Tuesday, January 31, 2012

ஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ... நீளும் பட்டியல்கள் ( ஜோக்ஸ்)


அடங்கொன்னியா..

1.தாடி வெச்சா லவ் ஃபெயிலியர்னு இனி எவனும் சொல்ல முடியாது # பிரபுதேவா, தனுஷ்

-----------------------------

2. என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ்-ஸ்ருதி கமல் # என்னை அடித்தவர்களிலேயே ரொம்ப காண்ட் ஆகி அடிச்சவர் ரஜினி-தனுஷ்

--------------------------------

3. கஸ்”தூதூ”ரி ராஜா - எனக்குப்பிறந்த 2 பேருமே சிங்கக்குட்டிங்கடா, 2 பேரும் என் குலப்பெருமையை காப்பாத்தீட்டீங்க, உங்க கிட்டே இன்னும் EXPECT

-----------------------------

4. ஜட்ஜ் - கட்டுன மனைவிக்கு துரோகம் செஞ்சீங்களா?

தனுஷ் - நோ யுவர் ஆனர், நான் தான் மன்மதாராசான்னு வார்னிங்க் கொடுத்தேனே?

-----------------------------------------

5. தனுஷ் ஜோடியா நடிச்ச சோனியா அகர்வாலை செல்வராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே, அப்போ ஸ்ருதி அடுத்த அண்ணி ஆகிடுவாரா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAGX9OpoG5YUwmO9Zce5Q4caMqs0ZvprzFFQHehONfBcEyF9Glfz9bKrOHTeKWnHZIW3KV6rhDto8bS70ppdBscuHPuubvqh4_15K7NCXjmaziwcplLyJgHnHSc9Eb-drFPLKr1LDAhnI/s1600/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%882.jpg

6. டோரா, உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு, மதியம் 1 மணிக்குத்தான் நீ எந்திரிச்சிருக்கே.. நான் மதியம் 12 மணிக்கே எந்திரிச்சுட்டேன்

----------------------------------
7. எதுக்காக பனங்கிழங்கு டெயிலி சாப்பிடறீங்க?


பனை மரம் மாதிரி உயரமா வளரத்தான்

------------------------------

8. உங்களுக்குத்தான் ஆயில் சேராதுன்னு சொன்னேனே?

டாக்டர், என்ன கொடுமை இது? ஆயில் பெயிண்ட்டிங்கை கூட பார்க்க கூடாதா?

---------------------------------

9. பெண் பார்க்கும் படலம் கீதா - மாப்ள சார், உங்களுக்கு பிடிச்ச ரஜினி படம் எது? 

உஷார் மாக்கான் மாப்ள - நான் அடிமை இல்லை

--------------------------------

10. அக்கா.. உங்க கல்யாணம் எப்போ? 

பையன் கிடைச்ச உடனே? 

XQSமீ , பையன் சிக்குன உடனேன்னு சொல்லுங்க

----------------------------------

http://www.tamillook.com/images/Cinema/Acterss/suruthikaasan.jpg


11. நான் யார்ட்டயும் இரவல் புக்ஸ் வாங்கறதே இல்லை, இரவல் வாங்குனா திருப்பி தரனும், லைப்ரரில சுட்டுட்டு வந்துட்டா திருப்பி தர தேவை இல்லை :)

------------------------------



12. .தன் அன்பை உரியவர்களிடம் வெளிக்காட்டும் தருணத்தில் தான் ஒரு பெண் மிக அழகாக காட்சி அளிக்கிறாள் # எக்ஸ்போசிங்க் லவ்

-------------------------


13.  மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்தார் நடிகை வனிதா # அப்போ இரண்டாம் குலோத்துங்க சோழன் கதி?

----------------------------

14. அன்னா ஹசாரே சினிமால நடிக்கறாரா? அவருக்கு ஏன் ரஜினி வாய்ஸ் குடுத்ததா நியூஸ் வருது?

--------------------------------


15. . கணவன் ஏன் இரண்டாம் தாரத்தை தேடி செல்ல வேண்டும்?

ஹி ஹி ஆண்களுக்கு 2 தான் ராசியான நெம்பர் போல அவ்வ்

------------------------------

http://kaathalukkaka.com/love/wp-content/uploads/2010/09/2241_1_0_943_naanal-kalaingar-tv-serial-sonia-agarwal-stills-5.jpg

பாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8tlwGq-skJ9Fin43XuBquCFFqVWqXMo-txNSeA9UVnVokdN1-aZiONhbz18ypmopzq-YotxzXzw6Mk6Vr7kkpDXKBUsQPidfEmh2PIKBcwnmiUb0JOCAdQogKon14g3oCtPSaa428mgOh/s1600/Paari+Movie+Posters+%25282%2529.jpgஉலக சினிமாவுக்கான முயற்சின்னு போஸ்டர்ல வித்தியாசமா  போட்டிருந்தப்பவே படத்துல ஏதாவது வெரைட்டி இருக்கும்னு எனக்கு ஒரு பட்சி உள்ளுக்குள்ள சொல்லுச்சு.. ஆனா போஸ்டர் டிசைன்ல பெருசா ஒண்ணும் புதுமை இல்லை.. இருந்தாலும்  ஒரு நம்பிக்கைலை போனேன்.. ஹி ஹி ஹி 

கிட்டத்தட்ட 29 வயசு தோற்றம் உள்ள கரடு முரடான புதுமுக ஹீரோ ராகுல் பிளஸ் டூ படிக்கற பையனா காட்டறப்ப சரி நம்ம ரஜினி பேபி மீனாவை கொஞ்சிட்டு, குமாரி மீனா கூட டூயட் பாடலையா?ன்னு என்னை நானே சமாதானப்படுத்திட்டேன்..  அவரும் வழக்கம் போல  4 கைத்தடிங்க கூட ஊர் சுத்திட்டு ஹீரோயின் பீனா படிக்கற அதே ஸ்கூல்ல சேர்ந்து கஷ்டப்பட்டு கரெக்ட் பண்றாரு.. 


ஹீரோவோட அப்பா செம வசதி.. காதலை ஏத்துக்கலை.. அடியாளுங்களை அனுப்பி ஹீரோயினை டமால்.. புதைச்சுடறாங்க.. இது வரை கதை மாமூல் படங்கள் மாதிரிதான் போகுது.. க்ளைமாக்ஸ்ல டைரக்டர் நிமிர வைக்கிறார்.. 

வழக்கமா இந்த மாதிரி லவ் ஸ்டோரில கதையை எப்படி கொண்டு போவாங்க.. காதலி போன இடத்துக்கே நானும் போறேன்னு ஹீரோ தற்கொலை செய்வார்.. அல்லது காதலியை கொன்ன அப்பாவை பழி வாங்க சொந்த அப்பாவை போட்டெறிவார்..ஆனா இந்தப்படத்துல அப்படி செய்யலை.. அங்கே தான் நிக்கறான் சந்திரன்..

http://123tamilgallery.com/images/2012/01/Paari-Movie-Stills-439.jpg


இதுக்கு மேல இதய பலஹீனம் உள்ளவர்கள் ஒரு பேரா ஸ்கிப் ஆகிடுங்க .. ஏன்னா டைப் பண்ண எனக்கே கொஞ்சம் பயமா, சங்கடமா இருக்கு.. அதாவது ஹீரோ தன்னோட உயிர் நாடியை கட் பண்ணிக்கறாரு. திருநங்கையா மாறிடறாரு.. அதை பார்த்து ஹீரோ அப்பா கண் கலங்கறாரு,கதறுகிறார். அதுதான் ஹீரோ தன் அப்பாவுக்கு தரும் தண்டனை..

கிட்டத்தட்ட சொல்லாமலே க்ளை மாக்ஸ் மாதிரி.. அதுல ஹீரோ நாக்கை கட் பண்ணிக்குவாரு.. காதலை கிண்டல் பண்றவங்க கூட ஏத்துக்கற மாதிரி ரொம்ப இறுக்கமா, சீரியசா படத்துல 20 நிமிஷம் சொன்ன டைரக்டருக்கு ஒரு பூங்கொத்து.. ஆனா இந்த 20 நிமிஷ பிளஸ்ஸை வெச்சுக்கிட்டு மீதி 2 மணி நேரமும் பிளேடு போட்டதுக்கு.....

ஹீரோ ராகுல்க்கு நடிப்பு சுமாராதான் வருது... சமாளிக்கிறார்..அவர் உருவம்  மனசுல பதியலை.. அது ஒரு மைனஸ்...

ஹீரோயின் பீனா அதீத  ஒப்பனை ஏதும் இல்லாம இயல்பா வர்றார்..நளினம், வெட்கப்படும் காட்சிகள் இவருக்கு கை கொடுக்குது.. ஆனா காதல் உணர்வை வெளிப்படுத்துவதில் சுமார் தான்..

http://moviegalleri.net/wp-content/gallery/paari-tamil-movie-stills/paari_movie_stills_5903.jpg

இயக்குநர் அவர்களிடம் சில கேள்விகள்

1. படத்துல வர்ற எல்லா ஆண் கேரக்டர்களும் எப்போ பாரு சரக்கடிச்சுட்டே இருக்காங்க.. இல்லைன்னா தம் அடிக்கறாங்க.. அது ஏன்? உவ்வே... ( அநேகமா யாருக்கும் சம்பளமே இல்ல போல. சாப்பாடும் சரக்கும், தம்மும் தானோ?)

2.  ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா ஹீரோ கிட்டே “ நீ டிகிரி ஏதும் படிக்க வேணாம்,  டாக்டராவோ, வக்கீலாவோ ஆகிடுங்கறார்.. பி ஏ டிகிரி முடிச்சாத்தானே பி எல் படிச்சு வக்கீல் ஆக முடியும்? ( ஒரு வேளை இப்போ சிலபஸ் மாறிடுச்சா?)

3. ஹீரோ அடிக்கடி  நடந்து வர்ற ஹீரோயினை தடுத்து நிறுத்த என்னமோ டவுன் பஸ்ஸை நிறுத்த கை காட்ற மாதிரி கையை குறுக்க காட்றாரு.. நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு..

