Friday, December 30, 2011

வெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வேலாயுதம்-முன்னோட்ட பார்வை

வழக்கமா தீபாவளி, பொங்கல்ல தான் நிறைய படம் ரிலீஸ் ஆகும், ஆனா இப்போ எல்லாம் அதாவது கடந்த 5 வருடங்களாக 2 அல்லது 3 படங்கள் தான் ரிலீஸ் ஆகுது , 2011 தீபாவளிக்கு வேலாயுதம் , ஏழாம் அறிவு என 2 படங்கள் தான் ரிலீஸ் ஆச்சு.. 2012க்கு கூட விஜய்-ன் நண்பன், ஆர்யா மாதவன் நடிக்கும் வேட்டை என 2 படங்கள் தான்.. ஆனா பாருங்க இந்த வருஷத்துல ஒரு அதிசயமா 30.12.2011 வெள்ளிக்கிழமை 10 படங்கள் ரிலீஸ் ஆகுது
http://www.songs4u.net/wp-content/uploads/2011/01/Karutha-Kannan-CO-Rekla-Race-2010.jpg
1.'கருத்தகண்ணன் CO ரேக்ளா ரேஸ்'-  யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவங்களைத் தொகுத்து, 'கருத்தகண்ணன் CO ரேக்ளா ரேஸ்' என்ற புதிய படம் தயாராகிறது. இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் நடைபெறும் திடீர் சம்பவங்களால் ஏற்படும் விபரீதங்களை கதை சித்தரிக்கிறது. அந்த 2 இளைஞர்களில் ஒருவராக சுபாஷ் என்பவர் நடிக்கின்றார். மற்றொரு இளைஞராக வி.ரிஷிராஜ் என்பவர் நடிக்கின்றார். இவர் நடிப்பதோடு அல்லாமல் ரோஷன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.


இவர்களுடன் புதுமுகங்கள் சவுந்தர்யா, சாந்தி, ஸ்டாலின், வெள்ளை பாண்டி, கோடாங்கி, உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சி.எச்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.டி.அண்ணாதுரை படத்தொகுப்பை மேற்கொள்ள, ஆர்.கே.சுந்தர் இசையமைக்கிறார். சுருளிப்பட்டி சிவாஜி வசனம் எழுதியிருக்கிறார். ஏ.செந்தில் ஆனந்தன் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் ஆகுது

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/7754e52d-9a0f-46f6-a774-fa175a9db5af_S_secvpf.gif
2. காந்தி கணக்கு - பூஜா பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஜி.பி.எஸ். தயாரித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் "மகான் கணக்கு''. இப்படத்துக்கு "காந்தி கணக்கு'' என ஏற்கனவே பெயர் வைத்து தணிக்கை குழு எதிர்த்ததால் "மகான் கணக்கு'' என மாற்றப்பட்டு உள்ளது.



இதில் நாயகனாக ரமணா நாயகியாக ரிச்சா சின்ஹா நடித்துள்ளனர். மனோபாலா, ஷரவண சுப்பையா, ஸ்ரீநாத், தேவதர்ஷினி, லொள்ளு சபா ஜீவா, ஐசக், முத்துக்காளை, சூர்யா பி சக்திவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சம்பத் ஆறுமுகம் இயக்குகிறார்.



நேர்மையற்ற எந்த வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும் என்பதே படத்தின் கதை. தமிழகத்தில் காந்தி கணக்கு என்றால் வராத கணக்கு என தப்பாக அர்த்தப்படுத்தப்படுகிறது. அதை இப்படம் மாற்றும். தணிக்கை குழு அனுமதிக்காததால் காந்தி கணக்கு படத்தின் பெயரை "மகான் கணக்கு'' என மாற்றியுள்ளோம். ஆபாச, வன்முறை காட்சிகள் இன்றி சமுதாயத்துக்கு நல்ல கருத்து சொல்லும் படமாக தயாராகியுள்ளது.

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்



 Still 5 of Abaayam
3. அபாயம் - செமயான சஸ்பென்ஸ் த்ரில்லர் போல. சில வருடங்களுக்கும் குன் சிநேகிதியே என்ற த்ரில்லர் படம் பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்ததே அதே டைப் படம் போல ஸ்டில்ஸ்கள் கலக்கலா இருக்கு.. கிருஷ்ணவம்சி தான் இயக்கம், பார்த்தா தெலுங்கு டப்பிங்க் படம் போல் இருக்கு, ஈரோட்ல ரிலீஸ் தியேட்டர் இன்னைக்குதான் தெரியும் , பேப்பர்ல சண்டிகா அல்லது கிருஷ்ணாவில் ரிலீஸ்னு போட்டிருக்காங்க, ஆனா 2 தியேட்டர்லயும் வேற படம் ரிலிஸ் , அதனால மாறலாம்

http://ulavan.net/wp-content/uploads/2011/03/ansali.jpg


4. "மகாராஜா'. -ஜெயராம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் "மகாராஜா'. சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். நாசர், கருணாஸ் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். சாமுராய் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிதா, சரண்யா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் அர்ஜுனின் மாணவர் மனோஹரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். 


