ஏதோ ஒரு தெலுங்குப்படத்தை டப் பண்ணி இருக்காங்க, ஆனா அது எந்தப்படம்னு கண்டு பிடிக்க முடியல.. கூகுள்ல தேடுனா படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை.. ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படம் போல.. ஏதோ திகில் படம்னு டிரெய்லர் பார்த்து போனா செம காமெடிப்பா படம் பூரா.
ஒரு பெரிய பங்களா.. அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்கன்னு எப்படி கண்டுபிடிச்சேன்னா கணவன், மனைவி, 10 வயசு பையன், 8 வயசு பொண்ணு எல்லாரும் தனித்தனி ரூம்னு தனிக்குடித்தனம் இருக்காங்க .. ஓப்பனிங்க் ஷாட்ல கணவன் ஒரு கனவு காண்கறான்.. அதுல ஒரு பேய் அவனோட மனைவியை குத்தி கொலை செய்யுது.. ( ஐ ஜாலி)
.திடுக்கிட்டு எந்திரிச்சா மனைவி கண் அடிச்சு கணவனை கில்மாக்கு கூப்பிடறா.. ஆனா கணவன் போகல.. ( அடடா , வட போச்சே.. )குழந்தைங்க இருக்காங்கன்னு சாக்கு போக்கு சொல்றான்.. சம்சாரத்துக்கு செம கடுப்பு..
விடிஞ்சதும் புருஷன் ஆஃபீஸ்க்கு கிளம்பறான்.. அவன் போனதும் நான் கடவுள்ல ஆர்யா வேக வேகமா நடப்பாரே, அதையே அட்டக்காப்பி அடிச்சு ஒரு நடை நடந்து ஒரு சாமியார் வர்றாரு.. அவர் இவங்க வீட்ல சங்கு ஊதிட்டு போறார்..
இது ஏதோ கெட்ட சகுனமா படுது.. அவங்க இருக்கற எட்டாம் நெம்பர் வீடு ஏதோ பேய் குடி இருக்கற வீடுன்னு தெரிய வருது..
ஒரு டைம் மாடில சம்சாரம் நின்னுட்டு இருக்கறப்ப ஹால்ல புருஷன் கால் சுளுக்கி கீழே விழுந்த வேலைக்காரியை கைத்தாங்கலா தூக்கறதை பார்த்துடறா,, சும்மா சொல்லக்கூடாது வேலைக்காரியா வர்ற குஜிலி குஜாலாத்தான் இருக்கு, ஹி ஹி
ஹீரோவோட அதாங்க அந்த புருஷனோட ஃபிரண்ட் கோட்டா சீனிவாசராவ்கிட்டே கூட்டிட்டு போறாரு.. அவர் மாந்திரீகம் தெரிஞ்ச ஜோசியர்.. ஹீரொயின் ஃபோட்டோவை பார்த்து ஜாதகம் கணிச்சு சொல்ல சொன்னா செத்துப்போனவங்களுக்கு ஜாதகம் எப்படி சொல்றது?ன்னு கேட்கறார்..இப்போ இந்த ட்விஸ்ட்டோட இடைவேளை..
இது வரை ஓக்கே.. அதுக்குப்பிறகு நேரா கதைக்கு வராம இழு இழுன்னு இழுத்துட்டே இருக்காங்க.. வீட்ல இருக்கற சம்சாரம் ஆல்ரெடி இறந்தாச்சு.. இப்போ இருக்கறது வேற ஒரு ஆவி, சம்சாரம் உடம்புல இருக்கு.. க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்தி வரை எல்லாரையும் பயப்படுத்திட்டு கடைசில அந்த ஃபிளாஸ்பேக் கதை சொல்றாங்க .
முதுமலைக்காடு மாதிரி சீவாத அடர்ந்த தலைமுடி கொண்ட கேவலமான ஹீரோவை ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தி ஒருதலையா லவ்வறா.. ஆனா பாருங்க ஹீரோக்கு ஹீரோயின் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. அதனால நோ லவ்னு கட் அண்ட் ரைட்டா சொல்ல்லிடறான்.. அந்த குஜிலி உலகத்துலயே வேற ஆம்பளைங்களே இல்லைங்கற மாதிரி ஹீரோவையே சுத்தி சுத்தி வர்றா..
