Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு பிரச்சனை - கோர்ட் வெச்ச ஆப்பு, கேரளா திகைப்பு , தமிழகம் களிப்பு


 கேரளாவில் கலவரம் கிளப்பும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த மலையாளிகளின் எண்ணிக்கை  30 லட்சம் பேர்.. அவர்களுக்குத்தேவையான தண்ணீரைக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டாலே போதும்..

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களீல் கார்மெண்ட்ஸ் பணீக்கு இருக்கும் டெய்லர்கள் பெரும்பாலும்  கேரளாவை சேர்ந்த பெண்களே.. இப்போது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக  தமிழர்களை தாக்குபவர்கள் அதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்கள் நலன் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் நர்ஸ்களீல் 68 % பேர் கேரளா பெண்களே..

 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை,  உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது.

அதேவேளையில்,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரு தரப்புக்கும் அறிவுரை...

இதில் குறிப்பிடத்தக்க அமசமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கருத்துகளை வெளியிடாமல், மக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க, பொறுப்புடன் செயல்படுமாறு,  தமிழக, கேரள தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  


கேரள அரசுக்குக் கண்டிப்பு..


அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’  என்பதுபோல, 'அணை பலமிழந்து உள்ளது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று இத்தனைக் காலமாக புளுகி வந்த கேரளாவின் குட்டு, அந்த மாநில உயர் நீதிமன்றத்திலேயே உடைபட்டு விட்டது. இதனால் பிரச்னையை திசை திருப்புவதற்காக, அரசாங்கத்தின் ஆசிகளோடு வன்முறைகளில் இறங்கிவிட்டனர் கேரள சகோதரர்கள்!


இதுதொடர்பாக தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் விஜயகுமார் ''முல்லை-பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை காலி செய்யவும், இடுக்கி அணைக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு செல்வதன் மூலம், கேரளத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும்தான் 'அணை பலமாக இல்லை' என்கிற வதந்தியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருகிறது. இதற்கு ஆதரவாக சினிமா மூலமாகவும் பீதியைக் கிளப்புகிறது.


அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான நீர்க்கசிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி, அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்த தொழில்நுட்ப விளக்கங்களுடன் 'பெரியாறு அணையின் உண்மை நிலை’ என்கிற குறும்படத்தை தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ளோம். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பிரதமரை சந்தித்து இந்த குறும்பட சி.டி-யைக் கொடுத்துள்ளதுடன், ஒரு லட்சம் குறுந்தகடுகளைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.


நாம் சொல்வதுதான் உண்மை என்பது... தற்போது கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், கேரள அரசின் வாக்குமூலத்திலேயே உறுதிப்பட்டுவிட்டது. 'அணை உடைந்தால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்' என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தது கேரளா.


'ஒருவேளை அணை உடைந்தால், மக்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.?’ என கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்ப... 'அணை உடைந்தால் பாதிக்கப்படப் போவது 500 பேர்கள் மட்டுமே. அத்துடன் அணை உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்’ என அம்மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நீதிமன்றத்திலேயே உண்மையை உடைத்து விட்டார். இதனால், கேரளத்தின் பொய் முகம்... உலகுக்கே உரித்து வைக்கப்பட்டுவிட்டது''


''தற்போது அட்வகேட் ஜெனரலை உண்டு இல்லை என்று மிரட்டி வரும் கேரளத்தவர்கள், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகமோசமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை... 'மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிக்குளம், பீர்மேடு ஆகிய தமிழகப் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்பதுதான். மக்கள் எழுச்சியின் மூலமாக இதை சாத்தியமாக்கும் முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இறங்கி விட்டன'' என்றும் சொன்னார்.


மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்!