படம் குறித்து அவர் பேசியது, ""இரண்டு தலைமுறைகளுக்கிடையே உள்ள பிரச்னைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறேன். நாசருக்கும், சத்யாவுக்கும் இடையே நடக்கும் போட்டிதான் கதை. ""இத்தனை வருட சினிமாவில் எனக்கு கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று'' என நாசர் என்னிடம் சொன்னார். அர்ஜுனிடம் பல படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளேன். 

 
கமர்ஷியல் அம்சங்கள் அவரின் படங்களில் அதிகளவில் இருக்கும். அதே பாணியில் இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறேன். அஞ்சலிக்கு இந்தப் படம் வித்தியாசமான கோணத்தைக் கொடுக்கும். இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக கிளாமரில் நடித்திருக்கிறார். இமான் இசையமைப்பில் பாடல்கள் கவனத்தை ஈர்க்கும். இரண்டு தலைமுறைகளுக்கிடையேயான புரிதல் அமைந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதுதான் நான் இந்தப் படத்தின் மூலம் சொல்லும் கருத்து'' என்றார் மனோஹரன்.

 ஈரோடு சண்டிகாவில் ரிலீஸ்



5.  THE STORM WARRIORS - 2009-ல் சைனாவில் ரிலீஸ் ஆன படம், இப்போதான் இங்கே வருது போல.. ட்ரெய்லர்ல கிராஃபிக்ஸ் நல்லாருந்தது.. மாமூல் ஆக்‌ஷன் படமா இருக்கும்னு நினைக்கறேன் பார்ப்போம்..ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்


http://www.bollycircle.com/wp-content/uploads/2008/12/exit-speed.jpg

6.EXIT SPEED - ஸ்பீடு -2 அப்டினு விளம்பரத்துலயும், போஸ்டர்லயும் வருது. ஆனா இது ஏதோ டுபாக்கூர் படம் போல. 2008-ல் ரிலீஸ் ஆன படம், என்னமோ இப்போதான் ஆல்ல் ஓவர் த வோர்ல்டு ரிலீஸ் ஆகற மாதிரி ஒரு பில்டப்  மக்களே ஏமாந்துடாதீங்க.. ஈரோட்ல ரிலீஸ் ஆகலை

http://www.cinemotions.com/data/films/0648/81/2/photo-Exit-Speed-2008-3.jpg

7. பதினெட்டான்குடி - எஸ்.எம்.எஸ் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனம் சார்பில் R.ராஜேஷ் தயாரிப்பில், 'தோழா' படத்தை இயக்கிய  N.சுந்தரேஸ்வரன் இயக்கத்தில்  'பதினெட்டான்குடி'  , கதைச்சுருக்கம்: மதுரை மேலூர் அருகே ஒரு கிராமத்தில் சாமியானா பந்தல் கடையில் வேலை செய்யும் நான்கு பேர்.  பதினெட்டான்குடி ஊர் அம்பலக்காரர் வீட்டுச் சடங்கில் பந்தல் போடும் போது  நாயகன், நாயகி காதல் வயப்பட நண்பன் உதவியோடு பதினெட்டு வயது பூர்த்தியாகாத கதாநாயகியை டெம்போவில் கடத்துகின்றனர். அதன்பின் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது திரைக்கதை.

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/008-1024x682.jpg


பந்தல் கடை உரிமையாளராக சிங்கம்புலி காமெடியில் கலக்கியிருக்கிறார். வேலை செய்யும் பசங்களில் கதாநாயகனாக பிரித்திவியும், மற்றொரு புதுமுக நாயகனாக யோகி அறிமுகமாகிறார். கதாநாயகியாக  ஸ்ரீநிஷா மற்றும் பருத்திவீரன் வெங்கடஷ், பரளி நாகராஜ், மைனா பூவிதா, சுந்தர்ராஜ், அருண் ஜெய்காந்த் மற்றும் மதுரை மண் வாசனையோடு பலர் நடித்திருக்கின்றனர். விஜய் டி.வி அவார்டு வின்னர் அல்கா அஜித் இப்படத்தில் முதன்முதலாக பாடியுள்ளார் என்பது சிறப்பு அம்சம். இப்படத்தில் இடம் பெறும் 6 பாடல்களும் சினேகன் கை வண்ணத்தில் அமைந்துள்ளது.

pathinettan kudi

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூர், பதினெட்டான்குடி, கொட்டகுடி,
அழகர்கோவில் மற்றும் மதுரை சுற்று வட்டாரங்களில் நடைபெற்றது.