ஒரு நாள் மழை நாள் ஹீரோ வீட்ல தனியா இருக்கார். வில்லி மழைல நனைஞ்சு கார் பிரேக் ஆகி ஹீரோ வீட்டுக்கு வர்றா.. டிரஸ் மாத்திக்கோன்னு ஹீரோ ஒரு டர்க்கி டவல் தர்றார்.. வில்லி அதெல்லாம் வேணாம்னு எல்லா டிரஸ்ஸையும் கழட்டி கடாசிடறா.. ஹீரோவுக்கு அதிர்ச்சி.. நமக்கும் அதிர்ச்சி, நமக்கு என்ன அதிர்ச்சின்னா குஜிலியோட கெண்டைக்காலை மட்டும் காட்றாங்க.. அடங்கோ..
கண்ணா லட்டு திங்க ஆசையா? அதுவும் ஓசில அப்படின்னு வில்லி கேட்காம கேட்ட கேள்விக்கு ஹீரோ நோ சொல்லிங்க், அதனால மனம் வெறுத்து அவ தற்கொலை செஞ்சுக்கறா.. அந்த ஆவிதான் இப்போ ஹீரோவோட மனைவி உடம்புல.. எப்படியாவது ஹீரோவை ஒரு தடவை ரேப்பிடனும்கற உயர்ந்த லட்சியப்பாதைல பேய் ட்ரை பண்ணுது,..
அப்புறம் என்ன ஆச்சு? எனக்கென்ன பேச்சு.. கில்மா தான் என் உயிர் மூச்சுன்னு சொல்ற பேய் வரலாறுதான் படம்..
இயக்குநரிடம் சில காமெடி கேள்விகள் ( ஜஸ்ட் ஃபார் ஸ்மைலி)
1. பெண் பேயா வர்ற ஜிகிடிக்கு கத்திரிப்பூ கலர்ல பவுடர் அடிச்சு விட்டு உதட்ல ப்ளூ கலர் ஸ்கெட்ச்சால சில குறுக்குக்கோடுகள் மட்டும் போட்டா போதுமா?அவ்லவ் தான் பேய் கெட்டப்பா? பார்த்தா பயமே வர்லை கிளுகிளுப்புதான் வருது ஹி ஹி
2. பேய் என்ன மேட்சிங்க் செண்டர் மேனகாவா? வெள்ளை சேலை, வெள்ளை ஜாக்கெட், வெள்ளை பாவாடை, வெள்ளை பிரா இவை எல்லாம் போதாதுன்னு வெள்ளைல தான் ரப்பர் பேண்டும்.. ஒய்?
3. பொதுவா ஆண்களை விட பெண்களூக்குத்தான் விழிப்புணர்வு ஜாஸ்தி, ஒரு சீன்ல ஹீரோ இடி சத்தமும், ஏதோ அழுகுரல் சத்தமும் கேட்டு விழிச்சுடறார், ஆனா அவர் சம்சாரம் விழிக்கலை.. அப்புரம் அவர் தொட்டு ( தோளைத்தான் .) எழுப்புன பிறகும் பாப்பா அசந்து தூங்குது.. ஏன்?
4. துளசி செடி வாடுனா பேய் இருக்குன்னு அர்த்தமா? ஓக்கே , ஆனா வெச்ச உடனே வாடாம 4 நாள் கழிச்சுதான் வாடுதே அது ஏன்? பேய்தான் 24 மணீ நேர டியூட்டி பார்க்குதே..?
5. அஞ்சாங்கிளாஸ் படிக்கற பசங்க 2 பேரையும் ஹீரோ நைட் 9 மணிக்கு கூட்டிட்டு வர்றார்.. அது எப்படி? மாலை 3 மணிக்கே ஸ்கூல் விட்டுடுமே.. டியூஷன்ன்னு சமாளிச்சாலும் அதிக பட்சம் 2 மணீ நேரம்..
