Saturday, January 14, 2012

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/01/vettai-arya-300x294.png 

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆபத்பாந்தவனாய் கை கொடுப்பது நம்ம எம் ஜி ஆர் ஃபார்முலாதான்.. அதை கையில்  எடுத்து சக்சஸ் அடைஞ்சவங்களும் உண்டு, கையை சுட்டுக்கிட்டவங்களும் உண்டு./.. இந்த முறை கயில் எடுத்திருப்பது என் லிங்குசாமி... சாஃப்ட் ஹீரோ மாதவனையே ரன்னில் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கியவர்.. கேட்கவா வேணும்.. மசாலா பொங்கல் படைச்சிருக்கார்.. 

எங்க வீட்டுப்பிள்ளை பயந்தாங்கொள்ளி எம் ஜி ஆர் கேரக்டர் மாதவனுக்கு.. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அப்பா இறந்ததும் ஆட்டோமேடிக்காக இவருக்கு எஸ் ஐ போஸ்ட் வருகிறது.. கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் சி எம் ஆக முயற்சிப்பது போல். ஆர்யா அழகிரி மாதிரி ஒரு அதிரடி பேர்வழி.. வேலை ஏதும் இல்லா வெட்டாஃபீஸ்.. ஆனா இவங்க 2 பேரும் கலைஞர் பசங்க மாதிரி அடிச்சுக்கலை,.. ஒத்துமையா இருக்காங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எல்லா கேஸ், சண்டை எல்லாத்தையும் டீல் பண்றது ஆர்யா. அதுக்கான பலனை அனுபவிப்பது மாதவன்.. லோக்கல் பாஷைல சொல்லனும்னா  கெடா வெட்றது ஆர்யா, பொங்கல் சாப்பிடறது  மாதவன்...

ஹீரோக்கள் 2 பேரு.. அண்ணன் , தம்பின்னா ஹீரோயின் எப்படி இருக்கனும்? கரெக்ட்.. அவங்களும் அக்கா தங்கை தான்.. ஆர்யாவுக்கு அமலா பால், மாதவனுக்கு சமீரா ரெட்டி.. மாதவன் சார்பா பொண்ணு பார்க்க போன ஆர்யா அண்ணியை ஓக்கே சொல்ல தங்கை அமலா பால் ஆர்யாவுக்கு த்ரட் விடறார்.. அதாவது நூல் விடறாரு.. 





http://images.news.pluzmedia.com/slide/big_Vettai__The_season_of_celebration_begins-f50d7d5ae3ea639eb139216bc3dd496e.jpg

படம் ஃபேமிலி, லவ் , ஜாலியா போனா அதுல என்ன இண்ட்ரஸ்ட் இருக்கு? அந்த ஏரியாவுல 2 தாதாங்க.. ( ஆனா 2 பேரும் பக்கா சோதாங்க.. )அந்த தாதாவோட சரக்கு லாரியை ஆர்யா மடக்கி மாதவன்கிட்டே ஒப்படைக்க மாதவன் நல்ல பேர் வாங்கறார்.. நாளா வட்டத்துல மாதவன் டம்மி, ஆர்யா தான் மம்மி அப்டிங்கற மேட்டர் வில்லன் குரூப்க்கு தெரிஞ்சுடுது.. சசிகலாவை ஜெ  கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கற மாதிரி மாதவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுது வில்லன் குரூப்..

 நாட்டுக்கு ஒரு நல்லவன்ல ரஜினி குஷ்பூ கிட்டே சொல்வாரே அந்த மாதிரி ஆர்யா சொல்றாரு , எத்தனை நாளைக்கு  நானே உன்னை காப்பாத்திட்டு இருப்பேன், நீயும் வீரன் ஆகு  படத்தை சீக்கிரம் முடிக்கனும்கறாரு.. 

