பொங்கல் டைம்ல காலேஜ், ஸ்கூல், ஆபீசுல்லாம் எல்லாரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைப்பாங்க.அது போல பிளாக்கர்ஸ் நாமெல்லாம் சேர்ந்து பொங்கல் வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணுச்சு. சரின்னு எல்லா பிளாக்கர்சுக்கும் குறிப்பிட்ட இடத்துல, டைம்ல எல்லாரும் ஒண்ணு கூடி பொங்கல் வைக்கலாம்ன்னு மெயில் அனுப்பப்பட்டு எல்லாரும் சரி வரேன்னு சொன்னாங்க.
இது பொங்கல். சாப்பாடு, கோலம், சாமிக்கு படையல்ன்னு நிறைய வேலைகள்லாம் இருக்கு. சாமி விஷயம் என்பதால் பொறுப்பா செயல்படனுமேன்னு யோசிச்சு சில பெண் பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அவங்களும் வரோம்ன்னு ஒத்துக்கிட்டாங்க.
இது தனி ஒருத்தரால மட்டும் முடியும் காரியமல்ல. அதனால், ஆளாளுக்கு தனித்தனியா வேலைகளை பிரிச்சு கொடுத்தாச்சு. கரும்பு, அரிசி, வெல்லம், நெய் போன்ற சமையல் பொருட்களை வாங்கும் பொறுப்பு கருண், சௌந்தரை சார்ந்தது. பானை வாங்கும் பொறுப்பு மகேந்திரன்கிட்ட. வீடு வாசல்லாம் ஒட்டடை அடிச்சு சுத்தம் பண்ற பொறுப்பு மனோ, விக்கிக்கு. கோலம், பொங்கல் வைக்கும் இடத்தை அலங்காரம் பண்ணும் பொறுப்பு மகளிரை சார்ந்ததுன்னு பிரிச்சு கொடுத்தாச்சு.
பொங்கல் அன்று:
சீனா தானா ஐயா: என்ன இது. இன்னிக்கு பொங்கல் வைக்கலாம்ன்னு எல்லாரும் ஒண்ணு கூடியிருக்கோம். மணி ஏழாச்சு. பொங்கல் வைக்கும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. ஏம்மா ”மணிராஜ்” ராஜராஜேஸ்வரி நீங்க எடுத்து சொல்லக்கூடாதா? மளமளன்னு வேலையை ஆரம்பிங்கம்மா. கைல என்னதும்மா?
ராஜராஜேஸ்வரி: சார், இது என் உறவினர் ஒருத்தர் கொடுத்தனுப்பிய ஃபாரீன் கேமிரா. பொங்கல் வைக்குறதை படம் எடுத்து என் பிளாக்ல போடுவேன்.
சீனா தானா ஐயா: சரிங்கம்மா. வேலையை ஆரம்பிங்கம்மா, முதல்ல பொங்கல் வைக்க போற இடத்தை சுத்தம் பண்ணுங்கம்மா.
ராஜராஜேஸ்வரி: ஐயா, இங்கதான் இது பொங்கல், இதுவே வட நாட்டுலலாம் மகர சக்ராந்திகை. அதுமட்டுமில்லாம ஒரிசாவுல கொணார்க் சூரிய பகவான் கோவில்ல பொங்கல் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டாங்க.
சீனா தானா ஐயா: அம்மா! உங்க ஸ்தல சுற்றுலா மேட்டரை அப்புறம் பேசிக்கலாம். ஏம்மா காணாமல் போன கனவுகள்” ராஜி, இங்க வாம்மா. நல்ல அழகா கோலம் போடும்மா.
ராஜி: ஐயா, கோலம் போடுவது எப்படி, கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள், கோலப்பொடி, கலர்பொடி வாங்கும்போது கவனிப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்.
