தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.
இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.
1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை
---------------------------------------
2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் #j.opp
----------------------------------
3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?
-------------------------------------
4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......
-----------------------------
5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்
------------------------------------------
6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்
------------------------------------
7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?
2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி
-------------------------------------------
8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?
தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த
-----------------------------------------
9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்
------------------------------------------
10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க
------------------------------------
11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த நடுத்தர மக்களை கை விடாதே
------------------------------
12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா
-----------------------------
13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்
----------------------------------
14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்
-----------------------------------
15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?
---------------------------------------
16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு
---------------------------------------
17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்
-----------------------------------
18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????
--------------------------------
19. அமாவாசைன்னா பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?
---------------------------------
20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்ஷன் 365
----------------------------------
21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி
-----------------------------------------
22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?
பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?
-------------------------------------------------
23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....
----------------------------------------
24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?
--------------------------------------
25.அண்ணே.. டீ இன்னும் வர்லை..
டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே
-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு
-----------------------------------------------
27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.
-----------------------------------------
30 comments:
'பெறும் கடன்'
இதை 'பெரும்'னு மாற்றவும்.
சிபி, செம்ம காரம்.
சிபி. இதுக்கு 'நகைச்சுவை'னு லேபிள் கொடுத்ததை வன்மையாய் கணடிக்கிறேன்.
இனி எல்லாம் ஏறும்
இன்று என் வலையில்
தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?
சுடச்சுட கும்முறிங்க பாருங்க அதான் தல.
23- நக்கல் தானே?
அத்தனையும் சூப்பர்...
தம்பி இன்னும் டீ' வரலை...?
டேய்..பலே இன்னும் வரலேயடா !
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால், இனிமே அதெல்லாம் கிடையாது !
தலைப்பு மட்டும்: நான் தாரேன்...
அம்மா தாயே வயித்துல பால வார்க்கச் சொல்றதுன்னா இதானா...
வயித்தக் கிழிச்சா (!)
கலக்குங்க...
நக்கல் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது. நண்பரே கொஞ்சம் பாத்து எழுதுங்க உங்க பதிவை அம்மா படிச்சாங்க உங்களுக்கு வர கமெண்ட்ஸ்க்கு கூட வரி போட்டுட போறாங்க.
வருசத்துக்கு ஒரு தேர்தல் வரணும் அப்பத்தான் இவங்க அடங்குவாங்க..
என்ன கொடுமை சார் இது?
:(
அம்மா அவங்க ஆட்சிக்கு பால் ஊத்தல நாம்தான் நம்ம வாழ்க்கைக்கு பால் ஊத்திகிட்டோம் அவங்கல குறை சொல்லி குத்தமில்ல
நிறைய இலவசங்கள் கொடுக்கறதா வாக்கு கொடுத்தாச்சி..
வேற என்னதான் செய்யுறது...
இனிமே எல்லாம் இப்படித்தான்! விர்.. விர்.. கிர்.. கிர்..
விஜய் கிட்ட சொன்னா தமிழக மக்கள் கிட்ட ஆளுக்கு ஒரு ரூபாய் கலெக்ட் பண்ணி, பற்றாக்குறையைத் தீர்த்துடுவாரே...! ஏன் அந்த யோசனை அம்மாக்கு வரலை!!
எம்ஜிஆர் இப்போ இருந்துருந்தா கண்டிப்பா மலையில இருந்து குதுச்சிருப்பார்...!!!
நாசமாபோன விலைவாசி, டேய் அண்ணா வா போராட்டம் நடத்துவோம் உன் தலையில ச்சி ச்சே தலமையில....
அண்ணே....கவுத்துடாங்கண்ணே...
எல்லாமே சூப்பர்ர்!!
சிபி,
ஒரு சனநாயக நாட்டில் மக்களால் , மக்களாட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அதிபர் , மக்கள் நலனை முன்னிட்டு செய்த நியாயமான ஒரு சின்ன விலையேற்றத்தை இப்படி எதிர்ப்பது சரியா? அவர்களுக்கு நம்மைப்போன்ற மானமுள்ள, தமிழர்கள் ஆதரவு தெரிவித்து பாராட்ட வேண்டாமா?
உங்கள் பதிவு நடுநிலை தவறிவிட்டது, என வன்மையாக கண்டிக்கிறேன். விலையுர்வை ஆதரித்து பதிவு ஒன்று போட்டு பிராயசித்தம் தேடுங்கள்!
விலை உயர்வை ஆதரித்து பதிவு போட்டு இருக்கேன் பாருங்க!
@NIZAMUDEEN காமெடி 'கடுப்பு' கும்மி என தலைப்பிருப்பதால், நகைச்சுவை லேபிள் பரவாயில்லை.
ஜெ,கலைஞர் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு வேறு ஓரு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவாருங்கள் சிலவேளை எதாவது மாறுதல் வரும்.....
ஆஜர் .
இளைய தளபதி ஒரு டிரென்ட் செட்டர்(trendsetter) - ஓர் அலசல்
http://lollushabha.blogspot.com/2011/11/trendsetter.html
அட்டகாசமான அட்டாக் தம்பி . . .
விலையேற்றம் தேவைதான் என நினைக்கிறேன்! இலவசமாஎல்லாத்தையும் வாங்கிற தமிழன் இதையும் வாங்கிகிடட்டும்!
DON'T COMPARE CHICKEN,MUTTON WITH ALCOHOL.THIS IS LIKE FOOD.FIRST CORRECT IT.....
NICE POST AND JAY MAM WASTE....
Super post boss..! Nammala pesa dhana mudiyum..!! Irundhalum paakravangalukku puriyum..!
Post a Comment