வைஜயந்தி ஐ பி எஸ் படத்துல வர்ற மாதிரி 4 கி மீ ரன்னிங்க், 18 பஸ்கி எடுத்து  உடனடி சேமியா, திடீர் இட்லி மாதிரி மாதவன் வீரன் ஆகிடறார்.. இப்போ எண்ணி பாருங்க, மொத்தம் 2 வீரன்க, வில்லன்களும்  2 , ஹீரோயின்களும் 2 .. ஹி ஹி  ( எனக்கு என்ன குறைன்னா 2 வில்லிகளையும் காட்டி இருந்தா  இன்னும் செமயா இருந்திருக்கும்.. )



http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Vettai-Stills,Photos,Pictures/Vettai%20Movie%20Stills00.jpg?m=1307983153

இடைவேளை வரை ஜாலியா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்னு போகுது, அதுக்குப்பிறகு ஆக்‌ஷன் அதிரடி தான்.. பக்கா கமர்ஷியல் மசாலா.. இந்தப்படத்தை ஹிந்தில வேற பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ் , ஆனா அங்கேயும் ஹிட் ஆக்கிடுவார்னு தோணுது.. 

இப்போ இருக்கற ஹீரோக்கள்ல ஆர்யா மாதிரி ஒரு அசால்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்ல.. எதுக்குமே அலட்டிக்காம சர்வ சாதாரணமா பாடி லேங்குவேஜ்ல தெனா வெட்டு, முகத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் , நல்லா கேரக்டர்ல மேட்ச் ஆகறார்.. அமலா பால் குளிச்சுட்டு டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து அவரை கிராஸ் பண்ணி போன பின் தாங்க்ஸ் சொல்றாரே செம.. ஒரே அப்ளாஸ்தான் தியேட்டர்ல.. 

மாதவன்.. இயல்பாவே சாஃப்ட் கேரக்டர் என்பதால் அவர் போலீஸ் யூனிஃபார்மில் பயந்துநடுங்குவது செம காமெடியாக இருக்கு.. ஆர்யா செய்யும் வீரசாகசங்கள் எல்லாம் இவர் செஞ்சதா மக்கள் நினைக்கறது இவருக்கு  தெம்பையும், பயத்தையும் ஒரு சேரத்தர்றதை அவர் நல்லாவே காட்டி நடிச்சிருக்கார்.. 

vettai tamil movie stills00-5


அமலா பால் தான் ஹீரோயின், ஏன்னா அவருக்குத்தான் 2 டூயட்.. அதுவும் இல்லாம கார்ல சரச சலாபம் , லிப் டூ லிப் கிஸ் அடிக்கறதுன்னு பாப்பாவுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை, பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..  நடன காட்சிகளில் அவருக்கு நளினம் சரியாக வரவில்லை.. ( ஒரு வேளை இயற்கையாவே அவருக்கு நளினம் வர்லையோ என்னவோ?)

சமீரா ரெட்டி கொஞ்சம் முற்றல் முகம் தான் ( முகம் மட்டுமா? நடிப்பும் தான்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ) அவர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்.. நடன காட்சிகளில் இவர் ஸ்கோர் பண்ணிடறார்.

2 ஹீரோயின்களுக்கும், இயக்குநருக்கும் பொதுவான ஒரு அட்வைஸ்,, கிராமத்துப்பெண் கேரக்டர்னா  இயல்பான மேக்கப்பில் கொஞ்சம் வெட்கம், நாசூக்கு எல்லாம் முகத்துல, பாடி லேங்குவேஜ்ல காட்டனும்..  அரை கிலோ பவுடர், கால் கிலோ ரோஸ் பவுடர், கால் லிட்டர் ஃபேரன் லவ்லி எல்லாம் போட்டுக்கிட்டு தாவணி போட்டா அது வில்லேஜ் கேர்ள் ஆகிடுமா? ( வாகை சூடவா இனியாவை ஒரு முறை பார்க்கவும்)

தூத்துக்குடி தான் கதைக்களன் என்பதால் வழக்கம் போல் அரிவாள், அடிதடி. வெட்டு எல்லாம் உண்டு என்றாலும் இயக்குநர் சாமார்த்தியமாக லவ் , ஃபேமிலி மேட்டர் கொஞ்சம் சேர்த்து போர் அடிக்காமல் க்தையை நகர்த்துகிறார்.. 




