நீயா? நானா? விஜய் டி வி யின் டி ஆர் பி யை எகிற வைத்த நிகழ்ச்சி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.. டைமிங்கான டைட்டிலில் வாத விவாதங்கள் சூடு பறக்கும்.. கோபிநாத் தனது ஆணித்தரமான வாதங்களால், ஆளுகை செய்யும் பாடி லேங்குவேஜால் பலரது மனம் கவர்ந்தவர்.. ஆனால் வர வர அவரது ஸ்கில் குறைந்துவிட்டது போல் தோற்றம் அளிக்கிறது.. ஏற்கனவே ஒத்திகை பார்த்து வந்து நடத்தும் நாடகம் போல அவர் நிகழ்ச்சி அமைகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன..
இந்த வேளையில் இலங்கையில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மெயிலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவர் தொலை பேசியில் என்னுடன் பேசி அவர் தம் ஆதங்கத்தை தெரிவித்தார்...
வணக்கம் அண்ணன்,
நான் உங்கள் பதிவுகளை வாசிப்பவன் என்ற முறையில் தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலமாக இதனில் உள்ள குறைபாடுகளை வாசகர்களுக்கு சுட்டிகாட்டுவீர்கள் என நம்புகிறேன். கடந்த 6 ஆம தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நபர் பேசிய வீடியோ பதிவுகளை இதனுடன் இணைத்துள்ளேன்,
இவ்விடியோவில் வங்கியில் பணி புரிவதாக கூறுபவர் மிகவும் நாகரிகமான முறையில் தன் கருத்துகளை பதிவு செய்கிறார். அடுத்ததாக பேசுபவர் தான் UK வில் மூன்று வருடங்கள் ஒரு பெண்ணுடன் ஒன்றாக இருந்ததாகவும் இந்தியா வந்ததும் பெற்றோரின் எதிர்ப்பால் தன் காதலியை கைவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். அத்துடன் அந்த பெண்ணை தானே கைவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் நண்பர்களுக்கு தெரிவிப்பதாகவும் கூறுகிறார்.
இப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பதன் மூலமாக அந்த பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படாதா ? இவரை அடுத்து பேசுபவர் இதே கருத்தை சற்று சாதாரணமாக கூறுகையில் கோபிநாத் உட்பட அனைவரும் ஏளனம் செய்கின்றனர். இதுவே சமுகத்தில் தன்னை படித்தவராக காட்டிக்கொள்பவர் எதை சொன்னாலும் சரி என்பது போல் கோபிநாத்தின் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டது .
ஏனெனில் இதில் அவர் எடின்பாரோ வாழ்கை பற்றி பல பிழையான தகவல்களை கூறுவதன் மூலம் அவரது நோக்கம் பற்றிய பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. பின்வருவன அவர் கூறும் ஒரு நாள் சம்பளம் மூன்று பவுண்ட் என்பது முழுமையான பொய். இங்கே மிக குறைந்த சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ஐந்து பவுண் 95 காசுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இங்கே கூறப்பட்டது அடிப்படை சம்பளமாகும் . அத்துடன் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று பணிபுரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதற்கு மிக மிக குறைந்த சாத்தியமே, எனெனில் இங்கு போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது அத்துடன் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்கூட ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக கிடைக்கும் வருமானம் ஒரு மாதத்திற்கு பஸ் பாஸ் அன்லிமிடெட் பயணம் செய்ய பெற்றுக்கொள்ள முடியும்.
இப்படி பல பொய்யான தகவல்களை தெரிவித்து தனது பேச்சாற்றல் மற்றும் முக பாவனை மூலம் மக்களிடையே அனுதாபத்தை தேடிகொல்கிறார். இவரது கருத்துகளின் உண்மை தன்மையை அறியாமல் அதை ஊக்குவிப்பது போல கோபிநாத்தின் செய்கை அமைந்ததுமட்டும் அன்றி அவருக்கே பரிசும் வழங்கப்பட்டது .
