Thursday, December 15, 2011

சி.பி வழங்கும் கம்மாக்கரை ஓரம் ஃபிகர் பார்க்கும் நேரம் ( வெள்ளிக்கிழமை விருந்து)

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3707.jpg 

1. மம்பட்டியான் - மலையூர் மம்பட்டியான் - ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இசையமைப்பு இளையராஜா வழங்க பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே , சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல போன்ற சூப்பர் ஹிட் பாட்டுக்கள் இருந்த படம்..  பட வெற்றிக்கு தியாகராஜனின் நடிப்பும், திரைக்கதையும் இளையராஜாவின் இசையும் முக்கிய காரணங்கள்..

இப்போ ரீமேக் படத்துல பிரசாந்த் ஹீரோ.. க்ளைமாக்ஸ்ல துரோகம் பண்ற கேரக்டர் யார்னு சஸ்பென்ஸ்..ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆகுது.. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.. 


http://mimg.sulekha.com/tamil/mouna-guru/stills/mouna-guru-film-047.jpg

2. மவுன குரு - டைரக்டர் தரனியிடம் தில்,தூல்,கில்லி படங்களில் உதவியாளராக இருந்த சாந்தகுமார்,அருள்நிதி நடிக்கும் மவுனகுரு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கல்லூரி மாணவன் எதிர்பாராமல் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.


முதலில் இந்தக்கதையில் நடிக்க பயந்திருக்கிறார், நாயகன் அருள்நிதி.அதுபற்றி அவரே சொல்கிறார்; டைரக்டர் சாந்தகுமார் என்னிடம் மவுனகுரு படத்தின் கதையை சொன்னார்.பாதிக்தை கேட்டதும் ஒருவித பயம் வந்துவிட்டது. ( ஏன்? பேய்க்கதையா? )அதனால் மீதியை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்குப் பிறகு 6 மாத காலம் டைரக்டரை நான் சந்திக்கவில்லை. ( நைட் பார்ட்டிகள்ல அண்ணன் பிசி போல)திடீரென ஒருவிழாவில் அவரை பார்த்தேன். மீதிக்கதையை சொல்லுங்கள் என்றேன்.கதையை கேட்டு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள இந்தக்கதைக்கு அதிகமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாகவேக்கிற படமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாக இது இருக்கும்.( படம் பூரா பேசிட்டே இருப்பீங்களோ?)

படத்தில் அருள்நிதியின் ஜோடியாகிஇருப்பவர்,வாகை சூடவா இனியா.( ஃபிகரு இதுலயாவது கிளாமர் காடுதான்னு பார்ப்போம்). ஈரோடு ஆனூர்ல ரிலீஸ்

http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/09/UCHITHANAI.jpg
3. உச்சிதனை முகர்ந்தால் - ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.



தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!

http://larryfire.files.wordpress.com/2011/06/mission-impossible-ghost-protocol.jpg

 4. GHOST PROTOCALL ( MISSION IMPOSSIBLE)-  டாம் க்ரூஸ் நடிச்ச ஆக்‌ஷன் படம். ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைதான்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் உளவு நிறுவனம் அதை வைத்தவர்களை  கண்டறிய தன் ஏஜண்ட்ஸை அனுப்புகிறது.. ஹீரோ அண்ட் வில்லன் மோதல்

http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/12/mi-ghost-protocol-still09.jpg


21 comments:

நாய் நக்ஸ் said...

HAI...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடுத்த பதிவில் சந்திப்போம் (இறை நாட்டம்)

நாய் நக்ஸ் said...

எப்படித்தான் தலைவலி-யோட இத்தனை பாடம் பக்குரீன்களோ ????

எங்களுக்காக நீங்க படற கஷ்டம் .....

உங்க கடமை உணர்ச்சி-ஐ என்னானு சொல்ல ????

SUNDAY சந்திப்போம்

ராஜி said...

கலக்குங்க

பொ.முருகன் said...

