நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி.. எங்க வீடு பிராட்டி அம்மன் கோவில் அருகே இருந்துச்சு.. எங்க வீட்டுக்குப்பின்னால ஆண்டவர் பவர் பிரஸ் என ஒரு அச்சகம் இருந்துச்சு.. ஸ்கூல்க்கு போக 3 கிமீ நடக்கனும். ஃபிரண்ட்ஸ் சிலர் சைக்கிள்லயும், சிலர் பஸ்லயும் அவங்கவங்க வசதிக்கு தக்க படி போய்ட்டு இருந்தாங்க.. டெய்லி அப் &; டவுன் நடக்க எனக்கு ரொம்ப போர் அடிச்சுது.. அதுக்கு ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்.. ஆண்டவர் பவர் பிரஸ்ல ராஜாமணி அண்ணன் இருந்தார்.. அவரை ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்கிட்டேன்.. அங்கே பைண்டிங்க்கு வரும் லயன் காமிஸ், முத்து காமிக்ஸ் , அம்புலி மாமா, ரத்னபாலா, பால மித்ரா போன்ற புக்ஸ் எல்லாம் டெயிலி ஒண்ணா எடுத்துட்டு போய் வாக்கிங்க் ரீடிங்க் பண்ணிட்டு இருந்தேன்..
ஆர்ச்சி, ஸ்பைடர்மேன், இரும்புக்கை மாயாவி என்னை கவர்ந்த கதா பாத்திரங்கள்.. துப்பறியும் சாம்பு, சங்கர்லால் ரொம்ப பிடிக்கும்.. 3 வருடங்கள் ஏகப்பட்ட புக்ஸ் படிச்சாச்சு. பிளஸ் ஒன் படிக்கறப்ப சென்னிமலை லைப்ரரில தென்றல் என்ற பெயர்ல ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சோம்.. அதுக்கு கூட்டாளிங்க அய்யப்பன் ( இவர் பின்னாளில் ஆனந்த விகடன் சொல் வனத்தில் 6 கவிதைகள் , கணையாளியில் 4 கவிதைகள் எழுதினார்), அப்புறம் அங்குராஜ்.. இருவரும் கவிதை கார்னரை கவனிச்சுக்கிட்டாங்க. இதுல அங்குராஜ் பற்றி சொல்லியே ஆகனும்.. அவர் எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது போலவே இருக்கும்.. இவர் தான் புக்ல தென்றல் கை எழுத்துப்பிரதில எழுதுவாரு.. அங்குராஜ் காதல் கவிதைகள் எழுதுவாரு.. அய்யப்பன் மரணம், வறுமை இந்த மாதிரி வெரைட்டியா எழுதுவாரு.. அதுல பாதி கவிதைகள் எனக்கு புரியாது.. நான் பனிப்பூக்கள் என்னும் தொடர் கதை, இது மழைக்காலம் என்னும் கட்டுரைத்தொடர் எழுதி வந்தேன்
மாதம் ஒரு முறை வெளியிட்டோம்.. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை வெளீயிட அந்த புக்கின் கடைசியில் 10 பக்கங்கள் இடம் விட்டோம்.. வாரா வாரம் ஞாயிறு அன்று லைப்ரரி போய் யாராவது கமெண்ட்ஸ் போட்டிருக்காங்களா?ன்னு ஆர்வமா பார்ப்போம்.. 6 மாசம் இப்படியே போச்சு.. சக்திவேல் என்னும் நண்பர் வேர்கள் என்ற பெயரில் புதுசா ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சார்.அதே போல் ராஜ் மோகன் என்பவர் இதயம் என்னும் புக் ஆரம்பித்தார்.. இப்போ போட்டி வந்தாச்சு ஒரே லைப்ரரி 3 புக்ஸ் .. இதயம் ராஜ் மோகன் பற்றி ஒரு தகவல் உயிரின் எடை21 அயிரி என்னும் படத்தில் விதவை ஹீரோயினின். குழந்தையாக ஒரு மழலை வருமே அந்த பாப்பா ராஜ்மோகனின் வாரிசு..