சீனா தானா ஐயா: ஓக்கே.அதை பார்த்து யாரையாவது கோலம் போட சொல்றேன். ஏம்மா ”வானம் வெளித்த பின்னும், உப்பு மட சந்தி”ஹேமா! பொங்கல் அதுவுமா நீ என்ன யோசனைல இருக்கே? வாம்மா வந்து கோலம் போடு.
ஹேமா: நான் இங்க போடும் இதே கோலத்தையே அங்க போய் போட்டுக்கலாமா? இல்லை அங்க வேற கோலத்தை போடலாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.
சீனா தானா ஐயா: உன் அவஸ்தை உனக்கு. சரிம்மா ”காகித பூக்கள்”ஏஞ்சலின் பொங்கல் மேடை, சாமிக்கு படையல் போடும் இடத்தை கொஞ்சம் அலங்காரம் பண்ணும்மா.
ஏஞ்சலின்: சரிங்க ஐயா, அசத்திடுறேன். அதுக்கு தேவையான மெட்டீரியல் சொல்றேன் குறிச்சுக்குறீங்களா?
சீனா தானா ஐயா: நீ குறிச்சு குடுத்து இனிமே வாங்கி வந்து நீ செஞ்சு அலங்காரம் பண்றதுக்குள்ள காணும் பொங்கலே வந்துடும். ஏம்மா ”ஷாதிகா” ஸாதிகா, மேனகா நீங்க ரெண்டுபெரும் ஏம்மா அடிச்சுக்குறிங்க.
ஷாதிகா: ஐயா,**** பிளாக்குல *** அக்கா பொங்கல் குழம்புல மிளகு சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருகாங்க. ஆனால், சசிகா மேனகா மிளகு போட்டே ஆகனும்ன்னு அடம் பிடிக்குறாங்க.
மேனகா: ஐயா, மிளகு போட்டால் ஜீரணத்துக்கு நல்லது. பொங்கல் டைம் என்பதால், கரும்பு சாப்பிட்டு வறட்டு இருமல் வரும் அதனால மிளகு சேர்த்துக்கிட்டால் இருமல் வராதுன்னு *** பிளாக்குல ***அக்கா சொல்லியிருக்காங்க.
இன்னிக்கு என்னவோ மகளிர் அணிதான் சொதப்பிட்டிங்க. ஆண்கள் அணி என்ன கூத்து பண்றாங்கன்னு போய் பார்க்குறேன்.
சீனா தானா ஐயா: ”நாஞ்சில் மனோ”மனோ ஒட்டடை அடிக்காம லேப்டாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?
மனோ: சார் பஹ்ரைன் ஓட்டல்ல ஒருமுறை இதுப்போல பொங்கல் கொண்டாடி இருக்கோம். அப்போ கேரள சேச்சிகள்லாம்கூட கலந்துக்கிட்டாங்க.
விக்கி: டேய் உன் சுய புராணத்தை நிறுத்துடா நாதாரி.
மனோ: நீ முதல்ல அடங்குடா இல்லாட்டி அருவா எடுத்து ஒரே போடு போட்டுடுவேன். ஐயா இந்த விக்கி தக்காளி நைட் அடிச்ச மப்பு தெளியாம, தண்ணிக்கு பதில் அந்த தண்ணியை ஊத்தி இடத்தை கழுவி சுத்தம் பண்ணும் கூத்தை கேளுங்க.
விக்கி: இவன் தான் இவ்வளவு நேரமும் பஹ்ரைன்ல பொங்கல் அன்னிக்கு கேரள சேச்சிகள் கூட ஆட்டம் போட்டத என்கிட்ட சொல்லி கடுப்பேத்திக்கிட்டு இருந்தான்.
சீனா தானா ஐயா: ஐயோ ஐயோ ஏன்தான் ஆளாளுக்கு நல்ல நாள் அதுவுமா இப்படி அலப்பறையை குடுக்குறீங்களோ? ஏம்பா தமிழ்வாசி பிரகாஷ் வந்தே மாதரம் சசி, வீடு சுரேஷ் நீங்க மூணு பேரும் அப்படி என்ன அங்கே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க.
