வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும் ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன்.
ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?
அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?
அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும் வந்தியத்தேவன் என்பவர்.. இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்..
தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும் ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.
மல்லிகை மகள் எனும் பெண்கள் மாத இதழை நண்பர் திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்... அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள் புக் மட்டுமாவது அனுப்பலாம்..
புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை.
இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை..
பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..
நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..
அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்..
ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்..
இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
45 comments:
ம்ம்ம்...நல்லது நடக்கட்டும் பாஸ்!
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. சன்மானமும் ஒரு பிரதி இதழும் ட்வீட் செய்தவருக்கு பத்திரிகைகள் அனுப்பிட வேண்டும்.
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நல்ல கோரிக்கைதான் செந்தில் செய்யலாம் ஆனால் வியாபார நோக்கில் செயல்படுபவர்கள் செய்வார்களா?
itha appatiye ethavathu paperla twit potruvanga kavala padathinga ana antha panam mater iluvaiya than irukkum
தம்பி இன்னும் டீ வரல...
யாராவது நம்ம கபிக்கு.. மணியார்டர் பண்ணுங்கப்பா...
நம்ம டிவிட்டர்களை நிறைய பேர் காப்பி அடித்து அனுப்பி விட்டால் என்ன செய்வது...?
நல்ல விஷயம்தாண்டா அண்ணா, இப்படி அவர்கள் சன்மானமோ, இதழ்களோ அனுப்பும் பட்சத்தில் வலையுலக ஆதரவு அமோகமாக இருக்கும் அவர்களுக்கு, உணர்வார்களா பார்ப்போம்...!!!
எலேய் விக்கி ஓட்டு மட்டும் போட்டுட்டு, கமெண்ட்ஸ் போடாமல் பிகர் பின்னாடி ஓடிட்டான் பாரு...!!!
அடப் போங்க சார்!தினமலம் விற்பனைக்காக அலைகிறது.இதுல சன்மானம் வேறயா?
niyaayamaana aathangam. Ungal karuthodu udanpadukiren
படைப்புகளுக்கு சன்மானமும், பிரசுரமான இதழும் அளிப்பதன் மூலம் படைப்பாளிகள் ஊக்கப்படுத்தபடுகின்றார்கள் என்பது முற்றிலும் உண்மையே! தாங்கள் பிரபல பதிவராக இருப்பினும், புதியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க முனைப்புடன் இருப்பது...தங்களின் பெருந்தன்மையை மட்டுமல்ல தமிழில் படைப்பாளிகளை பெருக்க உங்களின் உண்மையான ஆர்வத்தினை அறிய முடிகின்றது. இந்த உன்னத முயற்சிக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு.
அருமையான கோரிக்கை நண்பரே...
செய்யலாம்..
விற்பனையை மட்டுமே மனதில்கொண்டு
செயல்படும் பத்திரிகைகள் செயல்படுத்தவேண்டுமே///////
நல்ல விசயம்தான் இதைமட்டும் பத்திரிகைகள் செய்தால் இன்னும் நிறைய பேர் ஆர்வமாக எழுத முன்வருவார்கள் பத்திரிகையின் மதிப்பும் கூடும்
தங்கள் கோரிக்கை நியாயமானது.
பொதுவாக எல்லோராலும் விரும்பிப்படிக்கபடும் ஆனந்த விகடன் பத்திரிக்கை அதிகமாக விற்பனை ஆகிறது. அவர்கள் சன்மானம் கொடுக்க வேண்டியதுதான்.
சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
விகடன்,ரிப்போர்ட்டர் புக்க்கிலிருந்து காப்பி பேஸ்ட் போஸ்ட் செய்யும்போது நம் பதிவர்கள் விகடனுக்கோ, ரிபோர்ட்டருக்கோ எவ்ளோ சன்மானம் கொடுத்தார்கள் என அறிய விரும்புகிறேன் :))
எப்படியோ வருமான வந்தால் சரிதான்...
மாப்ள நியாமான ஆதங்கம் தான்..
நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்ல ...! ட்வீட்டுக்கு நன்றி ..!
pathirikaikal anaithum viyapara yukthilthan seyalpadukindrana.
athai valavaipathae writers m
vasakarkalum- than ithe yen purunjuka matinkaranga.
writers a encourage panuna avankalukathana gain.
mm. yepdiyo nalathu nadantha sari.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அதுதான் சந்தா கட்டி நன்றி என போஸ்ட் போடறோமே? அதுவும் இல்லாம அதனால 10 பைசாவுக்கு நோ யூஸ், ஆனா பத்திரிக்கைகள் லாப நோக்கில் தானே சம்பாதிக்கறாங்க?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
hello neenga retweet pathi solringa. CPS solrathu first tweet pathi.
vikatan la irunthu copy senjalum, vikatan yarkita irunthu suttadho avungaluku kodunkapa.appa appa.