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த வன்முறைவாதிகள் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதால்... அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக  முல்லை-பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் தன்ராசு, ''வன்முறை மூலமாக அணையை உடைத்து, தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது கேரளா. டிசம்பர் 3-ம் தேதி கேரள இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் வரும் மதகுப் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்த நாள், கேரள பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் பெரியாறு அணைப்பகுதியில் நுழைந்து பேபி அணையை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அணை உடைக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக முதல்வரும் மற்ற அரசியல்தலைவர்களும் கேட்டுக் கொண்டபடி உடனடியாக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் பெரியாறு அணை ஒப்படைக்கப்பட வேண்டும். இதையும் மீறி அணைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்... உடைபடுவது அணை மட்டுமல்ல... இந்திய ஒருமைப்பாடும்தான்'' என்று எச்சரிக்கைக் குரலில் சொன்னார்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் 70 எம்.எல்.ஏ-க்களையும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் 69 எம்.எல்.ஏ-க்களையும் வைத்துள்ளன. தற்போது, பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவம் தொகுதியில்  இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால்... ஆட்சியே பறிபோய்விடும். அதனால்,   இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி வெற்றி பெற நினைக்கிறது காங்கிரஸ் என்றொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
'கூடன்குளம் பிரச்னைதான் தென்னக மீடியாக்களில் பிரதான பிரச்னையாக உருவெடுத்து உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. இதை திசை திருப்புவதற்காகவே, கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசின் உதவியோடு, முல்லை-பெரியாறு பிரச்னையை பெரிதாக ஊதிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு'' என்று குற்றம் சாட்டியுள்ளனர் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திவரும் போராட்டக் குழுவினர்

27 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

எப்படியோ நல்லது நடந்தா சரிதான்

RAMA RAVI (RAMVI) said...

நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒரே இந்தியா என்பதை ஒவ்வொரு மாநிலமும் உணர்ந்து செயல்பட்டாலே அனைவருக்கும் ஆதாயம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

உடைவது அணைமட்டுமல்ல, இந்தியா ஒருமைப்பாடும் தான்.. சூப்பர் சாட்..

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அண்ணே நான் சொன்னதும் பதிவு போட்டதுக்கு நன்றி..!

MANO நாஞ்சில் மனோ said...

ஆமாய்யா கடுப்புல அணையை உடைச்சாலும் உடைப்பாணுக..!

M.R said...

அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க நண்பரே ,உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பா காங்கிரஸ் ஜெயிக்காது...

Thangasivam said...

30 இலட்சம மலையாளிகள் இதைவிட அதிகமான தண்ணீரை தமிழ்நாட்டில் உபயோகித்து கொண்டு இருக்கும் போது
அவர்கள் இப்படி செய்வது துரோகமாகும்....

ராஜி said...

உங்க கடமை உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சாதகமா தீர்ப்பு... கேட்கவே சந்தோசமா இருக்கு

கும்மாச்சி said...

சி.பி. நல்ல பதிவு, எப்படி இருந்தாலும் மல்லுங்களுக்கு ஆப்பு நிச்சயம்.

நேர்கோடு said...

நியாயம் வெல்லட்டும்! நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

rajamelaiyur said...

Good post ;) . Tamilan always rock

Rathnavel Natarajan said...

அருமையான, அற்புதமான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.

senthil velayuthan said...

அது எப்படி பத்திரிகை விளம்பரம் செய்தது தவறாகும். கேரள ஊடகங்கள் ஒரு வரி விடாமல் விமர்சிக்கிறார்கள் அது தவறு இல்லையா.

senthil velayuthan said...

@தமிழ்வாசி பிரகாஷ்இது சாதகமான தீர்ப்பு அல்ல. நமது நிலைபாடான 142 அடி தான் வெற்றி, 136 அடி நீர் சேமிக்கலாம் என்று தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு தோல்வி ஆகும்.
அது மட்டுமல்லாமல் அவர்களின் மனு தள்ளுபடி என்றும் கூற இயலாது, இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான நீதிபதிகள் குழு அளிக்கும் அறிக்கை படி தான் முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

சுதா SJ said...

சந்தோஷமான பதிவு பாஸ்..... இனியாவது நல்லது நடக்கட்டும் :

Unknown said...