பிரகாஷ்: பொங்கல் நல்ல படியா பொங்கி வர மாதிரி javal ஒரு புரோகிராம் இருக்கு அது எப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் ஐயா,
சசிக்குமார்: பிரகாஷ் சொன்ன மாதிரி புரோகிராம் பண்ணினால் பன்கலின் ருசியும், நிறமும் மாறிடும் அபாயம் இருக்கு. அதுக்கு மாற்று வழி என்னன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்
சுரேஷ்: ஐயா, அதுக்கு javaவைவிட வேற ஒரு சாஃப்ட்வேர் போட்டு செய்தால் ருசி, நிறம் மாறாது. நம்பிக்கை இருந்தால் என் பிளாக்குல அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேன் ஐயா.
சீனா தானா ஐயா: என்னது பொங்கல் வைக்க சாஃப்ட்வேரா? ஒருவேளை சமத்துவ பொங்கல் வைக்கலாம்ன்னு ஆசைப்பட்டது தப்போ? பானை வாங்க போன ”வசந்த மண்டபம்”மகேந்திரனும், ”ஆணிவேர்”சூர்யஜீவாவும் எங்கே?
மனோ: அதோ வராங்க ஐயா, ஆனால் வெறுங்கையோடத்தான் வராங்க. எலேய் பானை எங்கலேய்
மகேந்திரன்- அன்பு நிறை மனோ,
மனோ: நாசமா போச்சி, இப்போ உன் பிளாக் கமெண்டுன்னு நினைச்சியா? ஒழுங்கா பேசு.
மகேந்திரன்: நான் பானை வாங்க போன இடத்துல குயவன்கிட்ட சூர்யஜீவா சண்டை போட்டு பெரிய அடிதடியாகி இந்த ஏரியாவுல யாருக்கிட்டயுமே பானைவாங்க கூடாதுன்னு என்னை சூர்ய ஜீவா கூட்டிக்கிடு வந்துட்டாரு.
சீனா தானா ஐயா: என்ன ஆச்சு? மனோதான் கோவக்காரன் அருவா கத்திலாம் தூக்குறான்னு பார்த்தால் நீயுமா? என்ன ஆச்சுன்னு சொல்லு சூர்யா?
சூர்யஜீவா: ஐயா, நான் பாட்டுக்கு பானை வாங்கிட்டு இருந்தேன். அப்போ குயவன் கைல சின்னதா ஒரு கொப்பளம்.என்னன்னு கேட்டேன். அது என்னன்னு தெரியலை. அது சாதாரண கட்டி னுசொன்னான். அவனை தோண்டி துருவி விசாரித்ததுல பானை செய்ய தேவையான மண்ணு கூடங்குளத்துல இருந்துதான் வருதுன்னு சொன்னான். அதோட விளைவுதான் இது, நீ போய் இந்த லிங்குல பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன். நானே பானை செஞ்சு அஞ்சுக்கும் பத்துக்கும் விக்குறேன் என்கிட்ட ஏது கம்ப்யூட்டரும் நெட்டும் என்ன நக்கல் பண்றியான்னு அந்த ஏரியாவே அடிக்க வந்துட்டுது. கூடங்குளத்துல இருந்து வந்த மண் என்பதால் ஏன் ரிஸ்க்குன்னு நான் பானையே வாங்காம வந்துட்டேன்.
சீனா தானா ஐயா: இன்னிக்கு பொங்கல் வச்ச மாதிரிதான் அரிசி, வெல்லம் வாங்க போன ”வேடந்தாங்கல்” கருணும் ”கவிதைவீதி” சௌந்தரும், “உணவு உலகம்: சங்கரலிங்கமும் இன்னும் காணோம். ஏம்பா “நல்ல நேர” சதீஷ் அவங்களுக்கு போன் போட்டு பாரு,
சதீஷ்: ஐயா இன்னிக்கு நவமி. அதனால் என் போனை நான் யூஸ் பண்றதில்லை.