இப்படி பலராலும் பார்க்கபடும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுடன் மூன்று வருடம் ஒன்றாக இருந்து கைவிட்டதை தெரிவிபதின்மூலம் நமது சமூகத்தில் அப்பெண்ணின் எதிர் கால திருமண வாழ்க்கை பாதிக்கப்படாத ? அப்பெண்ணின் பெயர் குறிப்பிடாமல் விட்டாலும் அப்பெண் யார் என்பதை இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் முலம் அறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல, அவர் குறிப்பிடுவது போல தான் தெரிவித்துகொள்ளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களால் மேலும் பல்லாயிரம் பேருக்கு தெரியவராது என்பதற்கு என்ன நிச்சயம் ? .
இத்தகைய நபர்களின் கருத்துகளை ஊக்குவிப்பது போன்றதான கோபிநாத்தின் செயற்பாடுகள் அவரது தரத்திற்கும் நிகழ்ச்சியின் தரத்திற்கும் பொருத்தமாக இல்லை . இக்கருத்தில் எங்களது தவறு ஏதேனும் இருந்தால் அதை சுட்டி காட்டவும் தயங்க வேண்டாம் .
இப்படிக்கு
Shyam sundar MBA [email protected]. com
Nishanthan MBA mnishan.nishangmail.com
Jaganathan MSc [email protected]
Jeyakanthan MBA [email protected]
Dilipkumar MSc [email protected]
286 Gorgie road
Edinburgh
EH11 2PP.
கோபிநாத்திற்கு சில அட்வைஸ்
1. ஒரு தரப்பை பேச விடும்போது குறுக்கிடாதீர்கள்.. அவர்கள் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாட்டேங்குது..
2. உங்க பாடி லேங்குவேஜ்ல , பேச்சுல சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் தலை விரிச்சு ஆடுது..
3. உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், மத்தவங்க எல்லாரும் முட்டாள்ங்க என தயவு செஞ்சு நினைக்காதீங்க..
4. எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சொந்தமா எடுங்க. நீங்க காதுல வெச்சிருக்கற வாக் மேன் செட்ல , மைக் செட்ல யார் கிட்டயோ ஆர்டர் ரிசீவ் பண்ணி அப்படியே ஒப்பிக்கறது நல்லாவே தெரியுது..
5. பெண்கள் முன்னால ஆண்களை மட்டம் தட்றீங்க அடிக்கடி.. அதனால உங்க இமேஜ் பெண்களிடம் உயரும் என நீங்க நினைச்சா .. சாரி..
6. தமிழ்ல யாராவது பேசுனா அவங்களை அசால்ட்டா பார்க்கறதும் , தமிங்கிலீஷ்ல பீட்டர் விடும் மொக்கை ஃபிகர்களிடம் வேற்றுக்கிரக ஜந்து போல பிரமிப்பாக பார்ப்பதும் எதுக்கு?
6. தமிழ்ல யாராவது பேசுனா அவங்களை அசால்ட்டா பார்க்கறதும் , தமிங்கிலீஷ்ல பீட்டர் விடும் மொக்கை ஃபிகர்களிடம் வேற்றுக்கிரக ஜந்து போல பிரமிப்பாக பார்ப்பதும் எதுக்கு?
47 comments:
மாப்ள, நிஜம்ம்மா கவே வாக்மேன் செட்ல ரேசீவ் பன்னி பெசுறாரா?
அப்ப ஆண்களிடத்தில் இமெஜ் தேவை இல்லையாமா?
சிபி இந்த கடிதத்தில் இருப்பது சில உண்மைகள் போல தான் தெரியுது. இந்த வார நீயா நானா பார்க்கும் போது எனக்கும் இவர் கூட்ரியது போல தான் தோணியது. ஒரே கருத்தை கூறும் இரு வேறு நபர்களிடைய இவரின் அணுகுமுறை தவறாக இருந்தது.
ஒருத்தன ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினான் அதற்க்கு பல கைத்தட்டல்களும் அதையே சாதாரண தமிழில் பேசியவருக்கு அவமானமும் தான் கிடைத்தது. இருவர் கூறியதும் ஒரே கருத்துக்கள் தான்....
