Saturday, November 26, 2011

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFszLvClt3XPJfVwQ1jYdRuHFvi8PkThI8sh2BR7jy8wP0jYWJElstJnmfTpN9q-Fom-YyNbrKLxXKNlMM4-j_zJnQdDPajWiOZVTPmFXxusakJrCusK9yh8RiEITySIa8XGckxv9863g/s1600/mayakkam-enna+ARV1.jpg"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்-ஐ வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபத்பாய்  தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.


ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

படத்தின் பெரும்பகுதி சூட்டிங் கேரளா, சென்னை, கோவை தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து முடிந்துள்ளது

http://tamil.oneindia.in/img/2011/09/20-selvaragavan-gitanjali300.jpg


1.உங்க படம் எப்பவும் ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லாருக்கு, செகண்ட் ஆஃப் சொதப்பிடுதே? ஏன்? 

ஃபர்ஸ்ட் ஆஃப் அடிச்சு முடிச்சதும் மட்டை ஆகிடறேன்,அதான்

-------------------------------------

2. ஆர்வக்கோளாறுல மயக்கம் என்ன படம் பார்க்க நினைக்கறவங்களுக்கு ஒரு வார்த்தை.. அது ஏதோ கலாச்சாரக்கோளாறுள்ள படமாம், BE CAREFULL


------------------------------------
3. தனுஷ் - எனக்கு எந்த மாதிரி கேரக்டர் தரனும்னு எங்கண்ணனுக்கு நல்லா தெரியும்.# அட போப்பா , அண்ணன் ஆப்பு வெச்சது கூடத்தெரியாம ...


------------------------------------
4. மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே -னு ட்விட்டர்ல சொன்னீங்களே? சார்.. படம் பார்த்தவங்க எல்லாம் கில்ட்டி ஃபீலிங்க்ஸோட போறாங்களே?அவ்வ்வ்வ்

-------------------------------
5. மயக்கம் என்ன? படம் அட்டர் ஃபிளாப் - இன்னொரு நடு நிசி நாய்கள் என பிரிவ்யூவில் படம் பார்த்த நண்பர் சொன்னார் அட தேவுடா.யூ டூ செல்வராகவன்?


----------------------------------------
http://2.bp.blogspot.com/-IA6HyiOfuaA/TqZXvjqzsiI/AAAAAAAARI8/sfnaNp7Aufo/s1600/Mayakkam-Enna-Stills-004.jpg
6. தமிழ்க்கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கு, என்னதான் மாடர்னா படம் எடுக்கறோம்னு சால்ஜாப்பு சொன்னாலும் வரம்புமீறும் படங்கள் அடிவாங்குவது உறுதி

------------------------------------
7. செல்வராகவன் - மயக்கம் என்ன படத்துல முதல் முறையா காமெடி ட்ரை பண்ணி இருக்கேன் # காமநெடியைன்னு சரியா சொல்லுங்க சார்

-------------------------------------
8. மிஸ்டர் செல்வராகவன், ஒன் பை டூ அப்டினு டீக்கடைல சொல்லலாம், பெட்ரூம்ல சொல்லலாமா?ஷேர் பண்ணிக்க இதென்ன ஷேர் ஆட்டோவா?

--------------------------------------------
9. படம் படு மொக்கையாம். ஒரே ஃபிகரை 3 ஃபிரண்ட்ஸ் வெச்சுக்கறாங்களாம் , கண்றாவிப்படம்

---------------------------------------
10. படத்துல பல லேயர்ங்க இருக்கறதா டைரக்டர் ட்விட்டர்ல சொன்னாரே? ஒரு லேயர் கூடவா நல்லாலை? 

பல லாயர்ங்க தான் கேஸ் போடப்போறாங்களாம் அவ்வ்வ்

---------------------------------------------

http://img1.dinamalar.com/cini/ShootingImages/13252927546.jpg

11. 50 ரூபா டிக்கெட் 25 ரூபா, 25 ரூபா டிக்கெட் 10 ரூபா வாங்க சார்  புதுப்படம்  வந்தா கேண்டீன்ல மிக்சர் வேற ஒரு பாக்கெட் ஃபிரீ # மயக்கம் என்ன

-------------------------------

12. என் படம் அடுத்த தலைமுறைக்கானது.

அடடா.. சார், அப்போ ஏன் இப்போ ரிலீஸ் பண்ணுனீங்க? 20 வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணி இருக்கலாமே?

---------------------------------

13. என் படம் பிரமாதமா ஓடும் பாருங்க..

தியேட்டரை விட்டுத்தானே?

