Thursday, January 12, 2012

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg

ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ  அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய்  எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவாக   நடித்ததற்காக அவரையும், அப்படி நடிக்க வைத்ததற்கு ஷங்கரையும் பாராட்டலாம்.. 

கொஞ்சம் ஏமாந்தால் சச்சின், பறவைகள் பல விதம், கல்லூரி வாசல், ஏப்ரல் மாதத்தில் மாதிரி ஒரு சாயல் வந்து விடும் அபாயம் உள்ள கல்லூரி கேம்பஸ்-இல் நடக்கும் இளமையான கதைதான்.. 

எல்லாம் நன்மைக்கே ( ALL IS WELL) என்று நினச்சாலே போதும் , வாழ்க்கைல ஜெயிச்சுடலாம் என்ற நேர்மறை எண்ணம் கொண்ட இளைஞன் - நம்ம மனசுக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழனும்,மனசுக்குப்பிடிச்ச வேலையைத்தான் நாம தேர்வு செய்யனும்கற  கொள்கை கொண்ட இளைஞன் -சுத்தி இருக்கற நண்பர்களுக்கும், மனிதர்களுக்கும் தன்னாலான  ஆலோசனை, உதவி செய்யும் குணம் உள்ள நல்ல மனிதனின் கல்லூரிக்கதைதான் படம்.. 

http://datastore04.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/lt4grd3lugjc9q2t.D.0.Vijay-Nanban-Movie-Stills.jpg

எஞ்ஜினியர் காலேஜ் முதல்வர் சத்யராஜ்  ஒரு கட்டுப்பட்டியான, வறட்டுப்பிடிவாதம் உள்ள ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம், மயக்கம் என்ன பட ஹீரோ தனுஷ் மாதிரி விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள ஃபோட்டோகிராஃபரான ஸ்ரீகாந்த் அப்பாவின் ஆசைக்காக இஞ்சினியரிங்க் காலேஜில் சேர்ந்து படிக்கிறார்.. வறுமை நிலையில் குடும்பம் இருந்தாலும், வாரிசு பெருமை நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோருக்குப்பிறந்த ஜீவா  படிப்பில் சுமார் ரகம் என்றாலும் எஞ்சினியர் காலேஜில் சேர்கிறார்.. படிப்பில் நெம்பர் ஒன்னாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தின்  கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை இவற்றில் மாற்றம் வேண்டும் என நினைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட்டாக விஜய்..  இவர்கள் 4 பேரின் மோதல் , காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 

அய்யய்யோ, அப்போ இலியானாவுக்கு என்ன வேலை என யாரும் பதற வேணாம்.. அவரை சத்யராஜின் மகள் ஆக்கிட்டா மேட்டர் ஓவர் என்பது இயக்குநருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. காமெடிக்கு சத்யன்.. 

படத்தில் உள்ள முக்கியமான 6 பேரில் நடிப்பில் முதல் இடம் சத்யராஜ்க்கே.. படத்தின் முதல் பாதியில் கனம் கோர்ட்டார் அவர்களே பட கெட்டப்பை நினைவு படுத்துவது போல் ஆள் சீரியஸாக இருந்தாலும் நமக்கு சிரிப்பு வர வைக்கும் பாடி லேங்குவேஜ் .. நடிப்பு, வசன உச்சரிப்பு என மனிதர் ஜமாய்க்கிறார்.. பின் பாதியில் வில்லாதி வில்லன் பூ கேரக்டர் போல் கெட்டப்.. அந்த கெட்டப் வந்ததுமே ஆட்டோமேடிக்காக அவர் கண்களில் , முகத்தில் வில்லன் களை தாண்டவம் ஆடுகிறது.. சபாஷ் சத்யராஜ்...

அடுத்து விஜய்.. காவலன் படத்திலாவது ஃபைட் இருந்துச்சு, இதுல அதுவும் இல்லை.. இருந்தாலும் திரைக்கதை, பாத்திர வடிவமைப்பு எல்லாம் பக்க பலமாக இருப்பதால் ரசிக்க வைக்கும் அமைதியான நடிப்பை தருகிறார்.. கொஞ்சம் ஏமாந்தா புதிய கீதை ரேஞ்சுக்கு போர் அடிக்கும் உபதேசவிலாஸ் உப்பிலி கேரக்டர் ஆகி இருக்கும்.. நூல் இழையில் தப்புகிறார்.. ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது.. 

