Tuesday, November 22, 2011

கோதுமை ரொட்டி ,ராகி ரொட்டி , ஷமீரா ரெட்டி , ( ஜோக்ஸ்)

1.கலகலப்பாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் நபர்கள் அனைவருமே எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று சொல்லி  விட முடியாது

-------------------------------------

2. ஆண்களின் கவலைகள் தங்களது பழைய காதலியைப்பற்றியதாகவும் , பெண்களின் கவலைகள் தங்களது மழலை பற்றியதாகவும் இருக்கிறது

--------------------------------------

3. பெற்றோர், உற்றார் உறவினரை விட்டு திரை கடல் ஓடி திரவியம் தேடுபவர்கள் தங்கள் மனதை சொந்த ஊரிலும், உடலை வந்த ஊரிலும் வைத்திருப்பார்கள்

-----------------------------------------

4. . நீச்சலைப்போன்ற சிறந்த உடற்பயிற்சியும் இல்லை, நடனத்தைப்போன்ற சிறந்த மனப்பயிற்சியும் இல்லை

------------------------------------

5. சொந்த ஊரிலேயே பணி அமையப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்

----------------------------

 



6. உற்சாகமாக இருக்கும்போதும், உருக்கமான தருணங்களிலும் இசைதான் நமக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கிறது

----------------------------------

7. அரசாங்கப்பணியில் இருக்கும் அனைத்து ஆண்களூம் அந்தப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுஅவரவர் மனைவிக்கு அந்த பணி, இனி ஆண்கள் சமையல் மட்டும்-ஜெ@ இமேஜினேஷன்

-----------------------------------

8. என் பொண்ணை பூ மாதிரி பார்த்துக்கனும், அவ எது சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டனும், அது மாதிரி மாப்ளையா பாருங்க தரகரே!!

--------------------------------

9. ஏய்.. மிஸ்டர், ஏன் என்னை ஃபாலோ பண்றீங்க? 

யூ ஆர் மிஸ்டேக்கன் மீ.. உங்களை தேத்த அல்ல.. என் பிளாக்ல ஒரு ஃபாலோயர் தேத்த

------------------------------------

10. உங்களுக்குப்பிடிச்சது கோதுமை ரொட்டியா? ராகி ரொட்டியா? 

ரெண்டும் இல்லை.. ஷமீரா ரெட்டி

---------------------------------



11. நீ ஏன் கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கே?

அன்புள்ள தாத்தா, இது யூத்துங்க மேட்டர். நீ வேடிக்கை மட்டும் பார், நோ பொறாமை

------------------------------------------

12. அன்பு, காதல் ரெண்டும் ஒன்னா ?

அன்பு என்பது எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலுத்துவது.. காதல் என்பது செலுத்தும் அன்பை திருப்பி எதிர்பார்ப்பது

-----------------------------------------

13.  சார், நான் ட்விட்டருக்கு புதுசு, எப்படி ட்வீட் போட? 

சினிமா பாட்டு லைன்ஸ் நடுவால இருந்து எடுத்து விடு, யாருக்கும் தெரியாது

------------------------------------

14. மேடம், ட்வின்ஸ் பிறந்திருக்குன்னு சொன்னீங்க, ஒண்ணு இங்கே இருக்கு, இன்னொண்ணு எங்கே இருக்கு? 

ஐஸ்வர்யா ராய் -அந்த இன்னொண்ணு தாங்க இது 


------------------------------------

15. எது வழுக்கை என்று புரியும் முன்பே முடி எல்லாம் கொட்டி விடுகிறது # கேனத்தனமான தத்ஸ்

--------------------------------------


16. ஈரோட்டில் ஒரு வீட்டில் - கணவன் - ஒரு கப் ஹார்லிக்ஸ்..

மனைவி - என்னடா கேட்டே?

கணவன் - கொண்டு வரவா?ன்னு கேட்டேன்

=-------------------------------

17. ஒரு பிரபல டென்னிஸ் வீராங்கனையின் டி சர்ட் வாசகம் - அப்பப்ப மேட்சையும் பார்க்கவும் ( தமிழாக்கம் - தயிர் வடை தேசிகன்)

----------------------------------

18. உண்மையான நண்பன் நம்மை தவறு செய்ய விடுவதில்லை

-------------------------------

19. பால்ய கால நண்பனுடன் பேசும்போதுதான் நம் வாழ்க்கை எவ்ளவ் தூரம் மாறி இருக்கிறது என்பதை உணர முடிகிறது

---------------------------------

20. மாப்ளைக்கு என்ன வேலை? ஜூ (ZOO) ல?   