சீனா தானா ஐயா: சரி, யார்கிட்டயாவது செல்லை வாங்கி அவனுங்களுக்கு போன் போடு.
சதீஷ்: இப்போ குளிகை ஐயா, அதனால நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.
மனோ: அப்போ நீ...
விக்கி: நல்ல நாள் அதுவுமா, சதீஷை திட்டி ஏழரையை கூட்டாதே.
சௌந்தர்: போன்லாம் போடாதீங்க. நாங்களே வந்திட்டோம்.
சீனா தானா ஐயா: ஏம்பா சௌந்தர் இந்த அரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் வாங்கி வர உங்களுக்கு இவ்வளவு நேரமா?
கருண்: ஆபீசர் சாரலதான் லேட்.அவர்தான் எந்த பொருளை எடுத்தாலும் கலப்படமிருக்கா? சுத்தமானதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்து பார்த்து வாங்குனார்.
சௌந்தர்: கிராமத்து தோட்டத்துல விளைஞ்சு வரும் காய்கறிகள், கறிவேப்பிலை கொத்தமல்லி க்கு கூட தர சான்றிதழ் இருக்கான்னு கடைக்காரனை கேட்டு அவனை தலை கிறுகிறுக்க வைத்தாரே அந்த கொடுமை சொல்லேன்.
ஆபீசர்: நீ மட்டும் ஒழுங்கா? ஒரு போஸ்டரையும் விடாம பார்த்து, அது எப்போ ரிலீஸ் யார் நடிகர்கள், எந்த தியேட்டர்ன்னு பார்த்துக்கிட்டே மெதுவா நடந்து வந்தே. இந்த கருணோ ஒரு பஸ்ஸை விடலை, கண்ணே மணியே, சக்கரமேன்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுறான்.
கருண்: டேய் மாப்ள “ராஜபாட்ட” ராஜா, நீ என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கே.
ராஜா: சூர்யா, அஜீத், விஜய்லாம் எப்படி பொங்கல் வச்சாங்கன்னு நாளைக்கு ஃபேஸ்புக்குல வருமா? அது வச்சு எப்படி பதிவை தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
பிரகாஷ்: அடங்கோ, விஜய் பேரை சொல்லிட்டியா? இந்த பொங்கல் நல்லபடியா போன மாதிரிதான்.ஏண்டா மாப்பிள்ளை விஜய் பேரை சொன்னே?
மனோ: இங்க இம்புட்டு கலவரம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த சிபி மூதேவி மட்டும் ஏன் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்?
டேய் அண்ணா உனக்கென்னடா கவலை? ஏன் உம்முன்னு இருக்கே.
சிபி: இன்னிக்கு, தமிழ்ல 4 படம், இங்கிலீஷ் ல 2 படம், இந்தி ல 1 ஒரு படம்ன்னு ரிலீஸ்.
விக்கி:கில்மா படம்?
சிபி:கில்மா படம் ஏதும் ரிலீஸ் ஆகலை.
விக்கி: டேய் நாதாரி அதான் உன் கவலையா ங்கொய்யால
சிபி: ஹி ஹி அதில்லை தம்பி. இன்னிக்கு ரிலீசாகுற படத்தையெல்லாம் பார்க்க முடியாம உங்ககூட பொங்கல் கொண்டாட வேண்டியதா போச்சே அதான் என் கவலை.
எல்லாரும் கோரஸாக, என்னது எங்ககூட பொங்கல் கொண்டாடுறதுதான் உங்க கவலையா?ன்னு கரும்பு, விறகு கட்டைன்னு கைக்கு கிடைச்சதை தூக்கிக்கிட்டு அடிக்க ஓடி வர, சிபி அதிலிருந்து தப்பிக்க ஓடன்னு பொங்கல் இனிதே முடிந்தது.
