
1. விநாயகா - இன்னைக்கு ரிலீஸ் ஆகற முக்கியமான தமிழ்ப்படம் விநாயகா . போன வாரமே ரிலீஸ் ஆகவேண்டியது, ஏனோ ஆகலை,, இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் பண்ண தயாரிப்பாளர் ஏதும் ஸ்டெப் எடுக்கலை, கூகுள்ல இமேஜ் கூட இல்லை, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.. சந்தானம் காமெடி வைக்கற அளவுக்கு டப்பு உள்ள புரொடியூசர் ஏன் விளம்பரங்கள், மார்க்கெட்டிங்க்ல அக்கறை செலுத்தலைன்னு தெரியலை.. ஈரோடு ஸ்ரீசண்டிகால படம் ரிலீஸ்..
ஹீரோ பிந்து கோஷ் மாதிரி குண்டு கல்யாணம் மாதிரி தொப்பையோட இருக்கார்.. நியூஸ் பேப்பர் ஸ்டில் களில் சூர்யா போன்ற சிக்ஸ் பேக்கை கிண்டல் பண்ற மாதிரியும், படக்கதைல குண்டான நபருக்கு உண்டாகும் காதல் காமெடியா சொல்லப்பட்டிருக்கலாம்கறது என் யூகம்.. லெட் ஸீ

2. PLAYERS - அபிஷேக் பச்சன் ,பிபாஷா பாஸு, பூனம் நடிச்ச ஹிந்திப்படம்.. த இத்தாலியன் ஜாப்-னு ஒரு இங்க்லீஷ் படம் வந்ததே அதனோட அப்பட்டமான ரீ மேக் தான் இந்தப்படம்.. மும்பையில் பார்த்த விமர்சகர்கள் படம் முதல் பாதி சுமார் என்றும் , பின் பாதி சராசரிக்கும் மேலே எனவும் சொல்லி இருக்காங்க ..அபிஷேக்க்குக்கு இது ஒரு ஃபெயிலியர் படம்னு தான் தோணுது.. பெண் குழந்தை பிறந்த நேரம் சரி இல்லைனு யாரும் பேசி அவர் மனசை புண் படுத்தாம இருந்தா சரி.

Abhishek Bachchan, Sonam Kapoor, Bobby Deol, Bipasha Basu, Neil Nitin Mukesh, Omi Vaidya, Sikander Kher, Johny Lever and Vinod Khanna. இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க.. கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை ஆட்டையப்போடும் மங்காத்தா டைப் கதை,, பிபாஸாபாஸ்க்கு 2 சீன் இருக்காம்.. சோனம் கபூர் நடிப்புன்னா கிலோ என்னை விலைன்னு கேக்கறாராம்.. திரைக்கதை ரொம்ப மோசம்னு தகவல் வந்த வண்ணம் இருக்கு..ஈரோடு ஸ்ரீகிருஷ்ணால படம் ரிலீஸ்

3. THE DARKEST HOUR - ஃபாரீன்ல 2011ல ரிலீஸ் ஆன படம் இந்தியாவுல இப்போ ரிலீச் ஆகுது..வழக்கமான ஏலியன் கதைதான்.. வேற்றுக்கிரக வாசி ஒண்ணு பூமில வந்து நமக்கு வர்ற பவர் சப்ளை மூலம் ( மின்சாரம்) பூமியை தாக்குது.. கதைக்களன் மாஸ்கோ.. 5 பேர் கொண்ட ஒரு குழு அதை எப்படி வீழ்த்தறாங்க அப்டிங்கறதுதான் கதை..
90 நிமிடங்கள் ஓடும் படம் , ஃபாரீன்ல 25 12.2011ல ரிலீஸ் ஆகி இருக்கு.. அந்த 5 பெர்ல ஒலிவியா பார்க்கற அளவு 70 மார்க் ஜிகிடி.. சுமார் ரக படம் தான்..ஈரோடு வி எஸ் பில ரிலீஸ்

- ஸ்பீடு -2 அப்டினு விளம்பரத்துலயும், போஸ்டர்லயும் வருது. ஆனா இது ஏதோ டுபாக்கூர் படம் போல. 2008-ல் ரிலீஸ் ஆன படம், என்னமோ இப்போதான் ஆல்ல் ஓவர் த வோர்ல்டு ரிலீஸ் ஆகற மாதிரி ஒரு பில்டப் மக்களே ஏமாந்துடாதீங்க.. ஈரோட்லஆனூர்ல ரிலீஸ்
12 comments:
விநாயகா படம் ஸ்டில்ஸ பாத்தா The Hitch படத்தின் காப்பியா இருக்குமோண்ணு தோணுது. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் எழுதும் தமிழ் கில்மா படங்களை பதிவிறக்க ஏதேனும் வழி உண்டா பாஸ்??? :P
4 ஆவது படத்துக்குத்தான் சிபி முதலில் போவார்!சரிதானே!
கூகுள் ல தேடுனா கூட இவ்ளோ தகவல் கிடைக்காது தல ! ஒவ்வொரு படமும் உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறது...அநேகமாக 4வது படத்தின் விமர்சனம் முதலில் வர வாய்ப்புகள் அதிகம்...வரலாறுல நீங்க செம ஸ்ட்ராங்கு தல!
அண்ணே தியேட்டர்ல இருந்து பதிவு போட்டதுக்கு நன்றி ஹிஹி!
அந்த விநாயகா படம் ஒரு தெலுங்கு படத்தோட ரீமேக் -ன்னு நினைக்கிறேன் .. பார்க்கலாம்
இது முதலாவது செக்ஸ் காமெடி படம் இல்லை என்ற தகவலை சொன்ன சி.பி. தான் அடுத்த "பிலிம் நியூஸ் ஆனந்தன்".
தொடரட்டும் உங்கள் சேவை.
கொய்யால கில்மா படம்தான் நீ மொதல்ல பார்த்தேன்னு விக்கி சொல்றான் அப்பிடியா...?
பெண் குழந்தை பொறந்த நேரம் சரியில்லைன்னு நீயே போட்டு குடுக்குறியா ராஸ்கல், டேய் இங்கே ஜெயிகிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான் தெரியுமில்ல ஹி ஹி...
விக்கியுலகம் said...
அண்ணே தியேட்டர்ல இருந்து பதிவு போட்டதுக்கு நன்றி ஹிஹி!//
விடுடா விடுடா இவனுக்கு அது புதுசா என்ன...?
பிபாசாவுக்கு கில்மா சீன் எல்லாம் புதுசா என்ன விடுய்யா...!
விக்கி உன்னை கிழிச்சி தொங்கவிட்டு இருக்கான் பார்த்தியா..???
நிஜமாவே வெட்டி ஆபீசர்தான் நீங்க
Post a Comment