அவங்கள பகைச்சுட்டு வாழ்க்கைல செட்டில் ஆக முடியாது இல்லையா சார்” என அவர் சொன்னது தான் பலரையும் வெறுக்க வைத்ததுன்னு நெனைக்கிறேன் :-)
uk சகோதரரை பேச விட்டது போல் அவரையும் பேச அனுமதித்திருக்கலாம். வம்படியாய் நிறுத்தி நீங்க என்ன சொல்றீங்கன்னு மத்தவங்கள நோக்கி கேட்டது ரொம்பவே சின்னபுள்ள தனமா இருந்துச்சு. ஒரு மனிதரை கேவலப்படுத்தும் செயல் தான்.
இந்நிகழ்ச்சியை பார்க்ககிடைத்தபோது குறிப்பிட்ட இதே சம்பவத்தின்மீது எனக்கும் இதே உணர்வு தான் ஏற்பட்டது. அந்த இளைஞரின் பேச்சை பார்த்த பலர் தங்கள் முகத்தை சுளித்தனர். காரணம் இங்கிலாந்தில் இப்படித்தான் நிறைய களிசறைகள் இருக்கிறார்கள். தங்கட தங்கட பாட்டிலை ஒவ்வொருவரும் ஒவ்வொண்டை கொளுவிக்கொண்டு திரியினம். பிறகு இப்படி feel பண்ணியினம்.
அது எப்படியாக இருந்தாலும் இந்த அதிமேதை கோபிநாத் அதை feel பண்ணி கேட்டதுதான் பெரிய comedy. அதோடில்லாமல் "அவர் London இலை எல்லாம் வேலை செய்திருக்கிறார் அங்கிருந்த காதலையை விட்டிட்டு வந்திருக்கார்" என் ஏதே ஏதேதோ சொல்லி மற்ற இளைஞனை மட்டம் தட்டுகிறார்.
இன்னுமாய்யா வெளிநாட்டு மோகம்???????
கோபிநாத்து ! ரோம்பத்தானய்யா feel பண்ணிறீங்கள். இலண்டனிலை எல்லாமே இப்படி கட்டாக்காளிகளாக ஒண்டோடு ஒண்டு சுத்துது. பிறகு நாட்டுக்கு போகேக்கை கழட்டிவிடுதுகள். இதெல்லாம் ரொம்ப ரொம்ப சகஜமப்பா.
டி.ஆர்.பி ரேட்டிங்காக பல சர்ச்சைக்குள்ளான விசயங்களை சொதப்பலான ஆட்களை வைத்து விவாதம் செய்து,குறிப்பிட்ட விசயங்களை,மத நம்பிக்கைகளை கேலி செய்கிறார்..உதாரணம் பெண்ணுக்கு தாலி..கணவன் மனைவி உறவுகள்..காதல்..போன்றவை.தோற்றத்தில் இவர்கள் விவாதங்களே உண்மை என்றாகிவிடுகிறது
அந்த பய பேசும் பொது எத்தினை like எத்தினை I mean சொல்லுறார், தொரை லண்டனிலை எல்லோ இருந்தவர்..
லண்டனிலை அடிப்படை சம்பளம் 5.95இல் இருந்து last month 6.10 ஆக்கியாச்சு. பதிவு தொடர்பாக இன்னும் கொஞ்சம் சொல்லோனும், லேட்டா வாறன்
Sorry, I am not sure how to type in Tamil. I have not seen this program. But as a person living in London , I must say even though the minimum wage is supposed to be 5.95 or 6.08, there are still people working for £2.00 - £3.00. These are the people work in Asian shops and restaurants. Most of them either do not have a visa or on a student visa. So, please jump in to conclusions. Also, I know lots of people do walk a long way. In some areas the transport link is not 24hrs. Unless you have a car you may have to suffer if you are starting early or working late.
Re Girls - Not all the guys just want to have fun and leave the girls. There are lots of Asian guys in London who value the culture and tradition.. and most guys are disciplined than than girls brought up here.. it's a shame.. but that's the reality.
praddy said...
Sorry, I am not sure how to type in Tamil. I have not seen this program. But as a person living in London , I must say even though the minimum wage is supposed to be 5.95 or 6.08, there are still people working for £2.00 - £3.00. These are the people work in Asian shops and restaurants. Most of them either do not have a visa or on a student visa. //
நூற்றுக்கு நூறு சரியான விடயம். இதையே நான் கொஞ்சம் லேட்டா சொல்ல நினைச்சன்.
