
1.தாடி வெச்சா லவ் ஃபெயிலியர்னு இனி எவனும் சொல்ல முடியாது # பிரபுதேவா, தனுஷ்
-----------------------------
2. என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ்-ஸ்ருதி கமல் # என்னை அடித்தவர்களிலேயே ரொம்ப காண்ட் ஆகி அடிச்சவர் ரஜினி-தனுஷ்
--------------------------------
3. கஸ்”தூதூ”ரி ராஜா - எனக்குப்பிறந்த 2 பேருமே சிங்கக்குட்டிங்கடா, 2 பேரும் என் குலப்பெருமையை காப்பாத்தீட்டீங்க, உங்க கிட்டே இன்னும் EXPECT
-----------------------------
4. ஜட்ஜ் - கட்டுன மனைவிக்கு துரோகம் செஞ்சீங்களா?
தனுஷ் - நோ யுவர் ஆனர், நான் தான் மன்மதாராசான்னு வார்னிங்க் கொடுத்தேனே?
-----------------------------------------
5. தனுஷ் ஜோடியா நடிச்ச சோனியா அகர்வாலை செல்வராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே, அப்போ ஸ்ருதி அடுத்த அண்ணி ஆகிடுவாரா?
----------------------------------

6. டோரா, உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு, மதியம் 1 மணிக்குத்தான் நீ எந்திரிச்சிருக்கே.. நான் மதியம் 12 மணிக்கே எந்திரிச்சுட்டேன்
----------------------------------
7. எதுக்காக பனங்கிழங்கு டெயிலி சாப்பிடறீங்க?
பனை மரம் மாதிரி உயரமா வளரத்தான்
------------------------------
8. உங்களுக்குத்தான் ஆயில் சேராதுன்னு சொன்னேனே?
டாக்டர், என்ன கொடுமை இது? ஆயில் பெயிண்ட்டிங்கை கூட பார்க்க கூடாதா?
---------------------------------
9. பெண் பார்க்கும் படலம் கீதா - மாப்ள சார், உங்களுக்கு பிடிச்ச ரஜினி படம் எது?
உஷார் மாக்கான் மாப்ள - நான் அடிமை இல்லை
--------------------------------
10. அக்கா.. உங்க கல்யாணம் எப்போ?
பையன் கிடைச்ச உடனே?
XQSமீ , பையன் சிக்குன உடனேன்னு சொல்லுங்க
----------------------------------

11. நான் யார்ட்டயும் இரவல் புக்ஸ் வாங்கறதே இல்லை, இரவல் வாங்குனா திருப்பி தரனும், லைப்ரரில சுட்டுட்டு வந்துட்டா திருப்பி தர தேவை இல்லை :)
------------------------------
12. .தன் அன்பை உரியவர்களிடம் வெளிக்காட்டும் தருணத்தில் தான் ஒரு பெண் மிக அழகாக காட்சி அளிக்கிறாள் # எக்ஸ்போசிங்க் லவ்
------------------------------
12. .தன் அன்பை உரியவர்களிடம் வெளிக்காட்டும் தருணத்தில் தான் ஒரு பெண் மிக அழகாக காட்சி அளிக்கிறாள் # எக்ஸ்போசிங்க் லவ்
-------------------------
13. மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்தார் நடிகை வனிதா # அப்போ இரண்டாம் குலோத்துங்க சோழன் கதி?
----------------------------
14. அன்னா ஹசாரே சினிமால நடிக்கறாரா? அவருக்கு ஏன் ரஜினி வாய்ஸ் குடுத்ததா நியூஸ் வருது?
--------------------------------
15. . கணவன் ஏன் இரண்டாம் தாரத்தை தேடி செல்ல வேண்டும்?
ஹி ஹி ஆண்களுக்கு 2 தான் ராசியான நெம்பர் போல அவ்வ்
------------------------------

8 comments:
யாராவது தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள்.......எனக்கு இணையவில்லை
முதல் ஜோக் மிக அருமை... ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது!
good ones : ))
தமிழ்மணத்தில் இணைத்தாகிவிட்டது.
சி.பி. இன்டலி, தமிழ் 10 லும் இணைத்துவிட்டேன்.
அலெக்ஸா ரேங்க் பிடிக்க அண்ணன் இனி தினசரி 10 பதிவுகள் போடுவார் ஹி..ஹி..
நன்றாக இருந்தது,ஜோக்ஸ்?!
தனுஷ் செல்வராகவன்,கஸ்தூரிராஜ சூப்பர் டைமிங் காமெடி...
Post a Comment