நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி..
1. குறும்படத்தின் பெயர் - விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் - அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)
ஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..
காலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்.. அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )
வாலண்ட்ரியா செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது..
இப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை..
இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது..
3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்..
மனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?
2. குறும்படத்தின் பெயர் - ஒரு ஃபீலிங்க் - குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்
ஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன் பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..
அவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும்? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி?ன்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்
ஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே? அதுக்கு ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ?
அப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது..
வழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி
ரசித்த வசனங்கள்
1. அவனுக்கு லவ்வா? அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..
2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா...
3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி.. ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்.. ( எஸ் எம் எஸ் ஜோக்)
அப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்?
3. குறும்படத்தின் பெயர் - குவியம் - குறும்பட இயக்குநர் பெயர் - கிஷோர்
ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)
ஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..
அப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கலைஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கே?னு கேட்க அவர் அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்..
ரசித்த வசனங்கள்
1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா?
2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா? காரம் சாப்பிட மாட்டாங்களா?)
3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி
மவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்
டிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ
டிஸ்கி 1 -
டிஸ்கி 1 -
11 comments:
அப்போ எதுவும் ரசிச்சு பார்க்குற மாதிரி இல்ல. அடுத்த வாரம் பார்ப்போம்.
Yepdinne ivvalavu pathivu podamudiyuthu...
ஹா.ஹா..ஹா...
குறும்படமும் பாக்கறிங்க... ரைட்டு...
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு
வணக்கம் சி.பி சார்!அமர்க்களம்.ஆனா,ஸ்டில்லுங்க தான்..............................!
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?
//நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.//
ஒரு வேளை போன வருட இறுதியில் இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செஞ்சிருப்பாங்களோ..
அதனால் தான் இப்படி ஒப்பனிங் சரியில்லாம இருந்திருக்கும்.
குறும்படத்தின் பெயர் - விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் - அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)//
அண்ணே, யாரண்ணே அந்த நாஞ்சில் விஜயன்?
நம்ம பதிவரா?
சுருக்கமான விமர்சனப் பகிர்வைக் கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.
குறும்பட விமர்சனம் நல்லாயிருக்கு...
விமர்சனத்திற்கு நன்றி
நன்றி சிபி !
Post a Comment