Saturday, December 17, 2011

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/mouna_guru_movie_posters_27.jpg


திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்..

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர்  தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது..

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்?

ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijFWhNk-jHCPETBDuV_QuUeTaAokPpdPEhR_ZY6rVnMRmLlDk_QhIOyslNFlBBx_GU_kAriyLL5msifV6qLVx2G051C6loXlEz5UGgpFP0BOcSTWaD01rDMqQdxkRHzfJKtRmPhVMjaQ/s1600/iniya+Pair+With+Arulnidhi+in+Mouna+Guru+Movie+Stills+Photos+gallery+Pics+%252830%2529.jpg
இப்போ ஹீரோதான் அந்த வீடியோ கேசட்டை எடுத்த ஆள்னு தவறா புரிஞ்சுட்டு ஹீரோ & வேற 2 பசங்களை காட்டுக்குள்ள அந்த இன்ஸ்பெக்டர்  குரூப் கடத்திட்டு வந்து என்கவுண்ட்டர் டிராமால போட்டுத்தள்ளறப்ப  வீடியோ  வெச்சிருக்கற ஆள் வேறன்னு தெரிய வருது.. ஆனா மேட்டர் இவங்களுக்கு த்தெரிஞ்சதால  போட வேண்டிய சூழல்.. ஹீரோ எப்படியோ எஸ் ஆகிடறார். இங்கே இடைவேளை..

ஹீரோவை ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை பைத்தியம்னு பட்டம் கட்டி விட்றாங்க..அவர் எப்படி அதுல இருந்து தப்பி  வர்றார்?ங்கறது மிச்ச கதை.. இந்த கேசை டீல் பண்ற இன்னொரு லேடி இன்ஸ்பெகடர் அந்த 4 போலீஸ்தான் குற்றவாளிகள்னு கண்டு பிடிக்கறார்.. இடைவேளை வரை செம விறு விறுப்பு.. பின் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.. 

ஹீரோ உதயன்க்கு நடிப்பு வர்லைன்னாலும் கேரக்டரே அமைதி டைப் என்பது மாதிரி காட்டி நல்லா சமாளிக்கிறார்.. இந்தப்படத்துக்கு ஒரு அஜித்தோ, விஜய்யோ ஹீரோ ஆகி இருந்தால் படம் எங்கேயோ போய் இருக்கும்.. 

ஹீரோயின் இனியா இதுல மாடர்ன் கேர்ளா வர்றார்.. வாகை சூடவா படத்துல செமயா இருந்தார், இதுல நெற்றில பொட்டு வைக்காததாலோ என்னவோ அவ்வளவா எடுபடலை.. ஓவர் மேக்கப் வேற. இப்ப வர்ற படங்கள்ல ஹீரோயினுக்கு பொட்டு வைக்க கூடாதுன்னு ஏதாவது சங்கல்பம் வெச்சிருப்பாங்க போல.. மகா ஜனங்களே.. பொண்ணுங்க பொட்டு வைக்கலைன்னா அது மாடர்ன் கேர்ள் ஆகிடாது. அது அழகு தரும்.. 

அண்ணிக்கு தெரியாமல் ஹீரோ , ஹீரோயின் இருவரும் காதல் கொள்ளூம் இடங்கள் கல கல.. ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர்  ஹி ஹி ..வில்லனாக வரும் ஜான் விஜய் ( வ குவாட்டர் கட்டிங்க் காமெடி பார்ட்டி) அசத்தலான நடிப்பு, பாடி லாங்குவேஜ். அவர் கூடவே வரும் 3 போலீஸ்களும் நிஜமாவே நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்களை கண் முன் நிறுத்தும் நடிப்பு.. சபாஷ்.. 

லேடி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ் அமைதியான நடிப்பு. அவர் இன்வெஸ்டிகேஷன் செய்வது மிக யதார்த்தம். ஆனால் அவர் ஏன் 6 மாத கர்ப்பிணியாக வர்றார்? படத்தின் க்தைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஏன்னா அவர் வயிற்றை தள்ளிட்டு அங்கேயும், இங்கேயும் அலைஞ்சு இன்வெஸ்டிகேஷன் பண்றது மனசுக்கு கஷ்டமா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgayBBZz9B2mLVUwC_59K7YNBKUkgZ_2Wa-MqunI922Ge0UVCbpEQRbCQFSJKNqrpp2WxLyaaCGBj2XmNJyaBFTtvhec2DnH7rEL8x_V1wjOHPvYvD9fXvCS4PjQ48CVv5ocfx7IgkHgC0h/+Iniya+New+Stills+In+Mouna+Guru+Audio+Launch+%252810%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயிஸம் எதையும் காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டியது பெரிய பிளஸ். ஏன்னா தயாரிப்பே ஹீரோவோட அப்பாதான், அதனால ஓப்பனிங்க், ஃபைட், ஹீரோ துதி பாடும் பாட்டு எதும் இல்லாம யதார்த்தமான ஹீரோவா காட்டுனது முதல் பிளஸ்

2. ஒரு நாவல் படிக்கிற மாதிரி  மிக தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை.. சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைக்கதை தெளிவை நான் பார்க்கலை. வெல்டன் டைரக்டர்..