4. ஹீரோயின் ஹீரோவோட அம்மாவை அம்மான்னு கூப்பிடறாரே? அப்புறம் ஹீரோ தம்பி முறை ஆகிடாதா? ஒரு மரியாதைக்காக அப்படி கூப்பிடலாம் என்றாலும் அத்தை தான் பெஸ்ட்.. 2 பேரும் ஒரே ஆளை அம்மான்னு கூப்பிட்டுட்டு லவ் பண்றது , கட்டிப்பிடிக்கறது எப்படியோ இருக்கு./.

http://www.dailomo.com/wp-content/uploads/2012/01/Paari-Tamil-movie-stills-7.jpg

5. ஹீரோயின் ஒவ்வொரு சீன்லயும் யாரையோ பார்த்து ஷாட் ஓக்கே? சீன் ஓக்கே?ன்னு கேட்கற மாதிரி ஒரு பார்வை, தலை ஆட்டல் பண்றாரு.. அதை எடிட் பண்ணி இருக்கலாம்.

6.  ஹீரோயின் - ஹீரோ சந்திப்புல ஒரு சீன்ல எதேச்சையா ஹீரோயின் நாம 2 பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணீக்கலாமா? வீட்ல பிரச்சனை அப்டிங்கறார்.. அடுத்த செகண்டே ஹீரோ கைல இருக்கற மஞ்ச பைல இருக்கற புடவையை  குடுத்து சரி ரெடி ஆகிட்டு வா-ங்கறார்.. அது எப்படி? காதலியை பார்க்கப்போறப்பவே இதை கேட்பார்னு அவருக்கு எப்படி தெரிஞ்சுது?

7. ஹீரோயின் ஒரு சீன்ல ஹீரோவுக்கு தன் டிபன் பாக்சை குடுத்து சாப்பிடுங்கறார்.. ஹீரோ ஓக்கேன்னு சொல்லிட்டு போனவர் அப்புறம் கொஞ்ச தூரம் போய் ஹீரோயின் கிட்ட சிக்னல்ல டிஃபன்;ல என்ன இருக்கு?ங்கறார்.. அவ்லவ் கேனையா? டிஃபன் பாக்ஸ்ல மீல்ஸ் தான் இருக்கும்? அதான் சாப்பிடுங்கறாரே, ஓப்பன் பண்ணுனா தெரிஞ்சுட்டு போகுது.. ( இந்த சீன்ல தான் ஹீரோயின் அப்பா கிட்டே மாட்றார்)

இந்த மாதிரி அழுத்தமான க்ளைமாக்ஸ் உள்ள காதல் படங்களுக்கு முக்கியத்தேவை காதலர்களுக்கிடையேயான அழுத்தமான காதல்.. அது இந்த படத்துல மிஸ்ஸிங்க்.. படம் பார்க்கற ஆடியன்ஸ் ஹீரோ ஹீரோயினுக்காக எதுவும் செய்ய துணிவு உள்ள நல்ல கேரக்டர்,, அப்டிங்கறதை பதிய வைக்க தவறிட்டார் டைரக்டர்..

ஹீரோ ஹீரோயினை லவ் பண்ற மாதிரி காட்சிகளே கம்மிதான்.. என்னமோ பத்தோட பதினொண்ணா கரெக்ட் பண்ணி வெச்சிருக்காருன்னு தோணுறதால க்ளைமாக்ஸ்ல எடுக்கப்படும் வீரியமான முடிவு நம் மனதில் ஒன்றவில்லை..

http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/paari/still-1-full.jpg

ஈரோடு ஸ்ரீ லட்சுமில இந்தப்படம் பார்த்தேன்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கப்படும்குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வில போடும்போது க்ளைமாக்ஸ் 20 நிமிஷம்  மட்டும் பார்க்கலாம்..

படத்தில் நினைவு கூறும் அளவு ஒரு வசனம் கூட இல்லை :((

கோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி ( பேட்டிங்கோவ்) பாகம் 1

 குமுதம் புக்ல அரசு கேள்வி  பதில்கள் செம ஃபேமஸ்..அதுலவர்ற அ-அண்ணாமலைசெட்டியார் ர-ரா கி ரங்கராஜன்  சு -சுந்தரராம சாமி இவங்க 3 பேரும் சேர்ந்துதான் பதில் சொல்வாங்க.. ஹி ஹி ஹி என்ற பதில் ஃபேமஸ் ஆனது இவங்க மூலம் தான்.விகடன்ல ஹாய் மதன்கேள்வி பதில்கள் ஒரு என் சைக்ளோ பீடியா படிச்ச எஃபக்ட்.. துக்ளக் சோ கேள்வி பதில்கள் நடை முறை நாட்டு நடப்பு பிரதி பலிப்பு..

ட்விட்டர்ல சிலர் பேட்டி மாதிரி சிலகேள்வி கேட்டாங்க.. 67 கேள்விகள். இதுவரை.. வாரம் 10 பதில்கள்.. இனிதொடரும்.. யார் வேணாலும் கேட்கலாம்.. ஆனா என்ன வேணாலும் கேட்காதீங்க.. ஹி ஹி ஹி 





1.சி பி என்பதன் விளக்கம் ?    

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி ( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C  இனிஷியல்ல சேர்த்துட்டேன் ..  ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )


. 2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்?

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம் 


3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?                                                      

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்.. 


 4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?  

பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில்  17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களுக்கும் எழுதி உள்ளேன்  

5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?        

களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல  என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3  மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.அவர் வெயிட் பண்ணலாம்னார். ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்.. 

6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?

 சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக  சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்.. 

7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?                                                             

 எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி,  மகள்  என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்

8.அட்ராசக்க  என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?    

 நான் கவுண்டமணி  ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே ப்ளாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றாண்டா மொக்கை என  திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ் 

  9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?     

வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்.. 

  10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?
  
நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள் ..ராமராஜன்,பவர் ஸ்டார் படங்கள்க்கு விமர்சனம் எழுதமாட்டேன்,ஹி ஹி 

டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை
பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)

 

Monday, January 30, 2012

கேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள் (ஜோக்ஸ்)

1.கட்ஸ் ( GUTS) இருப்பவர்கள் கர்மா படத்தில் நடிக்க வரலாம் # அண்ணே, என் கிட்டே கொஞ்சம் விட்ஸ் இருக்கு ஒரு லட்சம் ஜோக்ஸ்தேறும், மே ஐ கம் இன்?


------------------------------

2. நடப்பது திமுக ஆட்சியே மாதிரியே உள்ளது-விஜயகாந்த் வேதனை # டாஸ்மாக்கில் மிதப்பது எல்லாமே கேப்டன் போலவே உள்ளது - ஜெ பதிலடி

--------------------------------

3.டேமேஜர் -வேலை செய்யும் இட‌ம் கோவில் புரியுதா?

  ஓ! தாங்க்ஸ் சார், அப்போ இனி லஞ்ச் கொண்டு வர வேணாமா சார்? 12 மணிக்கு அன்னதானம் உண்டுதானே?

---------------------------

4. சவுமி - உப்புமா செஞ்சா எங்க வீட்ல சண்டை வராது..

நவமி - நீங்க உங்க வீட்டை காலி செஞ்சா அதாவது ஆஃபீஸ் கிளம்பிட்டாக்கூட சண்டை வராதாமே?

--------------------------------

5. எங்க வீட்ல யாருக்காவது கோபம்னா உப்புமா செய்வேன்.. ஏன்னா என் மேல இருந்த கோபம் உப்புமா மேல திரும்பிடும் , மீ எஸ்

-------------------------------

6. கார்க்கி - டேய் நாயே, நீ எழுதறதெல்லாம் ஒரு ஜோக்கா?ஜோக்னு அதைவெளீல சொல்லிக்காதே?

அப்டி ஓப்பனா சொல்லலைன்னாயார்க்கும் அது ஜோக்னு தெரியாதே?

-------------------------------

7. ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் தண்டனை # பொது அறிவை வளர்த்துக்கறதுக்காக கேட்கறேன், அது எந்த ஊர்ல? ஹி ஹி

----------------------------
8. உங்க கவிதையை படிச்சேன், சகிக்கலை..

ஒழுங்கு மரியாதையா என்னை லவ் பண்ணிடு,இல்லைன்னா டெயிலி கவிதை எழுதியே உன்னை கொன்னுடுவேன்

----------------------------

9. ஜட்ஜ் - எதுக்காக ஒரு நடிகரை கேவலமா பேசுனீங்க?

கைதி - போங்க யுவர் ஆனர், நடிகையையும் கேவலமா பேசக்கூடாது,நடிகரையும் கேவலமா பேசக்கூடாதுன்னா எங்கள்க்கு எப்படித்தான்  பொழுது போகும்?

--------------------------------------

10.பெற்றோரும், உற்றாரும் படித்து மனம் களிக்கும்படி நம் படைப்புகள் இருக்கனும், முகம் சுளிக்கும்படி அல்ல # சுவாமி அட்வைஸானந்தா

-------------------------------

11.பொதுவா பொண்ணுங்க தன்னை விட உயரமான ஆணைத்தான் விரும்பறாங்க, ஏன்?

ஏன்னா அவங்க கண்ணுக்கு நேர் ஆணின் சர்ட் பாக்கெட் தெரியும் கோணத்தில் இருந்தா வசதி

----------------------------

12.டியர், உன்னை உப்பு மூட்டை தூக்கவா?

வேணாம், காதல்ல எதுக்கு கசப்பு? சர்க்கரை மூட்டை தூக்குங்க

-------------------------

13.டியர், எதுக்காக என் கழுத்தையே பார்க்கறீங்க? அவ்ளவ் அழகா?

அதில்லை, நீ போட்டிருக்கற செயினை அடகு வெச்சா ஒரு லட்சம் தேறும் போல :)

-----------------------------------

14. அத்தான், நான் காலேஜ் படிக்கறப்ப  என்னை ஏகப்பட்ட பேர் ஃபாலோ பண்ணுவாங்க..