3 வது இடம் சத்யனுக்கு.. செம காமெடி ரவுசு பார்ட்டிப்பா.. இவர் வந்தாலே தியேட்டர் களை கட்டுகிறது.. க்ளைமாஸில் செம நடிப்பு.. இவர் டயலாக் டெலிவரி, கணீர்க்குரல் நல்ல பிளஸ்.. 

ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் சம அளவு வாய்பு, + நடிப்பு.. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து அழகாக செஞ்சிருக்காங்க.. 13 வருடங்கள் முந்திய கதையிலும் சரி, நிகழ்கால கதையிலும் சரி இருவரின் கெட்டப் சேஞ்ச், பாடி லேங்குவேஜ் மாறம் எல்லாம் பக்கா.. ( ஆனா ஹீரோ விஜய் அந்த அளவு மெனக்கெடலை.. நோ கெட்டப் சேஞ்ச்..)

கடைசில ஊறுகாய் இலியானா.. அழகு பொம்மை தான் நோ டவுட்.. ஆனா அவருக்கான ஆடை வடிவமைப்பு, சில கேமரா கோணங்கள் அவர் கொஞ்சம் “சின்ன” பொண்ணு என்பதை உணர்த்தி விடுவதால் எள்ளலான புன்னகையுடன் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ( தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி)

இவர் துணிச்சலான ஹீரோயின் என்பதை காட்டுவதற்காக விஜய் உடன் ஒரு லிப் டூ லிப் சீன்  வெச்சிருக்காங்க.. 

http://cybernila.files.wordpress.com/2010/02/ileana-pink-saree-small.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஒரே சமயத்தில் 2 கைகளாலும் , 2 கால்களாலும் எழுதும் திறமை படைத்த மல்டி பர்சனாலிட்டி ஆளாக சத்யராஜின் பாத்திர வடிவமைப்பு தமிழுக்கு புதுது.. 

2. ஏழையான ஜீவாவின் அம்மா நண்பர்கள் குழாமுக்கு உணவு பரிமாறும்போது விலை வாசி உயர்வை பட்டியல் இடும் கேரக்டராக காட்டி அவர்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் சீன் நச்.. 
3. ஓப்பனிங்க் ஷாட்டில் ஊட்டியை நோக்கி  பயனப்படுகையில் ஏரியல் வியூ ஷாட்டாக ஹேர்ப்பின் பெண்ட் 12 வளைவுகளை அட்டகாசமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளரை உபயோகப்படுத்திய விதம்.. 

4. அஸ்கு புஸ்கு பாடல் காட்சியில் விஜய் -இலியானாவை யாரும் கவனிக்க வைக்காமல் குரூப்டேன்சர்களை உற்றுப்பார்க்க வைக்கும் அளவு கண்களை உறுத்தாத கிளாமரில் ஃபிரெஸ் பெண்கள் அதாவது இதுவரை நாம் திரையில் பார்க்காத புது பெண்களை களம் இறக்கி இருப்பது.. இது வரை வந்த ஷங்கர் படங்களில் இந்த பாடல் காட்சி தான் உயர்ந்த பட்ச கிளாமர் காட்சி கொண்ட படம்.. 

5.  ஆல் ஈஸ் வெல்  பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் , ஒளிப்பதிவு, நடன  அமைப்பு அனைத்தும் இதம்.. 

6. ALL IS WELL பாடலில் வடையில் இருந்து வரும் நூலில் இருந்து பட்டம் விடுவது நல்ல நகைச்சுவை..

7. சத்யன் ஞான சூன்ய லேகியம் சாப்பிடுவதும்.. கற்பித்த முதல்வர் என்று பேசுவதற்குப்பதில் கற்பழிக்கும் என மாற்றிப்பேசுவதும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சர் என கலாய்க்கும் அந்த 10 நிமிஷ விழா மேடை காமெடி கலக்கல் ரகம்.. 

