Thursday, November 24, 2011

The Shawshank Redemption - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movietrailers2.com/wp-content/gallery/the-shawshank-redemption/shawshank-redemption-picture2.jpg

ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி.. ஒரு கள்ளக்காதலன்.. உடனே கில்மாப்படமா?ன்னு யாரும் குதூகலப்படத்தேவை இல்லை.. ஓப்பனிங்க் சீன்லயே அந்த  கள்ளக்காதல் ஜோடி யாரோலோ சாகடிக்கப்படறா..  இந்த தத்தி போலீஸ்ங்க எப்பவுமே நல்லவனை. அப்பாவியைத்தானே அரெஸ்ட் பண்ணும்.. ? அந்தப்பொண்ணோட கணவனை அரெஸ்ட் பண்ணிடுது.. சந்தர்ப்பங்கள், சாட்சியங்கள் எல்லாமே அவனுக்கு எதிரா இருக்கு... அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிச்சு கோர்ட் தீர்ப்பு சொல்லிடுது..



ஹீரோ ஒரு பேங்க்ல ஒர்க் செஞ்சவர்.. நல்ல படிப்பு.. ஆனாலும் அவருக்கு நேரம் சரி இல்லை.. சம்சாரம் வழி தவறுது.. கொலைப்பழி  அவர் மேல விழுந்து செய்யாத தப்புக்கு தண்டனை.. இப்போ இவர் மகாநதி கமல் மாதிரி ஜெயில்ல என்னவெல்லாம் அவஸ்தைப்படறார்ங்கறதுதான் 70% படம்.. 1994 -ல் ரிலீஸ் ஆன படம் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் என நீளமான படமா இருந்தாலும் ஒரு சீன்ல கூட போர் அடிக்காத படம்..  படத்தோட திரைக்கதை, இயக்கம் எல்லாமே Frank Darabont தான்..

 Tim Robbins - Andy DufresneMorgan , Freeman - Ellis Boyd "Red" ReddingBob Gunton - Warden Samuel NortonWilliam ,  Sadler - HeywoodClancy  , Brown - Captain Byron Hadley

ஜெயில்ல ஹீரோ முதல் 2 வருஷங்கள் லாண்டரில வேலை செய்யறார்.. பிறகு தனது தொழில் அனுபவங்களின் காரணமாக ஜெயிலருக்கு ஃபைனான்சியல் அட்வைஸ் செய்கிறார்.. ஜெயிலில் உள்ள லைப்ரரியை விஸ்தீகர்க்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுகிறார் .. வாரா வாரம் நிதி வேண்டி மாநில அரசுக்கு அவர் எழுதும் கடிதத்துக்கு பலன் கிடைக்கிறது..

ஹீரோவின் ஆலோசனைப்படி ஜெயிலர் ஜெயில் கைதிகளை பப்ளிக் ஒர்க்ஸ்க்கு யூஸ் பண்ணிக்கறார்.. அதனால ஜெயில் கைதிகளுக்கு வெளி உலகத்தை பார்க்க ஒரு சந்தர்ப்பம்.. 

ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவியை கொன்றவன் அந்த ஜெயிலில் இருப்பதை கண்டு பிடிக்கிறான்.. அதை ஜெயில் அதிகாரியிடம் சாட்சியுடன் விளக்கும்போது அந்த சாட்சி மர்மமான முறையில் கொல்லப்படுகிறான்..  ஹீரோ ரிலீஸ் ஆவது பிடிக்காமல் செய்யப்படும் சதி.. ஹீரோ தப்பிக்க முடிவு செய்கிறான்.. எந்த தப்பும் செய்யாமல் 20 வருடங்கள் ஜெயிலில் சித்திரவதைகளை அனுபவித்து ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பி சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்கிறான்..

http://i2.listal.com/image/266791/600full-the-shawshank-redemption-screenshot.jpg

ரசித்த வசனங்கள்

1. வர்றவனுங்க எல்லாம் கேடிங்க.. ஆனா பாரு எல்லாரும் அப்பாவி மாதிரியே முகத்தை வெச்சுக்குவானுங்க..

2. நான் ரெண்டு விஷயம் நம்பறேன்.. 1. ஒழுக்கம் 2 . பைபிள்

3. மொத்த வாழ்க்கையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ள மாறிப்போறதை தாங்கிக்கவே முடியறதில்ல..

4. நான் நல்லவன் தான், ஆனா ஜட்ஜ் என்னை கெட்டவன்னு சொல்லிட்டார்..

5. என் பேரு ரெட்.. ஆனா நான் கறுப்பு.. டிஃப்ரண்ட்டான ஆளு..

6. இதை உங்க ஒயிஃப்க்கு கிஃப்ட்டா குடுங்க.. எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை..

7. நாங்க எல்லாம் சாப்பாட்டையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற ஆளுங்க..

8. தனிமை என்னை துரத்த ஆரம்பிச்சுது.. தனிமைதான் உலகின் பெரிய பழி வாங்கல்.. அதுவும் ஜெயில்ல தனிமைச்சிறை என்பது ரொம்ப கொடுமையானது.. 

