Tuesday, January 31, 2012

கோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி ( பேட்டிங்கோவ்) பாகம் 1

 குமுதம் புக்ல அரசு கேள்வி  பதில்கள் செம ஃபேமஸ்..அதுலவர்ற அ-அண்ணாமலைசெட்டியார் ர-ரா கி ரங்கராஜன்  சு -சுந்தரராம சாமி இவங்க 3 பேரும் சேர்ந்துதான் பதில் சொல்வாங்க.. ஹி ஹி ஹி என்ற பதில் ஃபேமஸ் ஆனது இவங்க மூலம் தான்.விகடன்ல ஹாய் மதன்கேள்வி பதில்கள் ஒரு என் சைக்ளோ பீடியா படிச்ச எஃபக்ட்.. துக்ளக் சோ கேள்வி பதில்கள் நடை முறை நாட்டு நடப்பு பிரதி பலிப்பு..

ட்விட்டர்ல சிலர் பேட்டி மாதிரி சிலகேள்வி கேட்டாங்க.. 67 கேள்விகள். இதுவரை.. வாரம் 10 பதில்கள்.. இனிதொடரும்.. யார் வேணாலும் கேட்கலாம்.. ஆனா என்ன வேணாலும் கேட்காதீங்க.. ஹி ஹி ஹி 





1.சி பி என்பதன் விளக்கம் ?    

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி ( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C  இனிஷியல்ல சேர்த்துட்டேன் ..  ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )


. 2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்?

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம் 


3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?                                                      

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்.. 


 4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?  

பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில்  17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களுக்கும் எழுதி உள்ளேன்  

5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?        

களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல  என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3  மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.அவர் வெயிட் பண்ணலாம்னார். ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்.. 

6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?

 சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக  சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்.. 

7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?                                                             

 எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி,  மகள்  என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்

8.அட்ராசக்க  என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?    

 நான் கவுண்டமணி  ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே ப்ளாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றாண்டா மொக்கை என  திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ் 

  9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?     

வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்.. 

  10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?
  
நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள் ..ராமராஜன்,பவர் ஸ்டார் படங்கள்க்கு விமர்சனம் எழுதமாட்டேன்,ஹி ஹி 

டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை
பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)

 

26 comments:

Unknown said...

நீங்க ப்ளாக் எழுதலன்னா இந்த உலகம் என்ன ஆகும் ??????

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD NELLAI

ஹிஹி ஹி ,பப்ளிக் பப்ளிக்

யாராவது தமிழ் மணத்தில் இணைக்கவும்

kanandan said...

naangalum bahil solvomla?(MOKKAIYA)
K.ANANDAN
B.PALLIPATTI

K.s.s.Rajh said...

தமிழ்மணம்,இன்ட்லி,தமிழ்10,
திரட்டிகளில் இணைத்துவிட்டேன் பாஸ்

உங்கள் கேள்வி பதில்கள் அருமை நல்ல ஒரு முயற்சி நானும் சில பல கேள்விகள் கேட்கவேண்டும் ஆறுதலாக கேட்கின்றேன்.

Unknown said...

சார் வணக்கம்!

விஸ்வநாத் said...

செந்தில் என்னோட சிரிப்புசிரிப்பு ப்ளாக் க்கு வரச்சொல்லி invite பண்ணே,
வந்தமாதிரி தெரிலயே ?
மத்தவங்கள எப்ப கை தூக்கி விடப்போறீங்க ?
அது ஒங்க கடமை இல்லியா ?

Anonymous said...

அண்ணே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அட்ராசக்க என்ற கவுண்டமணியின் வசனம் மதுரை வீரன் எங்க சாமி படத்தில் இல்லை. முதலில் முறைமாமன் என்ற படத்தில் அட்ரா, அட்ரா என்று கவுண்டமணி சொல்லுவார். அது ஹிட் ஆகவே அந்தப்படக்குழுவினரின் அடுத்த படமான மாமன் மகள் படத்தில் தான் அட்ராசக்க, அட்ராசக்க என்று வசனம் வைத்தனர். நாங்களெல்லாம் 20 வருடங்களுக்கு முன் வந்த படங்களின் வசனங்களையெல்லாம் ஞாபகம் வைத்திருப்போம், எப்பூடி.

RAMA RAVI (RAMVI) said...

கேள்வி பதில் சுவாரசியமாக இருக்கு.

Unknown said...

சிபி...உங்க பிளாக்கை எனக்கு கொடுத்திருங்கன்னு கேட்கிறேன் சந்தோஷமா....கொடுப்பீங்களா? முக்கியமான விசயம்...சந்தோசமா!

கேரளாக்காரன் said...

Itha thaan already vera oru blogla padichaachche....

கூடல் பாலா said...

உங்க பிரைவசிய பகிர்ந்துகிட்டதுல சந்தோசம் ...உங்கள் விமர்சனத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவன் இவன் விமர்சனம் ...

The Chennai Pages said...