8.  விஜய் இலியானா காதல் காட்சியில் ஜீவா பேசக்கூடாது... நினைத்தாலே இனிக்கும் போன்ற ஹிட் சாங்க்சை எடுத்து விடுவதும் , குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சியும்... 

9. இயக்குநர் ஷங்கரே ஒரு பாடல் காட்சியில் ஆஜர் ஆகி லொக்கேஷன் சேஞ்ச், கெட்டப்சேஞ்ச் பற்றி போர்டு வைத்து சுய எள்ளல் செய்து கொள்வது.. 

10. படத்தின் பின் பாதியில் ஹீரோவை படம் பூரா காட்டியே ஆக வேண்டும் என்ற  போலியான பதட்டம் ஏதும் இல்லாமல் திரைக்கதை தேவைக்கு மட்டும் அவரை உபயோகப்படுத்திய விதம்.. 

11. ஒரு பாடல் காட்சியில் ரயில் அலங்காரம், டிசைன் கலக்கல்.

12. க்ளைமாக்ஸில் விஜய்  மருத்துவ படிப்பறிவு இல்லாமல் இலியானாவின் அக்கா அனுயாவுக்கு லேப்டாப்பில் வரும் ஆர்டர்களை கொண்டே பிரசவம் பார்க்கும் பர பரப்பான படத்துக்கு ஜீவன் அளித்த முக்கிய காட்சியை உயிரோட்டமாக படம் பிடித்த விதம்..

13. ஜஸ்ட் 5 நிமிஷமே வந்தாலும் கலகலக்கவைக்கும் எஸ் ஜே சூர்யா நடிப்பு செம 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7r3_lI02hFMCmwe43-3gMvyeyahNuwsc1dosdGWOfn7wEK1ioohmOV81b1Zr_SVScnxA-Z9kveC4W2LvDsAMHPxtKnBoLZB0aaWUZHXepoVrnJqsI0fSDrrF-evm-ytE0PrujGcx6C82l/s1600/vijay-nanban-movie-stills-09.jpg

இயக்குநர் ஷங்கர் சார்.. யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்.. ( லாஜிக் மிஸ்டேக்ஸ்)

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஜீவா பேண்ட் போட அவசரத்துல மறந்துடறார், ஓக்கே, தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி அவசரமா விஜயை பார்க்க ஸ்ரீகாந்துடன் ஸ்பாட்க்கு போறார்.. அங்கே அவர் இல்லை.. இதுவரை ஓக்கே, இனி ஊட்டி கிளம்பறாங்க.. சாவகாசமாத்தான் போறாங்க.. போற வழில ஒரு பேண்ட் க்டைல வாங்கி போட்டுக்க மாட்டாரா? 179 கி மீ அப்படியே போவாங்களா? யாராவது?

2. விஜய் ராக்கிங்க் பண்ற சீனியர் ஸ்டூடண்ட்டை கலாய்க்க கரண்ட் ஷாக் கொடுத்த பின் ஸ்கேலை இடுப்புக்கு கீழ் பிடிச்சுட்டு வர்றது ரொம்ப விரசமா இருக்கு.. சிங்கார வேலன் படத்துல இதே மாதிரி கமல் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க  பாடலில் இடுப்புக்கு கீழே வைத்து ஆபாச அசைவு செய்து கெட்ட பேர் வாங்கிக்கொண்டார்.. அதை தவிர்த்திருக்கலாம்.. 

3.  காலேஜ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸும் நீட்டா சர்ட் அல்லது காலர் வெச்ச டி சர்ட் போட்டுட்டு வர்றாங்க. ஸ்ரீகாந்த், ஜீவா உட்பட.. ஆனா அண்ணன் விஜய் மட்டும் 5 வருஷமும் எப்பவும் காலர் இல்லாத ரவுண்ட் நெக் பனியன் போட்டுட்டுதான் வர்றார்.. அது எப்படி? காலேஜ்ல சனிக்கிழமை மட்டும் தான் அப்படி பனியன் போட முடியும்.. 