6. பொதுவா தாயத்துக்களை வலது கைல தானே கட்டுவாங்க, இந்தப்படத்துல ஏன் எல்லாரும் இடது கைல கட்றாங்க?
7. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயினை பளார்னு அறையறான், அப்போ டக்குன்னு ஹீரோவோட ஃபிரண்ட் அந்த சீன்ல எண்ட்ட்ரி கொடுக்கறான், எப்படி? அவன் வீடு 2 தெரு தள்ளி இருக்கு.. பெட்ரூம் பக்கமே கட்டில் போட்டு படுத்திருந்தானா?
8. ஹிஸ்டீரியா பேஷண்ட்ஸ் கில்மாவுக்கு லாயக்கில்லை, அதை அவாய்டு பண்ணனும்னு ஒரு சீன்ல டாக்டர் சொல்றார், இதை அகில உலக கில்மா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன், அப்படி எல்லாம் ஏதும் தடை கிடையாது..
9. தூக்கு மாட்டி தொங்க விடப்படும் வேலைக்காரி கண் மூடி, வாய் மூடி, விரல்கள் எல்லாம் மூடி இருக்கே? பொதுவா தூக்கு போட்டு இறந்தவங்க விழி பிதுங்கி இருக்கும், நாக்கு தள்ளி இருக்கும், கை விரல்கள் விரைச்சபடி இருக்கும்..
10. ஹீரோ பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா? பெட்ரூம்ல கூட ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டுதான் வர்றார்?
11. அந்த வீணாப்போன சாமியார் அடிக்கடி “எனக்கு எல்லாம் தெரியும்”கறாரு, உன்னால என்னை எதுவும் செய்ய முடியாதுடா டா டா:ன்னு 6 டைம் சொல்றாரு.. படா பேஜாரு அந்தாள் கூட.. அவ்வ்
12. பேய் கண்ணாடி முன் நின்னா அதனோட பிம்பம் தெரியாதுன்னு ஒரு சீன்ல வருது.. ஹீரோ தன் மனைவி பேய் என்பதை 6 மாசமா கண்டு பிடிக்கலையா?
13. ராவணன் ராமன் உரு எடுத்து சீதையை அடைய நினைத்த போது அவன் ராமனின் எண்ணமே வந்ததால் சீதையை அடையலைன்னு புராணக்கதை சொல்லுது, அப்போ ஹீரோயின் உடம்புல பேய் புகுந்ததும் அவங்க உணர்வு தானே வரனும், எதுக்காக குழந்தைகளை பயமுறுத்தனும்?
14. வில்லி பேயோட உன்னத நோக்கமே அகில உலக ஆண் அழகன் ஹீரோவை அடைவதே, அதுக்கான முயற்சி எடுத்தாலாவது சீன் ஏதாவது காட்டி இருக்கலாம், எதுக்காக சம்பந்தம் இல்லாம குழந்தைகளை பயப்படுத்தனும்?
ட்டக்கிலா வசனங்கள்
1. எதுக்காக என்னை தள்ளி விட்டீங்க?
பேசாம போய் படு..
அதைத்தான் டெயிலி பண்ணிட்டு இருக்கேனே?
2. என் கிட்டே கேள்வி கேட்க கையாலாகாம எதுக்காக குழந்தைகளை அடிக்கறே?
3. பயப்படாதீங்க, நான் வேணா உங்க துணைக்கு வரட்டா?
உன்னைப்பார்த்தாதான் எனக்கு பயமா இருக்கு..
4. துளசி மாடம் பல்லவிக்கு உயிர், பல்லவி எனக்கு உயிர், அதனால எனக்கு துலசி உயிர் ( அடேய் இதை ஏழாங்கிளாஸ் படிக்கறப்பவே கணக்கு டீச்சர் A=B, B=C SO A=C அப்டினு நடத்திட்டார்டா)
5. எப்படியோ தாயத்தோட ஆயத்தமா இருக்கே? ( பெரிய டி ஆர் பேரன். எதுகை மோனையோட வசனம் சொல்றாரு)
6. நீ யாரு?