40 comments:
இனிய பொங்கல் திருநாட்கள் இனிதே கழியட்டும்! வரும் காலம் வசந்தமாகட்டும்!
ஹா...ஹா....
கடமை தவறாத சிபியை எல்லோரும் அடிக்க வாங்க....
பொங்கல் வைக்காம படத்துக்கு போறாராம்????
ஜல்லிக்கட்டு பாக்க வாங்க மக்காஸ்...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு
தாங்களுக்கு எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
பொங்கலோ பொங்கல்..
அண்ணே வணக்கம்னே!..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
அண்ணே கலக்கலா எழுதியிருக்கிறீங்க.
மகேந்திரன் அண்ணருக்கு
அன்புறை அண்ணாச்சி கமெண்ட் சூப்பர் கடி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிருச்சு சிருச்சு வயறு வலிக்குது
கில்மா படம் ரிலீசாகலைன்னா என்னண்ணே, மேதை படத்துக்கு போகலாம்ல..... கித்தாப்பா இருக்கும்......!
ஆடுவோமே...பல்லு தேடுவோமே...ஆனந்தமாய் கரும்பு கடிக்கவே!
அண்ணன் சிபி அவர்கள் அகில உலக பவர்ஸ்டார் பாசறை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தொல்லை படம் பார்த்து விமர்சனம் எழுதுவார்.....
///// விக்கியுலகம் said...
ஆடுவோமே...பல்லு தேடுவோமே...ஆனந்தமாய் கரும்பு கடிக்கவே!////
யோவ் பல்லு தேடுற அளவுக்கு வயசாகிடுச்சா? அது பல்லு இல்ல பள்ளு......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் சிபி அவர்கள் அகில உலக பவர்ஸ்டார் பாசறை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தொல்லை படம் பார்த்து விமர்சனம் எழுதுவார்.....
>>>>>>>>>
யோவ் இவரு தொல்லயே தாங்கல இதுல..அந்த தொல்லயப்பத்தி வேற எழுதனுமா ஹிஹி!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// விக்கியுலகம் said...
ஆடுவோமே...பல்லு தேடுவோமே...ஆனந்தமாய் கரும்பு கடிக்கவே!////
யோவ் பல்லு தேடுற அளவுக்கு வயசாகிடுச்சா? அது பல்லு இல்ல பள்ளு.....
>>>>>>>>>>
யோவ் ஒவரா ஜொள்ளு விட்டா அப்படித்தான் ஹிஹி!
////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் சிபி அவர்கள் அகில உலக பவர்ஸ்டார் பாசறை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தொல்லை படம் பார்த்து விமர்சனம் எழுதுவார்.....
>>>>>>>>>
யோவ் இவரு தொல்லயே தாங்கல இதுல..அந்த தொல்லயப்பத்தி வேற எழுதனுமா ஹிஹி!///////
படம்னு எடுத்து அதை ரிலீஸ் பண்ணிட்டா போதாதா, சிபி அதை பாத்துட்டு விமர்சனம் போட்ருவார்ல?
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// விக்கியுலகம் said...
ஆடுவோமே...பல்லு தேடுவோமே...ஆனந்தமாய் கரும்பு கடிக்கவே!////
யோவ் பல்லு தேடுற அளவுக்கு வயசாகிடுச்சா? அது பல்லு இல்ல பள்ளு.....
>>>>>>>>>>
யோவ் ஒவரா ஜொள்ளு விட்டா அப்படித்தான் ஹிஹி!//////
கொடுத்து வெச்ச ஆளுய்யா....... சுத்தி பிகர்களை உக்கார்த்தி வெச்சிக்கிட்டு ஆபீஸ்ல ஜாலி பண்ணிட்டு இருக்க........