4.  ரியலிஸ்டிக்கா காட்றேன்னு சில காட்சிகளில் ஹீரோக்கள் 3 பேரும் காலேஜ் ஹாஸ்டல்ல ஷேவ் பண்றப்ப பாத்ரூம் போற மாதிரி பலர் நடந்துக்கறது உவ்வே.. 

5.  பயந்தாங்கொள்ளி என வர்ணிக்கப்படும் ஜீவா அவர் கைல போட்டிருக்கற 6  வெவ்வேற கலர்ல உள்ள தாயத்து கயிறைக்காட்டி விஜய் கிண்டல் பண்றார்.. ஆனா அந்த ஒரு சீனும், 20 நிமிஷம் கழிச்சு அதை கழட்ற சீனிலும் மட்டும் தான் தாயத்து கயிறு இருக்கு.. மற்ற அனைத்துக்காட்சிகளிலும் ஜீவா வெறும் கைல தான் இருக்கார்.. நோ தாயத்து.

6. இலியானா தான் வர்ற சீனிலெல்லாம் அவர் வெச்சிருக்கறது ஸ்கூட்டினு டயலாக் பேசறார், ஆனா விஜய் அதை ஸ்கூட்டர் என்கிறார்..

http://telugu-actress.com/wp-content/uploads/2011/06/Tollywood-Actress-Ileana-Dcruz-In-Saree-Picture.jpg

. 7.  சத்யராஜ் ஒரு திண்ணை மாதிரி சோபால படுத்து அடி ஆள் மூலமா ஷேவிங்க் பண்ற மாதிரி சீன் வருது 3 இடங்கள்ல , ஆனா எப்பவும் அவர் கன்னம் மழு மழுன்னுதான் இருக்கு.. அந்த சீன் டைம்ல மட்டுமாவது தாடி லைட்டா இருக்கற மாதிரி காட்டி இருக்கலாம்.. 

8.  ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவுல சொந்தக்கதை சோகக்கதையை எல்லாம் உருக்கமா சொல்றார்..  எந்த இண்டர்வியூவுல அதை எல்லாம் பொறுமையா கேட்கறாங்க..?

9.  தண்ணி அடிச்சுட்டு இலியானா பேசறப்ப ரொம்ப லோக்கலா சேரி பாஷை பேசுது ஒரு காலேஜ் பிரின்சிபாலோட பொண்ணு அதெப்பிடி?

10. வில்லனோட மாப்பிள்ளை டிரஸ் ஸை அயர்ன் பண்ற மாதிரி ஒரு சீன்.. பொதுவா மேரேஜ் அன்னைக்கு போடற டிரஸ் புதுசாத்தான் இருக்கும்.. அதை யார் அயர்ன் பண்ணுவாங்க.. அதுவும் அவர் ஒரு மல்ட்டி மில்லியனர்.. 

11.  பக்காவான ஐ டி இளைஞர் போல் காட்சி அளிக்கும் ஸ்ரீகாந்த் இஞ்சினியர் ஸ்டூடண்ட்.. ஒரு சீனில் ஜீவாவிடம் வண்டியை நிப்பாட்றா என்கிறார்.. இது லோக்கலா இருக்கே?

12.  கதை முழுக்க பேக் டிராப்ல ஸ்ரீ காந்த் கதை சொல்ற மாதிரி வைச்சிருக்காங்க.. அது தேவையும் இல்லை.. பல பிராப்ளம் வரும்.. ஏன்னா விஜய் இலியானா சந்திப்புகள்ல அவங்க 2 பேரையும் தவிர யாரும் இல்ல.. அந்த மேட்டர் எல்லாம் எப்படி ஸ்ரீகாந்துக்கு தெரியும்?

13. படத்தில் பாடல் காட்சிகளில் சில செகண்ட்களில் வரும் கோமாளி மாதிரி கெட்டப்பை போஸ்டராக ஒட்டி இருப்பது என்னை பொறுத்தவரை  ஒரு மைனஸ் தான்.. இன்னும் நல்லா இந்தப்பட போஸ்டர் டிசைனிங்கை செஞ்சிருக்கலாம்.. ஏன்னா வ்ழக்கமான ஷங்கர் பட ஓப்பனிங்க்  மற்றும் எதிர்பார்ப்பு குறைந்ததற்கு இந்த படத்துக்கு வடிவமைக்கப்பட்ட போஸ்டர் டிசைன் முக்கிய பங்கு வகிக்கும்..