ஒரு திருத்தம், மலையூர்மம்பட்டியானை இயக்கியது ராபர்ட் ராஜசேகர் இல்லை.விக்ரம்,படிக்காதவன்,தர்மதுரை,காக்கிசட்டை,போன்ற படங்களை இயக்கிய ராஜசேகர் என்பதுதான் சரி.அந்த ராஜசேகர் தற்போது உயிருடன் இல்லை.

ம.தி.சுதா said...

சீபி இதில உச்சதனை முகர்ந்தால் நம் ஊர் வருமோ தெரியல ஆனால் அதைப் பார்க்கவே மிக மிக ஆவலாயுள்ளேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

ஹேமா said...

தன் இனத்துக்கு நேர்ந்த கொடுமைகளை திரும்பவும் நினைக்கிறது அடுத்த நகர்வுக்கு ஒரு அடிகோல்.அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கொடுக்கும் தகவல்களும்கூட...இனி என்னைத் திட்டக்கூடாது சிபி !

சுதா SJ said...

சிபி பாஸ்..... பட தகவல்கள் எல்லாமே சூப்பர்.... படம் வெளிவந்த உடனேயே விமர்சனத்தையும் போட்டுவிடுங்கோ...... பார்ப்போம் எந்த படம் ஜெயிக்க போவுது என்று :)

சுதா SJ said...

உச்சதனை முகர்ந்தால் நான் எதிர்பார்க்கும் படம்... பார்ப்போம் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று...

மகேந்திரன் said...

படங்களுக்கான விமர்சனத்தையும்
உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாய் உள்ளேன்...

Unknown said...

உச்சிதனை முகர்ந்தால்...
படத்துக்கு தியேட்டர் எதுன்னு போடலையே CP !
இந்த படத்துக்கு நல்லபடியா விமர்சனம் போடுங்க !

Admin said...

ஆகாய மனிதன் சொன்னதுபோல உச்சி முகர்ந்தால் படத்தைப் பத்தி கொஞ்சம் நல்லாவே எழுதுங்க..

chinnapiyan said...

ஒவ்வொன்றும் குறித்து மிக நன்றாக சோலி உள்ளீர்கள்.உச்சிதனை முகர்ந்தால் "நீர்த்துப்போகாமல் இருக்க செய்யவுமே" அருமை.

Unknown said...

எல்லாம் ஓகே...இன்றைக்கு என்ன படம் பார்க்க போறீங்க...இலைய போட்டுட்டிங்க சீக்கிரம் விருந்து(விமர்சனம்)போடுங்க..
உச்சிதனை முகர்ந்தால் வெற்றிபெற வாழ்த்துகள்,



இன்று என் வலையில் படிக்க

காதல்கதைகள்(1954)இறுதிபாகம்

உலக சினிமா ரசிகன் said...

உச்சிதனை முகர்ந்தால் தரமாக எடுக்கப்பட்டிருந்தால் கொண்டாடலாம்.
கரு நன்றாக இருந்து...
உருவாக்கப்பட்ட விதம் மொக்கையாக இருந்தால் அது குப்பைக்கு போக வேண்டிய படமே...

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு டிஸ்கி இல்லையா அண்ணே...?

MANO நாஞ்சில் மனோ said...

உச்சிதனை முகர்ந்தால் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது...!!!

அனுஷ்யா said...

பெரும்பாலும் ஈழ பின்னணியில் வெளிவரும் படங்கள் தொழில்நுட்பப ரீதியில் தொய்வாகவே இருக்கும்..(கன்னத்தில் முத்தமிட்டால் தவிர )..ஆனால் இந்த படத்திற்கான விளம்பரம் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.. சத்யராஜ் சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்கள் நடித்து இருப்பதால் நிச்சயம் நிறைவான ஓர் திரைப்படமாக இருக்கும் என நம்புவோம்..

அனுஷ்யா said...

..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....அவள் அதுவாம்...!...

arul said...

expecting review of ghost protocol mission impossible

www.astrologicalscience.blogspot.com