9. நினைச்சதை உடனே செஞ்சு முடிக்கறவன் தான் மனுஷன்.. அதை தள்ளிப்போடறவன் அல்ல..

10. ஒருத்தன் உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் அவன் சோம்பேறியா இருக்க மாட்டான்..

http://www.listosaurusrex.com/wp-content/uploads/2008/01/stiff-breeze.PNG

11. நான் உருவாக்குன கற்பனை கதாபாத்திரத்துக்கு பர்த் சர்ட்டிஃபிகேட் , டிரைவிங்க் லைசன்ஸ் கூட  ரெடி..


12. வாழ்க்கைல தப்பு பண்ணாம யாராலயும் இருக்க முடியாது.. மாட்டிக்காம வேணா சிலர் இருக்கலாம்..



13. எதுக்காக நீ ஜெயிலுக்கு வந்தே?

வெளீல புழுக்கமா இருந்துச்சு.. அதான்.. கேக்கறான் பாரு கேள்வி..

14.  எதுக்காக இந்த பேப்பரை நீ எல்லாருக்கும் பாஸ் (PAUSE) பண்ணுனே?

ஹா ஹா.. நானா? எந்த பேப்பரையும் இதுவரை நான் பாஸ் (PASS) பண்ணுனதே இல்லையே..

15. செத்ததுக்குப்பிறகு 4 பேர் தூக்கிப்போட்டா என்ன? 40 பேர் தூக்கிப்போட்டா என்ன?

16. கனவு  காண , அதை நிறைவேத்த ஆண்டவன் நமக்கு 2 சான்ஸ் குடுத்திருக்கான்.. 1. எப்படி வாழனும்? 2 எப்படி சாகனும்?

17. மனசு ஒடிஞ்சவன் என்ன வேணாலும் செய்வான்.. தேவைப்பட்டா தற்கொலை கூட..

18.  நான் இன்னும் 500 கஜம் இந்த பாதாள சாக்கடையை  நீந்திக்கடக்கனும்.. மூச்சு விடாம..  5 ஃபுட் பால் கிரவுண்டுக்கு சமமான தூரம்.. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர்..

19. திருந்தறதும், வருந்தறதும் ஒண்ணுதானே.. திருந்தறதுக்கு 1 மாசம் போதாதா? அட்லீஸ்ட் 2 மாசம்? எதுக்காக 40 வருஷம் தேவைப்பட்டுது? எனக்கு?

http://i2.listal.com/image/266798/600full-the-shawshank-redemption-screenshot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேர படத்தில் ஒரே ஒரு சீன் தவிர பெண் கேரக்டர்களே இல்லாமல் செம இண்ட்ரஸ்ட்டாக ஒரு படம் கொடுத்ததற்காக பாராட்டலாம்..



2.  ஜெயிலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் சீனை  நிதானமாக காட்டியது.. பெரும்பாலும் ஹீரோ ஜெயிலில் வந்த உடன் அடுத்த நாளே தப்பி விடும் படங்களூக்கு இடையே 20 வருடங்கள் பிளான் பண்ணி ஸ்டெப் பை  ஸ்டெப்  திட்டம் போட்டு தப்பிப்பதாக காட்டியது..

3. ஹீரோ, நண்பர் ரெட்டாக வருபவர், ஜெயிலர் என பல தரப்பட்ட பாத்திரங்களின் இயற்கையான நடிப்பு..

4. எந்த வித செயற்கை ஒளியும் இன்றி அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு..

5. தேவையான இடங்களில் அமைதி.. தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒலிச்சேர்க்கை என பின்னணி இசையில் கவனம்..

http://i.telegraph.co.uk/multimedia/archive/01467/filmdone_1467999c.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ் டன் பை டைரக்டர் 

1.  ஹீரோ  ஜெயில் செல்லுக்குள் ஒரு ஹாலிவுட் நடிகையின் வால் போஸ்டரை மாட்டி வைத்திருக்கிறார்.. சிறை ரூம் என்ன சலூன் கடையா? எப்படி நிர்வாகம் அதை அனுமதிக்கிறது?

2. ஒரு மனிதனால் முக்கால் கி மீ தூரம் பாதாள சாக்கடையில் மூச்சை நிறுத்தி நீந்த முடியுமா?

3. ஹீரோ தனது நண்பர் ரெட் அவர்களுக்கு ஒரு குறிப்பு பேப்பர் தருவதும் , அதை ஃபாலோ பண்ணி அவர் ஹீரோவை கண்டறிவதும் நம்பும்படி இல்லை


 சி.பி கமெண்ட் - பல அவார்டுகளை அள்ளிய இந்தப்படம் அனைவரும் காண வேண்டிய படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியுடன் பார்க்கலாம்

19 comments:

ராஜி said...

1st review

rajamelaiyur said...

Second review

rajamelaiyur said...

Net la download panalama?

Unknown said...

Nadathu makka... nadathu

MANO நாஞ்சில் மனோ said...