ஓஹோ, உன் பிளாக்ல எப்படி இத்தனை ஃபாலோயர்ஸ் சேர்ந்தாங்கனு இப்போ தெரிஞ்சிடுச்சு

----------------------------------------

12. டியர், நொறுக்குத்தீனி சாப்பிடறதை நிறுத்து.

ஓக்கே, என் மேல தான் எவ்ளவ் அக்கறை? என் பாதி சம்பளம் நீயே தின்னு தீர்த்துடறே.

----------------------------------

13. டியர், நீ எதுக்கு யூ நெக் (U NECK) ஜாக்கெட் போட்டிருக்கே?

சினிமா சென்சார் சர்ட்டிஃபிகேட் போல UNIVERSAL, அனைவரும் பார்க்கலாம்னு அர்த்தம்

----------------------------------

14. ஆபரேஷன் சக்சஸ், இன்று முதல் நீ புது பிறவி எடுத்திருக்கே.

தாங்க்ஸ் டாக்டர், அப்போ எனக்கு ஒரு புது சம்சாரம் கிடைக்குமா?


--------------------------------------

15. டியர்,நோ சினிமா, நோ பீச் ,ஒன்லி கோயில்னு சொல்றியே, நீ அவ்ளவ் நல்லவனா?

ஹி ஹி கோயில் போனாத்தான் செலவு இல்ல, அங்கேயே பிரசாதம் தருவாங்க

--------------------------------

16. கமிஷனர் - நீங்க அந்த கொலைகாரனை அவனுக்கே தெரியாம ஃபாலோ பண்ணுங்க

பேக்கு S.I - லூசா சார் நீங்க, நான் ஃபாலோ பண்ணுனதும் மெசேஜ்ல தெரிஞ்சுடுமே

-------------------------------

17. S.S குமரனின் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு எதிராக போராட்டம் # ஒரு வேளை கேரள NAUGHTYஇளம் பெண்கள் பற்றி எதும்  சொல்லி இருப்பாரோ?

------------------------

18. ஜட்ஜ் - நாட்ல ஜாதிப்பிரச்சனையை தூண்டி விட்டதுக்காக உங்களுக்கு 2 வருஷம் ஜெயில் தண்டனை.

ராம்தாஸ் - யுவர் ஆனர், எனக்குப்பதில் என் கட்சி தொண்டர்கள் அந்த தண்டனையை அனுபவிப்பார்கள்

--------------------------------------

19. கடற்கரையோரங்களில் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சுகள் புதிதாக கட்டப்படுகின்றன?

ஏன்னா பாவம் செஞ்சுட்டு கையோட மன்னிப்பு கேட்க வசதியா இருக்குமே?

---------------------------------------

20.புதுசா ட்விட்டர்க்கு வந்த ஃபிரண்ட் கேட்கறான்” யாரோ சவுமியாமே, அவங்க எப்போ டைம் லைன்  வர மாட்டாங்கன்னு சொல்லு, அப்போ ட்வீட் போடறேன்”கறான்

AGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா விமர்சனம் .

http://survi.in/site/wp-content/uploads/2012/01/main_image-91952.jpg ரீமேக்  பண்ற ராஜாக்கள் ,கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் 1. அம்மா ,அப்பாவை கொன்னவனை பழி வாங்கற சப்ஜெக்ட், 2 . தங்கச்சியை ரேப் செஞ்சவனை கதற கதற கொல்லும் ஹீரோ  கதை இதை எல்லாம் தயவு செஞ்சு அவாய்டு  பண்ணுங்க ,உஷ் அப்பா முடியலை.

படம் போட்டு  முக்கால் மணி நேரம் கழிச்சுத்தான் ஹீரோ  வர்றார்  .அதனால படம் பூரா  வியாபிச்சு இருக்கற வில்லன் சஞ்சாய் தத் தான் ஹீரோ மாதிரி ...ஆள் பார்க்க நம்ம  ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி ஜம்முனு இருக்கார் ,அவரோட எக்சசைஸ்  பாடிக்கு முன்னால ஹீரோ பாடி கம்மிதான் ..

ஊர் ல நல்லவரா இருக்கும் ஹீரோவோட அப்பா வை வில்லன் கொலை பழி சுமத்தி கொன்னுடறான் ,பல  வருஷம் கழிச்சு பெரிய ஆள் ஆகி பின் ஹீரோ அவனை பழி வாங்கி நம்மையும் பழி வாங்கறதுதான்  கதை ..

 ஹீரோ ஆள் பார்க்க ஜம்முனு இருக்கார் , ஆனா உருப்படியா எதுவும் செய்யலை .. (ஹீரோயின் கூட ஒழுங்கா டூ யட் கூட பாடலை அவ்வ்)

http://media2.intoday.in/indiatoday/images/stories/agneepath350_012712040235.jpg


எனக்கு தோன்றிய  சில சந்தேகங்கள் 

1 - ஹீரோயின் பிரியங்காசோப்ரா எதனால ரிப்பனை தாவணியா போட்டிருக்கார்?


2.தளபதி ரஜினி மாதிரி ஹீரோ படம் பூரா உம்முன்னே இருக்காரே, எதனால?


3.சின்னப் பையனா ஹீரோ வரும் ஃபிளாஸ்பேக்ல ஒருபோலீஸ் ஆபீசரையே சுடடு கொல்றாரு, அப்பவே வில்னையும் கொன்னருக்கலாமே?

4. ஹீரோயின் முதல் சீன்ல ஹீரோ தன் தாவணியை உருவுனதும் பதட்டப்பட்டாரு, அதுக்குப்பிறகு அப்படியே தேமேன்னு இருக்காரே, ஏன்?

5. ஒவ்வொரு சீன்லயும் ஹீரோயின் 18 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு வர்றாரே, அது ஏன்?


http://img.india-forums.com/wallpapers/1280x1024/174824-priyanka-in-agneepath-2012-stills.jpg

6. வில்லனும்,ஹீரோவும் இடைவேளைக்கு முன்னமே சந்திக்கறாங்க, ஆனா அவரை கொல்ல எந்த ஸ்டெப்பும் ஹீரோ எடுக்கலை, அது ஏன்?

7. வில்லன் ஹீரோவை அடிச்சு துவம்சம் பண்ணி 4 கிமீ இழுத்துட்டுபோய் அவரை கட்டிப்போட்டு கொல்ல முயற்சி பண்றாரு,ஏன்?அபபவேகொல்லலை?

8. ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் கேத்ரினா கைஃப் வாங்குன அப்ளாஸ்ல பாதி கூட ஹீரோயின் வாங்கலையே, ஏன்?ஹீரோயினுக்கு ஏன் காட்சிகள் ஆழமா வைக்கலை?

9.படத்துல காமெடி காமெடின்னு சொல்வாங்களே,அது மருந்துக்கு கூட இல்லையே, அது ஏன்?

10. க்ளோசப் காடசிகளில் பிரம்மாண்டமா தெரியற வில்லன் லாங்க் ஷாட்ல ரொம்ப சாதாரணமா பாடி பில்டப் இல்லாம இருக்காரே, ஏன்?

http://img.india-forums.com/crop/265x300/174878-hulf6wqp.jpg


படு மொக்கையான இந்தப்படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டர்ல பார்த்தேன்..யாரும் போயிடாதீங்க :(((((((((

டிஸ்கி - இந்த லட்சணத்துல இந்தப்படம் மும்பைல செம ஹிட்டாம் அவ்வ்வ்வ்

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 2

சிறந்த படிப்பாளி தான் சிறந்த படைப்பாளி ஆக முடியும்” அப்படீன்னு பல பெரிய மனுஷங்க எல்லாம் சொல்லி இருக்கறதால நானும் படிக்க முடிவு செஞ்சேன்.


ஸ்கூல்லதான் ஒழுங்கா படிக்கலை, இதையாவது படிப்போம்னு நான் ஜோக், காமெடி லைன்ல யார் எல்லாம் சாதனை செஞ்சாங்கன்னு கணக்கு எடுத்தேன். என் லிஸ்ட்ல முதல்ல சிக்குனது எஸ்.வி.சேகர். அவர் காமெடி டிராமாக்கள் ஆடியோ கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து கேட்க ஆரம்பிச்சேன். அப்போவே ஒரிஜினல் கம்பெனி கேசட் எல்லாம் 26 ரூபாய். அதே நாடகம் ஸ்டேஜ்ல போட்டப்ப அதாவது ஈரோடு கவிதாலயா சார்பா கொங்கு கலை அரங்கம்ல நடந்தப்ப பாக்கலாமுன்னு போனேன். டிக்கெட் 50 ரூபாய். அதனால வாசல்லியே நின்னு ஸ்பீக்கர் சவுண்ட் மட்டும் கேப்பேன். டிக்கெட் செக் பண்றவங்க முதல் அரை மணி நேரம் தான் இருப்பாங்க, அப்புறம் அவங்க உள்ளே போயிடுவாங்க. அதுக்குப்புறம் நானும் உள்ளே போயிடுவேன். (ஹிஹி)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCCpDGCrlJemBBV6iDQxcFRuBIrFEwGYBcOAi1PMVfl9BKlzdkjI5-EFj5Z8_LqBT44hyphenhyphen5vsH9hL3GUA0emPvyIiOXIRk0Vu6-FsmXI972g8Lyh7VAj_HfD-2h2moAB3j0Td_edJQJhn7B/s400/sv-sekar.jpg

எஸ்.வி.சேகரின் மேடை ஆளுமை மிகப் பிரமாதமா இருந்தது. அதாவது வசனங்களை அவர் மனப்பாடம் பண்ணிப் பேசறது  மாதிரியே இருக்காது. சரளமா வரும். அதும் இல்லாம ஒரிஜினல் ஸ்கிரிப்ட்ல என்ன டயலாக் இருக்கோ, அது போக அப்பப்ப நாட்டில என்ன நடக்குதோ அதையும் டைமிங்கா ஜோக் அடிச்சு விடுவார். சொந்தச் சரக்கு. இது எனக்கு ஆனந்த விகடன்ல டாப்பிகல் ஜோக்ஸ் எழுத ரொம்ப யூஸ் ஆச்சு. அரசியல் தலைவருங்க ஏதாவது பேட்டி குடுக்கறப்ப அந்த லைன்ல இருந்து ஒரு ஜோக் தேத்தும் கலையை கத்துக்கிட்டேன்.


பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாரும் விடற அறிக்கையே காமெடியாத்தான் இருக்கும் என்றாலும், அதுல நம்ம டச் சேர்த்து ஜோக் ஆக்கும்போது நாம ரெகுலரா எழுதற ஜோக்கை விட அதிக கவனிப்பு இதுலே  கிடைக்கும். அதும் இல்லாம பெரும்பாலாம பத்திரிகைகள் டாபிகல் ஜோக்ஸ், பாலிடிக்ஸ் ஜோக்ஸ் அதிகம் பிரசுரிச்சிட்டிருந்தாங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2-EesP37sNX0vUAOYfTAC3nlgRojhKObXi_4PxUVeGywK8FBH_LxsTYbajfPiqEMj9NKTlPUf6PgaP-RXQ6Nbobmh1GF7jFQpf9p_qiZGW8MiYDEgiDn1GfE_luzjQsMhdHlfDr3oIQ/s1600/ARS2.jpeg


அப்புறமா எஸ்.வி.சேகரின் முன்னோடி கிரேஸி மோகன்னு தெரிஞ்சுது. அவர் நாடகங்கள்  கேசட் எல்லாம் வாங்கினேன். வார்த்தை ஜாலம், அதாவது எதிராளி பேசும் வார்த்தைகளை வெச்சே குழப்பி அதுல இருந்து ஒரு ஜோக் எடுக்கறது, இது பிரமாதமா அவருக்கு வருது. அவரோட படங்கள் எல்லாம் கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு படத்துல பொதுவா 25 ஜோக்ஸ், இல்லைன்னா அதிகபட்சமா 40 ஜோக்ஸ் தான் பொதுவா வைப்பாங்க, ஆனா கிரேசி மோஹன் டயலாக் எழுதுன படங்கள் எல்லாம் 60 ஜோக்ஸ் சர்வ சாதாரணமா வந்தது.

இப்போ தான் எனக்கு ஒரு பிரச்னை வந்தது. மெம்மரி பவர் எனக்கு கம்மி. படம் பார்த்துட்டு வந்து யோசிச்சு பார்த்தா 20 ஜோக்ஸ் மட்டும் தான் என்னால நினைவு  வெச்சுக்க முடிஞ்சுது. அதை டெவலப் பண்ண ஆரம்பிச்சேன்.


இதிலே, உதாரணத்துக்கு எஸ்.வி.சேகர் நாடகத்துல இருந்து ஒரு சாம்ம்பிள் வசனம் :
ஹலோ அய்யா இருக்காருங்களா?
லேடி : மேலே படுத்திருக்காருங்க ( மொட்டை மாடில)
ஐயையோ, சாரிங்க, நான் அப்புறம் ஃபோன் பண்றேங்க
இந்த ஜோக் தான் அவர் நாடகங்கள்ல சூப்பர் ஹிட் ஆச்சு. நான் மக்கள் ரசனை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கே பாக்யராஜ் சார் டைப் இலை மறைவு, காய் மறைவா  ஜோக் இருக்கனும், எஸ் ஜே சூர்யா மாதிரி பட்டவர்த்தனமாய் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.


கூடவே, டைமிங்க் ஜோக் & டாப்பிக்கல் ஜோக் . அதாவது அந்தந்த கால கட்டத்துல என்ன சம்பவங்கள் நடக்குதோ அதை வெச்சு ஜோக் அடிப்பது,எதிராளி என்ன பேசறானோ அவன் வார்த்தைல இருந்தே ஜோக் எடுப்பது.

http://www.outlookindia.com/images/cho_ramaswamy_20090330.jpg


அடுத்த கட்டம் துக்ளக் ஆசிரியர் சோ.


இவர் அதிமுக அனுதாபின்னு ஒரு பேச்சு இருக்கு. அது பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. என் பார்வைல யார் எல்லாம் நல்லா காமெடி பண்ணறாங்களோ அவங்களை எல்லாம் ரோல் மாடலா எடுத்துக்க முடிவு செஞ்சுட்டேன்,. எனக்கு எதிரின்னு யாரும் கிடையாது. விருப்பமான கட்சி, அபிமான நடிகர்னு யாரும் கிடையாது.


முகம்மது பின் துக்ளக் நாடகம் தான் சோ எழுதுன மாஸ்டர் பீஸ். அந்த புக்ல மட்டும் 230 ஜோக்ஸ் தேறுச்சு. பல வருடங்களுக்கு முன்பே எம் எல் ஏ விலை போவது பற்றி மிகப்பிரமாதமா எழுதி இருந்தார். நாளை நடப்பதை இன்றே கணிப்பது என்ற கலை அவரிடம் அதிகம்.


பிளாக் & ஒயிட் படங்கள் என்றாலும், அவரு நடிச்ச படங்கள் கே டிவில எப்போ போடுவாங்கன்னு காத்திருந்து பார்க்கத்தொடங்கினேன். துக்ளக் பத்திரிக்கையும் வாங்க ஆரம்பிச்சிட்டேன். அதுல துக்ளக் சத்யா அபாரமான கார்ட்டூன்கள், காமெடி கட்டுரைகள் எல்லாம் எழுதுவாரு. அதை எல்லாம் ரசனையோட படிச்சேன்.


ஆனந்த விகடன்ல அட்டைபட ஜோக் எழுதி புகழ் பெற்ற படுதலம் சுகுமாரன் சிறுகதை செக்‌ஷன்க்கு போய்ட்டார். அவரை யாரும் மறக்கவே முடியாது, ஏன்னா எம் ஜி ஆர் பிரியட்ல ஒரே ஒரு அட்டைப்பட ஜோக்குக்காக ஆசிரியரே சிறை செல்ல நேரிட்டது.1000 ரூபாய் அபராதம் அரசே கொடுத்து விடுவித்தது. அதே போல் ஆனந்த விகடன் ஆசிரியரை உள்ளே அனுப்பும் அளவு ஒர்த் ஆன( !!!??) ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.

ஆனா பாருங்க 2 வருஷமா ஜோக்ஸ் வந்ததே தவிர அட்டைப்படத்துல வரலை. அப்புறம் எப்படியோ போன ஜென்மத்தில நான் செஞ்ச புண்ணியத்துல ஒரு ஜோக் அட்டைப்படத்துல வந்தது.
தலைவரே, ரத்தத்தின் ரத்தமே-ன்னு கட்சிக்காரங்களை கூப்பிட்டது தப்பா போச்சு


ஏன்?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு

இந்த ஜோக் அட்டைப்படத்துல வந்தாலும் பெருசா பரபரப்பா பேசப்படலை. அட, குறைந்தபட்சம் ஆசிரியருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வரலை.


அப்போதான் அதிரடியா ஜோக் உலகுக்கு வந்தார் தஞ்சை தாமு. இவர் என் மானசீக குரு எனலாம். பொதுவா என்னை விட திறமைசாலிங்க எல்லாரையுமே நான் மானசீக குருவா ஏத்துக்குவேன். இவரது வார்த்தை ஜாலங்கள் பிரம்மிக்க வைத்தன.


வி சாரதி டேச்சு பத்திரிக்கை  எடிட்டர்களை கவர்ந்தார் என்றால் தஞ்சை தாமு சாதாரண வாசகர்களை கவர்ந்தார். அவரது ஜோக்குகள் தனித்துவம் பெற்றன. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர். உடனே அவரை சந்திக்க ரயில் ஏறிட்டேன்.


வல்லம் தாஜூ என்ற பெயரில் கவிதை எழுதியவரும், பல உள்ளூர் பட்டி மன்றங்களீல் பேசியவருமான அவரது நட்பு கிடைத்தது. பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.


அவரது புகழ் பெற்ற ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்…
இவ்வளவு வசதி இருந்தும் தலைவர் தரைல பாய்ல  படுக்கறாரே, அவ்வளவு எளிமையா?


அட நீங்க வேற, அவருக்கு காலைல எழுந்ததும் எதையாவது சுருட்டணும்.

இந்த மாதிரி மற்றவர்கள் யோசிக்காத கோணத்தில் ஜோக்ஸ் எழுதுவதில் அவர் கை தேர்ந்தவர்.


அடுத்து வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி. இவரது படைப்பாற்றல் பிரம்மிக்கத்தக்கது. கதை, ஒரு பக்க கதை, கவிதை, ஜோக்ஸ் என எல்லா ஏரியாவிலும் கல்லா கட்டும் ஆள். செம ஷார்ப்பாக இவரது படைப்புகள் இருக்கும். இவரை நேரில் சந்தித்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன்.


ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நடிக நடிகைகளை நேரில் சந்திக்கும் ஆர்வம் வந்ததே இல்லை.  இலக்கியவாதிகள், படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வமே அதிகம் இருந்தது, ஆஃபீஸ் வேலையாகவோ, உறவினர், நண்பர் திருமணங்கள்க்காக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் எந்த படைப்பாளி இருக்கார்னு பார்த்து வாலண்ட்ரியா ஆஜர் ஆகி அறிமுகப்படுத்திக்குவேன்.
இப்படி என் எழுத்துப்பணி சீரா போய்ட்டு இருக்கும்போதுதான் சாவி பத்திரிக்கையின் தீபாவளி சிறப்பிதழ்ல என்னோட 8 ஜோக்ஸ், ஒரு சினிமா விமர்சனம், ஒரு காமெடி கட்டுரை ( ஜெவை கிண்டல் பண்ணி) வந்தது. சாவி அவர்கள் எனக்கு ஃபோன் செய்து சென்னை வந்தால் அவசியம் சந்திக்க என்று சொல்ல எனக்கு அது ஒரு பெரிய அங்கீகாரமாக தோன்றியது.


