காமெடி கம் ஆக்ஷன் படங்கள் ஹிட் ஆகறதும் அதை மறுபடி ரீமேக்கறதும் நமக்கு ஒண்ணும் புதுசு இல்லை.. 1960 ல ஹிட் ஆன படத்தை அதே கதை , அதே டைட்டில் , திரைக்கதைல மட்ட்டும் சின்ன சின்ன மாற்றங்களோட வந்து செம ஹிட் அடிச்ச படம் தான் இந்த ஓசன் 11..
ஹீரோ George Clooney ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் தன்னோட முன்னாள் பார்ட்னரும் , க்ரைம் கூட்டாளியுமான ஃபிரண்டை லாஸ் ஏஞ்சல்ஸ்ல போய் பார்க்கறாரு.. என்னா பிளான்னா தொடர்ந்து 3 கேசினோ கிளப்சை கொள்ளை அடிக்கறது.. பேங்கை கொள்ளை அடிக்கறதை விட இங்கே அடிச்சாத்தான் அதிக பணம் கிடைக்கும்.. லாஸ் வேகாஸ் போய் அங்கே இருக்கற ஒரு கேசினோ கிளப் ஓனரை மீட் பண்ணி திட்டம் பற்றி டிஸ்கஸ் பண்றாங்க..
பாக்சிங்க் போட்டி நடக்கறப்ப மேட்ச் ஃபிக்சிங்க்காக வர்ற பணம் மட்டும் 150 மில்லியன் டாலர்கள் .. அவ்வ்வ்வ்வ்.. இவங்க 3 பேரும் சேர்ந்து இன்னும் 8 பேரை செலக்ட் பண்றாங்க.. கேசினோ கிளப்ல ஒர்க் பண்ற 2 பேர் ( எந்த திருட்டுலயும் உள்ளாளுங்க வேணும்ப்பா), 2 மெக்கானிக்ஸ் , எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர், வெடி மருந்து ஸ்பெஷலிஸ்ட் னு 8 பேர் ரெடி பண்றாங்க..
11 பேரும் பிளான் பற்றி டிஸ்கஸ் பண்றாங்க.. 11 பேருக்கும் சம பங்கு காசுல.. பில்டிங்க் பிளான், யார் யாருக்கு என்ன ஒர்க்னு டிஸ்கஸ் பண்றாங்க.. அப்போத்தான் தெரிய வருது,, ஹீரோவோட முன்னாள் மனைவி ஜூலியா ராபர்ட்ஸ் தான் இப்போ கொள்லை அடிக்கப்போற கேசினோ கிளப் ஓனரோட இந்நாள் காதலி..
உடனே எல்லாரும் ஹீரோ கிட்டே நீங்க ஓப்பனா உங்க கில்மா கிட்டே சொல்லிட்டா அவங்களும் ஹெல்ப் பண்ணுவாங்கதானே? அப்டினு,.. ஆனா ஹீரோவுக்கு அது பிடிக்கல..
இந்த பிளான்ல உள்ள முக்கியமான 2 பிரச்சனைகள் என்னான்னா 1. 24 மணி நேரமும் வீடியோ கேமராக்களால் கண்காணிக்கப்படும் கிளப்..... 2. அலாரம் சிஸ்டம்/..
எல்லா தடைகளையும் மீறி அந்த 11 பேர் கொண்ட குரூப் எப்படி ஜெயிக்கறாங்க அப்டிங்கறதுதான் படம்.. இந்தபடத்துக்கு குழப்பம் இல்லாம திரைக்கதை எழுதவே 18 பேர் கொண்ட குரூப் வேலை செஞ்சாங்களாம்..
படம் முழுக்க ஸ்பீடா, காமெடியா போகுது.. தல அஜித்தின் லேட்டஸ்ட் ஹிட் மங்காத்தா இந்தப்படத்தோட லேசான தழுவல் தான்...
85 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்தப்படம் வசூல் செஞ்ச தொகை கொஞ்சம் மூச்சை பிடிச்சுக்குங்க - $183,417,150
மனதில் நின்ற வசனங்கள்
1. உன் கிட்டே நிறை காசு இருக்கா?
ஆமா..