பேய் - நான் தான்
மந்திரவாதி - அதான் யார்ன்னேன்
பேய் - அதான் நான் என சொல்றேனே? ( அடேய் போதும்)
7- ஹீரோ - என் வாழ்க்கைல கட்டிக்கப்போறவளைத்தவிர எந்தப்பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டேன் ( டேய் நாயே, உன்னை நீ கட்டிக்கிட்ட பொண்ணே ஏறெடுத்துப்பார்க்காதுடா)
படத்துல 2 குஜிலிங்க , நடிப்பு சுமாரா வருது.. இதே கதையை இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்.. ஒரே மாதி ஆங்கிள்ல பேயை திருப்பி திருப்பி காட்டிட்டு இருந்தா பயம் போயிடும் என்ற உண்மையை உணரனும்.. ஹீரோ பேரு சின்னா , ஹீரோயின் பேரு மயூரி எனும் ஆஷா ஷைனி
இது டப்பிங்க் படம் என்பதால் இதுக்கு விகடன் மார்க் எல்லாம் இல்ல.. அவங்க போட மாட்டாங்க..
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்
ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்
16 comments:
எல்லாமே தூக்கலாக இருக்கு - யோவ்... படத்தை சொன்னேன்.
Movie flab a?
இயக்குனரிடம் 14 கேள்விகள் கேட்கும் அளவுக்கு இருப்பதால், இது பார்க்கவேண்டிய படமா?
எலேய் இது பதிவா இல்ல பிட்டா...என்ரா இது..இம்புட்டு போட்டோ!...ஏன் இந்த் கொலவெறி!
பேய் படத்துக்குண்டான பயம் இந்த படத்தில் இருக்காதா? அபோஒ படத்துக்கு போகலை. காசை மிச்சம் பண்ணி குடுத்ததுக்கு நன்றி
செந்தில் படங்கள் இன்னும் அருமையாக போட்டிருக்கலாம், எப்படியும் நான் படம் பார்க்கப்போவதில்லை. இருந்தாலும் அந்த குஜ்லிங்கலை இங்கேயாவது பார்த்திருக்கலாம்.
ஆஜர்.
வணக்கம் சி.பி சார்!கொன்னுட்டீங்க போங்க(விமர்சனம் தான்)பிகருங்க சுமார் தான்!
விமர்சனத்தை படித்து முடித்தவுடன் படம் பார்த்துவிட்டாதாக முடிவு செய்துவிட்டேன்...
நல்ல வேளை என்ன காப்பாத்திட்டே
பாஸ் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா??
இந்த மொக்கோ மொக்கை படத்தைஎல்லாமா போய் பாப்பீங்க??? அவ்வ
பாஸ் கட்டாயம் பார்க்கணும்ன்னு நினைச்சிருந்தேன் உங்க விமர்சனம் பார்க்க யோசனையா இருந்தாலும் போட்டிருக்கிற படங்கள் பார்க்கும் போது பார்த்தால் வேர்த்துனு தோணுது..
இது கில்மா படமா பேய் படமா?
இது பிட்டு படமா இல்லை பேய் படமா ? என்னமோ போங்க இந்தமாதிரி படதேல்லாம் நீங்கதான் பார்க்கமுடியும்
வணக்கம்,
"அம்புலி 3D" திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்றுமுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது... இதோ உங்கள் பார்வைக்கு...
www.youtube.com/watch?v=qC_Mf4cVZY8
மேலும் விவரங்களுக்கு
http://ambuli3d.blogspot.com
நன்றி
அன்புடன்
"அம்புலி" படக்குழுவினர்
இதுக்கு பேர் தான் அக்குவேரா ஆணிவேரா பிரிக்கறதா... பிரிச்சுட்டேள்...
ஹாய்)!! அருமையான படைப்பு
மீண்டும் வருவேன்
Post a Comment