அதுக்கு அப்புறம் தான்…

- தொடருவேன்…

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyqGQXrXGQT9bROyzvFd4fzD4ckMerA1ha9A3v9zrAqo8ojY6ZvkZx846uUOz1A5cuxImCbGMo_rgoOnlHPzyc0mgPELUwN-t7-ZmaDbmjTB436fUBK_tjAMNjTit4P3VHdME35xHVL0Y/s200/chavi.JPG
டிஸ்கி - இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html

Sunday, January 29, 2012

நடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே? (ஜோக்ஸ் , ட்விட்ஸ்)

1.உனக்கெல்லாம் கூடப்பிறந்த அண்ணன் , தம்பி யாரும் இல்லையா? என எந்த ஆணும் பெண்களிடம் கேட்பதில்லை # நீதி- ஆண் பொறுமை சாலி,புத்திசாலி ஹி ஹி

------------------------------------

2. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது யார்?

டீச்சர், அது சரியா தெரியல, இந்தி சினி ஃபீல்டுக்கு சுதந்திரம்னா என்ன?னு ”காட்னது” பூஜாகாந்தி

--------------------------------------

3. ஃபேஸ்புக்கை ஏன் தடை பண்ணப்போறாங்க அப்டிங்கறதை மீ கண்டுபிடிச்சிங்க் - அதுல தொடுப்பை பகிர்க அப்டினு வருது அவ்வ்வ்வ்


------------------------------------

4. . கமிஷனர் - மேடம், உங்க ராடான் பிக்சர்ஸ் க்ளோஸ் பண்ணனும்.

. ராதிகா - ஏன்? ரா”டான்”-னு இருக்கே? எல்லா டான், தாதாவை அரெஸ்ட் பண்ண சொல்லிட்டாங்க

---------------------------------------

5. கொலுசு ரவுசு - டாடி, நான் காலேஜ்க்கு போய்ட்டு வர்றேன் .

  செல்ஃபோனை இங்கேயே வெச்சுட்டு போ,அம்மாட்ட இருந்து ஆட்டையை போட்ட 100 ரூபாய குடு

--------------------------------------

6. குடிகாரர்களை கேவலமாகப்பார்த்த சமூகத்தின் பார்வை இன்று மாறி விட்டது, அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி விட்டது:(

-----------------------------------

7. ரேணு -1ம் தேதில இருந்து ஹெல்மெட் போடணுமாம்.போனி டெய்ல் போட்டா முடி கலஞ்சுடும்.

சீனு - யுவர் ஆனர், ஒரு சின்ன திருத்தம், சவுரி கலைஞ்சிடும்

-------------------------------------

8. பெண்ணியம் காக்கிறேன் பேர்வழி என்று சிலர் காட்டும் கண்ணியம் (?)மற்றும் சொல்லாடல்கள் நகைக்க வைக்கிறது,திகைக்க வைக்கிறது

--------------------------------------


9. நதியின் அழகு கரையை தாண்டாத வரை, காதலின் அழகு  வரம்பை மீறாதவரை, சுடு சொல் கூறாத வரை

------------------------------------------

10. விஷால் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் ராதிகா # நல்ல வேளை அவர் ஒரே ஒரு செக் கொடுத்து ஏமாத்தினார், 3 செக் குடுத்து ஏமாத்தி இருந்தா?:)

--------------------------------------

11. பெண்ணுக்கு மனம் கவர்ந்த காதலன் சூரியன் போல (1). ஆணுக்கு  மனம் கவர்ந்த காதலி(கள்) நட்சத்திரங்கள் போல ( பல)

-------------------------

12. ஆணின் நயவஞ்சகம் நீச்சல் குள நீர் மட்டம் போல், ஆழ அளவு தெரிந்து விடும், பெண்ணின் வஞ்சகம் கிணறு போல, ஆழ அளவு உடனே தெரியாது

-----------------------------------

13. கொலுசு ரவுசு -2 அக்காக்கள் நான் தத்துவமா போடுறேன்னு சொல்லிட்டாங்க..சரசு தினுசு - தத்துபித்துவம்னு சொல்லி இருக்கனும்:)

----------------------------------

14. தருமர் - இனி மேல் எனக்கு வரும் நல்ல உபதேசங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

துரியோதனன் - என்னை திட்டுபவர்களின் வசவுகளை நெசவாக்கி தர்றேன்

---------------------------------------

15. நிற்கும் தோரணையிலேயே ஆண் தன் கம்பீரத்தை காட்டி விடுகிறான், அமர்ந்திருக்கும் பாவனையில் பெண் தன் நளினத்தை உணர்த்தி விடுகிறாள்

----------------------------

16. அமைதியான சுபாவம் கொண்ட கணவனுக்கு அகங்காரமான மனைவியும் , பெண்களை மதிக்காத குடிகாரனுக்குஅமைதியான , குடும்ப பாங்கான பெண் மனைவியும் அமைந்துவிடுகிறது

--------------------------------------

17. தன்னை விட திறமைசாலிகளை அங்கீகரிக்கும் மன பக்குவம் பெண்களுக்கு குறைவு

-------------------------------------

18. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் அப்பாவி கணவன் அமைந்து விட்டால் சில பெண்கள் திருநெள்ளாறு சனீஸ்வரன் ஆகி அவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்

---------------------------------

19. ரோகிகளை மருத்துவர்கள் அசூயை இல்லாமல் கையாள்வது போல் துரோகிகளை சில பெண்கள் காதலனாக கொண்டாடுகிறார்கள்

----------------------------------

20. ஆணுக்கு பெண்ணிடம் தேவைப்படுவது அன்பும், அரவணைப்பும்,அழகும். பெண்ணுக்கு ஆணிடம் தேவைப்படுவது பாதுகாப்பும், நேர்மையும், கனிவான பேச்சும்

--------------------------------------------------

Saturday, January 28, 2012

பரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமாளி செல்வா

கோமாளி செல்வா வைப்பற்றி அறிமுகம் தேவை இல்லை, இருந்தாலும் ஃபார்மாலிட்டி என ஒண்ணிருக்கே? கோபி யில் இருக்கும்  பதிவர் கம் ட்வீட்டர்.. செம மொக்கை ட்வீட்டர்.. ஆனந்த விகடன் ல பல ட்வீட்கள் வந்திருக்கு.. சவால் சிறுகதை போட்டியில் நல்ல , கவனிக்கத்தக்க கதை எழுதி இருக்கார்.. அவரிடம் ட்வீட்டர்ஸ் கேட்ட கேள்விகளும் , அவரது காமெடி பதில்களும்..

1. நீங்க சுமாரா எத்தனை மணிநேரம் இப்டியெல்லாம் ட்விட்டறதுக்கு சிந்திப்பீங்க?  (பரிசல்)


செல்வா -   ஒரு நாளைக்கு 48 மணி நேரங்களை மட்டும் இதற்காக செலவிடுகிறேன்!


சி.பி - ஓப்பனிங்க்லயே கடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



2. ட்விட்டர்ல செல்வாவுக்குன்னு தனியா புது அகராதி உருவாகிக்கொண்டு வருவதாக பலரும் பயப்படுகிறார்களே அது உண்மையா?


செல்வா - நான் இன்னும் அகராதியே எழுதல. அப்படி எழுதும் எண்ணமும் எனக்கு இல்லைங்கிறதால பயத்த பயமாவே விட்டுடலாம்!


சி.பி - அட , அகராதி பிடிச்ச பயலே... (டிக்ஸனரி லைக்கிங் பெர்சன்?)


3. எத்தனை பேர் திட்டினாலும் தொடர்ந்து எழுதி, இப்ப அதை ஒரு பாணியாவே மாத்தீட்டீங்க.. உங்க வெற்றியின் ரகசியம் என்ன?

செல்வா -யார் திட்டினாலும் அத கண்டுக்காம இருக்கிறதால எல்லோரும் பரிதாபப்பட்டு இந்த வழிக்கு வந்திட்டாங்கனு நினைக்கிறேன்! 

 சி.பி - அண்ணன் காட்டிய வழி???


4. தாங்கள் உருவாக்கிய வடை,இதால என்னாகும்?போன்ற சொற்றொடர்கள் இணையத்தில் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்தீர்களா?  ( நாகராஜ சோழன் எம் ஏ)


  செல்வா -நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை! ஆனால் மகிழ்ச்சி :)) 


சி.பி. ஓஹோ.. பதிவுலகத்துல ஆளாளுக்கு வடை வடைங்கறாங்களே? அதுக்கு நீ தான் காரணம? அடங்கோ.. வடை வாங்கி வங்கின்னு பேரு வேறா.


5. தூங்கும் நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க? (( நாகராஜ சோழன் எம் ஏ)


செல்வா -தூங்கும் நேரத்தில் கனவுகாணச் சென்றுவிடுவேன். கனவு இல்லாத நாட்களில் மட்டும் தூங்குவேன்! 


சி.பி - அய்யய்யோ, குழப்ப ஆரம்பிச்சுட்டானே. ட்விட்டர்ல ட்ரீம் பாய் இவனாத்தான் இருக்கும்.. 


6. உங்க மேரேஜப்ப உங்க ட்விட்டை புக்கா போட்டு பொண்ணுகிட்ட காட்டி பயமுறுத்தப்போறதா செய்தி வருதே? எப்படி சமாளிப்பீங்க?


செல்வா -அதுக்காகத்தான் பொண்ணுப் பாக்கப்போகும்போதே ஒரு தாயத்து எடுத்துட்டுப் போலாம்னு இருக்கேன்! 


சி.பி - உலகத்துலயே பொண்ணுக்கு  தாலி கட்டறதுக்கு முன்னால தாயத்து கட்னது நீதான்னு நினைக்கறேன்..


7. உங்களை மாதிரியே ன்னு ட்விட்டறவங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க? 