14. ரீமேக்னா ஷங்கர் நீங்க கூட அட்டக்காப்பி அடிக்கனுமா? ராகிங்க் சீன்ல பசங்க அடிக்கடி பேண்ட்டை  கழட்டி உள்ளாடையுடன் நிற்பது காமெடியா? அந்த சீனை இன்னும் கண்ணியமா காட்டி இருக்கலாமே?

15.  காமெடி என்ற பெயரில் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2ofyWbKLEdA7zo2EiTZQxp9yIIIupaIU6dKLYphf281QS4KbjPP90RGYj7p-q2Anc5dEGKkLyZ6YcL2ia3d5oog_6cFZEn7IyweeklKIG1sccGeOJKmeOzB6NFyPmz0CmlAgD1bnyUP8/s800/Anuya10.jpg

ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அமைதியா வந்த படம் என்பதால் போக போக படம் பிக்கப் ஆகிக்கும்னு தோணுது.. 2012 ஓப்பனிங்கில் விஜய்க்கு கிடைத்த ஆரோக்யமான வெற்றிப்படம்.. 

ஏ செண்டர்களில் 75 நாட்கள். பி செண்டர்களில் 50 நாட்கள், சி செண்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42

குமுதம் அதிர்பார்ப்பு விமர்சனம் - ஓக்கே

சி.பி கமெண்ட் - குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்..

http://s3.hubimg.com/u/3271474_f520.jpg

டிஸ்கி -1 படத்தில் ஷங்கர் எங்கே காணோம்? என யாரும் கேட்டுடக்கூடாதேன்னு ஒரு பாட்டு சீன்ல டைரக்டரா வந்து இலியானாவை டச் பண்ணி மூவ்மெண்ட் சொல்லித்தர்றாரு.. டைரக்‌ஷன் டச் ஹி ஹி

டிஸ்கி 2. - விஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி

டிஸ்கி 3 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 4 -

66 comments:

RAMA RAVI (RAMVI) said...

படம் பார்த்தாச்சா??
விமர்சனம் படிச்சுட்டு வரேன்.

Thirumalai Kandasami said...

Hit !!! ,,Great,,I booked ticket already,,This is my first vijay film in theatre..Hope I chosen the correct one..

IT from Shibly said...

wow..suda suda vimarsanam...thanks boss

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் ஓகே....

தமிழ்வாசி பிரகாஷ் said...

இலியானா சின்ன பெண்ணா?

K.s.s.Rajh said...

விஜய் எப்ப பாஸ் கெட்டப் சேஞ் பண்ணியிருக்கார் இதுல பண்ண.

விமர்சனம் சூப்பர் தல நானும் நண்பன் பார்க்க போய் இன்று பல்பு வாங்கினேன் அது பற்றி என் தளத்தில் ஒரு பதிவு ரெடியாகிகிட்டு இருக்கு

இலியானா இலியானா ஹி.ஹி.ஹி.ஹி இலியானா......

ராஜி said...

படம் பார்த்தாச்சா?

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் சிறப்பாக இருக்கு.

இந்தப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார் போல இருக்கே?

sutha said...

ஒரிஜினல் படம் பார்த்தாச்சா? அந்த லெவெலுக்கு வந்திருக்கா? விமர்சனம் நல்லா இருக்கு ...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

"நண்பன் " சி .பி .யின் கலக்கல் விமர்சனம் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வழக்கம் போல நன்று .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

படம் பார்க்கணும் நண்பா.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வழக்கம் போல முதல் விமர்சனம்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் .

சசிகுமார் said...

விஜய் படம் நல்லா இருக்கா அப்ப தமிழ்வாசி பிரகாஷ்க்கு வயிறு எரியுமே...

கும்மாச்சி said...