உள்ளே தூங்கிட்டு இருக்கற மிருகத்தை தட்டி எழுப்பற வேலை

--------------------------------




26 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் வருகை

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே தலைப்பு சூப்பர். எப்புடிண்ணே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

நாலாவதுல தத்துவம் மாதிரி போட்டிருகிங்க....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அஞ்சாவது உங்களுக்கு நீங்களே போட்டுக்கிடிங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எட்டாவதா சொல்லி இருக்கிறது உங்க அனுபவமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒன்பதாவது பதிவுலக நிஜம்....

குரங்குபெடல் said...

"எது வழுக்கை என்று புரியும் முன்பே முடி எல்லாம் கொட்டி விடுகிறது "


pudhiya tatthuvam 125897

he . . heeeee .....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பத்தாவது தலைப்புக்கு விளக்கமா? ரைட்டு

ராஜி said...

படங்கள் அனைத்தும் கலக்கல்

Napoo Sounthar said...

சூப்பர்..

Anonymous said...

அனைத்தும் கலக்கல்...

Menaga Sathia said...

16 வது சொல்லியிருப்பது உங்க அனுபவமா??

Yoga.S. said...

மூணாவதா சொல்லியிருக்கிறதோட நான் உடன்படுகிறேன்!அதுக்காக,மத்ததெல்லாம் வேஸ்ட்டுன்னு சொல்ல வரல!

Anonymous said...

ஜூல நல்ல வேலை... ஹீ ஹீ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20ஆவது ஜோக், ஸூப்பர்.

Philosophy Prabhakaran said...

9, 13, 16ல் உங்க சுய விமர்சனங்கள் ரசிக்க வைத்தன...

ஸ்ரீராம். said...

ஒன்று - சோகத்தை சந்தோஷத்தில் மறைக்கிறார்கள்/மறக்கிறார்கள்!
பனிரெண்டு - அன்பு இயல்பு, காதல் - (பண்டமாற்று) வியாபாரம்!
பதினேழு....ஹா..ஹா...ஹா..
பதினெட்டின் தொடர்ச்சி.....தவறு செய்தாலும் மைன்ட் செய்வதில்லை!
பத்தொன்பது .... சமீபத்தில் உணர்ந்த வரிகள்!
இருபது - ஆஹா....!

Unknown said...

நீச்சலைப்போன்ற சிறந்த உடற்பயிற்சியும் இல்லை நடனத்தைப்போன்ற சிறந்த
மனப்பயிற்ச்சியும் இல்லை சிபி ஜோக் போன்ற மனக்குளிர்ச்சி எதிலும் இல்லை
ஹஹஹ....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
test said...

அஞ்சாவதா சொன்னீங்க பாருங்க! அது முற்றிலும் உண்மை! அவ்வ்வ்!

சக்தி கல்வி மையம் said...

maapla present.,

K.s.s.Rajh said...

////. ஆண்களின் கவலைகள் தங்களது பழைய காதலியைப்பற்றியதாகவும் , பெண்களின் கவலைகள் தங்களது மழலை பற்றியதாகவும் இருக்கிறது
/////

அட சரியாகக் கண்டுபிடிச்சிருக்கீங்க பாஸ்

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

ஏனைய தொகுப்புக்களும் அருமை குறிப்பாக ஜஸ்வர்யா ராய் டுவீண்ஸ் காமடி சூப்பர்

கடம்பவன குயில் said...

9. நீங்க இப்படித்தான் ஃபாலோயர்ஸ்ஸைத் துரத்திப் பிடிச்சீங்களா???

கடம்பவன குயில் said...

//11. நீ ஏன் கூலிங்கிளாஸ் போட்டிருக்கே?

அன்புள்ள தாத்தா இது யுத்துங்க மேட்டர். நீ வேடிக்கை மட்டும் பார்//

இதப் பார்ரா...ஒரு தாத்தாவே தாத்தா ஜோக் போட்டிருக்கிறத!!!