செல்வா -உண்மையில் என்னைவிட ரொம்ப நல்லா யோசிக்கிறாங்க! அவ்ளோ அருமையா என்னால சிந்திக்க முடியுமானு சந்தேகமா இருக்கு! அவர்களுக்கு நன்றிகள் 

சி.பி. இவர் மொக்கை போடுவது பத்தாமல் இருப்பவர்களையும் மொக்கை போட வைக்கிறாரே.....ஐய்ய்யோ!!


8. ரேடியோ “ஜாக்கி” ஆகறதுதான் உங்க லட்சியம் கனவு ஆசை எல்லாமே.. உங்களுக்கு ஜாக்கிங்கற உலகப் பிரபலதை தெரியுமா?


செல்வா -ஜாக்கி சான் பத்தித் தெரியும்! ஜாக்கினு ஒருத்தர் தனியா இருக்கிறாரான்னு தெரியலைணா!

சி.பி. - ஜாக்கிசேகர் அண்ணனையே கிண்டல் பண்ற அளவுக்கு அவ்வளவுபெரிய அப்பாடக்கரா நீங்க..?...


9.பிறரை கவருவதற்காக இப்படி ட்விட்டுகிறீர்களா இல்லை உங்கள் இயல்பே இப்படித்தானா?(ஜீவன்)


செல்வா -உண்மையில் எனது இயல்பே இதுதான்! அது பிறரைக் கவர்வது எனக்கு மகிழ்ச்சியே :)) 

சி.பி.- நீங்கள் கோபியில் வேலை செய்யும் அலுவலகத்தில் பல பெண்களை கவரந்தது இந்த இயல்பினால்தானா?? நடக்கட்டும்.....நடக்கட்டும்.



10. உங்க பயோல எப்ப என் கனவு நிறைவேறும்னிருக்கீங்க. ஆனா நீங்க தூங்கறதே இல்லையாமே.. அப்பறம் எப்படி கனவு?


செல்வா -நான் கனவுகாண தூங்கச் செல்வது இல்லை. நான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லிப் பார்த்துக்கொள்வேன்.கண்ணை மூடிட்டா எதுவும் தெரியாதே ?

சி.பி-- பெரிய அப்துல்கலாம் பேரன்......ட்ரீமை வரச்சொல்வது ஓகே...ட்ரீம் கேர்ள்ளையும் வரச்சொல்லிடுவீங்களோ?? சொன்னா நாங்களும் வருவோமில்ல??

11. பல இயக்குனர்கள் தங்கள் படத்துல வில்லன்கள் யூஸ் பண்ண உங்க ட்விட்களை கேட்டு, நீங்க தரமாட்டேன்னு சொன்னதா சொல்றாங்களே?


செல்வா -வில்லன்கள் எனது ட்விட்டுகளைப் பேசினால் ஒருவேளை காமெடியன்களாகத் தோற்றமளிப்பார்கள் என்பதால் பொதுநலன் கருதி அவ்வாறு கூறிவிட்டேன்!

சி.பி.- வில்லனுக்கே வில்லனய்யா நீர்!!

12. யாராவது 'போய்ட்டு வா'னு உங்க பேரைச்சொல்லி கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பீர்களா செல்வா ( SE, செந்தில்)


செல்வா -வீட்டுக்குப் போயிட்டு வந்து பார்ப்பேன்! ஆனா அவுங்க அங்க இருக்கமாட்டாங்க :((

சி.பி.- வீட்டுக்கு போவது ஓகே......அது உங்க வீடா ? சின்ன வீடா??



மேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினாலும்..... ( joks ,tweets).

1. மற்றவர்களிடம் இல்லாத ஒரு திறமை உன்னிடம் இருந்தால் அதை நீ அதிர்ஷ்டத்தால் பெற்றதாய் இந்த உலகம் சொல்லும்

----------------------

2.அவர் பயங்கர அப்பாவின்னு எப்படி சொல்றீங்க? 

புரொஃபஷனல் கூரியர்ல வேலை செய்யற எல்லாருமே புரொஃபஷனல் டேக்ஸ் கட்டியே ஆகனுமா?ன்னு கேட்கறாரே?

---------------------------------------------
3. யாரையும் பின்பற்றாதே, ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்தும் எதையாவது கற்றுக்கொள் # நாம ஃபாலோ பண்ணலைன்னா அவங்களும் பண்ணமாட்டாங்களே?

---------------------------------------

4. லவ் பண்றப்ப ஃபிகர்கள் செல்ஃபோனில் உதிர்க்கும் சில வார்த்தை முத்துக்கள்

1 . ம்ம்ம்

2. அப்றம்?

3. சரிடா..

4. சொல்டா..

5. டாடி லைன்ல.. 

------------------------------

5. மாப்ளைக்கு பேராசை ஜாஸ்தின்னு எப்டி சொல்றீங்க? 

பொண்ணு கூடவே சீரா பொண்ணோட தங்கையையும் அனுப்புவீங்களா?னு கேட்கறாரே? # மச்சினி ராக்ஸ்

-------------------------

6. தலைவர் எதுக்காக அவரோட தோட்டத்துல சூரிய காந்திப்பூ செடி வளர்க்கறாரு..?

காந்திய வழியில் போராடறதா சொல்லிக்கலாமே?

-------------------------------

7.  பெண்கள் என்று சொல்லும்போது மரியாதை மனசில் வந்து விடும், ஃபிகர்கள் என்றால் தான் கிளு கிளு

-------------------------------

8. இன்ஸ்பெக்டர், எப்பவும் காஃபி சாப்பிடற நீங்க இப்போ மட்டும் ஏன் டீ சாப்பிடறீங்க? 

ஏன்னா நான் இப்போ மஃப்”டி” ல இருக்க்கேன்


-------------------------------------

9. டாஸ்மாக் போகும்போது அவர் ஏன் லேப்டாப் எடுத்துட்டு போறாரு? 

அதுல ஏகப்பட்ட சிப்ஸ் இருக்குமே? சைடு டிஷ்க்கு ஆச்சு.

-----------------------------------

10. ஒரு டம்ளர் கள் உள்ளே போனா அந்த ஃபிகர் செமயா ஆட்டம் போடும்..

ஓஹோ. கிளாசிக்”கள்”  ( GLAASS சிக்”கள்” )”டேன்சர்னியே இதானா?

---------------------------------

Helpless Situation

cute animals - Acting Like Animals: Rescue Me!
11. காதலின் சின்னம் கல்லறை, கல்லறைக்கு செல்லும் வழி அவளை காதலி #  SMS

----------------------------------

12.  டாக்டர், வயித்துல புளியைக்கரைச்சது மாதிரி இருக்கு.. 

யோவ்,, ரசத்துக்கு குண்டால தானே அதை கரைக்கனும்?

-----------------------------------

13. கலைஞர் - அம்மான்னு கூப்பிட்டவங்களை அம்போன்னு கழட்டி விட்டுட்டீங்களே? 

ஜெ - தமிழ் இனத்தலைவர்னவங்களுக்கு மட்டும் நீங்க என்ன செஞ்சீங்க?

-----------------------------

14. மேனேஜர் - யோவ், மீட்டிங்கை கவனிக்காம நீ என்ன பண்றே? 

சார், என்ன பேசலாம்னு யோசிச்சேன் சார் # சேட்டிங்க் நடக்குதுன்னு சொல்ல முடியுமா?

------------------------------

15 - ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்றச்சாட்டு # ராசா நம்பிக்கை துரோகம் செய்யும் ஆள் இல்லை - கனி மொழி நம்பிக்கை

----------------

16. நாலு அழகான பெண்கள் சாலையில் செல்கிறார்கள்.

ஹாலிவுட் சினிமா பைத்தியம் - வாவ்! ஃபெண்டாஸ்டிக் ஃபோர்

----------------------------------

17. சைவம் மட்டுமே உண்பவர்கள் மனதில் கெட்ட எண்ணங்களும் வன்முறைஉணர்வுகளும்  குறைவாக எழுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன

-------------------------------


18. எல்லோர் எதிரிலும் லேடி ஸ்டாஃபை திட்டும் மேனேஜர் பிறகு தனியாக அவரை கூப்பிட்டு சமாதனப்படுத்தி விடுகிறார் # அவதானிப்பு

----------------------

19. துரோகங்களும், பொறாமைகளும் என்னை மூழ்கடிக்கும் வேளையில் தியாகங்களாலுல், அன்பாலும் என்னை மீட்டெடுத்தாய்!

-----------------------------

20.விழிஒளி இழந்தவர், செவித்திறன் குறைந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பதங்களை கண்ணியமாக உபயோகிப்பீர்

--------------------------

Friday, January 27, 2012

துக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா? - விகடன் - காமெடி கும்மி

http://suriyantv.com/wp-content/uploads/2011/12/%E0%AE%9A%E0%AF%8B.jpg 

மிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.

 சி.பி - இதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஏன்னா அத்வானிக்கு தமிழ் தெரியாது, அவருக்கு மொழி பெயர்த்து சொல்றப்ப அந்த மேட்டரை மட்டும் கட் பண்ணிட்டு கூட சொல்லி இருக்கலாம், யாருக்கு தெரியும்? ஹி ஹி

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

 சி.பி - இப்படித்தான் சசிகலாவையும், நடராஜனையும் ஜெவின் ராஜ குருக்கள்னாங்க. பொதுவா அரசர்கள் பரம்பரை பரம்பரையா அமைச்சர்களை, மதி யூகி மந்திரிகளை கறி வேப்பிலையா யூஸ் பண்ணிக்கிட்டு தன்னை விட வளருவாங்க என்ற எண்ணமோ, அச்சமோ தோண்றப்ப நைஸா கழட்டி விடுவாங்க..மன்னர்கள் என்றைக்கும் மன்னர்களாகவே இருக்காங்க, ஆலோசகர்கள் என்றென்றும் ஆலோசகர்கள் தான், நீ நல்லா ஆலோசனை கொடுத்துட்டே நன்றி, ஒரு வருடம் நாட்டை ஆண்டு கொள்னு எந்த அரசரும் விட்டுக்கொடுத்ததில்லை


 1. ''சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?''