அறிவுரைகள் காட்டசாட்டமா இருக்கே...
கோபிக்கு உங்களுடைய அறிவுரை சிறப்பாக இருக்கு.
கோபிநாத்தின் குறுக்கீடு சிலசமயம் எரிச்சல் மூட்டுகிறது.
நல்ல பதிவு சி.பி.
netthi adi
நிகழ்ச்சியை நடத்துபவர் திறமையா இருக்கணும்னு அவர் காட்டறார். சேனல் அப்படித்தான் சொல்லி இருக்கும்.
இது தான் எனக்கும் உறுத்தியது, அன்றைய தினம் பார்த்துக் கொண்டிருக்கையில்!
கோபிநாத் அவர்களும் தனக்கு நன்றாக வரும் தமிழை விட்டு விட்டு, ஆங்கிலம் ஸ்டைலாக பேசுகிறேன் பேர்வழி என்று வர வர காமெடி செய்து வருகிறார்.
தன்னை போல் ஒருவர் ஆங்கிலமும் தமிழும் கலந்து கலந்து பேசியவுடன் அவரும் "தம்மைப் போல" என நினைத்துக் கொண்டார் போல, அவருக்கு பரிசு வழங்கினார்கள்... வழக்கம் போல கோபிநாத் சொன்னவுடன் நமது மக்களும் இந்த தமிங்கலத்துக்கு ஆமாம் போட்டு விட்டு, எளிமையாக இருந்த இதே போன்ற ஒரு கருத்தைப் பிரதிபலித்தப் பொது ஏளனப் பொருளாக்கினார்கள்.
எனக்கும் தோணுச்சு பாஸ் இப்படி
எனக்கு இந்த நிகழ்ச்சியை பிடிப்பதில்லை.அதுவும் அங்கு மொக்கை போடுவதற்கும், தொலைகாட்சியில் தங்கள் முகம் தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காகவும் வந்து அமர்ந்திருக்கும் அந்த அழுகுனிகளையும் எனக்கு பிடிப்பதில்லை.
வணக்கம் மாப்பிள
நல்லதோர் பதிவு இங்கு கருத்திட்டவர்களில் லண்டனில் இருந்து வாரோ சொல்வதை நாங்கள் கட்டாயம் நம்பலாம் ஏனெனில் அவர் அங்கு இருப்பதாலும் நானும் அங்கு வேலை செய்தி்ருப்பதாலும் சொல்கிறேன் அவர் சொல்வது அப்பட்டமான பொய் அத்தோடு எட்டு கிலோமீற்றர் நடந்து செல்கிறேன்ன்னு சொல்வதை கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. கோபிநாத் போன்றவர்கள் இப்படியான செய்தியை உறுதிப்படுத்தியிருக்கலாமே..!!
avaru vankura sambalathukku velai seieraru ,empa comment adikiringa,
anal avaru sampalam vangurarunu maranthutaru pola,
athanalathan ovara scene poduran..
அவர் சொல்வது மிகச் சரி
நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்
வேண்டியவராக இருப்பாரோ
அதிகம் பேசவிடுகிறாரே என நினைத்தேன்
த.ம 8
நீங்கள் எழுப்பிய கேள்விகள் எனக்கு இருந்த சந்தேகங்கள் சிலவற்றை ஊர்ஜிதம் செய்வது போலிருக்கிறது.
சரிதான்..கோபிநாத் நிகழ்சியை விரும்பிபார்ப்பேன் டிஆர்பிக்காக இந்த கருமாந்தரம் புடிச்ச விஜய் டிவி முகம் சுளிக்கிர மாதிரி நிறைய பண்றாங்க
நண்பர்களே, இந்தப் பதிவுக்கு கோபிநாத் வந்தா பதில் சொல்லப் போறாருன்னு இஷ்டத்துக்கும் அள்ளி விட்டிருக்கீங்களே! நல்ல வேலை நண்பர் praddy லண்டனைப் பற்றிய உண்மைகளை இங்கே சொல்லியிருக்காரு. காதில மைக் அவரு வச்சிருக்கறது இருக்கட்டும், நீங்க வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு கோபிநாத்தைப் போல ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியைக் கொடுக்க முடியுமா என்று பாருங்களேன்? அடுத்து ஆங்கிலம் பேசுபவர்களைத்தான் கோபிநாத் ஊக்கிவித்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறாரா? எதற்கும் இந்த வீடியோவையும் பார்த்திட்டு ஒரு முடிவுக்கு வாங்க நண்பர்களே.
