ஷாரூக்கான் இவ்வளவு வயசாகியும் தன்னோட உடம்பை மெயிண்டெயின் பண்ணிட்டு வர்றது பெரிய விஷயம்.. ரொம்ப ஸ்டைலிஷா இந்தப்படத்துல அவர் டானா வர்றது அவரோட ரசிகர்களை ரொம்பவே கவரும்.. நம்ம தமிழ் ஆளூங்க இந்தப்படத்தை பார்க்கறப்போ ஒவ்வொரு சீன்லயும் தலை அஜித்தை மனசுல நினைச்சுக்கிட்டே பார்த்தா ரசிக்கலாம்.. ஏன்னா பில்லா-2 படத்தோட கதையும் இதுவாத்தான் இருக்கும்.. மும்பைல இந்தப்படம் செம ஹிட் ஆக சான்ஸ் இருக்கு.. ரா ஒன் படத்தோட அடியை இந்தப்படத்தோட ஹிட் மறைச்சிடும்..
போதை மருந்து கடத்தற , சேல்ஸ் பண்ற குரூப் ஐரோப்பால ஒரு மீட்டிங்க் போடறாங்க, அதுல டானை கொலை செய்யனும்னு தீர்மானம் போடறாங்க.. ஏன்னா டான் ரொம்ப குறைஞ்ச விலைல போதை மருந்தை சப்ளை பண்ணி ஆல்ரெடி இருக்கற இவங்க மார்க்கெட்டை அழிக்க ட்ரை பண்றாரு.. டான் ஷாரூக் 5 வருடங்களா தாய்லாந்துல இருந்துக்கிட்டே ட்ரக் பிஸ்னெஸ் பண்றாரு..
திடுதிப்னு டான் ஷாரூக் மலேஷியா போய் போலீஸ் ஆஃபீசர்ஸ் ஓம்பூரி, பிரியங்கா சோப்ரா முன்னால சரண்டர் ஆகறார்.. ( ஃபிகரு பிரியங்கா சோப்ரா புற முதுகு காட்டும் புறாவா படம் பூரா வர்றார், ஆனா அவர் முகத்தை ரசிக்க முடியல.. ரொம்ப முற்றலா இருக்கு, ஆனாலும் ரசிகர்கள் யாரும் அவர் முகத்தை பற்றி அக்கறை கொண்டதா தெரியல.. ஹய்யோ அய்யோ )
தானா வந்து சரண்டர் ஆகி வீணா போற சீனா தானா பார்ட்டி டான் இல்லையே, எதுக்காக அவர் சரண்டர் ஆனார்னு ஃபிகரு பிரியங்கா தன்னோட எண்ணெய் போடாத, பின்னல் போடாத தலையை பிச்சிக்கிது.. ஆல்ரெடி ஃபிகர் தலை பிச்சுப்போட்ட மாதிரிதான் இருக்கு.. ஹி ஹி
மலேசியாவுல இருக்கற ஜெயில்ல டான் ஷாருக் அடைக்கப்படறார்.. அந்த ஜெயில்ல இருக்கற வர்தான் (போமன் இரானி)கற கைதியை சந்திக்கறார்.. ஆல்ரெடி போட்ட பிலான்படி ஷாருக்கும் வர்தானும் எஸ் ஆகறாங்க ஜெயிலை விட்டு.. இப்போதான் தெரியுது ஹீரோ ஜெயிலுக்கு எண்ட்டர் ஆனதே வர்தானை எஸ் ஆக்கத்தான்னு.. 2 பேரும் ஸ்விச்சர்லாந்த் போறாங்க.. அங்கே ஒரு லாக்கர் ஓப்பன் பண்ணனும்.. அந்த வேலை வர்தானுக்குத்தான் தெரியும்.. அதான் அவனை எஸ் ஆக வெச்சிருக்காரு..
அந்த லாக்கர்ல இருக்கற வீடியோ டேப்ல ஒரு கொலை பற்றிய கான்வர்சேஷன் இருக்கு.. ( நடிகன் படத்துல சத்யராஜ் கிட்டே மாட்டுமே ஒரு டி வி டி அது மாதிரி ) அதாவது பணம் பிரிண்ட்ட்டிங்க் பேங்க்கோட வைஸ் பிரசிடெண்ட்டும், இன்னொரு கூலிப்படை ஆளூம் அந்த கொலை பற்றி பேசற டேப் அது..