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் சிபி அவர்கள் அகில உலக பவர்ஸ்டார் பாசறை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தொல்லை படம் பார்த்து விமர்சனம் எழுதுவார்.....
>>>>>>>>>
யோவ் இவரு தொல்லயே தாங்கல இதுல..அந்த தொல்லயப்பத்தி வேற எழுதனுமா ஹிஹி!///////
படம்னு எடுத்து அதை ரிலீஸ் பண்ணிட்டா போதாதா, சிபி அதை பாத்துட்டு விமர்சனம் போட்ருவார்ல?
>>>>>>>>
கில்மா படத்துக்கே சீசன் டிக்கட் வாங்கி வச்ச மனுசனாச்சே ஹேஹே!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// விக்கியுலகம் said...
ஆடுவோமே...பல்லு தேடுவோமே...ஆனந்தமாய் கரும்பு கடிக்கவே!////
யோவ் பல்லு தேடுற அளவுக்கு வயசாகிடுச்சா? அது பல்லு இல்ல பள்ளு.....
>>>>>>>>>>
யோவ் ஒவரா ஜொள்ளு விட்டா அப்படித்தான் ஹிஹி!//////
கொடுத்து வெச்ச ஆளுய்யா....... சுத்தி பிகர்களை உக்கார்த்தி வெச்சிக்கிட்டு ஆபீஸ்ல ஜாலி பண்ணிட்டு இருக்க........
>>>>>>>>>
ஏற்கனவே வீட்ல நல்ல நாளு அதுவுமா ஜொள்ளு விட கெளம்ப்பிட்டியான்னு கொல்ராங்க நீர் வேறா ஹிஹி!
///// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் சிபி அவர்கள் அகில உலக பவர்ஸ்டார் பாசறை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தொல்லை படம் பார்த்து விமர்சனம் எழுதுவார்.....
>>>>>>>>>
யோவ் இவரு தொல்லயே தாங்கல இதுல..அந்த தொல்லயப்பத்தி வேற எழுதனுமா ஹிஹி!///////
படம்னு எடுத்து அதை ரிலீஸ் பண்ணிட்டா போதாதா, சிபி அதை பாத்துட்டு விமர்சனம் போட்ருவார்ல?
>>>>>>>>
கில்மா படத்துக்கே சீசன் டிக்கட் வாங்கி வச்ச மனுசனாச்சே ஹேஹே!/////
ஸ்கூல் படிக்கும் போதே கில்மா போஸ்டர்களை கிழியாம அப்படியே நேக்கா உரிச்சு எடுத்து வீட்ல வெச்சி பார்த்த ஆளாச்சே அவரு........
காமெடி கும்மியடித்த பொங்கல் நன்றாகவே சுவைத்தது செந்தில்.
@ ராவடி ராம்சாமி
என்ன தைரியம் இருந்தா என்னை ராமராஜன் படம் மேதை விமர்சனம் போடலையா?ன்னு கேப்பாங்க? அடங்கோ
/////தமிழ்வாசி பிரகாஷ் said...
ஹா...ஹா....
கடமை தவறாத சிபியை எல்லோரும் அடிக்க வாங்க....
பொங்கல் வைக்காம படத்துக்கு போறாராம்????///////
யோவ் கில்மா படம் ஒருவாரம்தான்யா ஓட்டுவான், அதுவும் மொதநாள்லதான்யா எல்லா பிட்டும் வரும்...... அதுனாலதான்யா அவரு அப்புடி அவசரமா கெளம்பிட்டாரு.....
////// சி.பி.செந்தில்குமார் said...
@ ராவடி ராம்சாமி
என்ன தைரியம் இருந்தா என்னை ராமராஜன் படம் மேதை விமர்சனம் போடலையா?ன்னு கேப்பாங்க? அடங்கோ///////
சரிவிடுங்க, மேதை இல்லேன்னா என்ன, அதான் ஆனந்த தொல்லை வருதில்ல...... ?