அப்போ அதை தர்மம் பண்ணு.
2. விளையாட்டு எப்படி போய்ட்டு இருக்கு?
ரொம்ப மோசமா..
புரில..
உன் பொண்டாட்டி கூட நான் ஓடிப்போகப்போறேன். இப்போ புரியுதா?
3. இந்த வேலை செய்ய ரொம்ப கடுப்பா இருக்கு..
உன்னைப்பார்த்தாலே தெரியுது..
ஹூம், உனக்கும் தெரிஞ்சிடுச்சா?
4. எனக்கு வைட்டமின் சத்து தேவைன்னு டாக்டர் சொன்னாரு..
அட.. அப்படியா? அப்போ வைட்டமினை சாப்பிடவேண்டியதுதானே?
ஏன் கிண்டல் பண்றே?
5. உன்னை மாதிரி ஆளுங்க திருந்தக்கூடாதுடா.. திருந்துனா செத்துடுவீங்க..( வில்லனின் இந்த பஞ்ச் டயலாக் நம்ம சி எம்மை பார்த்து சொன்ன மாதிரியே இருந்துச்சு )
6. உங்களை விட உங்க பேர் ரொம்ப நீளம்
தமாஷா பேசறீங்க
7. டியர்.. நீ இப்போ உன் புது காதலன் கூட சந்தோஷமா இருக்கியா?
அவர் உன்னை மாதிரி என்னை அழ வெச்சு வேடிக்கை பார்க்க மாட்டார்..
8. ஹீரோ - எதேச்சையாய்த்தான் இங்கே நான் வந்தேன்.. நீ உன் புது காதலரோடு இருப்பேன்னு எனக்கு தெரியாது.
அடிக்கடி . எதேச்சையா இப்படி வரமாட்டீங்கனு நம்பறேன்
9. இதை சொல்ல உனக்கு உரிமை இல்லை.. எப்டி வந்தது?
நானா எடுத்துக்கிட்டேன்
10. அவ இப்போ அவன் கூடவா இருக்கா?
ஆமா. ஏன் அதுக்கு வாயைப்பிளக்கறே.?
இல்ல.. அவனை விட அவ ரொம்ப ஹைட் ஆச்சே? ( அனுஷ்கா மாதிரி போல)
11. கறுப்பா இருக்கறவன் தப்பு பண்ணுவானா? ( இதே டயலாக்கைத்தான் நம்ம ஆளுங்க சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேல் மூலமா உல்டா?)
12. உன் மனைவி எப்படி இருக்கா?
மறுபடியும் கர்ப்பமாகிட்டா..
ம்க்கும், அது உன்னைப்பார்த்தாலே தெரியுது..
13. சைலண்ட்டா இருந்தா 80 மில்லியன் டால்ர் மட்டும் லாஸ்.. வயலண்ட் காட்டுனா 160 மில்லியன் டாலர் லாஸ்.. எதுன்னு நீயே முடிவு பண்ணீக்கோ..
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. ஹீரோ செலக்ஷன் & அவரது அமர்த்தலான அசால்ட்டான நடிப்பு.. கோடம்பாக்கத்தில் இப்ப இருக்கும் ஹீரோக்களில் ஆர்யாவும், அஜித்தும் மட்டுமே இப்படி நடிக்க முடியும்.. ஹீரோவின் டிரஸிங்க் சென்சும் செம.
2. படத்தில் வரும் 11 கேரக்டர்கள், வில்லன், ஹீரோயின் என முக்கிய கேரக்டர்கள் எல்லோருக்கும் மனதில் பதியும் வண்ணம் காட்சிகள் அமைத்தது..
3. வழக்கமாக முதல் பாகத்தை விட ஒரு மாற்று கம்மியாகத்தான் 2ம் பாகம் இருக்கும். ஆனால் 1960-ல் வந்த ஒரிஜினலை விட ஸ்டைலிஷாக படத்தை எடுத்தது..
4. கதைக்கு தேவைப்படாவிட்டாலும் சாமார்த்தியமாக ஹீரோயின் கேரக்டரை தேவைபபடும் கேரக்டர் போல் ஆக்கியது..