ஹாலிவுட்காரனையே குத்தம் கண்டுபிடிச்சி சொல்றியா, டேய் அவனுக வெள்ளையா இருக்கானுகடா...!

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி எப்பவோ வந்த படத்துக்கு இன்னைக்கு விமர்சனம் போடுறியா, மக்களே பாருங்க இது வெளங்குமா இல்லை வெளங்குமான்னு கேக்குறேன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சரி, நல்லபடம்னு வேற சொல்லிட்டே பார்க்குறோம் ஹி ஹி...!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

டோன்ட் மிஸ் இட்... இந்த விமர்சனத்தை எல்லோரும் படிக்கலாம் குடும்பத்தோட...

நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

vimalanperali said...

நல்ல படம்.நானும் பார்த்தேன்,ஒரு நாவல் படித்தது போலவும்,ஒரு சிருகதையை விரிவாக்க்கம் செய்தது போலவும் இருந்தது,மிகவும் ரசிக்கும் படியான படத்தை மேலும் ரசிக்கும் படியாக செய்த உங்களது எழுத்துக்கள் மிக,மிக நன்று.வாழ்த்துக்கள்.

ராஜ் said...

IMDB சைட்டில் இந்த படம் தான் முதல் இடம் பிடித்துள்ளது.....இதற்க்கு அப்புறம் தான் God Father(1972) படமே.....
உங்க கிட்ட இருந்து God Father (1972) படத்தோட விமர்சனம் எதிர்பார்க்கிறேன்...

வவ்வால் said...

சிபி,

புதுசா கில்மா படம் கூட ரிலீஸ் ஆகலையா? ஷாஷான்க் படம் உலகபட வரிசைல பலரும் இங்கே ரிவியூ போட்டாச்சு. ஆனால் போடக்கூடாதா போடலாம் தான்.

குற்றவாளி வேறு ஒரு சிறையில் இருப்பதாக ஜிம்மி சொல்வான்.

வெளிநாட்டு சிறைல போஸ்டெர் இன்ன பிற செய்துக்கொள்ளலாம்னு பல படத்தில் காட்டி இருக்காங்க. இதே போல ஒரு ஜெயில் படம் ஹால்ப் பாஸ்ட் டெட் படமே விருமான்டி.லான்கெஸ்ட் யார்ட் ல சாக்கர் ஆடிக்கிட்டே இருப்பான்க ஜெயிலில்.

பெருசா அவார்ட் எதுவும் வாங்கலை. செகண்ட் ரிலீஸ்ல தான் நல்லப்பெயர் கிடச்சுது.

Anonymous said...

இன்னிக்கி வந்த படமா இருந்தாலும் சரி, பதினஞ்சு வருஷம் முன்னாடி வந்த படமா இருந்தாலும் சரி. பட விமர்சனம் பண்ணுறதுல, உங்கள தட்டிக்க ஆளேயில்லண்ண, ஆனா பாருங்க நீங்க நாளைக்கு மயக்கம் என்ன முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதலாம்னு பிளான் போட்டிருப்பீங்க, நான் உங்களுக்கு முன்னாடி எழுதலாம்னு முயற்சிக்கிறேன், பார்ப்போம்.

Mathuran said...

அசத்தல் விமர்சனம் அண்ணே

Napoo Sounthar said...

சூப்பர்..

Anonymous said...

MANO நாஞ்சில் மனோ said...
ஹாலிவுட்காரனையே குத்தம் கண்டுபிடிச்சி சொல்றியா, டேய் அவனுக வெள்ளையா இருக்கானுகடா...!//



செகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்.

Anonymous said...

//ஆரூர் முனா செந்திலு said...
நீங்க நாளைக்கு மயக்கம் என்ன முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதலாம்னு பிளான் போட்டிருப்பீங்க, நான் உங்களுக்கு முன்னாடி எழுதலாம்னு முயற்சிக்கிறேன், பார்ப்போம்.//

சபாஷ் சரியான போட்டி. சுனாமியே ஊருக்குள்ள வந்தாலும் வெள்ளிக்கிழம மொதோ காட்சி பாத்தே தீருவீங்க போல. நான் சாயங்காலம் விமர்சனம் போடறேன். ஹி..ஹி..

Anonymous said...

விமர்சனத்த விட படங்கதான் கண்ணுக்கு தெரியுது.

KANA VARO said...

நீங்க கடைசியா போட்டிருக்கிற படம் கில்மா தானே!

K.s.s.Rajh said...

////ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி.. ஒரு கள்ளக்காதலன்.. உடனே கில்மாப்படமா?ன்னு யாரும் குதூகலப்படத்தேவை இல்லை.. ஓப்பனிங்க் சீன்லயே அந்த கள்ளக்காதல் ஜோடி யாரோலோ சாகடிக்கப்படறா.. ////

ஒன்னுமே இல்லனா அப்ப என்னதுக்கு இதை பார்ப்பான் இருந்தாலும் நல்ல படம் என்று சொல்லிட்டீங்க ஒருக்கா பாத்திட்டா போச்சி....