படம் பார்க்கப்போறேன், பார்த்துட்டு வந்து விமர்சனத்தை பத்தி கமெண்ட் போடறேன்.

Admin said...

வெற்றிப்படமா..சரி உடனே பார்க்க வேண்டியதுதான்..

இந்திரா said...

//பின்னாடி டான்ஸ் ஆடிய குரூப் டான்சர்ஸ்//
//தாயத்து//
//ஷேவ் பண்ணும்போது.. உவ்வே...//

எல்லாத்தையும் ரொம்ம்ம்ம்ப கவனமா கவனிச்சிருக்கீங்க போல..

இந்திரா said...

அந்த போஸ்டர் டிசைனிங் விஷயம்.. உங்கள் கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன்.
இன்னும் கொஞ்சம் பெட்டரா டிசைன் பண்ணிருக்கலாம். ஏதோ கார்டூன் பட விளம்பரம் மாதிரி இருக்குது.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சசி சார் .
நம்ம frienda போல யாரு மச்சான் !!!!!
தமிழ்வாசி பிரகாஷ் ...ரொம்ப கூல் பெர்சன்
லைக் விஜய் போல ........
அவரும் விமர்சனம் எழுதி கலக்க போகிறார் பாருங்கள் நண்பா!!!!

Unknown said...

நச்!

சசிமோஹன்.. said...

thala eppa padam parthinga today ofece leave ah??????

Anonymous said...

படம் பாக்குறதுக்கும் விமர்சனம் எழுதுறத்துக்குமே வாழ்க்கைல பாதி நேரத்த செலவழிச்சுடுவீங்க போல...வேஸ்ட் ஆஃப் டைம்:)

ADMIN said...

நல்ல விதமா எழுதியிருக்கீங்க..

Unknown said...

அண்ணனுக்கு எப்பவுமே குறும்பு!

Anonymous said...

"குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்"ன்னு போட்டுட்டு கீழ ஒரு photo போட்டிருக்கீங்க பாருங்க, செம! ;-)

நல்ல விமர்சனம். ஆனா, சில கேள்விகள் வேணும்னே குறை சொல்ற மாதிரி இருக்கு.
நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் கண்டிப்பா இந்தப் படத்த பாப்பேன்! ;-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

mohan0710 said...

This is nothing special in TAMIL who are all seen the HINDI 3IDIOTS.. At any cost vijay is not acting like Aamirkhan.. Please watch HINDI 3IDIOTS before comment..

Menaga Sathia said...

படம் பார்த்தாச்சா..ம்ம் விமர்சனம் ஓகே!!

சரியில்ல....... said...

ஆஹா.... இப்போ தான் தூங்கி எந்திரிச்சேன், விமர்சனம் சூப்பர். நாளை காலை ஸ்பெஷல் ஷோ மாஜாயால்'ல, ஹாவ் ஃபன். ஆல் இஸ் வெல். பை பை....

காட்டான் said...

உங்கள நம்பி படம் பாக்க போறேன் மாப்பிள..!!

test said...

பாக்கணும் பாஸ்!

ரசிகன் said...

//அட்ட காப்பி//

உண்மை.

KANA VARO said...

All is well CBS

பொ.முருகன் said...

விமர்சனத்தின்,ஆரம்பகட்ட வரிகள் மிகவும் அருமை. படத்தின் இயக்குனரிடமிருந்து,உங்களுக்கு அழைப்பு வந்தாலும் வரலாம்,அப்படி ஒரு அழைப்பு வந்தால் என்னை மறந்து விடாதீர்கள் ஐயா.

ஹாலிவுட்ரசிகன் said...

// ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது.. //
அப்போ படம் கட்டாயம் பார்க்கணும்.

// தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி //
சரியா சொன்னீங்கண்ணே.

விமர்சனத்திற்கு நன்றி.

Astrologer sathishkumar Erode said...

விமர்சனம் நல்லா வந்திருக்கு.ஷங்கர் படம் என்றாலே கியாரண்டி.அதிலும் த்ரீஇடியட்ஸ் வெற்றிக்களம் இருக்கும்போது பிரச்சனையே இல்லை.