பிளஸ் டூ படிக்கறப்ப ஸ்கூல்ல லஞ்ச் டைம்ல க்ளாஸ் போர்டுல கவிதை எழுதறது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.. அவனவன் அவன் ஆள் பேர் சொல்லி அவளுக்கு புரியற மாதிரி கவிதை எழுத சொல்லுவான். நானும் போர்டுல ஏதாவது கிறுக்குவேன். அப்போ எல்லாம் ஜோக் எழுதற ஐடியா எல்லாம் வர்லை. கவிதை, கட்டுரை, தொடர் கதை மட்டும் தான்..
கே எஸ் சண்முக சுந்தரம் என் பிளஸ் டூ கிளாஸ் மேட்.ஆள் செம ஷோக்குப்பேர்வழி. இவர் யார்னா தென்றல் பத்திரிக்கையோட தூண்களான அங்குராஜ், அய்யப்பன் இவங்களோட அண்ணன்.. ( மூவரும் சகோதரர்கள்) ஈரோட்ல தேவி ஹாஸ்பிடல்ல ( சவீதா பஸ் ஸாப் அருகே, மாமன் பிரியாணி ஸ்டால்) ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் அவர்.. அவர் கே பாக்யராஜின் தீவிர ரசிகர்.. பாக்யா வார இதழ் ரெகுலரா வாங்குவார்.. அதுல அட்டைப்பட கமெண்ட் போட்டி வைப்பாங்க.. அதுல கலந்துக்குவார்.. மாசம் 4 புக் வருதுன்னா அதுல 2 புக்ஸ்ல இவர் கமெண்ட் வந்துடும்..
நாங்க எப்போ அவர் கடைக்குப்போனாலும் அந்த புக்கை காட்டி அவர் கமெண்ட்டை சிலாகிச்சு ஏதாச்சும் சொல்வார்.. ஆரம்பத்துல எனக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்ல. போகப்போக கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு.நாங்களே வாலண்ட்ரியா அவரை கேட்க ஆரம்பிச்சோம். ஒரு தடவை பேச்சு வாக்குல அவர் ஒரு சவால் விட்டார். பாக்யா வார இதழ்ல உன்னால ஒரு அட்டைப்பட கமெண்ட் வர வைக்க முடியுமா?ன்னார். நான் சிரிச்சுக்கிட்டே இதெல்லாம் நமக்கு ஜூஜூபி மேட்டர் அப்டின்னேன் ( ஜூஜூபின்னா என்ன அர்த்தம்னு எனக்கு சரியா தெரியாது.. இருந்தாலும் சொல்லி வெச்சேன்.)
அப்போ இருந்து 6 மாசங்கள் தொடர்ந்து முயற்சி செஞ்சும் ஒண்ணு கூட வர வைக்க முடியல.. அப்புறமாத்தான் பாக்யாவை நுணுக்கமா கவனிக்க ஆரம்பிச்சேன். இத்தனை நாளா சித்தன் போக்கு சிவன் போக்குன்னு எழுதிட்டு இருந்தேன்.. இப்போதான் அவங்க என்ன ஸ்டைல்ல கமெண்ட்சை பிரசுரம் பண்றாங்கன்னு நோட் பண்ணேன்.. அப்புறம் அதே ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சேன். 4 வது வாரமே ஒரு கமெண்ட் வந்தது.
இப்போ நான் பாக்யா சர்க்குலேஷன் எவ்ளவ்னு கடைக்காரர்ட்ட விசாரிச்சேன்.. அப்போ 3 லட்சம் சொன்னாங்க.. 3 லட்சம் பேரு இதை பார்க்கறாங்க அப்டின்னு அவர் கிட்டே சொன்னேன்.. அப்போ அவர் சொன்னாரு. இதென்ன பெரிய அதிசயம்? ஆனந்த விகடன்,குமுதம் இந்த ரெண்டும்தான் லீடிங்க் புக்ஸ்.. 8 லட்சம் டூ 10 லட்சம் சேல்ஸ்.. அதுல வர வைக்க முடியுமா?ன்னு சவால் விடும் தோரணைல கேட்டார்.. ஓக்கே வர வைக்கறேன்னு சொல்லிட்டு நேரா லைப்ரரி போனேன்..