டான் கிட்டே மாட்ன அந்த ஆதார டேப்பை கைப்பற்ற பணம் பிரிண்ட்ட்டிங்க் பேங்க்கோட வைஸ் பிரசிடெண்ட் ஆள் அனுப்பறார். சாதா ஆண்ட்டிஹீரோக்கள் பாங்க்ல பணத்தை கொள்ளை அடிப்பாங்க.. ஆனா ஷாரூக், தல அஜித் மாதிரி ஸ்டைலிஷ் ஹீரோக்கள் பணம் பிரிண்ட் பண்ற மிஷினையே கொள்ளை அடிக்க பிளான் போடறாங்க..
அதுக்குப்பிறகு என்ன நடக்குது? என்ன ஓடுதுங்கறதுதான் படம் ..
தல ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான நியூஸ்.. பில்லா 2 செம ஹிட் ஆக வாய்ப்பு இருக்கு.. படம் பூரா செம ஸ்பீடு.. குலாலம்பூர்(மலேசியா), ஸ்விச்சர்லாந்து, ஜெர்மனி என படம் ஏகப்பட்ட லொக்கேஷன்ஸ்ல ஷூட் பண்ணி இருக்காங்க.. எல்லாம் ஒரு பிரம்மாண்டத்துக்காகத்தான்.. நல்லா ஊர் சுற்றி பார்த்துட்டாங்க போல ஹீரோ, ஹீரோயின் டைரக்டர்ஸ் எல்லாம், பாவம் புரொடியூசர்..
இயக்குநர் அவர்களிடம் சில கேள்விகள்
1. ஒரு சீன்ல வில்லன் ஹீரோயின் கிட்டே ரிவால்வர் கொடுத்து ஹீரோவை 10 எண்ணறதுக்குள்ள சுடு, இல்லைன்னா நான் உன்னை சுட்ருவேன்னு மிரட்றாரு.. செம காமெடி சீன் அது.. ஏய்யா,.. ஒரு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ணுவார் , அல்லது ஹீரோவை போட்டுத்தள்ளூவார், அதெல்லாம் பண்ணாம என்னா இது சின்னப்புள்ளயாட்டம்..?
2. க்ளை மாக்ஸ்ல ஹீரோயினை வில்லன் ஷூட் பண்ணிடறான்.. அதுக்குப்பின் ஹீரோவை கொலை செய்ய முயற்சி பண்றப்ப தன் கிட்டே இருக்கற ஏதோ ஒரு ரிமோட்டை ஷாரூக் அமுக்கறாரு , உடனே ஒரு பாம் வெடிக்குது..அந்த வேலையை முதல்லயே பண்ணீ இருந்தா ஹீரோயினை காப்பாற்றி இருக்கலாமே?
3. ஒரு சீன்ல டான் ஷாரூக்கை வில்லன் துரத்திட்டு வர்றான். ஹீரோ மொட்டை மாடிக்கு ஓடி போறார்.. அது வரை திருப்பூர் பனியன் மாதிரி ஒரு சாதா டி சர்ட் போட்டிருக்கற ஹீரோ அதுக்குள்ள ஏதோ பாராசூட் டிரஸ் அட்டாச்டு மாதிரி போட்டிருக்காரே, அது எப்படி? அதை டிரஸ் பண்ணவே அரை மணி நேரம் ஆகுமே.. அது எங்கே இருந்து வந்துச்சு?
4. ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஆக்சுவலி டான் ஷாருக்கோட லவ்வர்.. ஆனா சக போலீஸ் ஆஃபீசர் தன்னை லவ் பண்றார்னு தெரிஞ்சும் ஒண்ணா எஸ் சொல்லனும் , இல்லைன்னா நோ சொல்லனும். ரெண்டுங்கெட்டானா லூஸ் மாதிரி சிரிச்சுக்கிட்டே அவர் கிட்டே ஒட்டி உறவாடறதும், அவர் தனியா ரூம்ல இருக்கறப்ப வந்த போலீஸ் ஆஃபீசரை வரவேற்று பேசறதும் எதுக்கு ?( இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை நான் ஏன் கேட்கறேன்னா அந்த இடத்துல சீன் உண்டா? இல்லையா? ந்னு ஒரு டென்ஷன் வேற ஏதும் இல்ல ஹி ஹி )
5. ஹ்ருத்திக் ரோஷனை ஒரு சீன்ல நடிக்க வைக்கறதுக்காக ஷாரூக் அவர் முகம் போல மாஸ்க் அணீந்து பார்ட்டில டான்ஸ் ஆடறது எல்லாம் ஓக்கே.. ஆனா முற்றிலும் வேறு முகம் இருந்தும் ஹீரோயின் ஷாருக்கை அடையாளம் கண்டு கொண்டதாகவும், எங்கேயே பார்த்த முகமா இருக்கே என புலம்புவதும் எப்படி?