Unknown said...

Mmm inga Sri Lankala 1st Show Parthan Athuvum puthu theater la ;))))
and 1st Half la 3 idiots da impression apdiye irukku 2nd half soopppppperrr ;)
songs um Sooper ;))0
nalla paarunga english subtitle la niraya thappu irukku ..

Regards
M.Gazzaly
greenhathacker.blogspot.com

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு CP...வாழ்த்துக்கள்...

வவ்வால் said...

சிபி,

விமர்சனம் ஆரம்பத்தில இருந்து வந்தால் ஹிந்தி வர்ஷன் பார்க்காதவர் போல தெரியுது, ஆனால் கடைசில அட்டக்காப்பினு பார்த்தால் போலவும் சொல்றிங்க. :-))

நீங்க மெனக்கெட்டுபட்டியல் போட்டெதல்லாம் ஹிந்தில இருப்பதே. மேலும் ஷேவ் பண்ணும் போது முடி இருக்கனுமா? தினசரி முளைத்தாலும் முளைக்காட்டியும் சவரம் செய்து கொள்ளும் சுத்தம், ஒழுக்கம் என கறார் காட்டுபவர்னு கதாபாத்திரத்தை வடிவமைக்க வைக்கப்பட்ட காட்சி அது.

இன்னும் நீங்க படம் பார்க்க கத்துக்கலையா? ஒலக சினிமா பிதாமகர்களை கேளுங்க, ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு புதிய விளக்க உரைக்கொடுப்பாங்க. :-))

K said...

விமர்சனம் சூப்பர் நண்பா! கண்டிப்பா படம் பார்ப்பேன்! அழகிய விமர்சனத்துக்கு நன்றி!

rajamelaiyur said...

அருமையான விமர்சனம் ..

rajamelaiyur said...

உங்கள் பதிவை இணைத்துள்ளேன் ...
உங்களுக்காக ...

நண்பன் : திரை விமர்சனம்

stalin wesley said...

விஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்று

Anonymous said...

என்னவோ படம் ஓடினா சரி... ஆனால் சங்கரின் சொந்தஅறிவு காணாமல் போனது கவலையே..

ட்வீட்டரில் பவர்ஸ்டார்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

படம் நல்லாயிருக்குதோ இல்லையோ நீங்கள் படத்தை விமர்ச்சித்த விதம் நல்லாயிருக்கு!

Unknown said...

உடுக்கை இடுப்பழகி இலியானா..கொங்கு தங்கங்கள் பெரிய சத்தியா சின்ன சத்யா,ஜீவா # நண்பனின் தூண்கள்!

ஹேமா said...

அப்போ படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க !

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ரைட்டு!!!!!!

Pranesh said...

@வவ்வால்வவ்வால் சரியா சொன்னீங்க, இவங்க எல்லாம் விமர்சிக்குறதுக்காகவே படம் பாக்குறாங்க. நீங்க மொதல்ல 3 Idiots பாத்துட்டு விமர்சனம் செய்யுங்க. படத்துக்கு 40 - 45 மதிப்பெண் சொல்லறதுக்கு முன்னால 100 மதிப்பெண்ணுக்கு உங்களால கதை சொல்ல முடியுமான்னு சொல்லுங்க.

Manimaran said...

நச்ச்ச்ச்.... இந்த விமர்சனத்த கண்டிப்பா நடிகர் விஜய் படிக்கணும்...அமைதியான நடிப்புதான் ஆர்ப்பாட்டமான வெற்றியத்தரும்னு அவருக்கு புரியணும்...

Unknown said...

முதல் பத்தி படிக்கிறப்ப எங்க வேற ப்ளாக் வந்துட்டமோனு நினைச்சுட்டேன் ஆனால் போக போக பதிவர் தன்னுடைய வழக்கமான பாணியில் கலக்குகிறார்...

YESRAMESH said...

புதுசா ஒண்ணுமே இல்லையா..இதுக்கு ஷங்கர் எதுக்கு. ஜெயம் ரவி போதுமே

சேகர் said...

எந்த தியேட்டர் ல படம் பார்த்தீங்க????