அண்ணே இன்னும் சரியான படி இந்த பிரச்னை பயணிக்களை பார்ப்போம்...பகிர்வுக்கு நன்றி!

sasikumar said...

காலையில எழுந்தவுடனே சந்தோசமான செய்தி மாப்ள.... மிக்க நன்றி...

arul said...

Hi,

This is the first comedy short film by me.Please give your comment also for this.

"Mokkai paiyyan sir"

http://www.youtube.com/watch?v=1-kY1Va-KOA&feature=channel_video_title

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...இந்தப்பிரச்சனையில் கேரளமக்கள் மனநிலையை எனது பதிவில் எடுத்துக்காட்டி உள்ளேன்.
தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

Unknown said...

அணையை சதி செய்து உடைக்கவும் திட்டமிடலாம் கேரள அரசு, பிறகு நாங்க அப்பவே..சொன்னமல்ல என்று நம்மையே கேள்வி கேட்கவும் வாய்ப்புள்ளது, அதனால் மத்திய பாதுகாப்பு படை அவசியம், சரியான தகவல்களை தாங்கிய கட்டுரையின் பகிர்வுக்கு நன்றிகள்!!

ramkaran said...

senthil velayuthan said...
அது எப்படி பத்திரிகை விளம்பரம் செய்தது தவறாகும். கேரள ஊடகங்கள் ஒரு வரி விடாமல் விமர்சிக்கிறார்கள் அது தவறு இல்லையா. மிகவும் சரியாக சொன்னீர்கள். மலையாள டி.வி சானல் ஜீவன் "முல்லை பெரியாறு வாட்டர் பாம் " என்று மீண்டும் மீண்டும் வருவது போல ப்ளாஷ் அனிமேஷன் காட்டுகிறார்கள். கேரள நீர்ப் பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உச்ச நீதிமன்றத்தால் நில நடுக்கத்தை தடுக்க முடியுமா? எங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப் படுத்த முடியாது என்று பேட்டி கொடுக்கிறார். கேரள சட்ட மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஒரு சட்டத்தை இயற்றுகிறது. இதை எல்லாம் கண்டிக்க துப்பு இல்லாத உ.நீ.ம பென்ச் தன்னிலை விளக்கமும், கேரள மக்களை அமைதி காக்கவும் சொன்ன தமிழக அரசை கண்டிக்கிறது. வர வர இந்த பென்ச் நாயர் டீ கடை பஞ்சை விட மோசமாகி விட்டது.

Try 🆕 said...

உங்கள் பதிவு மூலம் முல்லை பெரியாறு அணையின் பிரச்சனையின் நிலைப்பாடை அறிந்து கொண்டேன்,

நன்றி.

நெல்லி. மூர்த்தி said...

உணர்வு பூர்வமாக அணுகாமல், அறிவுபூர்வமாக அணுகவேண்டிய பிரச்னை. இடுக்கின் அணையின் மூலம் மின் உற்பத்தியை பெருக்கி அதை தமிழகத்திற்கே விற்க, கூடங்குளத்தினை செயல்படுத்த, இடைத்தேர்தலில் வெல்ல, இவர்கள் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முனைந்துள்ளனர். 2000 வருடங்களாக இருக்கும் கல்லணை எவ்வித சிக்கலுமின்றி இருக்கும் நிலையில் 200 வருடங்கள் ஆகக் கூட இல்லாத இந்த அணையின் பாதுகாப்பை எழுப்பியிருப்பது வன்மமானது. தேசியக்கட்சிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்டு,பாஜக எல்லாமே பம்மாத்து தான். ஓட்டு வங்கிக்காக தங்கள் குரல்களை மாற்றிக்கொள்வர் என்பதனை இந்த நிகழ்வு மேலும் உணர்த்துகின்றது. தமிழர்களே... தேசியக்கட்சிகளில் உங்களின் அடையாளத்தினை இழந்து விடாதீர்கள்!