சி.பி - அண்ணன் ஓப்பனிங்க் கேள்வியே  தப்பா கேட்டுட்டாரு .. க்யூன் மேக்கர் ஆகும் ஆசையா?ன்னு கேட்கனும் ஹி ஹி 


''நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்).


நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்கு வதில் முட்டுக்கட்டை ஏற்பட் டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!''

சி.பி - குஜராத்தின் வளர்ச்சியை  கணக்கில் கொண்டு மோடியை முன் மொழிவதைக்கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. எந்த அடிப்படைல  எதேச்சதிகாரப்போக்கும்,எவரையும் மதிக்காத ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், அதீத தன்னம்பிக்கை உள்ள ஜெ வை பரிந்துரைக்கிறார்?இந்த மாதிரி இவர் பேசறப்ப தான் பிராமணர் என்பதாலா? என்ற கேள்வி எழுகிறது.. 


2. ''இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?''

சி.பி - அடிமைக்கலாச்சாரமே போதும்னு நினைக்கற சிங்குக்கு இவர் மோசமைல்ல.. 
''குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.''


சி.பி - இந்த கருத்துக்கான எதிர் வாதத்தை  யாராலும் முன் வைக்க முடியாது என்று நினைக்கிறேன், குஜராத்தின் வளர்ச்சி பிரமிப்பானது.. 


3. ''மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?''  


''மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பது போல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!''


சி.பி - அதெப்பிடி மோடி காரணம் இல்லைன்னு சொல்ல முடியும்? ஒரு நல்லது நடந்தா அதுக்கு அவர் தான் காரணம்னு பாராட்ற மாதிரி , ஒரு அல்லது நடக்கறப்ப ( கெட்டது) அதுக்கும் அவர் தானே பொறுப்பு? உலகக்கோப்பையை ஜெயிச்சப்ப ஆஹா ஓஹோன்னு பாராட்டுன அதே ஜனங்க, அவர் சில தோல்விகளை சந்திச்சப்ப எதிர் வாதங்களை வைக்கலையா?

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijayakanth_jayalalitha_59.jpg

4. ''அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். விடுத்த மறைமுகச் செய்தியா?''


''ஆர்.எஸ்.எஸ். அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.''


சி.பி - காதலை நேரடியா சொல்றதுக்கு முன்னால ஒரு தோழன், அல்லது தோழி மூலமா ஒரு தூது விட்டு ஆழம் பார்க்கறதை  தமிழன் தான் முதல்ல கண்டு பிடிச்சான், அந்த மாதிரிதான் இதுவும்..

5. ''ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க-வை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகத்தை மாற்றிவிட்டது பா.ஜ.க. இனியும் எப்படி பா.ஜ.க-வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?''


''பா.ஜ.க-வில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க- தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க-வின் பெரும் பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார் களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கி ரஸில் அப்படிச் சொல்ல முடியாது.''


சி.பி - காங்கிரஸ் பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கட்சி.. அதனால ஊழல்ல பெஸ்ட்டா விளங்கறாங்க, பி ஜே பிக்கு நாம வாய்ப்பு கொடுத்தா அவங்களும்  பெஸ்ட்டா ஊழல் பண்ணுவாங்க.. அதனால யாரும் காங்கிரஸ் அளவு பி ஜே பி ஊழல் பண்ண முடியலைன்னு  வருத்தப்பட தேவை இல்ல.. 


6. ''சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?''


சி.பி - இது பொதுவான மனிதப்பண்பு தான், தன் ஜாதிக்காரங்க, தனக்கு பழக்கமானவங்களை முன் நிறுத்தறதுல என்ன தப்பு இருக்கு? 
''இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப் பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக் கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச்  சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.''     


சி.பி - மொழி அறிவு தான் பிரதமர் ஆகத்தேவை என்றால் இந்த நாட்டில் பல துபாஷ் ( மொழிபெயர்ப்பாளர்)களே பிரதமர் ஆகி இருப்பார்கள்.. பிரதமர் ஆக முக்கியத்தேவை 1. பொறுமை  2 . நிதானம் 3. மற்ற பெரியவர்கள்,அதிகாரிகள்,கருத்துக்களை காது கொடுத்துக்கேட்டு நிலைமையை சீர் தூக்கி பார்த்து முடிவெடுத்தல் 4 , மற்ற கட்சிகளை அரவணைத்து செல்லும் பாங்கு..இவைகள் தான்.  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் கொண்டவர்களெல்லாம் பிரதமர் ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே தாஜ்மஹாலை இடம் மாற்றனும், கேட் வே ஆஃப் இண்டியாவை மூடனும்னு ஏதாவது அச்சு பிச்சு வேலை ந்டந்தா இந்த உலகம் நம்மை பார்த்து கை கொட்டி சிரிக்கும்.. 


http://www.vikatan.com/news/images/muthu_toon.jpg

7. ''ஜெயலலிதாவின் கடந்த 9 மாத ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.''

சி.பி - சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்  விருது சோவுக்குத்தான் ஹி ஹி 


8. ''தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரி கள் மாற்றக் குளறுபடிகள்... எல்லா வற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர் களா?''


''ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத் தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை.


கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, தி.மு.க. ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!''


சி.பி - கஜானா காலி என்றால் அரசன் மணி மகுடத்தை  துறக்க வேண்டும் , மக்களிடம் கை ஏந்தக்கூடாது.. தொழில் அதிபர்கள், பெரும்பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்கலாம், டாஸ்மாக், சிகரெட் போன்றவற்றி டபுள் மடங்கு வரி விதிக்கலாம், அதை எல்லாம் விட்டு விட்டு நடுத்தர மக்களிடம் கை ஏந்துவது வெட்கக்கேடானது.. 


9. ''ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதி கள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார். ஆனால், அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிவிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவுதானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம் இருக்கிறது?''


சி.பி - எப்பவுமே ஒரு விஷயத்தை நாம உன்னிப்பா கவனிக்கனும், உள்ளாட்சித்தேர்தல் டைமிலோ, இடைத்தேர்தல் வரும் டைமிலோ எடுக்கும் முடிவுகள் உள் நோக்கம் கொண்டவை.. உண்மையிலேயே ஜெ நேர்மையான முதல்வர் என்றால் பஸ் கட்டண உயர்வை உள்ளாட்சித்தேர்தல்க்கு முன்பே அறிவித்திருக்கலாமே? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisinTrMcmu6LOO-xHSMfOp-O9Af96HQc8qUZPt-UArCtZtNp_SPsXgmqhyphenhyphenfhw2J1oNn339vxnByh4v794CsIN0qDoqEcm-1SiXoq0CpOB3UN6wQE8VNRV3X8saOqLcOR2iIgsD-PRDhIBj/s320/cho_azhagiri.jpg


10. ''ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?''


''அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்ப வர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.''


சி.பி - அண்ணே, சோ அண்ணே, நிருபர் கேட்டது உங்க கருத்தை, கட்சிக்காரங்க கருத்து எங்களுக்கே தெரியும், நாங்களும் பேப்பர் படிக்கறோம்.. ஹி ஹி 


12. ''சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?''

சி.பி - பெங்களூர் கோர்ட்டில்  சொத்துக்குவிப்பு வழக்கில் வரப்போகும் தீர்ப்பு ஜெவுக்கு பாதகமாக வரப்போகுதுன்னு தெரிஞ்சிடுச்சு.. அதனால எல்லாத்துக்கும் காரணம் சசி தான், எனக்கு எதுவுமே தெரியாது, அப்பாவி என்ற இமேஜை மக்களிடமும், கொஞ்சம் ஏமாந்தா ஜட்ஜ் இடமும் பதிவு செய்யவே இந்த நாடகம் என்பது பலரது கருத்து 



''எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதா வையோ, அ.தி.மு.க-வையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக் கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற் பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கை யாக இது இருக்கலாம்.''

 சி.பி - எங்கண்னனுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி.. தி முக -  த மா க உறவு ஏற்பட்ட போதும், ரஜினியின் த மாக ஆதரவு நடந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு..

13. ''ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான 'பார்ப்பன லாபி’யின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


''நீங்கள் சொல்வதுபோல வைத்துக் கொண்டால், நான் அ.தி.மு.க-வைக் கைப் பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவனாகிவிடுவேன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங் கள்... அவ்வளவு பெரிய மடை யனா நான்?

ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப் படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.


மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா? அப்போது எல்லாம் இந்தப் 'பார்ப்பன லாபி’ குற்றச் சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?''


http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2010/12/09/9/Img/Pc0090900.jpg

14. ''சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எதைவைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.


மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். 

இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!''


15. ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?''


''எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!''


Thursday, January 26, 2012

ஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்ன ஆச்சு தெரியுமா? ( ஜோக்ஸ்)

1.நிருபர் - சார், ஹிந்தி சினி ஃபீல்டு உங்களுக்கு செட் ஆகுமா?

தனுஷ் - எனக்கு எது எதுவோ செட் ஆகுது, இது ஆகாதா?

------------------------------

2. தெலுங்கு படத்தில் நயன்தாரா! திருமணம் தள்ளிவைப்பு? # பின்குறிப்பு - மாப்பிள்ளை தேர்வு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது

-------------------------------
3. பூமியை இன்று தாக்கும் சூரியப் புயல்: "நாசா' விஞ்ஞானிகள் கணிப்பு # சூரியன் தான் சுருண்டுடுச்சே?- ஜெ

------------------------

4.மாமா, உங்க பொண்ணு பெருக்கவே மாட்டேங்கறா..

