Saturday, January 07, 2012

நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன்  சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..


நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.


சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு.




இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.


சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.



சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்


நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு... 


நக்கீரனில் வந்த செய்தி...



19 comments:

முத்தரசு said...

ஹா ஹா ஹா ஹா அட வேற என்ன கருமத்தை சொல்ல..

கும்மாச்சி said...

நக்கீரனுக்கு வேலூரா? பாளயங்கோட்டையா விரைவில் தெரிய வரும்.

ராஜி said...

ம் ம் ம் ம்

துரைடேனியல் said...

அருமையான அரசியல் பதிவு. வாழ்த்துக்கள். ஈரோட்டிலும் உருவபொம்மை கொளுத்தினார்களாமே சிபி சார். என் நண்பர் சொன்னது. அரசியலைப் பற்றி நிறைய எழுதுங்கள் சார்.

வீட்டில் எல்லாரும் நலம்தானா?.

த ஓ 4.

கோவை நேரம் said...

அடடா...ரொம்ப வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு...இந்த பதிவுல தான் அதிகமா போட்டோ போட்டு இருக்கீங்க ...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

அம்மா கட்சி, கொஞ்சம் மனித நேயத்தோடு ஊடக சுதந்திரத்தை கருத்திற் கொண்டு நக்கீரன் மீது சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். இது கொஞ்சம் ஓவரான மேட்டரா இருக்கே.

ஜயந்தன் said...

நக்கீரன் ரொம்ப மோசம் சார்.. இலங்கைல இருக்கிற எனக்கே அடிக்க தோணுது உங்களுக்கு தோணலையா? போடுற நியூஸ் முழுக்க தப்ப போடுவாங்க இல்லை எண்டா கருனாநிதிய புகழ்ந்து போடுவாங்க.. கனிமொழிய எதோ தியாகி மாதிரி எல்லாம் எழுதினாங்க...

Unknown said...

மெல்லுற வாயில அவுலைப் போட்டாலே மென்னு மென்னு முழுங்குவீங்க...
இப்ப அல்வா..கிடைச்சிருக்கு...கிண்டி கிளப்புங்க CP!

சரியில்ல....... said...

சீரியஸ் மேட்டர்.
சிரியஸ் சிபி கமெண்ட்.

rajamelaiyur said...

Nakkeran endralay paraparapu than. . . .(nama nai. .naks sir pola)

Unknown said...

நக்கீரனின் தரம் நித்தியின் வீடியோவை வைத்து காசு பண்ணும்போதே நாறிவிட்டது! அனேகமாக இப்ப பத்திரிக்கைக்கு முடிவு கண்டுவிடுவார்கள்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

புராண நக்கீரன் உண்மைக்காக கடவுளிடம் நியாயம் கேட்டார். இன்றைய நக்கீரன் அநியாயத்தையும் ஆபாசத்தையும் உண்மை என்று சாதிக்கிறார்

கடம்பவன குயில் said...

உண்மையை திரித்து எழுதுபவர்களெல்லாம் நக்கீரர்கள் ஆக முடியுமா???

உண்மைக்கு வாதிட்ட சங்க கால நக்கீரன் எங்கே, பொய்க்கும் அநியாயத்துக்கும் போலித்தனத்துக்கும் பெயர்போன தற்கால நக்கீரர் எங்கே??

Unknown said...

தலைப்பில்...ஜாதிரீதியான தாக்குதல் நடத்தியிருப்பது..என்ன ஊடக சுதந்திரமோ? அதுவும் ஒரு மாநில முதல்வரை...

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!மொத்தம் நாலு பதிவு இதுவரைக்கும் பாத்துட்டேன்.இன்னும் எத்தனை வரப்போகுதோ????

Anonymous said...

நக்கீரன் பதிரிக்கையின் மேல் மக்களுக்கு நம்பிக்கை போய் பல வருடாங்கள் ஆகி விட்டது, பண்ம் ஒன்றுக்காக எவ்வள்வு கீழ் தரமாகவும் செல்வார்கள்.

Manimaran said...

ஹி ஹி இதுக்கு போயி கோவப்பட்டா எப்படி??? 'ஜெ' வப்பத்தி நல்லாத்தானே எழுதியிருக்காங்க... ஜானகியவிட எம்ஜியாருக்கு 'ஜெ' தான் ரொம்ப நெருக்கம்னு...இன்னொன்று இவர் 'மாமி' இல்லை எல்லோருக்கும் பொதுவானவர்னு....

dravid said...

நக்கீரன் மட்டுமே என்னமோ ஜாதி பற்றி எழுதுவது போலவும், மற்ற எந்த பத்திரிக்கையும் யோக்கிய சிகாமணிகள் போலவும் இங்கே பேசப்படுவது வெட்கக்கேடானது. துணிந்து எழுத இந்தப்பத்திரிக்கையாவது இருக்கே . உனது பணி தொடர வேண்டும். கீழ் ஜாதிக்காரன், மேல்சாதிக்காரன் என்ற வெங்காயம் எல்லாம் மனுநீதி காலத்திலேயே வந்து நம்மை அடிமுட்டாளாக்கி வைத்திருக்கும் கூட்டத்தை இன்னும் வக்காலத்து வாங்கும் தமிழர்களே ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது.