Monday, November 21, 2011

கோக்கு மாக்கு ஜோக்கு - BY எ மக்கு

1.டியர்.. என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போங்க..

ம்க்கும், நீயே அரிசி மூட்டை மாதிரிதான் இருக்கே.. நீ 118 கிலோ, நான் 68 கிலோ # காதல் பாரங்கள்

----------------------------------------

2. எது நல்ல குடி  எது கெட்ட குடி?

எவனாவது ஓசில சரக்கு வாங்கிக்குடுத்தா அது நல்ல குடி.. சொந்தக்காசுல வாங்க நேர்ந்தா அது கெட்ட குடி..

----------------------------------------------


3. 4 மணி நேரம் படிச்சு படிச்சு ஓடா தேஞ்சு போய்டேன்ன்ன்ன்..ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா.


ரன்னிங்க் போய்ட்டே படிச்சீங்களோ?

-----------------------------------------


4. நான் போடும் கேவலமான ட்வீட்களூக்கு என்னை திட்ட நினைப்பவர்கள் டி எம்மில் , அல்லது தனி மெயிலில் திட்டவும் பை மானஸ்தன் , மன்னார்குடி


-------------------------------------------

5. பெண்களோட ட்வீட்டுக்கு மட்டும்தான் எதிர்ட்விட் எழுதுவீங்களா?

ஹா ஹா ஆமா.. ஏன்னா ஆண்கள் எல்லாரும் ஓரினம். எப்படி சேம் சைடு கோல் போட?

-----------------------------------------

Aishwarya Rai Bachchan
[actress-wallpapers-collection-45.jpg]

6. டியர்.. நீங்க படிச்சவர்தானே? இது என்ன திசைன்னு சொல்லுங்க பார்ப்போம்

ம் இதுல என்ன சந்தேகம்.. உன் கூட இருக்கேனே, சனி திசைதான்

-----------------------------------------

7. சிம்பு நடிக்கும் ஒஸ்தியை  சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் டி.ஆர். # நோ டவுட் , படம் நாஸ்திதான்

------------------------------------------

8. பார்த்ததுமே ரசித்தால் அது மனசு சம்பந்தப்பட்ட ரசனை.. ஆராய்ந்து யோசித்த பின் ரசித்தால் அது மூளை சம்பந்தப்பட்ட ரசனை # சும்மா சொல்லி வைப்போம்

-------------------------------------

9. கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா?

டீச்சர்.. தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? பாஸ் ஆக மாட்டோமா? இதானா உங்க டக்கு? # பை எ மக்கு

-------------------------------------------

10. உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா: ஜெய்ராம் ரமேஷ் 'முகம் சுளிப்பு'! #  அண்ணனுக்கு த்ரிஷா குளியல் சி டி பார்சல்!

----------------------------------------


[actress-wallpapers-collection-45.jpg]
11. எங்கப்பாவுக்கு பாரத ரத்னா குடுக்கணும் - தீபிகா படுகோனே # உங்கம்மாவுக்கு நல்லா உதை குடுக்கனும், முதல்ல முந்தானையை நல்லா கவர் பண்ணம்மா.

-----------------------------------------

12. விஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் "துப்பாக்கி" # துர்பாக்கியம் தான் நமக்கு

-----------------------------------

13. .மகனே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கே, 5 நாள் இந்தியாவுல என்ன வேணாலும் வாங்கித்தர்றேன், ஓக்கே?

தாங்க்ஸ் மம்மி, இந்தியாவே வேணும் # அவ்வ்

--------------------------------

14. எனக்கு இந்த வேலையே பிடிக்கலை.. ஏன் மேடம் அவ்ளவ் சிரமம்?

வேலையை விட்ற வேண்டியதுதானே? ஆனா சம்பளம் மட்டும் வேணும்.. அதான் யோசிச்சிங்க்

-----------------------------------

15. அன்புள்ள முதல்வரே! அரசு நூலகங்களில் திடீர் என துக்ளக் இடம் பெற்றிருக்கிறதே? சோ வுக்கு நன்றிக்கடனா?

-------------------------

Beauty of kerala
image010

16.பெண்ணுக்கு டென்ஷன் தர்ற விஷயங்கள் சமையல்,சீரியல் ஹோம் ஒர்க் -தெரியுமா?

ஓக்கே மேடம், ஆனா ஆண்களுக்கு டென்ஷன் தர்ற ஒரே விஷயம்  பெண் தானே?

--------------------------------------------

17. நான் லூஸுன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க? 

24 மணி நேரமும் டாஸ்மாக்ல சரக்கடிச்சுட்டு செம டைட்டாவே இருக்கீங்களே?

----------------------------------

18. நீங்க அழகுன்னு சொன்னாதான் எங்களுக்கு அங்கீகாரமா? 

S மிஸ், சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்காத சினிமாவும், ஆணிடம் பாராட்டு வாங்காத பெண்ணும் 1

------------------------------------

19. . பாச சக்தி, பாசிச சக்தி என்ன வித்தியாசம்:? 

நம்மை பெற்ற அம்மா பாச சக்தி , நம்மை அம்போன்னு கைவிட்ட போயஸ் அம்மா பாசிச சக்தி

-----------------------------------

20. . மண வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

  10 வது மாசம் பையன் பிறந்தா வெற்றிச்செல்வன் எனவும், பொண்ணு பிறந்தா வெற்றிச்செல்வி எனவும் பெயர் வைங்க.

--------------------------------------

image0032

21. மிஸ்.. வாழ்த்துகள்.. இன்னைக்கு உலக மீனவர் தினம்..

சோ வாட்? 

நீங்க மீன ராசிதானே?

----------------------------------------------

22 பாடம் படிக்கலாம்னு புக்கை கையில எடுத்தேன், கரண்ட் கட்.. சகுனம் சரி இல்லையா? 

இல்ல, உங்களுக்கு நேரம் சரி இல்லை, எக்சாம்ல நல்ல பாடம் காத்திருக்கு உங்களுக்கு 

---------------------------------------------
23. ஆண்கள் சண்டை, பெண்கள் சண்டை என்ன வித்தியாசம்?

2 ஆம்பளைங்க சண்டை போட்டா அடுத்த நாளே சமாதானம் ஆகிடுவாங்க, ஆனா அடுத்த ஜென்மம் வரை நினைவு வெச்சிருப்பாங்க பெண்கள்

--------------------------------------

24. டாக்டர், எல்லாமே எனக்கு நெகடிவ்வாவே சொல்றீங்க, பாசிட்டிவ்வா எதுவும் சொல்லமாட்டீங்களா?  

ஓக்கே, உங்களுக்கு ஹெச் ஐ வி நெகடிவ்

------------------------------------

25  என் வீட்ல விசேஷம், எல்லாரும் வந்துடுங்க.. 

அது சரி.. எந்த வீட்ல விசேஷம்னு சொன்னாத்தானே வர முடியும்? உங்களுக்குத்தான் பல வீடுகள் இருக்கெ

--------------------------------------

image012a


டிஸ்கி - 1

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

 

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

 

 

 

31 comments:

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

நம்பர் 20 அசத்தல் .
நம்பர் 24 ரசித்தல்
ஆமாம்
திருமதி ஜஸ்வர்யா படம் -ரசனை ரொம்ப பலசா இருக்கே!!!!
குட்டி ஜஸ்வர்யா வந்த விசயம் தெரியாதா ????
டைட்டில் வழக்கம் போல ........ :--))))))))))))

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

நம்பர் 20 அசத்தல் .
நம்பர் 24 ரசித்தல்
ஆமாம்
திருமதி ஜஸ்வர்யா படம் -ரசனை ரொம்ப பலசா இருக்கே!!!!
குட்டி ஜஸ்வர்யா வந்த விசயம் தெரியாதா ????
டைட்டில் வழக்கம் போல ........ :--))))))))))))

முத்தரசு said...

என்ன எல்லாம் ஐஸ் போட்டோவா இருக்கே

முத்தரசு said...

எல்லா ஜில் போட்டோவும் சூப்பர் - எடக்கு மடக்கும் அப்படியே

முத்தரசு said...

பழசை மறக்க முடியலையோ! கிளுகிளுப்பு ஜில்லுக்கு ஜில் வந்தாச்சுங்கோ

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா அடுத்த ஜென்மம் வரை நினைவு வச்சு தாக்குவாங்களா...? முடியல....

MANO நாஞ்சில் மனோ said...

பல வீடுகள் வைத்திருப்பவன் அரசியல்வியாதி ஆச்சே....?

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் கண்ணுக்கு குளுர்ச்சியா இருக்குடா அண்ணா....!!

Unknown said...

சார் சூப்பரா இருக்கு...நீங்க சொன்னா மாதிரியே கமன்ட் போட்டுட்டேன் சார்!

சக்தி கல்வி மையம் said...

19 செம...
டைமிங் ...

சசிகுமார் said...

2 சூப்பர் மாப்ள... எல்லாருமே என்ன போலவே think பண்றாங்களே..

ராஜி said...

டியர்.. என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போங்க..