Coming Soon...
http://faceofchennai.blogspot.in/

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே கூகிள் காரன் ஏமாத்திட்டானே....

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!தன்னிலை விளக்கம் உட்பட கேள்விகள்,தயக்கமில்லாப் பதில்கள் என்று உங்களை யார் என்று மீண்டும் நிரூபித்து விட்டன,வாழ்த்துக்கள்!!!!

Yoga.S. said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே கூகிள் காரன் ஏமாத்திட்டானே....////பரவால்ல விடுங்க."நண்பர்கள்"ராஜ் இணைச்சுட்டாரு!

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ்

அனுஷ்கா மார்க்கெட் டவுன் ஆனதுக்கே நாங்க கவலைப்படலை,அலெக்ஸா ரேங்க் போனா மட்டும் கவலைப்பட்டுடுவோமா? # கூகுள் மாற்றங்கள்,டாட் இன்

Astrologer sathishkumar Erode said...

டைட்டில் சரியில்லை.இனி அட்ராசக்க செந்தில் கேள்வி பதில் என்பதுபோல எளிமையாக தலைப்பு வைக்கவும்..ஒரு ப்ராண்டை உருவாக்க முயற்சிக்கவும்..அதாவது ஒரே தலைப்பில் 1,2 என எழுதவும்.ஹிட்ஸ் அதிகரிக்கும்...பதில்கள் எல்லாமே நல்லாருக்கு.

Astrologer sathishkumar Erode said...

அலெக்ஸா ரேங்க மொத்தமா பொயிருச்சே...நாங்கல்லாம் டாட்.காம் மாறும்போதே உசாராகியிருக்க வேணாமா..ஹிஹி..பார்க்கலாம் ..டாட்.காம் காரங்களுக்கு ஏதும் மாறுமா என வெயிட் பண்றோம்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

என்னது வா குவார்ட்டர் கட்டிங் காமெடி படமா? சாமி தாங்க முடியலை!

Astrologer sathishkumar Erode said...

கொஞ்சம் லேட் ஆகும்.அவ்வளவுதான்..1000 போஸ்ட் இருக்கே..சீக்கிரம் பழைய அலெக்ஸா இடத்தை பிடிச்சிறலாம்..!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பர்களே, எனது தளத்தில் பதிவாக வந்த சிபியின் இந்த பதில்களையும் வாசியுங்கள்.

http://www.tamilvaasi.com/2011/07/1-250.html

http://www.tamilvaasi.com/2011/07/blog-post_21.html

http://www.tamilvaasi.com/2011/07/blog-post_26.html

Mohamed Faaique said...

///Power Star, Ramarajan படங்களுக்கு விமர்சனம் எழுத மாட்டேன்..///

அப்போ அதையும் பார்த்துடுவீங்களா????

Amudhavan said...

அரசு பதில்களை குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அவர்கள் மட்டும்தான் எழுதிவந்தார் என்றே அறிகிறேன். அரசு என்பதற்கு அண்ணாமலை, ரங்கராஜன்,சுந்தரேசன் என்ற மூன்று துணைஆசிரியர்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்துவிட்டன என்பது சொல்லுவதற்கும் கேட்பதற்கும் அழகாக இருந்தது என்பதும் ஒப்புக்கொள்கிறமாதிரி இருந்தது என்பதும்தான் உண்மை. ஆனால் இப்படிச்சொல்கிறவர்கள் அவர்களை அறியாமலேயே இன்னொரு தவறைச் செய்கிறார்கள். காரணம் அரசு பதில்கள் ஆரம்பித்த நாட்களில் குமுதத்தில் மூன்று துணை ஆசிரியர்கள் இருந்தனர். ராகிரங்கராஜன், சுந்தரேசன், புனிதன் ஆகிய மூன்றுபேர். 'ர'வுக்கு ரங்கராஜன், 'சு'வுக்கு சுந்தரேசன் என்றால் புனிதனுக்கு என்ன உப எழுத்து?
ஆகவே, அது சுவாரஸ்யத்துக்காக சொல்லப்பட்ட ஒன்றுதான். உண்மை அல்ல. அரசு பதில்களை எழுதிவந்தவர் எஸ்ஏபி அவர்கள் மட்டும்தான்.

ராஜி said...

வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
....
கோவில்ன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும். வெள்ளிக்கிழமை நீன்க படம் பார்க்க தியேட்டருக்குதான் போவ்விங்கன்னு எங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்

நிரூபன் said...

வணக்கம் அண்ணர்,
இந்தப் பதில்களை இன்னோர் டுவிட்டர் எழுத்தாளர், ப்ளாக்கரும் பதிவிட்டிருந்தார்.

ஏலவே படித்தேன்.
அருமையான தொகுப்பு.

ஒரு பெரிய கேள்வி அனுப்பலாம் என்று ப்ளான் இருக்கு
பதில் கிடைக்குமா?

everestdurai said...

அருமை செந்தில் தொடர வாழ்த்துக்கள்