Vettai Movie Stills00-15

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஆர்யா சினிமா தியேட்டர்ல் பண்ற ஆக்‌ஷனை திரைல ஓடற ரவுத்திரம் பட ஹீரோ ஜீவா ஆச்சரியமா பார்க்கறதை காட்ன விதம்.. 

2.  முதல் பாடல் காட்சியில் ஏகப்பட்ட பனை மரங்களை ஒரே ஷாட்டில் அழகாக ஏரியல் வியூவில் காட்டியது , ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு ( நீரவ் ஷா)

3.  மாதவன் எஸ் ஐ ஆக  ஜாயின் பண்ணும்போது உயர் அதிகாரியாடு சல்யூட் அடிக்கும் 3 முறையும் அவர் ஸ்டிக் தவறி கீழே வழிவதும் அவர் வழிவதும் செம காமெடி..

4.  மாதவனை நாசர் பாராட்டி அடுத்த பிராஜக்ட்க்கு தயார் செய்து அனுப்ப முயற்சிக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பலி ஆட்டை சிம்பாலிக்காக காட்டுவது கல கல காமெடி.. 

5.  கட்டிப்புடி பாடல் காட்சியில் அமலா பாலின் அழகை  எல்லாம் அள்ளிகொள்ளும் விதமாய் ஆடை வடிவமைப்பு செம..  க்ளை மாக்ஸ் குத்துப்பாட்டான பப்பாறப்பா பாட்டில் நடன அமைப்பு அள்ளிக்கொள்கிறது.. லொக்கேஷன் செலக்‌ஷனும் செம.. 

6. யுவன் சங்கர் ராஜா இசையில் தைய தக்கா தக்க, டம டம  பாடல்கள் ஒன்ஸ்மோர் சொல்ல வைக்கிறது.

7 . தாதா கதை என சலித்துக்கொள்ளாதபடி புத்திசாலித்தனமாய் திரைகதையில் ஆர்யா - அமலா பால் காதலை நுழைத்த விதம்.. 


Vettai Movie Stills00-5

.
இயக்குநர் கோட்டை விட்ட  சில இடங்கள்

1.  தனக்குப்பிடிக்காத அமெரிக்க மாப்ளையுடன் காரின் பின் சீட்டில் வரும் அமலா பால் ஜன்னல் ஓரம் உக்கார வேண்டியதுதானே, ஏன் அப்படி ஒட்டி உக்காந்துட்டு வரனும்? இந்த லட்சணத்துல காதலன் ஆர்யா டிரைவிங்க் த கார்.. 


2. அமெரிக்க மாப்ளையை போலீசில் மாட்டி விட ஆர்யா கோக் என சொல்லி சரக்கை கொடுக்கறா... என்ன தான் அவன் கேனை மாப்ளையா இருந்தாலும் சரக்கு வாசத்துக்கும், கோக் வாசத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குமா?

3. ஒரு சீன்ல வில்லன்கள் புடை சூழ நிற்கும்  ஆர்யா தன் அண்ணன்மாதவன்க்கு ஃபோன் போட செல் ஃபொன்ல நெம்பரை டைப் பண்றார்.. அது அவர் ஃபோன், மாதவன் அவர் சொந்த தம்பி. ஆல்ரெடி ஸ்டோர் ஆகி இருக்காதா நெம்பர்? வழக்கமா பிரதர்னோ, அவர் பேரோ வரனும்.. ஆனா ஏன் அவர் ஒவ்வொரு நெம்பரா டைப் பண்றார்?