Unknown said...

சங்கர் படத்துல விரசம், சரசம் எல்லாம் இருக்கத் தான் செய்யும்....
லாஜிக், மேஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது....
அப்படிப் பார்த்திருந்தா...அவரு தான் குறைவான பட்ஜெட்ல படம் எடுப்பவரா இருந்திருப்பாரு !
விமர்சனத்தில் பிரம்மாண்டம் என்றால் அது சிபி தான் !

Sharmmi Jeganmogan said...

உண்மையான நல்ல விமர்சணம்.

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விமர்சனம்! நன்றி!

R. Jagannathan said...

அடுத்த சங்கர் படத்துக்கு உங்களை டிஸ்கஷனுக்குக் கூப்பிடுவ்வர் என்று நம்புகிறேன்! - ஜெ.

வவ்வால் said...

அப்புறம் கேட்கணும்னு நினைச்சு மறந்துட்டேன்,

ஊட்டிக்கு 179 கிலோ மீட்டர் எந்த ஊரிலிருந்து, அந்த கல்லூரி சென்னையில் இருப்பதாக படத்தில் வரும் என நினைக்கின்றேன்?

எந்த ஊரில் பொறியியல் 5 ஆண்டு படிப்பு என்பதையும் சொல்லிடுங்கோ?

ஷங்கருக்கு லாஜிக் மிஸ்டேக்ஸ்னு கேட்ட கேள்விகளே இப்படி இருக்கு :-))

Finku said...

Cinema enda entertainment so ithuku logic thevai illa, neenga Vijaya kewalapatuthanum endathukaga nalla oru storya n moviea pinnuku thalla wenam, ungalukku pidikala enda parkathinga atha wittutu padam parka mudhallaye commends solli parka porawanga mooda upset panna wenam, movie remake pannum pothu moola kathaya eluthunawar eppadi wirupa paduraro appadi than panna mudiyum,

naatla ewalawo nadakuthu athellam wittutu movie athum oru nall moviku poi logic parkureenga parunga, neenga intha wimarsanatha eluthama wittu irukalam,

vijay rasigargal yarayum kewala padutha matom so neenga yarda fana irunthalum awangala mattum patthi pesunga

ungala mathiri aatkalathan nalla movieskooda olunga poga matenguthu

again am saying movies are entertainment all is well

May god bless u

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் நல்லா இருக்கும் போல, பாத்துடலாம்!

மன்மதகுஞ்சு said...

விஜய் படத்துக்கு நீண்டகாலத்துக்கு பிறகு இவ்வாறான விமர்சனம் கிடைச்சிருப்பதற்கு 3 இடியட்ஸ் க்கும் ஷங்கரும்தான் காரணம்..

ஷங்கரிடம் நீங்கள் கேட்கு லாஜிக் கேள்விகள் அத்தனையும் அனைத்து ரசிகர்கள் கேட்கதுடிக்கும் கேள்விகள்

ராகிங் சீ ன்தான் இப்படி ஆனால் நிஜத்தில் அதைவிட மோசமாக இருக்குமே,அதுசரி ஏன் அடிக்கடி டவுசரை கழட்டி ஆசீர்வாதம் கேட்கிறாங்க

loose said...

en sir ungaloda site ku hit rate varanum radhu kaaga neenga mattum padathula evlo nalla scene irundhalum heroin oda aabasamaana still eduthu load pannuveenga...director oru scene la underware kaatinadhu pathi mattum vulgar nu sollavendiyathu

loose said...

engineering padikaravan lam nipaatunu lam solla maatangala naanga padikara kallori yilae chumma solradhu undu...Edhvathu kora sollanum radhukaaga epdi lam ulara vendiyadhu

nallavan said...

FRAME TO FRAME COPY ADICHUTTU ATHELLANNE SABASH VERE....JAYAM RAJA KITTE KUDTHIRUNTHEVE BETTER AH EDUTHIRPAAN......BEFORE WRITING THIS KIND OF BLOG PLEASE WATCH ORIGINAL MOVIE ONCE....AND AGAIN DONT MAKE TIS KIND OF MISTAKES AGAIN....