ஒரு ரஃப் நோட்ல எல்லா வார இதழ்கள், மாத இதழ்கள் முகவரியை குறிச்சுக்கிட்டேன்.. எல்லா புக்ஸும் என்ன ஸ்டைல்ல படைப்புகள் வெளியிடறாங்கன்னு நோட் பண்ணேன்.. லைப்ரரிக்கு வர்றவங்க எந்த படைப்புகளை அதிகம் படிக்கறாங்கன்னு பார்த்தேன்..
சினிமா, அரசியல் கட்டுரை முதல் இடம் பிடிச்சது-- சிறுகதைகள் சிலர் தான் படிச்சாங்க.. அதிகம் பேர் வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதியை படிச்சாங்க. கிசு கிசு செய்திகள் விருப்பமா படிச்சாங்க.. அப்போவே முடிவு செஞேன் , நம்ம படைப்புகள்ல சினிமா மேட்டர் , நடிகைகள் சம்பந்தப்பட்ட யூகங்கள்,. கிசு கிசுக்கள் இருக்கனும்னு..
எஸ் பி ராமு விவேக் பப்ளிகேஷன்ஸ் ல சூப்பர் நியூஸ் ல ஒரு ஜோக் போட்டி வெச்சிருந்தார். அந்த டைம்ல நக்கீரன் கோபால் வீரப்பன் விவகாரத்துல அரசுத்தூதரா போன நேரம்.. அதை வெச்சு ஒரு ஜோக்
இண்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்க எல்லாம் அரிவாள் மீசையோட இருக்காங்களே..ஏன்?
அரசுத்தூதர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்.. ( இதுதான் நான் எழுதி பிரசுரம் ஆன முதல் ஜோக்)
இந்த ஜோக் முதல் பரிசு வாங்குச்சு ரூ 15 பரிசு .. ( பொதுவா சன்மானத்தொகை கம்மியா இருந்தாலும் போட்டில கலந்துக்கிட்டு ஜெயிக்கற சந்தோஷம் தான் டாப்பா இருக்கும்)
ஆனந்த விகடன் ல ஜோக் வர வைக்க தலை கீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதா இருந்தது
ஏன்னா அந்த காலத்தில் பாஸ்கி, ( ஜெயா டி வி அரி கிரி அசெம்ப்ளி ) மிமிக்ரி சேகர், சிம்பு தேவன் ( இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குநர்) இந்த மாதிரி ஆட்கள் தான் ரெகுலரா எழுதிட்டு இருந்தாங்க.. வி சாரதி டேச்சு என்பவர் ஜோக்ஸ் 2 பக்கம் வரும்.. வார்த்தை ஜாலம் தான் இருக்கும், ஆனா சிரிப்பு அதிகம் வராது.. ஆனாலும் தொடர்ந்து அவருது வந்துட்டே இருந்துச்சு.. நான் ஆனந்த விகடன் ஸ்டைல்ல பல ஜோக்ஸ் அனுப்பினேன் எதும் வர்லை.. 6 மாசம் வாரா வாரம் 20 ஜோக்ஸ் அனுப்புவேன். ம்ஹூம் வந்த பாட்டை காணோம்.. அப்புறம் 6 மாசம் கழிச்சு அத்தி பூத்தது போல் ஒரு ஜோக் வந்துச்சு .. அப்போ அத்திப்பூ ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தான் பூக்குமா?ன்னு கேட்கக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்கு..
அந்த ஜோக்
கோர்ட்டில் ஜட்ஜ் - மணிபர்சை அடிச்சது நீங்க தானே?