தொழில்நுட்ப கலைஞர்கள் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  N.சுந்தரேஸ்வரன், ஒளிப்பதிவு  -  V.செந்தில்குமார், இசை  -  சரவணகணேஷ்,   பாடல்கள்        -  சினேகன்,  படத்தொகுப்பு   -  P.சாய் சுரேஷ்,  நிர்வாக தயாரிப்பு   -  B.யோகிஸ்வரன்,  கலை  -  T.N.கபிலன்,  நடனம்  -  ராக்சங்கர், ஆக்ஷன்   -  பில்லா ஜெகன்,  தயாரிப்பு நிர்வாகம் -  J.வின்னி,  மக்கள் தொடர்பு  -  S.செல்வரகு, தயாரிப்பாளர்  -  R.ராஜேஷ். ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghSLGrU28ORsadaAd4jayo1ZKWuP4YaCqYaYq-sDn-0H8-pX4RADBNWMq3iIoK35cFBqFPGhjYWLfhRWemi2toQ2vzM_t5dtg5nfmUe7rCXCXWpgCQ-O9iH0W5dDGg3rZ8gGrq8v_zR5E/s1600/Vazhi-Vidu-Kanne-Vazhi-Vidu-mp3-songs.jpg

8. வழி விடு கண்ணே வழி விடு -தமிழ் திரையுலகில் வழி விடு கண்ணே வழி விடு, தாயை மதிக்காதவரின் எதிர் காலத்தைப் பற்றிய திரைப்படம் ஆகும்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.எஸ். புரடக்சன்ஸ் தயாரித்துள்ள 'வழி விடு கண்ணே வழி விடு' திரைப்படம், ஊடகத்தினருக்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பரில் திரையிடப்பட்டது.


இத்திரைப்படத்தில் நாயகனாக தமிழ், நாயகியாக மதுஸ்ரீ இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் பூவிலங்கு மோகன், ஆடுகளம் மேரி, சார்லி, பாண்டு, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். நாயகன் தமிழ், நாயகி மதுஸ்ரீ இருவரும் காதலிக்கிறார்கள். நாயகனின் அம்மாவின் முகத்தை கண்டு நாயகி மிரள்கிறார். இதனால்,நாயகனோடு இணைந்து வாழ தயக்கம் காட்டுகிறார்.

http://www.koodal.com/cinema/gallery/events/2011/503/vazhi-vidu-kanne-vazhi-vidu-movie-on-location-stills_1_175739123.jpg

இதனால் தன் அம்மாவை நாயகன் ஒதுக்குகிறான். ஆனால் தன் அம்மாவை இறுதியில் பார்க்க வரும் போது என்ன நடக்கிறது என்பதை உருக்கமாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள். வழி விடு கண்ணே வழி விடு திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் கெளரிஷங்கர்.ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்
 http://chennai365.com/wp-content/uploads/movies/Paavi/Paavi-Stills-040.jpg

9. பாவி -மூணார்-னு ஒரு படம் வந்ததே அந்த டைரக்டர்  கே தம்பி துரை இயக்கத்துல இன்னொரு படம்.. இது கிட்டத்தட்ட ஒரு கில்மா படம்.. 13 ரீல் வரைக்கும் எப்படி எல்லாம் ஆண் இருக்கக்கூடாதுங்கற கதையை சொல்லி க்ளைமாக்ஸ் கடைசி ரீல்ல நீதி சொல்ற படம்.. பெண்களை ஏமாற்றி பல மேரேஜ் பண்ற ஒரு டாக்டரின் கதை..ஈரோட்ல ரிலீஸ் இல்லை

http://moviegalleri.net/wp-content/gallery/paavi-movie-stills/paavi_movie_stills_5478.jpg