3.  யாரிவன் யாரிவன் பாட்டு, ஒரு டூயட் பாட்டு ரெண்டிலும் படமாக்கப்பட்ட அழகிய காட்சி அமைப்புகள் மனதை விட்டு  அகலாதவை

4. படத்தின் கதை அனுமதித்தும் ஒரு இடத்திக் கூட விரசமான காட்சியோ, கண்ணியக்குறைவான சம்பவமோ இல்லை. பெண்கள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி ஒரு த்ரில்லர் மூவியை தருவது மிக கடினம்.. செம

5. படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக யதார்த்தமான நடிப்பை தந்தது, அவ்ர்களை வேலை வாங்கியது எல்லாமே செம

6. பின்னணி இசை கன கச்சிதம்.. டெம்ப்போ ஏற்ற வேண்டிய இடங்களில் ஏற்றி , பேக் கிரவுண்டில் சைலண்ட் மோடு தேவைப்படும் இடங்களில்  அமைதி என நீட் டெக்னீஷியன் ஒர்க்.. ஒளிப்பதிவும் சூப்பர்.. 


http://www.kollytalk.com/wp-content/gallery/mouna-guru-movie-stills/mouna-guru-9.jpg

 இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  படத்துல ஹீரோ மெண்டல் ஆவது , மெண்டல் ஹாஸ்பிடல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது.. அதை சரி செய்ய அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே கதை யுக்தியை பயன் படுத்தி இருக்கலாம்.அதாவது ஒப்பனிங்க்ல முதல்ல ஹீரோவை மெண்டலா காட்டி அப்புறம் ஃபிளாஸ்பேக் சீன்ல கதை சொல்லி இருக்கலாம்.. 

2. கார் ஆக்சிடெண்ட்ல உயிருக்கு போராடற ஆளை இன்ஸ்பெக்டர் அவனோட பின் மண்டைல தாக்கி கொல்றார். அதுக்குப்பிறகு அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் லேடி இன்ஸ்பெக்டர் உமா கிட்டே வருது.. ஓகே, ஆனா அவர் ஏன் அவசரப்பட்டு அவனை பின்னால தாக்கனும்?அவனே சீரியஸ்சா இருக்கான்.. ஈசியா முன்னால அடிச்சு கொன்னிருக்கலாமே..

3.  இன்ஸ்பெக்டரின் சின்ன வீடு ஒரு ஹோட்டல்ல தன் ஆளுங்களோட டிஸ்கஸ் பண்றாங்க, அங்கேதான் வீடியோ கேமரா பறி போகுது.. இந்த மாதிரி சீக்ரெட் மேட்டர் பேசறவங்க ஆள் நடமாட்டம் இல்லாத ஹை வேஸ் ரோட் ஒதுக்குப்புறத்துலயோ, ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்லயோதான் பேசுவாங்க.. ???

4. இன்ஸ்பெக்டர் தன் சின்ன வீட்டை அடிச்சு காயப்படுத்தி தள்ளி விடறப்ப எதிர்பாராத விதமா இறந்துடறாங்க.. ஆல்ரெடி முகம், உடம்புல காயம் உள்ள ஆளை எப்படி தூக்குல தொங்குற மாதிரி செட் பண்ணி வைக்க முடியும்?காயமே இல்லாம தலையணைல முகத்தை அமுக்கி கொலை செஞ்சாதானே அப்படி செய்ய முடியும்? முறைப்படி இந்த சிச்சுவேஷன்ல மொட்டை மாடில இருந்து கீழே குதிச்ச மாதிரி செட் பண்ணீனாத்தானே அந்த காயங்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும்?

5. ஏதாவது பிரச்சனைன்னா, அல்லது கொலையை நேர்ல பார்த்த சாட்சின்னா உடனே போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டர் ஹீரோவை மட்டும் ஏன் போடாம மெண்டல் ஆக்க தலையை சுத்தி மூக்கை தொடறார்? டப்னு சூட் செஞ்சா மேட்டர் ஓவர்..

6. விறுவிறுப்பா போகும் திரைக்கதைல அந்த சோகப்பாடல் எதுக்கு? இந்தப்படத்துல காதல் ஊறுகாய் மாதிரிதானே?



http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Mouna-Guru-Tamil-Movie.jpg

வித்தியாசமான கதையை ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

ஹீரோ வால்யூ இல்லாததால் எதிர்பார்த்த அளவு படம் ரீச் ஆகலைன்னாலும்  மவுத்டாக் மூலமா ஹிட் ஆக வாய்ப்பு உண்டு.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் - திரில்லர் பட விரும்பிகள் குடும்பத்தோடு பார்க்கலாம்

28 comments:

Unknown said...