இல்லை யுவர் ஆனர், மணி பர்சை பாலு அடிச்சான். கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்
இந்த ஜோக் வந்தது சென்னிமலை சி .பி செந்தில்குமார் என்ற பெயரில். ஒரே சந்தோஷம் .. காம்ப்ளிமெண்ட்ரி காப்பி வீட்டுக்கு வந்துச்சு . செம ஜாலி தான்.. ஒரு படைப்பாளியின் உச்ச பட்ச சந்தோஷம் அவன் பெயரை அச்சில் பார்ப்பதும், அவனது படைப்புகளை மற்றவர் அதுவும் முகம் தெரியாதவர்கள் பாராட்டுவதும் தான். சன்மானம், காசு பணம் எல்லாம் சும்மா.. அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்..
அந்த சந்தோஷத்துல ஒவ்வொரு சண்டேயும் ஜோக்ஸ் எழுத ஆரம்பிச்சேன்.. வாரா வாரம் 50 ஜோக்ஸ்.. இந்த ஜோக்குக்கான KNOT எங்கே பிடிப்பது? அதுக்கு ஒரு ஐடியா செஞ்சேன்.. எல்லா புக்ஸூம் வாசிப்பது.. அதுல வர்ற ஏதாவது ஒரு வரில இருந்து ஜோக் எடுப்பது.. அல்லது ஆல்ரெடி வந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி உல்டா பண்ணுவது.. சில ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வராது.. அதை சிரிப்பு வர்ற மாதிரி கொஞ்சம் மாற்றி போடுவது என ஆரம்பிச்சேன்.
இந்த சமயத்துல சில நண்பர்கள் வெறும் ஜோக்னே போய்ட்டு இருந்தா உன் படைப்புத்திறன் மழுங்கிடும் , இலக்கியப்பத்திரிக்கைகளில் கவனம் செலுத்துன்னாங்க.. சரின்னு பல பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன்.. கணையாளி -ல வந்த என் முதல் கவிதை..

ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.
சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.
பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.
நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.
ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.
தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.
பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.
இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.
குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.
நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
ஒரு இதயம் இருக்கும்.
அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?
- தொடரும்..
டிஸ்கி - 1 அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணும்னா சொல்லுங்க..
டிஸ்கி -2 இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி -3 - அட்ரா சக்க லே அவுட்ல காலியான இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர் ஏன்?னு கேட்டதுக்கு சுரேஷ் சொன்னாரு.. நீ போற படம் எல்லாம் மொக்கையாத்தானே இருக்கு.. அந்தப்படத்துக்கு கூட்டம் எப்படி வரும்?னு கேட்டு என்னை கேவலப்படுத்திட்டாரு சுரேஷ் அவ்வ்வ்
டிஸ்கி 4 - நேற்று மாலை 6 மணிக்கு சேட்டிங்க் வந்து லே அவுட் மாற்றித்தர்றேனு வாக்கு குடுத்து சரக்கு அடிச்சு மட்டை ஆன விக்கி தக்காளிக்கு என் கண்டனங்கள்.. ஹி ஹி ஹி

74 comments:
அனுபவமா.......ஹி..ஹி ஹி
இதோ வரேன் படிச்சிட்டு ...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ....அப்பவே ஆரம்பிச்சாச்சா..?
ஓஹோ...கவிதை கூடவா,,,அட்ரா சக்க.. அட்ரா சக்க
ஓ....புது லே அவுட்...அசத்துங்க/////....அருமை
நாங்களும் கண்டுபிடிப்போம்ல
காலியா இருக்கிற சீட் ஓகே ..அந்த மலை சென்னிமலை தானே,,,,?
சொந்தக்கதையும் சூப்பர்! புது வடிவமும் சூப்பர்! விரைவில் லோட் ஆகிறது இப்போது!
அப்புறம் ஒரு கில்மா பட போஸ்ட் இருக்கிற மாதிரி தெரியுதே ...?
அப்புறம் ஒரு அம்மணியின் முகத்தையும் இடுப்பையும் மறைத்ததுக்கு எனது கடுமையான கண்டனங்கள் ....ஹி ஹி ஹி
வாழ்த்துக்கள் சிபி...அடுத்த தொடரும் பதிவு 4 மணிக்கு தானே
//டிஸ்கி - 1 அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணூம்னா சொல்லுங்க..//
வீடு சுரேஷ் குமார் ,
தமிழ் வாசி பிரகாஷ்
இருவருக்கும் பாராட்டுக்கள்
///நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன்////
இதுவரைக்கும் அவ்ளோதானே படிச்சிருக்கீங்க....?