http://www.youtube.com/watch?v=ZBYngOqCgxE&feature=related
[இப்படியெல்லாம் பார்த்தா, இந்தப் பதிவர் கூடத்தான் நான் போட்ட எத்தனையோ தமிழ் பின்னூட்டங்களை பின் தள்ளிவிட்டு ஆங்கிலப் பின்னூட்டத்துக்கு, Thanks என்று பதில் எழுதினார். அப்படி இருக்க கோபிநாத்தை மட்டும் குறை சொல்ல வேண்டுமா?]
These kind of things are happening for a few months in "neeya naana". they give importance to a particular person focusing through out the show and give them prize too at last.
A few weeks ago on a topic on love in boys side a green shirt talked too much thinking its poetic. but it was really irritating..I wonder y they give him the prize at last..!!
டிஆர்பி.யில 'நீயா நானா' குறைஞ்சு போச்சு(னா) அதுக்கு சிபிதான் பொறுப்பு.
இரவு வணக்கம்,இவருக்கு மட்டுமல்ல எல்லாத் தொலைக் காட்சி தொகுப்பாளர்களுக்கும் இது பொருந்தும்!தமிழ் பேசும் மக்களின் பணத்தில் தமிழில் உரையாடுவதை கிண்டல் செய்யும் இவர் போன்றோர் இனியாவது திருந்த வேண்டும்!
அந்த நிகழ்ச்சியே அழுகுணி ஆட்டம் தானே..
நான் சொல்ல வேண்டியதை அண்ணன் ஜெயதேவ் தாஸ் சொல்லிவிட்டார்...
எனக்குத் தெரிந்து அவரிடமிருக்கும் ஒரே குறை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களை அழ வைப்பது அல்லது அழுவதற்கு தூண்டி விடுவது...
6.இந்த விஷயத்தில அவருக்கு காம்ப்ளெக்ஸ் இல்ல மல்டிப்ளெக்ஸ்...
எப்ப அதைய TALK SHOW ன்னாங்கலோ அப்பவே அது டாக் ஷோ (DOG SHOW) தான் -
தமிழ்ல ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்..
(திருப்பி ஒரு வாட்டி வாசிச்சுப் பாருங்க - 'டாக் ஷோ' - அதுக்காக என்மேல் வள், வள்'ன்னு விழுகக்கூடாது)
கோபிநாத்தின் கோ'வுக்கு காலைப் புடிங்கிவிட்டால் 'கே'பி'-நாத் !
நீயா ? நானா ? முதல்ல நல்லா இருந்துச்சு... இப்ப வர்றதெல்லாம் காலத்தை ஓட்ட...
டியர் கேபி-நாத்துக்கு,
இந்தக் காலத்து பொண்ணுகளுக்கு ரொம்பா நாளா ஒரே மொகரையை பாக்கறது பிடிக்கறதில்ல...
அதனால உங்க நிகழ்ச்சியப் பார்க்கறது உங்களைப் பத்தி தெரியாத புதுசா வர்ற பொண்ணுகளா இருக்கும் போல...
புதுசு புதுசா ஏதாவது ட்ரைப்பன்னுங்க (நிகழ்ச்சியச் சொன்னேன்)
-ஒரு பத்திரிக்கை பேட்டில இவரு கலைஞரை சந்திக்க எடுத்த முயற்சிப் பத்தி எழுதி இருந்தாரு..
பல இடங்களில் அவரு பார்வையில படுற மாதிரி முன்னாடி போயி போயி நிற்ப்பாராம்...
இதுல கலைஞர் பயங்கர இம்ப்ரெஸ் ஆகி..போனாப் போகுதுன்னு ஒரு பேட்டி கொடுத்தாராம்...
இப்ப அவரு சும்மாதானே இருக்காரு...
