாங்க. ஆனா ஹீரோயின் ஒரு சீன்ல சொல்றாங்க. நான் ஸ்பெஷல், அப்டி சன் லைட் என்னை பாதிக்காதுன்னு சொல்றாங்க.. அவங்க என்ன அப்படி ஸ்பெஷல்? வேம்ப்பயர் அவங்க?

3.  வெற்றி விழா படத்துல கமல் பழசை எல்லாம் மறக்கற மாதிரி 12 வருஷங்களுக்கு முன்னால நடந்த மேட்டரை எல்லாம் ஹீரோயின் மறந்துடறாங்க.. மனுஷனுக்குதான் அந்த வியாதி.. பேய்க்குமா?

4.  படத்துல  வர்ற 2 பேயுமே நல்லா பறக்கறாங்க.. 80 மாடிக்கட்டடத்தை சர்வ சாட்தாரணமா தாண்டறாங்க, ஆனா ஒரு சேசிங்க் சீன்ல வேன்ல டிரைவ்.. ஏன்? பறந்தே போலாமே? பெட்ரோல் செலவு மிச்சம்//

5.  ஒரு சீன்ல வேம்ப்பய்ர் ஆன பேய் ஹீரோயின் அழுது அய்யோ பாவம் .. விட்டா சோகப்பாட்டு கூட பாடும் போல.

6.  வேம்ப்பயர் பொண்ணா வர்ற சின்ன பேய் ஏன் எப்பவும் ஒயிட் & ஒயிட் சுடிதார்ல யே எப்பவும் இருக்கு?



7.   ஒரு சீன்ல  லைகான் ரக பேய் ராட்சச உருவம்  எடுக்குது.. அப்போ குறுகலான ஒரு சந்து வந்ததும் உள்ளே நுழைய முடியாம அவஸ்தைப்படுது.. ஏன் பழைய படி சின்ன உருவம் எடுத்து உள்ளே போய்க்கலாமே?

8.  இது சும்மா கலாய்ப்பதற்காக - ஹீரோயின் ஒரு சீன்ல  ஏவாள் போஸ்ல இருக்காங்க, அந்த டைம் பார்த்து லைட்டிங்க் அடிச்சு எல்லாத்தையும் ஏன் மறைச்சுட்டீங்க? டைரக்டர், ஃபோட்டோ கிராஃபர் , ஹீரோ எல்லாரும் நைஸா பார்த்துக்கிட்டீங்க? 50 ரூபா டிக்கெட் எடுத்த ஆடியன்ஸ் பார்க்கக்கூடாதா என்னங்கடா நியாயம் ? ஹி ஹி


http://beflicky.com/uploads/gallery/1281.jpg
 ரசித்த வசனங்கள்

1.  நீ வேலைக்கு சேர்ந்து எத்தனை நாள் ஆச்சு?

3 மாசம்..

இது வேற பிரச்சனை.. உனக்கு இது புரியாது, அமைதியா வேடிக்கை மட்டும் பாரு.

2.  ஏய்.. டோண்ட் சவுட்..

ஏன்?

ஏன்னா நானும் உங்க இனம் தான்..  ( நாய் தான் சத்தம் போடும் பேயும் கூடவா? )

3.  உன் பேரென்ன?

சப்ஜெக்ட் 2..   உன் பேரென்ன?

 சப்ஜெக்ட் 1 ( வேம்ப்பயர்ங்க கூட சிலபஸ் ஆகிடுச்சு போல அவ்வ்)

4.  அது மனித இனத்தை சேர்ந்ததும் இல்ல.. உன் குழந்தையும் இல்ல. அப்புறம் ஏன் பாசம் கட்டுறே?

5. நான் எதுக்காக போராடுறேன்னே இப்போ எனக்கு தெரியலை..

தயவு செஞ்சு யாரும் படத்துக்கு போயிடாதீங்க, தலைவலி தாங்கலை. முதல் 3 பாகங்களை விட ரொம்பவே மொக்கை..

ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்..

13 comments:

மன்மதகுஞ்சு said...

கனடாவிலிருந்து அக்கா நேத்து கேட்டா, தம்பி Underworld -4 Awakening வாந்திருக்கு நாளைக்கு பார்க்கபோறோம் ,நீ பார்ட்த்திட்டியான்னு..இல்லக்கா நம்ம சிபி அண்ணா விமர்சனம் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் ,அதுக்கு பிறகு பார்க்கலாம்,ஏன்னா இங்கிலிசு படம் பார்க்கும் போது ஒரு மண்ணூம் விளங்காது அண்ணணொட விமர்சனம் பார்த்திட்டா கதையே புரிஞ்சிடும் ..அப்போ நாளைக்கு படத்தை பார்த்திடவேண்டியதுதான்

ராஜி said...

விமர்சனத்திற்கு நன்றி

sutha said...

padam, vimarsanam ok ok

Astrologer sathishkumar Erode said...

விமர்சனத்தை ஆர்வமா படிச்சிக்கிட்டிருக்கப்பவே இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள் பகுதி ஆரம்பிச்சிருது.இந்த பகுதியை நீக்கிவிட்டு,விமர்சன பக்தியை அதிகபடுத்தலாம்.. வசனம் பகுதி மட்டும் அதுவும் 5,6 இருந்தா போதும்.

ம.தி.சுதா said...

என்னடா சீபி ஆரம்பத்திலேயே அரசியலில ஆரம்பிக்கிறாரே என பார்த்தால் நல்ல விடயத்தை தான் சுட்டியிருக்கிறார் நன்றி சீபி...

ம.தி.சுதா said...

தற்போது தங்களின் விமர்சனப்பதிவுகளுக்கு மடடுமே வர முடிகிறது என் நிலமை புரியும் தானே சீபி...

ம.தி.சுதா said...

நாம இநதப்படம் எப்ப பார்க்கிறதோ தெரியாது சீபி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்

ஹாலிவுட்ரசிகன் said...

அரசியலையும் படத்தையும் கோர்த்த விதம் சூப்பர். மிகவும் அருமையான விமர்சனம். நன்றி சி.பி.

ஹாலிவுட்ரசிகன் said...

// வேம்ப்பயர்னாலே சூர்ய வெளிச்சத்துல பஸ்பமாகிடுவாங்க. ஆனா ஹீரோயின் ஒரு சீன்ல சொல்றாங்க. நான் ஸ்பெஷல், அப்டி சன் லைட் என்னை பாதிக்காதுன்னு சொல்றாங்க.. அவங்க என்ன அப்படி ஸ்பெஷல்? வேம்ப்பயர் அவங்க? //

அவுங்க Underworld 3ல Alexandar எனும் அழியாத பவர் பெற்ற (Immortal) ரத்தத்தை குடிப்பாங்க. அது அவங்களுக்கு sunlightல பஸ்பமாகுற வீக்னஸ்ஸ இல்லாம பண்ணிரும்.

Unknown said...

இங்கிபீசு பட விமர்சனம்...ஆனா போக வேணாம்னு சொல்ராரு...அப்போ இவரு மட்டும் எதோ பாத்திட்டாரு டோய்!

ramaaaaa.... said...

boss padam nalla thane irukku...collection padam thane

Anonymous said...

படம் பார்க்காமல் நான் தப்பிவிட்டேன்.

நிரூபன் said...

நான் செவாய்க்கிழமை இப் படத்தினைப் பார்க்கப் போகிறேன்.
விமர்சனத்தினை நம்ம தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிட்டு கலாய்த்திருப்பது சூப்பர்.