அண்ணே, நீங்க எப்போ பிட்டு படம் பார்க்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே.....? உங்க மொத பிட்டு படம் எது?
பேனர் டிசைன் செமையா இருக்கு...... செஞ்சு கொடுத்தவங்களுக்கு வாழ்த்துகள்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன்////
இதுவரைக்கும் அவ்ளோதானே படிச்சிருக்கீங்க....?
இந்த ராம்சாமி எப்பவும் இப்படித்தான், பப்ளீக்கா கேவலப்படுத்துவாரு..
அப்புறம் அந்த பேனர்ல இன்னொரு மேட்டர் கவனிச்சீங்களா? நீங்க நல்லா ரீல் விடுறீங்கன்னு எல்லாத்துக்கும் புரியற மாதிரி அழகா சொல்லி இருக்காங்க, இதுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்துக்கள்பா.........
கோவை நேரம் said...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ....அப்பவே ஆரம்பிச்சாச்சா..?
இதுல எனி உள் குத்து?
ரமேஷ் வெங்கடபதி said...
சொந்தக்கதையும் சூப்பர்! புது வடிவமும் சூப்பர்! விரைவில் லோட் ஆகிறது இப்போது!
நன்றிகள்
கோவை நேரம் said...
அப்புறம் ஒரு கில்மா பட போஸ்ட் இருக்கிற மாதிரி தெரியுதே ...?
கில்மாவா? அப்டின்னா என்ன?சின்னப்பசங்களை தயவு செஞ்சு கெடுக்காதீங்க:)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே, நீங்க எப்போ பிட்டு படம் பார்க்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே.....? உங்க மொத பிட்டு படம் எது?
பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை தான் எனக்கு தெரியும், மீ நெம்ப நெம்ப நல்லவன் யூ நோ?
அண்ணே அப்போ நீங்க நல்லவரா கெட்டவராண்ணே...?
வணக்கம் அண்ணே,
சூப்பர் பதிவு கொடுத்திருக்கிறீங்க.
வெளியே போறேன்.
அப்புறமா வந்து படித்து கருத்துரை வழங்கிறேன்.
ரொம்ப நன்றி அண்ணே.
கோவிந்தராஜ்,மதுரை. said...
//டிஸ்கி - 1 அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணூம்னா சொல்லுங்க..//
வீடு சுரேஷ் குமார் ,
தமிழ் வாசி பிரகாஷ்
இருவருக்கும் பாராட்டுக்கள்
நன்றிகளை உங்களுக்கும், அவர்களுக்கும் செலுத்துகிறேன்
நிரூபன் said...
வணக்கம் அண்ணே,
சூப்பர் பதிவு கொடுத்திருக்கிறீங்க.
வெளியே போறேன்.
அய்யய்யோ, அப்போ இத்தனை நாளா உள்ளேவா இருந்தீங்க? அவ்வ்வ்
டிஸ்கி-1////
ஆமாண்ணே, உங்க ப்ளாக் வந்ததும் ஆட்டோமேடிக்கா எங்க பேர்ல கமெண்ட்டு ஓட்டு விழுகுற மாதிரி ப்ரோகிராம் பண்ணி வைக்க சொல்லுங்க....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அப்போ நீங்க நல்லவரா கெட்டவராண்ணே...?
நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கும் நல்லவன் ஹி ஹி தெம்பு பத்தாது அவ்வ்வ்
/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே, நீங்க எப்போ பிட்டு படம் பார்க்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே.....? உங்க மொத பிட்டு படம் எது?
பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை தான் எனக்கு தெரியும், மீ நெம்ப நெம்ப நல்லவன் யூ நோ?////////
அப்போ நீங்க பார்த்த பிட்டு படத்துல பிட்டே போடலியா? போஸ்டரை நம்பி ஏமாந்துட்டீங்களாண்ணே?
