Sunday, December 11, 2011

எதுக்காக மினிஸ்டரை அறைஞ்சே? ( ஜோக்ஸ்)

1.டீக்கடைல எதுக்கு இங்க் பில்லர்? 

இனிமே இதுதான் மில்க் பில்லர்.. டீ-ல பாலை இதன் மூலமாத்தான் 2 சொட்டு விடுவோம்

--------------------------------------

2. நகைக்கடைல கொள்ளை அடிச்சவன் கே டி -னு எப்படி சொல்றே? 

கே டி எம் நகைகளை மட்டும் தான் கொள்ளை அடிச்சிருக்கான்..

------------------------------------

3. நான் பஸ்ல பயணம் பண்ணும்போது-ங்கற லைனை அவர் ஏன் அடிக்கடி சொல்றாரு?

எல்லாம் பணத்திமிர்தான், வேறென்ன?

------------------------------------

4. ஜட்ஜ் - அந்த பெண்ணை ரேப் அட்டெம்ப்ட் செஞ்சதா உன் மேல கேஸ் இருக்கு. 

கைதி - முயற்சி மட்டும்தான் செஞ்சேன் யுவர் ஆனர்

-------------------------------------

5. எதுக்காக மினிஸ்டரை அறைஞ்சே?

ரூம் போடுன்னாரு.. ரூம்னா அறை தானே? விட்டேன் ஒண்ணு பளார்னு

--------------------------------------

6. சாமியாரை பார்க்கனும்.. 

அவர் மோன நிலைல இருக்காரு ..

. ஓஹோ யார் கூட?

---------------------------------------------

7. டைரக்ட் ஸ்பீச்,இன்டைரக்ட் ஸ்பீச் என்ன வித்தியாசம்? 

டைரக்டர் என்ன பேசுனாலும் அது டைரக்ட் ஸ்பீச், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் பேசுனா அது இன்டைரக்ட் ஸ்பீச்

------------------------------------------

8. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல  எதுக்கு ஸ்ட்ரைக் பண்றாங்க? சம்பள உயர்வு கோரியா?

ம்ஹூம், இனி மாமூல் தொகை -அடிக்கற கொள்ளைல சதவீத அடிப்படைல இருக்கனுமாம்.. 

-------------------------------------------

9.  டாக்டர்க்கும் , தலைவருக்கும் என்ன வித்தியாசம்?

 சர்ஜரி செஞ்சு ஆளை க்ளோஸ் செஞ்சா டாக்டர், ஃபோர்ஜரி செஞ்சு சொத்துக்களை கபளீகரம் செஞ்சா தலைவர்

------------------------------------------------

10. மனைவி கூட லாட்ஜ்ல தங்கி இருந்தப்ப போலீஸ் ரெயிடு  வந்துட்டாங்க.. 

அடடா.. அப்புறம்?

2 பேரும் சண்டை போட்டுக்காட்டிய பிறகுதான் தம்பதிகள்னு நம்புனாங்க.. 

--------------------------------------

11. மாப்ளை ஒரு மாதிரி டைப்னு எபடி சொல்றீங்க? 

அவரோட புக் செல்ஃப்ல விருந்து, திரைச்சித்ரா , சினி மித்ரன் புக்ஸ் எல்லாம் இருந்ததே?

--------------------------------------------------

12. தலைவருக்கு லொள்ளு ஜாஸ்தி -னு எப்டி சொல்றே?

கோவை கே ஜி ஆர்ட்ஸ் - தானம் தியேட்டரை எனக்கு தானம் செய்ய முடியுமா?னு கேட்டாராம்.. 

-------------------------------------------

13. பேங்க் மேனேஜரை ஏன் டிஸ்மிஸ் பண்ணீட்டாங்க?

நோ லோன்,. லீவ் மீ அலோன் -னு அவரோட சேம்ப்பர்ல எழுதி வெச்சிருந்தாராம்.. 

-----------------------------------------------

14. தலைவர்க்கு தண்ணி அடிக்கற பழக்கம் ஜாஸ்தின்னு எப்டி  சொல்றே?

தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு குடுத்தா போதாது.. உற்சாக பான வரவேற்பும் குடுக்கனும்கறாரே?

----------------------------------------------
15.  ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொன்னதும் ஹீரோயின் இஞ்சியை சுத்தியலால உடைக்கறாரே? ஏன்?

காதலை சுக்கு நூறா உடைக்கறாராம்..

-----------------------------------------------

16. சந்தர்ப்ப சூழ்நிலையால மேரேஜ்க்கு முன்னரே ஒரே கட்டில்ல படுக்க வேண்டியதாகிடுச்சு.. நம்ம 2 பேருக்கிடையே  ஒரு புக் வைக்கிறேன்.. அதை தாண்டி நீங்க வரக்கூடாது,..

ஓஹோ நூல் வேலியா? 

-------------------------------------------------

16 comments:

கும்மாச்சி said...

செந்தில் "நூல் வேலி" ரசித்தேன்.

சக்தி கல்வி மையம் said...

ஹ..ஹா...

Admin said...

நகைச்சுவை மரம் நட்டு வச்சிருக்கீங்களா ?நகைச்சுவை காய்ச்சு கொட்டுது..வழக்கம்போல நகை-சுவை..

முத்தரசு said...

போட்டு தாக்கு

MANO நாஞ்சில் மனோ said...

அறைஞ்சான் பாரு அறை, இப்பிடிபட்ட லூசு அமைச்சர்களுக்கு இப்பிடித்தான் குடுக்கணும், கபில்சிபலுக்கும் இப்பிடி ஒன்னு குடுத்தா தேவல....!!!

சுதா SJ said...

காதல் மன்னன் போல் நீங்க நகைசுவை மன்னன் பாஸ்... ஹா ஹா

சுதா SJ said...

எல்லாமே சூப்பெர்

Arul Kumar P அருள் குமார் P said...

சூப்பர் போங்க ...!

Yoga.S. said...

வணக்கம்!"ஜோக்"செல்லாம் சுமாராயிருக்கு!

சசிகுமார் said...

சூப்பர் மச்சி....

Rathnavel Natarajan said...

அருமை.

கோகுல் said...

டைரக்ட் இன்டைரக்ட் - அடங்கப்பா!

ஹேமா said...

அட...அதிசயம்.சிபி...ஒரு படமும் போடேல்ல இந்தப் பதிவில.இதுவும் பகிடியோ சிபி !

சீனுவாசன்.கு said...

பஞ்ச்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜோக்கு மழையா பொழிஞ்சு தள்ளிட்டிங்க போங்க

Anonymous said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பரு...
உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை இணைத்திடுங்கள்