மனதில் நின்ற வசனங்கள்
1. இன்னைக்கு நைட் என்ன பிளான் பண்ணி வெச்சிருக்கே.. ?
எதுக்கு பிளான்?
பர்த்டே செலிபிரேஷன்..
எனக்கு இன்னைக்கு பர்த்ட்டே கிடையாதே?
ஆனா எனக்கு இருக்கே?
அட!! ஹேப்பி பர்த்டே.. ( பய புள்ள எப்படி சுத்தி வளைக்குது பாரு)
2. ஒரு தடவை சொன்ன பொய்யை மறுபடி சொன்னா நல்லா இருக்குமா?
3. உன்னை மாதிரி அழகான பொண்ணுக்கு இந்த மாதிரி ஆபத்தான வேலை சரிப்பட்டு வருமா?
என் முகத்தை பார்த்து எடை போடாதீங்க.. என் கிட்டே நீங்க பார்க்காத பல திறமைகள் ஒளிஞ்சிருக்கு.. ( சும்மா சொன்னா எப்படி, காட்டு காட்டுன்னு காட்டுங்க, அப்போதானே எங்களை மாதிரி அப்பாவிகளூக்கு தெரியும் ஹி ஹி . பாப்பா டபுள் மீனிங்க்ல பேசுதுடோய்)
4. பதவியை காப்பாத்திக்கற பொறுப்பு ராஜாவை விட மந்திரிக்குத்தான் ஜாஸ்தி ( விதி விலக்கு ஆ ராசா ஹி ஹி )
5. ஆதாரம் இல்லாம என்ன குற்றம் நான் செஞ்சதா நீங்க சொன்னாலும் எடுபடாஅது.. சட்டத்துக்கு ஆதாரம் ரொம்ப முக்கியம்..
6. டான் எப்பவும் தான் என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கல்லைன்னாலும் தன்னை சுத்தி இருக்கறவங்க என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சு வெச்சிருப்பான்..
7. அவன் உன்னை , என்னை எல்லாரையும் ஆபத்துக்குள்ள தள்ளப்பார்க்க்கிறான்
தெரிஞ்சே ஏன் அந்த பாம்பு புற்றுக்குள்ளே வசிக்கறீங்க? கம் அவுட்..
8. டான் - நீ என்ன் என்னையே சுத்திட்டு இருக்கே கண்ணு? நீ என்னை லவ் பண்றியா?
இல்லை, உன்னை ஜெயில்ல பிடிச்சு போடறவரை ஓய மாட்டேன்..
(அட போம்மா கீரை ஆயமட்டேன், ஓய மாட்டேன்னு பழைய டயலாக்ஸ்)
9. ஏய்.. உனக்கும், அவனுக்கும் என்ன ஓடிட்டு இருக்கு?
அதை உன் கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
ஆனா நான் எப்பவும் உன்னை பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்..
( போய் பொழப்பை பாருங்கப்பா)
10. போலீஸ் - எங்கே உன் ஃபிரண்ட்?
தெரில..உங்களுக்கு டவுட்னா என் பாக்கெட்டை செக் பண்ணீக்கலாம்..
11. ரோமாவை நீ ஏன் பாதுக்காக்கனும்னு நினைக்கறே?
அவ ஒரு கெட்ட பழக்கம் மாதிரி, விட முடியல..
பிரம்மாணடமான காட்சிகள், அழகிய லொக்கேஷன்கள் , ஷாருக்கின் அலட்டல் இல்லாத அமர்த்தலான நடிப்புக்காக பார்க்கலாம்..
ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்..