அனுபவம்........ம்
புது லே அவுட் வாழ்த்துக்கள்
//டிஸ்கி-4////
மாலை 6 மணின்னு தக்காளி சொல்லும் போதே அலர்ட் ஆகி இருக்க வேணாமா?
அதுல வர வைக்க முடியுமா?ன்னு சவால் விடும் தோரணைல கேட்டார்.. ஓக்கே வர வைக்கறேன்னு சொல்லிட்டு நேரா லைப்ரரி போனேன்..
>>>>
பெரிய மங்கம்மா ன்னு மனசுக்குள்ள நினைப்பு. சவாலுக்கு ஓக்கே சொன்னாராம்.
சுய சரிதை எழுதுற அளவுக்கு முன்னேறிட்டீங்களோ?
எட்டாம் வகுப்புல பொழுதுபோக்குக்காக தொடங்க பட்ட புத்தக வாசிப்பு, இன்று சுய சரிதை எழுதுற அளவுக்கு உங்களை முன்னேற்றி இருக்கு. ஆர்வத்துடன், கடின உழைப்புதான் உங்களை இந்தளவுக்கு உயர்த்தி இருக்கு. உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் பாஸ் உங்கள் தளம் தற்போது மிக அழகாக இருக்கு.
எங்கள் ஊரில் அப்போது இந்திய சஞ்சிகைகள்,வார இதழ்கள் வருவது குறைவு.
ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் இப்படி சில வார இதழ்கள் மட்டுமே வரும் அதுவும் ரூபா-45 அப்போது விலை(யுத்தம் நடந்த காலத்தில்)
ஆனாலும் நூலகங்களில் தேடிப்போய் படித்துவிடுவேன்.சென்னி மலை சி.பி செந்தில் குமார் என்ற பெயரை பார்த்தாக ஞாபகம்.உங்களுடன் தற்போது பழகும் வாய்பு கிடைத்து மிக்க மகிழ்ச்சி பாஸ்
எங்க பெயர் எல்லாம் கல்யாணபத்திரிக்கையிலதான் வந்திருக்கு...நல்லா முயற்சி பண்ணியிருக்கிங்க வாழ்த்துகள்!
டிஸ்கி3 : கூகுல் தேடுனா காலி இருக்கையா இருக்கிற தியேட்டர் படமா வருது நான் என்ன செய்யட்டும் மக்களே!
மீண்டும் வணக்கம் அண்ணே,
நல்லதோர் அனுபவப் பகிர்வினை தந்திருக்கிறீங்க.
விடா முயற்சி கண்டிப்பாக வெற்றியினைப் பெற்றுத் தரும் என்பதற்கு அமைவாக நன்றாக முயற்சி செய்தி பட்டை தீட்டி எழுதியிருக்கிறீங்க.
மணி பர்ஸை அடித்த சோக்க்...
செம காமெடியா இருக்கு
கவிதையும் இலக்கிய ரசனையுடன் பெண்ணின் அழகு உணர்வுகளைப் பாடி நிற்கிறது.
உங்களைப் போன்றோருடன் பழக கிடைத்தது எமக்கும் சந்தோசமே!
ப்ளாக் டிசைனிங் சூப்பரா இருக்கு! வீடு அவர்களின் ஹெடரும் அசத்தலா இருக்கு!
தமிழ்வாசி, வீடு இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பரிசாக என்ன கொடுக்கப் போறீங்க?
பறங்கிமலை ஜோதியில் படம் பார்ப்பதற்கான டிக்கட் தானே.
அவ்வ்வ்வ்வ்வ்
veedu said...
டிஸ்கி3 : கூகுல் தேடுனா காலி இருக்கையா இருக்கிற தியேட்டர் படமா வருது நான் என்ன செய்யட்டும் மக்களே//
எண்டாலும், நீங்க இப்படி ஓவரா சிபியை குத்தி இருக்கக் கூடாது.
லே அவுட் நல்லாருக்கு பாஸ்..கூகுளோட கமெண்ட் ரிப்ளை புது வசதிய சேத்துடுங்க...