@ராவடி ”ரம் ”சாமி
நண்பன் படத்துக்கு விமர்சனம் போட்டதே பெருசு, உங்களூக்காக அந்த தியாகத்தை செஞ்சேன்
பொங்கலோ பொங்கல்...
சி.பி.செந்தில்குமார் said...
@ராவடி ”ரம் ”சாமி
நண்பன் படத்துக்கு விமர்சனம் போட்டதே பெருசு, உங்களூக்காக அந்த தியாகத்தை செஞ்சே
>>>>>>
இவரு பெரிய அப்பா டக்கரு...நாங்க கேட்டா பதில் சொல்ல மாட்டாரு..ராம்சாமிக்கு மட்டும் பதில் சொல்லி தப்பிச்சிடலாம்னு பாக்குறாரு போல!
@ vikki
தம்பி, ராம்சாமிக்கு ரிப்ளை போடலைன்னா பயங்கர டேட்டா போட்ருவாரு, நீ நம்மாள் ஆச்சே, எப்போ வேணாலும் பேசிக்கலாம், ஏசிக்கலாம்
கலக்கலா பொங்கிட்டீங்க!
/////சி.பி.செந்தில்குமார் said...
@ vikki
தம்பி, ராம்சாமிக்கு ரிப்ளை போடலைன்னா பயங்கர டேட்டா போட்ருவாரு, நீ நம்மாள் ஆச்சே, எப்போ வேணாலும் பேசிக்கலாம், ஏசிக்கலாம்/////
இது சரிப்பட்டு வராது, அடுத்த பயங்கரடேட்டா தயார் பண்ணிட வேண்டியதுதான்....
கலக்கலான பொங்கல் கொண்டாடியிருக்கீங்க. கடைசில உங்கள பொங்கீட்டாங்களே ...
கடைசி போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. இவங்கதான் பஹ்ரேனுக்கு வந்த சேச்சிகளா??? அவ்வ்வ்வ
ஹா..ஹா.. நல்ல வேடிக்கை பொங்கல்...
பொங்கல் வைப்பதற்கு முன்னர் ஒரு
கும்மியாட்டம் போட்டிருந்தா நல்லா இருக்குமே.....
சூர்யஜீவா கூட பொங்கப்பானை வாங்க போன கூத்து
நினைச்சு நினைச்சு சிரிச்சேன் நண்பரே...
நல்ல பொங்கல் கூத்து. உங்க எல்லோரையும ஒண்ணுகூட்டி பொங்கல் வைக்க ஏற்பாடு செய்த சீனா ஐயாவின் மனஉறுதியை பாராட்டத்தான் வேண்டும்!!
கரும்பின் சுவைபோலே சுவைத்தது. வாழ்த்துக்கள்.
கலக்கலான பொங்கல் .
மிளகு விஷயத்தை எவ்வளோ உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க ....அப்போ உங்க வீட்ல சமையல் ...............
கலக்கலா பொங்கியிருக்கு காமெடிப் பொங்கல் :-))
அத்தனை பேரையும் சமாளிச்ச சீனா ஐயாவின் மன உறுதியைப் பாராட்டத்தான் வேணும் :-))
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
பொங்கலோ பொங்கல்.என்னை இந்தக் குளிர்ல கோலம் போட வச்சிட்டீங்களே.அப்பா...பொங்கல் இத்தனைபேரோட களை கட்டிச்சா.ஆனால் நான் இங்க தனியாத்தான்.அதோட முழு நாளுமே வேலை.அன்பான பொங்கல் வாழ்த்துகள் சிபி.உங்க வீட்லயும் சொல்லிடுங்க !
அருமை சிபி.
வாழ்த்துகள்.
இதுவல்லவோ பொங்கல். :)))
வாழ்த்துக்கள்.
உங்கள் சிந்தனையில் இப்படியொரு பொங்கல் உதித்திருப்பதில் ஆச்சர்யமில்லை.
Post a Comment