-----------------------------------

14. 1.12.2011 வியாழன் அன்று வெளி வர இருக்கும் எம் சசிகுமார்-ன் போராளி வெளியாகப்போகும் பெரும்பாலான தியேட்டர்கள் மயக்கம் என்ன ஓடும் தியேட்டர்ஸ்தான்.. அப்போ ஏற்கனவே ரிசல்ட் அவுட்டா?  படம் அவுட்னு

--------------------------------------

15. நாந்தான் டைரக்டர், தம்பி தான் ஹீரோ, என் சம்சாரம் தான் புரொடியூசர்...

அடங்கொன்னியா. குடும்பப்படம்னு சொன்னதுக்கு இதானா அர்த்தம்?

-------------------------------------------

16. உங்க படம் செம கிக்கான படம்னு எப்படி சொல்றீங்க?

படத்துல வர்ற எல்லா கேரக்டரும் எப்பவும் சரக்கு அடிச்சுட்டே இருப்பாங்களே?பார்க்கலை?

------------------------------------

17. சார்.. படம் நல்லாருக்கு, கொஞ்சம் மெதுவா போகுது, அவ்வளவுதான்.

. நல்லா தூக்கம் வருதுன்னு சொல்றீங்களா?

------------------------------------

18.சார்,உங்க படம் பியூட்டி ஃபுல்.....

ரொம்ப தாங்க்ஸ்..

அதாவது THE BEAUTIFULL MIND  ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கு  # மயக்கம் என்ன?

-----------------------------------------------

டிஸ்கி -

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

 

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

18 comments:

Shanmugasundaram said...

Hi Senthil, your posts are copied...
http://www.enayamthahir.com/2011/11/blog-post_518.html

Unknown said...

காமடி கும்மின்னா என்ன யாரவது கும்முவாங்க நீர் வாங்கிப்பீரா ஹிஹி!

K.s.s.Rajh said...

படத்தை பார்த்தால் மயக்கம் வருவது உறுதி அதான் மயக்கம் என்ன என்று டைட்டில் வைச்சிருக்காங்க போல

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ இந்த படமும் ஊத்திகிச்சா...?

MANO நாஞ்சில் மனோ said...

Shanmugasundaram said...
Hi Senthil, your posts are copied...
http://www.enayamthahir.com/2011/11/blog-post_518.html//

"குற்றம்" நடந்தது என்ன....?

MANO நாஞ்சில் மனோ said...

என் படம் பிரமாதமாக ஓடும் பாருங்க///

தியேட்டரை விட்டுத்தானே ஹி ஹி...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

Napoo Sounthar said...

ஹி.. ஹீ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனமும் போட்டு கும்மவும் செயரிங்களே... தாங்குவாரா செல்வா?


நம்ம தளத்தில்:
மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

Sivakumar said...

ஆறாவது பாய்ன்ட் செம போடு.

ADMIN said...

வழக்கமான அசத்தல் பதிவு!!. சி.பி. ஸ்டைலே தனிதான்..!!

ADMIN said...

எனது வலையில் இன்று

Gmail-ல் இருந்தவாறே பிளாக்கரில் post செய்ய !!

மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!

Yoga.S. said...

எப்புடியோ................ ஓடினா சரி!(ரொப்பிக்கவும்)

கும்மாச்சி said...

சி.பி. இந்தப் படமும் பார்க்க வேண்டாங்கறீங்க, துட்டு மிச்சம்.
திருட்டு வி.சி.டி இருக்கவே இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ananthu said...

சி.பி படம் நல்லா இல்லேன்னா உங்க அளவுக்கு யாரும் கலாய்க்க முடியாது ... அருமை ... இதே படத்திற்கான மயக்கம் என்ன - அரை மயக்கம் ...என் பதிவை பார்க்குமாறு அழைக்கிறேன் ... http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html

குறுக்காலபோவான் said...
This comment has been removed by the author.
குறுக்காலபோவான் said...

ஜோக்செல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ஆனால் "என் படம் அடுத்த தலை முறைக்கானது" அந்த ஜோக்கெல்லாம் ரொம்ப மட்டமான ஜோக் சார்!
விமர்சிப்பதென்றால் நாகரிகமாக குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.அதை தவிர்த்து ஒரு படைப்பாளியை கேவலபடுத்தாதீர்கள் தயவுசெய்து.....
மற்றும்படி பதிவு நன்று!
" The beauty mind "திரைப்படத்தின் நகல் என்பது பொய் என்கிறார்கள் ஒரு தரப்பு.
உண்மை பொய் யாமறியோம். அதன் நகல் என குரல் கொடுக்கும் தோழர்களில் பலர் "The beauty mind " ஐ பார்த்திருக்கவே மாட்டார்கள். நகல் என்றால் ஒரு பதிவு மூலம் உறுதிப் படுத்துங்கள்.அல்லது.....