முதல் சனிப் பெயற்சி வடை !

சசிகுமார் said...

மார்க் 43 , அப்பப படம் சூப்பர் ஹிட் ஆகும் போல... ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் காரணம் ஹீரோவாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
"ராஜா" said...

பாஸ் கதையை அப்படியே சொல்லிட்டீங்களே...

கோவை நேரம் said...

இந்த படமும் பாத்தாச்சா...எப்போதான் வேலைக்கு போவீங்க தல.....( வேலையே அதுதானே...) நல்ல விமர்சனம் ...

Anonymous said...

அப்போ படம் பார்க்கலாமா சார்........

சரியில்ல....... said...

பாங்ல பணம் கட்டுறதுக்கு க்யூல நிண்ணுகிட்டே படிச்சு முடிச்சுட்டேன். சூப்பர்ப். படம் பாக்கனும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

dsfs said...

கிரைம் நாவல் போல விறுவிறுப்பா இருக்கு கதை. பார்க்கணும். நல்ல விமர்சனம்.

தர்ஷன் said...

பாஸ் நீங்க இயக்குனரிடம் கேட்கும் கேள்வியெல்லாம் பார்த்தா ஏதோ ஏற்கனவே கிரிமினலா வேலை செய்த அனுபவ்ம் உள்ளவர் மாதிரி தெரியுது,

அப்புறம் ஒஸ்தில தம்பி ராமையா கடி ஜோக் சொல்லும் போது சந்தானம் சொல்லும் வசனம் உங்களை ஏனோ ஞாபகப்படுத்தியது

Admin said...

பிரமாதம்

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!////இந்தப் படத்துக்கு ஒரு அஜீத்தோ,விஜய்யோ ஹீரோவாகியிருந்தால்,படம் "எங்கேயோ" போயிருக்கும்!////அங்கேயெல்லாம் போக வேணாம்னுதான் இந்த ஹீரோவோட திருப்திப்பட்டுக்கிட்டாரோ என்னமோ?????(Hi,Hi,today-13th)

Jaganathan Kandasamy said...

CIPI PARATARU NA ATHULA VISAYAM IRUKU.

வெளங்காதவன்™ said...

:-)

முத்தரசு said...

கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.

Unknown said...

அண்ணே நன்றிங்கோ நன்றிங்கோ!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனக்கு நிச்சயம் பிடிக்கும்னு நினைக்கிறேன்
//எப்போதான் வேலைக்கு போவீங்க தல.....//REPEATTUUU

தமிழ்வாசி பிரகாஷ் said...

படம் நல்லா இருக்கும் போல...

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை அண்ணே. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Unknown said...

ஹிரோயினை விட அண்ணி செம பிகர்
நோட்பன்னிக்கங்கய்யா...நோட்பன்னிக்கங்கய்யா......

MANO நாஞ்சில் மனோ said...

ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர்//

டேய் அங்கே சுத்தி இங்கே சுத்தி, மெயின் இடத்துக்கே வந்துட்டே பாத்தியா ராஸ்கல்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

நாளை ஈரோட்டில் பதிவர் சந்திப்புக்கு வரும் சிபி'யை பிடிக்க உளவுத்துறை அலர்ட் ஆக உள்ளது....!!!

MANO நாஞ்சில் மனோ said...

படம் கண்டிப்பா பார்க்குறேன் அண்ணே...

அக்கப்போரு said...

எல்லாம் சரி இந்தப் பயபுள்ள ஏன் எப்பப் பாரு கிழுதட்டுல புகையில வச்சுருக்க மாதிரியே திரியுது ?

devraj said...

Review is good

by
http://pangusanthaielearn.blogspot.com

ananthu said...

நேர்த்தியான விமர்சனம் ... இது போன்ற படங்களை வரவேற்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் ... முழு கதையையும் சொன்னதை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம் ... அதே போல அஜித்தோ , விஜயோ நடித்திருந்தால் வித்தியாசமான முறையில் எடுத்திருக்க முடியாது...வழக்கம் போலவே இருந்திருக்கும் ... என் விமர்சனம்
மௌனகுரு - பேசப்படுவான் ...
http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post_17.html

கடம்பவன குயில் said...

கதை விமர்சனமே விறுவிறுப்பாய் இருக்கிறது.

நண்பர் ananthu சொன்னதுபோல் முழுக்கதையையும் சொன்னதை தவிர்த்திருக்கலாம்.

கடம்பவன குயில் said...

நீண்ட நாட்களுக்குப்பின் உங்களிடம் பாராட்டு வாங்கிய படம் இதுதான் என்று நினைக்கிறேன்.

nice review