ம்க்கும், நீயே அரிசி மூட்டை மாதிரிதான் இருக்கே.. நீ 118 கிலோ, நான் 68 கிலோ # காதல் பாரங்கள்
>>>
உண்மையை அப்படியே மத்தி சொல்ற மாதிரி இருக்கு

ராஜி said...

என் வீட்ல விசேஷம், எல்லாரும் வந்துடுங்க..

அது சரி.. எந்த வீட்ல விசேஷம்னு சொன்னாத்தானே வர முடியும்? உங்களுக்குத்தான் பல வீடுகள் இருக்கெ
>>>
ஓ இது வேறயா வெளங்கிடும்

ராஜி said...

பெண்ணுக்கு டென்ஷன் தர்ற விஷயங்கள் சமையல்,சீரியல் ஹோம் ஒர்க் -தெரியுமா?

ஓக்கே மேடம், ஆனா ஆண்களுக்கு டென்ஷன் தர்ற ஒரே விஷயம் பெண் தானே?
>>>>
ஓ அப்பிடியா! உங்க வீட்டம்மா போன் நம்பர் 9********* தானே ஓக்கே ஒக்கே

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?

போன வாரம் முழுவதும் கொஞ்சம் பிசியுங்க!
பதிவு போட்டு விட்டு எஸ் ஆகிடுவேன்!

ஹி...ஹி...

ஆனாலும் மறுபடியும் வந்திட்டோமில்ல!

நிரூபன் said...

கோக்கு மாக்கு ஜோக்கு - BY எ மக்கு //

அண்ணே ஏ மக்கு அப்படிப் போட்டிருந்தால் உங்களைப் பார்த்து மனோ அண்ணா பேசுற மாதிரி இருக்குமில்லே.

நிரூபன் said...

4. நான் போடும் கேவலமான ட்வீட்களூக்கு என்னை திட்ட நினைப்பவர்கள் டி எம்மில் , அல்லது தனி மெயிலில் திட்டவும் பை மானஸ்தன் , மன்னார்குடி
//

அண்ணர் மறைமுகமா தன்னை திட்ட வேணாம் அப்படீன்னு சொல்லுறாரோ?

நிரூபன் said...

எல்லாமே முத்துக்களாக இருக்கின்றன.
இம் முறை அரசியல் கலந்து மக்கள் உணர்வுகளைச் சொல்லியிருப்பது இன்னும் சிறப்பாக இருக்கின்றது.

குறையொன்றுமில்லை. said...

பார்த்ததுமே ரசித்தால் அது மனசு சம்பந்தப்பட்ட ரசனை. ஆராய்ந்து யோசித்தபின் ரசித்தால் அது மூளை சம்பந்தப்பட்ட ரசனை. அதில் இது எந்த ரகம்?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

24 ஆவது சரிதானான்னு பாருங்க எனக்கு என்னமோ தப்பு மாதிரி தோணுது

Anonymous said...

Nice tweets...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே வணக்கம்னே... சவுக்கியமா?

காமெடி துணுக்கு சூப்பர்...

சந்தானம் as பார்த்தா said...

(11)-இல் யாரை சொல்கிறீர் to cover? deepika or Ash?

K.s.s.Rajh said...

////1.டியர்.. என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போங்க..

ம்க்கும், நீயே அரிசி மூட்டை மாதிரிதான் இருக்கே.. நீ 118 கிலோ, நான் 68 கிலோ # காதல் பாரங்கள்
////
ஹி.ஹி.ஹி.ஹி ஆரம்பமே அசத்தல்

K.s.s.Rajh said...

ஏன்ணே ஜஸ்வர்யா ராய் படத்தை போட்டு மனசை காயப்படுத்துறீங்க

KANA VARO said...

கலக்கல் பாஸ், துப்பாக்கி.. தகவலுக்கு நன்றி

ஹேமா said...

என்னமோ சொல்லி வையுங்க சிபி !

ம.தி.சுதா said...

cp திபிகா படுகொன் அந்த ருவிட் பாத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

Philosophy Prabhakaran said...

கரு பழனியப்பன் படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஏதேதோ வசனம் வச்சி கடகடன்னு பேசுவாரு... அந்த மாதிரி இருக்கு...

ஸ்ரீராம். said...

பதிமூணு : ஹா..ஹா...கேட்பது அரசியல்வாதியின் மகனோ....!!

அரசு நூலகங்களில் துக்ளக் கிடைக்காதிருந்தது என்பதே தெரியாது...அது போலவே கிடைப்பதும் நியூஸ்!

21, 22, 24,25.....ஹா...ஹா...