டிஸ்கி - க்ளை மாக்ஸ்ல ஒரு டூயட் பாட்டை போட்டு விடறது திடீர்னு பழக்கம் ஆகிடுச்சு, ராஜ பேட்டை போல் இந்த டான் 2லயும் க்ளைமாக்ஸ் பாட்டு ஹி ஹி டோண்ட் மிஸ் இட்..
24 comments:
ரைட்டு.
ஹிஹி செம!!!பார்க்கணும்
Right
Poor ajith fan C.P. U dont know billa2 is a prequel to billa1. do u know prequel?that means story happened before billa1.but don2 is sequel to don1.All ajith fans are like you.
மாப்ள இதுக்கு ஆனந்த விகடன் மார்க் எவ்ளோ... குமுதம் ரேங்க் என்ன... சிபி கமென்ட் என்ன.... அவ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம்,சி.பி சார்! நல்லா விமர்சிக்கிறீங்க! நீங்க தான் இந்தக்கால "சுப்புடு"!!!!!
பய புள்ளய்க்கு இந்தி தெரியும்ங்கர காரணத்துக்காக ஒன்னும் சொல்லாம போரேன் ஹிஹி!....புட் ச்சே பட் விமர்சனம் நல்லா இருக்கு சிபி அண்ணே!
விமர்சனம் அருமை அண்ணே. ஆனா 'பில்லா 2' படத்துக்கும், ஷாருக் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. தல நடிக்கிறது டேவிட் எப்படி பில்லா ஆனாங்கற கதையில தான்.
விமர்சனம் பஹுத் அச்சா ஹை பாய்...!!!
சசிகுமார் said...
மாப்ள இதுக்கு ஆனந்த விகடன் மார்க் எவ்ளோ... குமுதம் ரேங்க் என்ன... சிபி கமென்ட் என்ன.... அவ்வ்வ்வ்வ்வ்வ்//
இவனுக்குதான் ஹிந்தியே தெரியாதே ஹி ஹி...
பிரியங்கா சோப்ரா புட்டி ஹோகயா கியா...?
அபே கேய்செபி போலோ பர் மை பிரியங்கா சோப்ரா'க்கு பஹுத் பசந்த் கர்த்தாஹூங்...
இப்பவே பார்க்கனும்போல இருக்கே
சூப்பர்..
//பிரியங்கா முகத்தை இரசிக்க முடியவில்லை//.போங்க அண்ணே நா உங்க கட்சி காய்.:(..
நம் வலையில் செல்ல தேவதையும் ஒரு கள்ள சிரிப்பும்...
ஐயோ அம்மா காப்பாத்துங்க!!
அப்பா தல அடுத்த படமும் ஹிட்
இன்றய ஸ்பெஷல்
நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
எனக்கு மூணு கான்ல A தான் பிடிக்கும்!
அட அப்போ அஜித்துக்கு ஹிட் படம் ரெடியா??
பிரியங்காவ சும்மாவே எனக்கு புடிக்காது இதில் முற்றலா வேற இருக்காவா... அவ்வவ் நான் பில்லாவே பார்த்துக்கிறேன்..... ;))
அண்ணே விமர்சனம் ஓக்கே..
ஆனால் ஹிந்தி இயக்குனரிடம் தமிழில் கேட்பது தான் உதைக்குது?
உங்களின் திறமைக்கு நீங்கள் ஒரு ஆங்கில ப்ளாக்கினை உருவாக்கி திரைவிமர்சனம் எழுதலாமே?
கண்டிப்பாக ஆங்கிலப் பட, ஹிந்திப் பட இயக்குனர்களிடம் அவர்களின் தவறுகள் சென்று சேரும் அல்லவா?
அண்ணே நிரூபன் அண்ணே இன்னும் உங்களிடமிருது எதிர்பாக்கிறேன்
Aiyo...Aiyo..Don 1st part'la real Don kadaisiyila uyiroda thaa irupaar. Aana, Billa padathula Billa sethuduvaaru. Don 2 is a sequel to Don while Billa 2 is a prequel to Billa. Saatharana David Billa'vaana Ajith eppadi Billa'ngra periya Don aanaru engirathu thaa kathai. Ithu kooda theriyaama ivlo periya vimarsanam. Really pity ur ignorance.
Post a Comment