அடடா, மாப்ள,ஒல்லிதானே அழகு? உங்க தல, நான் சொன்னது வீட்டை பெருக்க மாட்டேங்கறா

----------------------------

5. மழைக்காலம் -ல் காதல், பேராண்மை  சரண்யா நிர்வாண போஸ்  # ம்க்கும், இப்போ இப்படி சொல்வீங்க, பட ரிலீஸ்க்குப்பின் அது நான் இல்ல, டூப்பும்பீங்க

-------------------------

6. ரஜினி தலைமையில் எஸ் ராமகிருஷணனுக்கு பாராட்டு விழா#அங்கே போயும் யாராவது தலீவா அரசியலுக்கு வந்துடு தலீவான்னு சொல்லப்போறாங்க பாருங்க

------------------------------------

7. பருப்பும் ரசமும் கலந்து நான் இப்போ எல்லாம் சாப்புடுறது இல்லை.. ஏன்னா பெரிய பருப்புன்னு யாரும் கிண்டல் பண்ணிடக்கூடாதே?

-------------------------------

8. நண்பனில் நடிக்காததில் வருத்தமில்லை, மகிழ்ச்சிதான்! - மாதவன் #நானும்தான் நடிக்கலை, ஆனா அதை வெளீல சொல்லிக்கலை - விஜய்

------------------------------

9. வெடிகுண்டு மிரட்டல் ஜாலமெல்லாம் என்னிடம் பலிக்காது-சரத்குமார்..# என் சம்சாரத்தை கிட்டக்க பார்த்தப்பவே நான் பயப்படலை, யார் கிட்டே?-சரத்

-----------------------

10. ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு.. ஊரு திகாரு, அவர் மேல ஏகப்பட்ட புகாரு, அவர் வாயை திறந்தாலே தகராறு, எது செஞ்சாலும் பல்க்கா பண்ணுவாரு,

-------------------------

11. நிருபர் - மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?

  வா.பொ - ஏன்? நீ மாமா வேலை பார்க்கப்போறியா?

-------------------------------

12.டாக்டர், எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு பாம்பு புற்று வந்திருக்கு. 

பாம்புக்கு புற்று நோய் வந்திருக்குன்னு எப்படி நீங்க கண்டு பிடிச்சீங்க?

----------------------------

 13. ஊழல்வாதிகளை உங்க கட்சி  மறைச்சு வெச்சிருக்காமே? 

அபாண்டமான குற்றச்சாட்டு, இப்போ நான் வெளீல நடமாடலை?

----------------------------

 14. தரகரே, பொண்ணு மாநிறம்னு சொன்னீங்களே? ஆனா அவ்ளவ் கலர் இல்லையே? 

“மா” நிறம்னா மாம்பழ நிறம்னு அர்த்தம் எடுத்துக்கிட்டா நானா பொறுப்பு?

-------------------------------

 15. உங்க சம்சாரம் உங்களை டா போட்டு கூப்பிடறாங்களே? 

பாவம்ங்க, அவங்களுக்கு டீ (TEA) போட வராது, அட்லீஸ்ட் டா வாவது போடறாங்களே?

---------------------------------------

 16. தினமும் பல தடவை என் முகத்தை கழுவுவதே என் அழகின் ரகசியம் - நடிகை ஓவியா (களவாணி) # ஓஹோ, கழுவிக்கழுவி ஊத்துவீங்க?

-----------------------

 17. ஐஸ்வர்யா - என் கணவர் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 

தனுஷ் - பார்க்கத்தான் நான் சுள்ளான், சூடாய்ட்டேன், சுளுக்குதாண்டியேய்

----------------------------

 18. லாரன்ஸை வீட்டிற்குள் விடாமல் விரட்டிய  லட்சுமி ராய்! # மனசுக்குள்ள நயன் தாரான்னு நினப்பு

------------------------

 19. தோழி, கம்யூனிஸ்ட் ஆக மாறப் போகிறாராம். இனி நான் அவரை எப்படி கூப்பிட? 

வெரி சிம்ப்பிள், சிவப்புத்தோழியே !என அழைத்து இம்ப்ரஸ் செய்யவும்

---------------------------------

 20. ராஜா என்றால் கம்பீரமாகவும், ராணி என்றால் கொஞ்சம் அடாவடியாகவும் என் அகராதியில் பதிந்து விட்டது.ஏனோ!? 

ஏன்னா ஜெ ஆட்சி நடக்குதே? அதான்

---------------------------------- 

வெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்கள் முன்னோட்ட விமர்சனம்)

வழக்கமா வெள்ளிக்கிழமை தான் படம் ரிலீஸ் ஆகும்.. இப்பவெல்லாம் வியாழக்கிழமையும் ரிலீஸ் பண்றாங்க. ஏதோ ஒரு ரீசன் இருக்கும்.. அதுவும் இந்த வாரம் 26 குடியரசு தினம் லீவ் நாள் என்பதால் அந்த ஒரு நாள் கூட்டமாவது வரட்டும்னு சில படங்கள் ரிலீஸ் ஆகுது போல.. 

http://mp3freedownloads.fingertipszone.com/wp-content/uploads/2012/01/paari.jpg

1. பாரி -  எல்லாம் புது முகம்.. ஹீரோ பேரு ராகுல். யாரும் பயப்படாதீங்க, வெறும் ராகுல் தான்.. ஹீரோயின் பேரு பீனா ( எப்படி எல்லாம் பேரு வைக்கறாங்க?) டைரக்டர் பேரு ரஜினி. நம்ம ரஜினி இல்ல.. கட்டிட காண்ட்ராக்டர் மகன் தான் ஹீரோ.. இவர் வழக்கமா தமிழ் சினிமா ஹீரோக்கள் போல வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்திட்டு இருக்கறவர்.. அவர் வாழ்க்கைல கிராஸ் ஆகறார் ஹீரோயின்.. அதுக்கப்புறம் அவர் வழ்க்கைல என்ன நடக்குது என்பது தான் கதை.. ஹி ஹி 

http://123tamilgallery.com/images/2011/07/Paari-83.jpg

சேலம் ஏரியாவில் தான் அனைத்து நடிகர், நடிகை செலக்‌ஷன் நடந்ததாம்.. இது வரை கேமராவையே பார்க்காத புது முகங்களாம்.. பார்ப்போம்.
http://www.isaithenral.info/musicu/2011/Theni%20Mavattam/theni-mavattam-%20250.jpg

2. தேனி மாவட்டம்-கூகுள் சர்ச்ல மட்டும் இல்லை, ஈரோடு மாவட்டத்துல இருக்கற பல சர்ச்லயும் தேடிப்பார்த்தும் இந்தப்படத்தை பற்றி எந்த விபரமும் கிடைக்கலை.. படத்தோட டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் நான் சொல்லிக்கறது இன்னான்னா ஒரு படத்தை எடுக்கறதோட நம்ம கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுடக்கூடாது, மார்க்கெட்டிங்க் ரொம்ப முக்கியம்.. படம் வரப்போற அன்னைக்கு கூட எந்த செய்திகளூம் எந்த மீடியாவிலும் வர்லைன்னா தியேட்டருக்கு ஆடியன்சை எப்படி வர வைப்பீங்க? ஹீரோ, ஹீரோயின் யார்னு தெரியாது, டைரக்டர் பற்றி எந்த விபரமும் மக்களுக்கு தெரியலைன்னா  எப்படி கூட்டம் தானா வரும்னு நினைக்கறீங்க?

http://www.cinepicks.com/tamil/events/theni-mavattam-audio-launch/theni-mavattam-audio-launch-stills-4.jpga

இவங்களை பார்த்தா புது முக ஆண்ட்டி மாதிரி தெரியுது, இவங்க தான் ஹீரோயின் போல. இவங்களை மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் இஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சேன்..

http://www.hindustantimes.com/Images/HTEditImages/Images/Agneepath-new-poster.jpg

3. AGNEEPATH - 1990ல வந்த அதே அக்னிபாத் படம் தான் இப்போ ரீமேக் ஆகி வந்திருக்கு.. ஹீரோ ஹிருதிக்ரோஷன்.. சஞ்சய்தத் வில்லன், பிரியங்கா தான் ஹீரோயின், நம்ம ஊர் ஆள் ரவி கே சந்திரன் தான் ஒளிப்பதிவாளர்.. ரிஷி கபூர் ஒரு நெகடிவ் ரோல்ல வர்றார்.. இது கிட்டத்தட்ட மலையூர் மம்பட்டியான் கதைதான்.. அதாவது ஹீரோ எல்லா படத்துலயும் வர்ற மாதிரி வேலை வெட்டி இல்லாத ஆக்ரோஷ கோபக்கார இளைஞன்..

ஹீரோவோட அப்பா தூக்குல தொங்கறதுக்கு வில்லன் காரணம் ஆகிடறார்.. வில்லன் போதை பொருட்கள் கடத்தறவர்.. ஹீரோ அப்பவே வில்லனை பழி வாங்கிட்டா 2 ரீல்ல படம் முடிஞ்சிடும்கறதால மும்பை போய் ரிஷி கபூர்ட்ட வேலைக்கு சேர்றார்.. அவருக்கு பொழுது போகனும் இல்லையா? அதுக்காக ஹீரோயின் பிரியங்கா சோப்ரா அவர் கூடவே இருந்து அவருக்கு ஹெல்ப் பண்ணறாங்க.. ஹி ஹி

http://lh3.ggpht.com/-Q83oEBghmVY/TvNgX-Z4KII/AAAAAAAAByc/NkIBOPd5VvA/Chikni-Chameli----Official-_thumb.jpg?imgmax=800

15 வருஷம் ட்ரெயினிங்க் எடுத்துட்டு ஹீரோ தன் சொந்த கிராமம் வந்து வில்லனை பழி வாங்கறார் .ஒரிஜினல்ல அமிதாப் பண்ணுன ரோல், இவர் எப்படி பண்ணி இருக்காரோ? பார்ப்போம்..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Bhothi-Dharman-Walls-14-342x256.jpg

4. போதிதர்மன் - ஏதோ ஒரு சைனீஷ் படம்.. தமிழ்ல டப் ஆகி வருது.. போதி தர்மனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு தோணுது. சும்மா மார்க்கெட்டிங்க்காக அப்படி  டைட்டில் வெச்சிருக்கலாம்.. ஏதோ டப்பா படமாட்டத்தான் தோணுது.. பார்ப்போம்