கவிதை சூப்பர்.
டிசைன் நல்லா இருக்கு....
அனுபவங்கள் தொடரட்டும் ...
ஓ..., ஆனந்தவிகடன்ல நீங்களும் நிறய பல்பு வாங்கியிருக்கீங்களா,எப்படி இந்த ஆளோட ஜோக்ஸ் மட்டும் தவறாம வருதுன்னு ஆச்சர்ய பட்டிருக்கேன்.நானும் 1000 க்குமேல ஜோக்ஸ் எழுதி அனுப்பிஇருக்கேன் போன போகட்டும்னு ஒன்னே,ஒன்னு பிரசுரம் ஆச்சி,அது
டாக்டர் பேசண்டிடம்; இந்தாங்க இந்த மாத்திரைய 'வெறும் வயித்துல" சாப்பிடுங்க.
பேஷன்ட்: 'பனியன்" கூட போட்டிருக்க கூடாதா டாக்டர்.
பொ.முருகன் said...
ஓ..., ஆனந்தவிகடன்ல நீங்களும் நிறய பல்பு வாங்கியிருக்கீங்களா
ஹி ஹி தொடர்ந்து எழுதுங்க
தற்போது உங்க பதிவின் லே அவுட் டிஸைன் சிறப்பாக இருக்கு.
மிகவும் சிறப்பாக ஆர்ம்பித்து இருக்கீங்க உங்க பத்திரிக்கை அனுபவங்களை.
ஆனந்தவிகடனில் தற்போது உங்களுடைய எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருவதற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்,செந்தில்குமார்.
தொடருங்க படிக்க காத்திருக்கிறோம்.
லே அவுட்டும்,சுய சரிதையும் நல்லாருக்குங்க....
சுவாரஸ்யம்.இப்பவெல்லாம் ஏன் கவிதை எழுதுவதில்லை?
@சென்னை பித்தன்
hi hi ஹி ஹி எழுதிட்டு தான் இருக்கேன், ஆனா பிளாக்ல போடறதில்லை, இனி அப்பப்ப போடறேன்
புது லேஅவுட் , வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட புதுவிதமான பதிவு கலக்குங்க சிபி. இந்த மாறுதலைத்தான் எதிர்பார்த்தோம் சுவாரஸ்யமாய் தொடங்கியிருக்கிறீர்கள், யார் மனதையும் புண்படுத்தாதவாறு தொடருங்கள். வாழ்த்துக்கள்
கலக்கல்ஸ் பாஸ்!
குமுதம் , குங்குமத்தில்தான் அதிகம் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன்!
பாஸ்கி - அவரா இவர்? எனக்கு இது புதிய தகவல் நன்றி பாஸ்!
வாழ்த்துக்கள் பாஸ்!
புது டிசைன் நல்லாருக்கு!!தொடர் அருமை.கட்டுரை.காம் கொடுத்தா அதை மறந்துடும்.அப்புறம் இங்கியும் அதை எடுத்து போட்டா உங்ககிட்ட கட்டுரை வாங்குனவருக்கு என்ன பலன்..?இதுக்கு உங்க ப்ளாக்ல இருந்து காப்பி பன்ணியே அவர் போட்ருக்கலாம்னு தான் நினைப்பாங்க..பாக்யராஜ் குமுதத்துக்கு கதை அனுப்பிட்டு,கதை நல்லாருக்கு அதனால பாக்யாவிலும் வெளியிட்டுட்டேன்னு சொற மாதிரி இருக்கு ..யோசிங்க
@நல்ல நேரம் சதீஷ்குமார் said...
வாழ்த்துக்கு நன்றி, கட்டுரை.காமில் போனவாரமே இது வந்துடுச்சு, அவர் கிட்ட ஆரம்பத்திலேயே பேசியாச்சு. அதன் வாசகர்கள் வேற, நம்ம வாசகர்கள் வேற
புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி ஹி ஹி
முதலில் வாழ்த்துக்கள் சி பி! நம்ம வேண்டுகோளை ஏற்று இந்தப் பதிவைப் போட்டதுக்கு! ப்ளாக் டிசைனிங் கலக்கலோ கலக்கல்! சுரேஷுக்கும், ப்ரகாஷுக்கும் வாழ்த்துக்கள்!