Jaganathan Kandasamy said...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
hello neenga retweet pathi solringa. CPS solrathu first tweet pathi.
vikatan la irunthu copy senjalum, vikatan yarkita irunthu suttadho avungaluku kodunkapa.appa appa.//
நான் சொன்னது விகடன்ல இருந்து எதையாவது சுட்டு அவங்க பிளாக்குல பதிவா போடுறவங்களை பத்தி. விகடனுக்கு நன்றின்னு கூட போட மாட்டாங்க. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க..
Jaganathan Kandasamy said...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
hello neenga retweet pathi solringa. CPS solrathu first tweet pathi.
vikatan la irunthu copy senjalum, vikatan yarkita irunthu suttadho avungaluku kodunkapa.appa appa.
படிக்காமலையே அடுத்தவங்களை குறை சொல்றதுல நம்ம ஆளுக்ங்களா யாரும் அடிச்சிக்க முடியாது :))
சி.பி.செந்தில்குமார் said...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அதுதான் சந்தா கட்டி நன்றி என போஸ்ட் போடறோமே? அதுவும் இல்லாம அதனால 10 பைசாவுக்கு நோ யூஸ், ஆனா பத்திரிக்கைகள் லாப நோக்கில் தானே சம்பாதிக்கறாங்க?//
அவங்களும்தான் ட்வீட் id போடுறாங்களே. பதிவர்களும் ஹிட்ஸ் வேணும்ங்கிற லாப நோக்கோடதான பத்திரிக்கைகள்ல இருந்து பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்யிறாங்க. என்ன அவங்க சைடு பணம், நம்ம சைடு ஹிட்ஸ். எதோ ஒரு லாப நோக்குதான :))
பாஸ் உங்க ஆதங்கம் சரியே..... அதைவிட புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே........ வலைபாயுதே எப்பவும் பழையவர் மீதே பாயுது.... அவ்வ
எங்கே பணம் தர்றாங்க .. எங்கே பணம் தராங்க .. அப்படியே கொஞ்சம் சோறும் போட சொல்லுங்க சாமி ...
நியாயமான ஆதங்கம்!
உண்மைதான்.. பதிவர்களை ஊக்கப்படுத்த சிறந்த வலைப்பதிவுகளினை வரவேற்கிறோம்...
உங்கள் ட்வீட் எல்லாம் நிறைய வருகிறது பத்திரிகைகளில்...நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன் கருத்து சரிதான். எனக்குத் தெரிந்த பத்திரிகை நண்பர்களுக்கு பதிவர்கள் மேல் நிறைய கோபம். பல இணையத்தளங்கள் காபி அடிப்பதால் அவர்களுக்கு நியாயமாக வர வேண்டிய ஆன்லைன் வருமானம் வருவதில்லை என்பதால் அவர்களும் பதிவர்களை அதிகமாகக் கண்டு கொள்வதில்லை.
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ......
இந்த விஷயத்தில் பணத்தைவிட அது கொடுக்கும் உற்சாகம் மிகப் பெரியது.
மாயன் : அகமும் புறமும்: பகுதி4;பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்
மாயன் : அகமும் புறமும்: மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி
பிரபலமானவங்க சொன்னால் சரியாகத்தானிருக்கும்......
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
சிபி... பத்திரிகை தர்மத்தின்படி உங்க சொத்துல பாதியை விகடன் குழுமத்திற்கு எழுதி வச்சிடுங்க...
உங்க ப்ளாக்குல படங்களை க்ளிக்கினால் விளம்பரம் வர்ற மாதிரி வச்சிருந்ததா ஞாபகம்... இப்ப தூக்கிட்டீங்களா...???
முதலமைச்சரின் அறிக்கையை வெளியிடும் பத்திரிகை அவருக்கு சன்மானம் வழங்குவதில்லை என நினைக்கிறேன்; நாட்டு நடப்பை பற்றி கருத்துச் சொல்லும் ஒரு பாமரன் சன்மானம் கேட்டால், அவன் கருத்தே தேவையில்லை என்ற நிலைவரும்; படைப்பாக இதழுக்கு அனுப்பாதவற்றுக்கு சன்மானம் வழங்குவது நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம் உதா) சிலருக்கு சன்மானம் வாங்குவது பிடிக்காது
உங்கள் ஆதங்கள் நியாயமானது பாஸ் பத்திரிகைகள் புரிந்து கொள்ளவேண்டும்
பணம் பணம்
send this post to the magazine vikadan, kumudam dinamalar and puthiyathalaimurai ! by mail
If you get reply , it is your suceess
Post a Comment