10.வேட்டை நாயகன் கொக்கு -  டைட்டிலே காமெடி.. டப்பிங்க் படம் பிரகாஷ் ராஜ் வில்லன்.. நாசர் சைடு வில்லன் போல , பல குப்பைல இதும் ஒரு குப்பை போல அவ்வ்வ்வ்வ்.. ஹீரோயின் பிரியாமணி.. அது போக ஆர் கே செல்வணியின் சம்சாரம் ரோஜாவும் கவுரவ வேடம் போல அவ்வ்வ் , இந்த டப்பா படம் ஈரோடு அண்ணா வில் ரிலீஸ்


http://www.hdwallpapers.in/walls/kollywood_actress_priyamani-other.jpg


டிஸ்கி - சாதாரணமா ஒரு போஸ்ட் ரெடி பண்ண எனக்கு ஒரு மணி நேரம் ஆகும், சினிமா விமர்சனம்னா ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனா விளங்காத இந்த போஸ்ட்க்கு 2 மணி நேரம் வேஸ்ட் ஆச்சு.. அவ்வ்வ்வ்

21 comments:

ராம்ஜி_யாஹூ said...

onPongal, powerstar Dr.Srinivasan's Aanandha Thollai is going to be released

ராம்ஜி_யாஹூ said...

is also going to be released.

சி.பி.செந்தில்குமார் said...

>>ராம்ஜி_யாஹூ said...

onPongal, powerstar Dr.Srinivasan's Aanandha Thollai is going to be released

அரிய தகவலுக்கு நன்றி பாஸ்.. இந்த தகவல் விடுப்பட்டதுக்காக யார் மனசேனும் புண்பட்டிருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன் அவ்வ்வ்வ்வ்

Mathuran said...

அவ்வ்.. இதுக்கு ரெண்டுமணிநேரமா..

இருந்தாலும் உங்க கடமை உணர்ச்சிய பாராட்டுறேன் செந்தில் அண்ணா

Mathuran said...

அதனே! நம்ம பவர்ஸ்டார் இல்லாத திருவிழாவா..

Unknown said...

ஹாஹா என்னே உம் தொழில் பக்தி..ஹிஹி!

scenecreator said...

yov c.p. madaya. sngithiye dialogue sujatha illa? ayyayo ithu kooda theriyama blog......

rajamelaiyur said...

Which Movie you go today?

Anonymous said...

last but not least(still) hshhhhhh

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

வரப் போகும் புதிய படங்கள் தொடர்பான முன்னோட்ட அறிவித்தல் சிறப்பு. அதிலும் அந்த க்டைசி ஸ்டில்...ஹே...ஹே..


அப்புறமா Exit Speed நானும் எதிர்பார்த்திருக்கிறேன்.

ஒருவேளை கடைசி ஸ்டில் தேடியதால் தான் 2 மணி நேரம் ஆச்சுதோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சசிகுமார் said...

எப்படியோ அடுத்த மாசம் புல்லா திரை விமர்சன பதிவுகள் தான்னு நினைக்கிறேன்....

ஹாலிவுட்ரசிகன் said...

யதார்த்தமான நல்ல கதையம்சம் கொண்ட சில படங்கள் இருப்பது போல தெரிகிறது. விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறேன்.

Anonymous said...

super preview

என்றும் இனியவன் said...

எனது தளத்தில்:
தனுசுக்கு போட்டியாக சிம்பு

K.s.s.Rajh said...

//// 30.12.2011 வெள்ளிக்கிழமை 10 படங்கள் ரிலீஸ் ஆகுது
////

பாச் அப்ப அடுத்தடுத்து பத்து படங்களின் விமர்சனம் வரும் என்று சொல்லுங்க நான் உங்கள் விமர்சனம் பார்த்துதான் பல படங்கள் பார்க்கின்றேன்

K.s.s.Rajh said...

மகாராஜா நான் ஆவலுடன் பார்க்க காத்திருக்கும் படம் அஞ்லிக்காக(செங்கோவி அண்ணன் இப்ப பதிவுலகில் இல்லைதானே துணிந்து அஞ்சலி என்று சொல்லாம்)

MANO நாஞ்சில் மனோ said...

நீயே வெளங்காத பதிவுன்னு சொல்லி தன்னையே நாறடித்த உனக்கு வாழ்த்துக்களும், பின்னே நன்றிகளும்...!!!

முரளிகண்ணன் said...

குட் வொர்க் கீப் இட் அப்

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!அப்போ,அடுத்த வருஷம் ஒரு பத்து போஸ்ட்(பதிவு)தேத்திடலாம்!டிஸ்கி அருமை,அத விட .........................அருமை!

சேகர் said...

அண்ணே நானும் நம்ம பவர் ஸ்டார் நடிச்ச லத்திகா படாத டோர்றேன்ட் ள தேடி பாத்துட்டேன் கேடைகவேயில்லை.. லிங்க் இருந்தா அனுப்புங்க..

ராஜி said...

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை போல