4.  மாதவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி 3 நாள்  வீட்டுக்கே வர்லை.. சமீரா ரெட்டி அப்போ எல்லாம் கண்டுக்காம ஆர்யா மாதவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ  பதர்றாரே அது எப்படி? அதே போல் விபத்து நடக்கும்போது நெற்றியில், காது அருகில் பயங்கர காயங்களோட இருந்த மாதவன் 3 நாள்ல வீட்டுக்கு வர்றப்ப முகம் டென்னிஸ் கோர்ட் மாதிரி நீட்டா இருக்கே அது எப்படி?

5.  க்ளைமாக்ஸ்ல  வில்லன் ஆட்கள்  சமீரா வீட்டுக்குள்ள நுழைஞ்சிடராங்க..  உடனே சமீரா மாதவனுக்கு தகவல் தெரிவிக்க , அவர் வீட்டை தாழ் போட்டுட்டுஅங்கேயே இரு, நான் வந்துடறேன்கறார்.. கொஞ்ச நேரத்தில் சமீராவின் தங்கை அமலா பால் பர்ச்சேஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து வில்லன் கிட்டே மாட்றார்.. மாதவனுக்கு ஃபோன் செஞ்ச சமீரா தன் தங்கைக்கு ஃபோன் செஞ்சு இப்போ வராதே என ஏன் சொல்லலை?

Vettai Movie Stills00-2


பம் பம்  பாடல் காட்சியில் ரன் பட தேரடி வீதியில் தேவதை வந்தா பாட்டின், நடன அமைப்பின் பாதிப்பு தெரியுது.. 

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்டர்களில்  40 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி,பி கமெண்ட் - ஆக்‌ஷன், ஜாலி டைம் பாஸ் பிரியர்கள் பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தோம் ( வித் நல்ல நேரம் சித்தோடு சதீஷ் )


Vettai Movie Stills00-23


டிஸ்கி -1

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

34 comments:

sutha said...

அப்போ படம் ஒரு முறை பார்க்கலாம்னு சொல்லுங்க ...

Astrologer sathishkumar Erode said...

ஆர்யா,மாதவன் ஆக்சன் படத்தை வசூல் வேட்டையாக்குமா..?

Astrologer sathishkumar Erode said...

அமலாபால் அமெரிக்க மாப்பிள்ளை பக்கத்துல உட்கார்ந்தாலும் கிஸ் ஆர்யாவுக்குதானே கொடுக்குறாங்க..;-)))

Astrologer sathishkumar Erode said...

இவ்ளோ பெரிய விமர்சனம் அதுக்குள்ள டைப் பண்ணுனது ஆச்சர்யம்தான்!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிபி அது ரவுத்திரம் இல்லை கோ

hotkarthik said...

படம் பொங்கல் ஹிட் லிஸ்டில் சேருமா

hotkarthik said...

படம் எங்கேயாவது புளிக்குதா சிபி சார்

hotkarthik said...

நேத்து வந்த கொள்ளைக்காரன் எப்படி இருக்குது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...
வாழ்த்துக்கள்.

Unknown said...

மூவர் கூட்டணி...படம் பார்திருக்கிறீங்க...

vimalanperali said...

படம் பதினாலு(ம்) ரீலா?

ஹாலிவுட்ரசிகன் said...

பாத்துட்டாப் போச்சு. என்சாய் பண்ணலாம் தானே? போரடிக்காதே?

Anonymous said...

நல்லாயிருந்தது விமர்சனம்...
படம் ஒரு முறை பார்க்கலாம்னு சொல்லுங்க...

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துக்கள் நண்பரே...

கும்மாச்சி said...

ரெண்டு ஜிகிடிக்கள்னா படம் பார்க்கலாம் போல.

Pulavar Tharumi said...

எம்.ஜி.ஆர்., முக, ஜெ மூவரையும் இந்தப் படத்தோட கலந்து நீங்கள் வைத்திருக்கும் 'விமர்சன பொங்கல்' ரசிக்கும்படியாகவும் அட்டகாசமாகவும் இருக்கு.

'பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..' - அருமையான டச்.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துக்கள்!!!நல்ல விமர்சனம்.நல்ல ஸ்டில்கள்! நல்ல கல்லூரி?!பெண்கள்!கடைசி ஸ்டில் செம,தாங்க்ஸ்!

Anonymous said...

இயக்குனர் கோட்டை விட்ட இடங்கள். மூன்றாவது கேள்வி சூப்பர் சிபி. படம் பார்த்தேன். நீங்கள் சொல்வது சரிதான்.

ராஜி said...

விமர்சனத்துக்கு நன்றி

Admin said...

இன்னும் படம் பார்க்கவில்லை பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியிருக்கிங்க..

பொங்கல் வாழ்த்துக்கள்

R. Jagannathan said...

எஸ் ஆர் எம் சேர்மன் பச்சமுத்து பற்றி என்ன டயலாக் வருது? இன்று தியேட்டரில் அடி தடி, படம் காட்டவில்லை என்று ந்யூஸ்! - ஜெ.

R. Jagannathan said...

எஸ் ஆர் எம் சேர்மன் பச்சமுத்து பற்றி என்ன டயலாக் வருது? இன்று தியேட்டரில் அடி தடி, படம் காட்டவில்லை என்று ந்யூஸ்! - ஜெ.

Philosophy Prabhakaran said...

போச்சுடா... இனி வசனங்களுக்குன்னு தனி பதிவை வேற போடுவீங்களே...

நெல்லி. மூர்த்தி said...

திக்கெட்டுமாய் விரவியுள்ள
தமிழர்கள் அனைவருக்கும்
தித்திக்கும் நாளாய் அமைந்திட
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்க்கும் இதயங்கனிந்த “தை” பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சசிகுமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

ananthu said...

என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்க ! படம் மசாலா ஹிட்டா ? ஒரு சீன் கூட புதுசா யோசிக்காம அப்படியே பழைய பஞ்சாங்கம் ... நண்பனுக்கு ஒ.கே , இந்த படத்துக்கு நன்றா ? நம்ப முடியல ... உங்களுக்கு பிடிச்ருந்தா சரி தான் !என்னை பொறுத்தவரை வேட்டை - வேகத்தடை ...

R. Jagannathan said...

Congrats for winning the first spot in Tamil Manam 2011 best sites! - R. J.

Unknown said...

வேட்டை, வேட்டையாடுவது ரசிகர்களையா இல்லை வசூலையா??

Unknown said...

RajanLeaks மற்றும் கேபிள் சங்கரின் இரண்டு விமர்சனத் துளிகளை படிக்கவும் !
http://cablesankar.blogspot.com/2012/01/blog-post_15.html?spref=fb

http://www.rajanleaks.com/2012/01/blog-post.html

மாலதி said...

இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

பொ.முருகன் said...

டபுள்ஆக்சன் படமாக எடுத்திருந்தால் படம் பப்படமாகபோயிருக்கும். லிங்கு, புத்திசாலி தனமாக டபுள்ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்ததால் படம் தப்பித்தது.

MaduraiGovindaraj said...

படங்கள் ????????????

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

நிரூபன் said...

அண்ணே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

நிரூபன் said...

விமர்சனம் இம் முறை சோட் அண்ட் சுவீட்டா இருக்கு பாஸ்.

கலக்கிட்டீங்க.

மன்மதகுஞ்சு said...

என்னதான் படம்பார்த்தாலும் உங்க விமர்சனம் வாசிப்பதில உள்ள ஒரு கிக் எதிலும் வராது வாசிச்ச உடனேயே கோக் குடிச்ச உடனே வாற ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

அதுசரி எதிர்பார்த்த அமலாபாலோட டவல் காட்சி பற்றி அடக்கி வாசித்திருக்கிறார் வலைபதிவர் சி.பி அவர்கள் அதனை வன்மையாக கண்டிக்கிறேன்