இயக்குநர் செய்த சில லாஜிக் சொதப்பல்கள்
1. சீட்டாட்டத்தின் போது கார்ட்ஸை பார்க்காமல் பணம் கட்டுவது வேறு, பார்த்த பின் கட்டுவது வேறு.. பார்த்த பின்பும் தனக்கு வந்த கார்ட்ஸ் சரி இல்லை என்று தெரிந்தும் வில்லன் ஏன் அவ்வளவு பணம் கட்டறார்?
2. அலாரம் சிஸ்டம் கரண்ட் கட் ஆனால் செயல்படாது என தெரிந்து கரண்ட்டை கட் பண்ணி கொள்ளை அடிப்பது ஓக்கே.. ஆனால் கரண்ட் கட் ஆனால் ஆல்டெர்நேடிவ் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணாமலா இருந்திருப்பார்கள்? அவ்வளவு மதிப்பு மிக்க லாக்கர் சிஸ்டத்தில் இந்த சின்ன பாயிண்ட்டை நோட் பண்ண மாட்டாங்களா?
3. ஹீரோயின் புதுக்காதலனை ஆதரிக்கிறாளா? ஹீரோவுக்கு சப்போர்ட்டா? என்ற கேள்விக்கு தெளிவான பதிலே இல்லையே?
ஒளிப்பதிவு அட்டகாசம்.. படத்தில் வரும் அனைத்து நடிக நடிகைகளின் ஆடை வடிவமைப்பு செம..
சி.பி கமெண்ட் - ஆக்ஷன் பிரியர்கள் பார்க்க வேண்டிய ஜாலியான பொழுது போக்குப்படம்.. ஃபேமிலியோட பார்க்கலாம்.. டீசண்ட்டான படமும் கூட..

13 comments:
ரொம்ப சீக்கரமா விமர்சனம் பண்ணிட்டீங்க.இந்தப்படம்,அதற்கு அடுத்த 2 பகுதி எல்லாமே மாதம் ஒரு முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பராங்க.....
இருந்தாலும் உங்க விமர்சனம் ரொம்ப நன்றாக இருக்கு.
அருமையான விமர்சனம்!படம் பார்க்கவே வேணாம்!
படத்தின் கதை,நகரும் விதம்,திருப்பங்கள் என முக்கிய கரு பகுதி விமர்சனத்தில் அடிக்கடி மிஸ் ஆகி விடுகிறது.உடனே டக்குனு வசனம் பகுதிக்கு தாவிடுறீங்கன்னு நினைக்கிறேன்.கவனிக்கவும்.முதல் படம் ரொம்ப பெருசா இருக்கு,சிறிதாக்கவும்
ரொம்ப புது படம் போல
வணக்கம் சிபி.உங்க பதிவின் பக்கம் வந்து ரொம்பநாள் ஆகுது.வேலை அதிகம்.இப்போதான் கோபிநாத் பற்றிய பதிவுகூடக் கவனித்தேன்.இந்தப் பதிவின் விமர்சனம் எப்பவும்போல சூப்பர் !
படம் பார்க்கணும் போல இருக்கு .
ராயல் விமர்சனம் .
மங்ககாத்த வின்
ரியல் ஆத்தா இது தனோ !!!!!!!!!!!!
படம் பார்க்கணும் போல இருக்கு .
ராயல் விமர்சனம் .
மங்ககாத்த வின்
ரியல் ஆத்தா இது தனோ !!!!!!!!!!!!
விமர்சனத்தைப் படம் அருமையா இருக்கு..!! எந்த படம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..!!
அழகிய திரைப்பட விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள் சார் மிக்க நன்றி
பகிர்வுக்கு ............
அழகிய விமர்சனம்...
சிபி... ஐயாம் வெரி ஸாரி... ரொம்ப மொக்கையான விமர்சனம்... முக்கியமா ஹீரோயின் யார் பக்கம் என்பதை படத்தில் ரொம்பவும் தெளிவாக சொல்லியிருப்பார்கள்... படத்தின் அடுத்த பாகங்களை பார்த்து பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடவும்...
விமர்சனப் பகிர்விற்கு நன்றி பாஸ்.
படம் இனிமேத் தான் பார்க்கனும்.
Post a Comment