தோ, பதிவ படிச்சுட்டு வந்துடறேன்!
உங்கள் அனுபவம் செம இண்டெரஸ்டிங் சி பி! முதலாவது ஜோக் “ `மணி” பற்றியா? ஆஹா சூப்பர்!
இப்படியான பதிவுகள் செம இண்டெரெஸ்டிங்கா இருக்கு சி பி! உங்கள் அனுபவங்களைப் படிக்குறது நல்லதொரு அனுபவம்!
பயணம் தொடரட்டும்!
@கடம்பவன குயில்
மாற்றம் யாருக்கும் ஏமாறம் அளீக்காததில் மகிழ்ச்சி
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
haa haa ஹா ஹா அந்த ஜோக்ல தான் ஜீவன் இருந்ததுன்னு பலர் சொன்னாங்க.. :)
வணக்கம்ண்ணே .நல்லா இருக்கீங்களா .ஒரு துறையில் சிறப்படைய எவ்வளவு முயற்சி தேவை என்பதை தங்கள் அனுபவம் உணர்த்துகிறது .தங்கள் முதல் ஜோக்கே அருமை .வாழ்த்துக்கள் !
நீங்கள் ஆனந்த விகடனில் எழுதுவதாக சொல்வீர்கள். அதற்கு பின் இவ்வளவு பெரிய முயற்ச்சி இருந்ததா???
எந்தவொரு நிலையும் மிகப்பெறிய போராட்டத்துக்கு பின்னர்தான் கிடைக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்

//பத்திரிக்கை//
-பத்திரிகை என எழுதுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்...
தொடர வருகிறேன்...
I remember laughing out loud in a library after reading your jokes! I also wondered whether you had no other job. Now, I understand your hard work. Keep it up! And I am also from Erode district.
வாழ்த்துகள் சிபி.அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க உங்க அனுபவத்தை.கவிதை மிக மிக அருமை.தொடருங்கள் !
ARUMAI CPS sir
இப்படியான பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க சார்.மற்றவர்களுக்கு... ஏன் .. நேரடியாக சொன்னால்- எனக்கே எவ்வளவோ ரசனையாவும், பயனுள்ளதாவும் இருக்கு.தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
உங்கள் வெற்றியின் பின் கடுமையான, அருமையான உழைப்பு இருக்கிறது.
உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன் சிபி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
அருமையான தொடர் தொடங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள்.. தொடர்கிறேன்..
அன்றுவிதைத்தது இன்று அறுவடையாகிறது...................
வாழ்த்துக்கள்
சி.பி.இரண்டாம் பாகம் தொடுப்புலதான் முதல் பாகம் படிச்சேன்.
நல்ல அனுபவங்கள்.... மற்றவர்களுக்கு இது ஒருபாடமாக/ உபயோகமான தகவலாக நிச்சயம் இருக்கும்
பாகம் ஒன்று வாசித்திட்டேன்.நோட் எடுத்து எந்த எந்த வகையிலே (ஸ்ரைலில) எழுதிறாங்க என்று குறித்தது. பிடித்திருக்கிறது. விடாமுயற்சி இந்தளவு வெற்றி தந்துள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
ஹாய் சி பி செந்தில் குமார் சார் நான் உங்களுடைய 10 வருடம் ரசிகன் உங்களுடைய குமுதம் விகடன் ஜோக்ஸ் லாம் ரொம்ப இஷ்டம் .. ஆனா ஒரே ஊரில் இருத்தும் உங்களை பார்த்தது இல்லை . இன்று உங்கள் ப்ளாக் பார்த்ததெல் சந்தோசம் ... நான் துபாய் ல இருத்தலும் உங்கள் ஜோக்ஸ் அ மிஸ் பண்ண மாட்டேன் ...
Post a Comment