ரெண்டு பேரும் சேர்ந்து தேர்தலில் தோத்ததுக்கு காரணம்
நீயா ? (சோனியா சாந்தி) நானா ? ன்னு (கனி மொழி)
ஒரு முழு நீல' நகைச்சுவை கதை எழுதி தரச் சொல்லி ஸ்பெஷல் ஷோ நடத்துங்க !
(உங்க டிஆர்பி எகிறும்....)
யோவ்! ஒரு மொக்கைலயும் மொக்கையான ப்ரோக்ராமுக்கு இவ்ளோ பெரிய வாழ்த்து மடல் தேவையாய்யா?
வணக்கம் பாஸ்,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
இப் பதிவு சம்பந்தப்பட்டவர்களை எட்டினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விகள் என் மனதில் ஏற்கனவே உதித்து விட்டது...
அருமை........
Dear Senthil,
I too agree with the views expressed by the writers.I have written many letters to Vijay TV , some even through Courier. I am yet to receive even an acknowledgement for it.
Now, Gopinath speaks faulty and lousy English. Anthony, or the producer/director need to check him on it.His body language smacks of arrogance and superiority complex.
One important things many have not mentioned is, the commercial breaks. During the last 25 minutes, commercials take more than 20 minutes in two breaks. I am noticing this for the last few weeks. This is plain cheating of the watching public. HBO and Raj TV are doing the same in their movie programmes. But this is a talk show and some moderation is required.
Try to get Gopinath's email id and I want to shoot off letters to him directly.
Thanks
Shankar
உங்க கருத்து உண்மை. கோபிநாத் அலட்டல் ரொம்ப அதிகம். தான் ஷோ நடத்துபவர் என்ற பிரஞை இல்லாமல் அதிலே ஒரு சாராருக்கு ஆவேசமாக வாதாடுவார். நடுவே தப்பு தப்பா ஆங்கிலம் பேசுவார்.இதிலே சென்னை வெயில்ல ஒரு கோட் வேறு!!!கோமாளித்தனமும், அதிகப்ரசங்கிதனமும் உள்ள நபர் தான் கோபி.இரண்டு தரப்புக்கும் மரியாதை சமமாய் அளித்தால் தான் அது நீயா,நானா. இல்லன்னா,அது நானே,நானே.
நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விகள் என் மனதில் ஏற்கனவே இருந்தது...கோபிநாத் அலட்டல் ரொம்ப அதிகம்.
நான் இதை ஏற்று கொள்கிறேன்.
ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் உங்களின் அதிகபடியான எதிர்பார்ப்பு தான்.
same day
same programe
same feeling
intha karumathuku than nann parkirathe illai
இந்த கரண்ட் கட்டுல ஒரு நிகழ்ச்சிய பார்த்து முடிகறதே பெரும்பாடு அதுலேயும் நேரம் ஆக ஆக suspence வைகிறேனு Ad வேற. அவரு மட்டும் ஆண்களை மட்டம் தட்டி பேசுவாரு பேசுறப்ப குறுக்க புகுந்து நிருத்துவாறு.
http://eniyavaikooral.blogspot.com/
கோபிநாத் எடின்பாரோ வாழ்கை பற்றிய பிழையான தகவல் கூறியதாக போட்டிருக்கிறீர்கள் ...அந்த ஒரு விடயத்திற்கு நீங்கள் கோபிநாத்தை பிழை கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் அவரை பற்றி மேலதிகமாக நீங்கள் கூறும் கூற்றுக்களை என்னால் ஏற்க முடியாதுள்ளது ....இதற்காக என்னை கோபிநாத்தின் விசிறி என எண்ண வேண்டாம் ...நீங்கள் நோக்கும் தளத்தில் இல்லாத மாறுபட்ட எனது பதிவை நான் எனது வலைப்பூவில் இட்டிருக்கிறேன் ....நீங்கள் கூறும் பிரச்சனையோடு மட்டுமல்லாது கோபிநாத் தாலி பற்றிக்கதைத்து சர்ச்சையை கிளப்பியது போன்ற விடயங்களிலும் நான் எனது பார்வையில் விடை கூறி இருக்கிறேன் ...நீங்கள் கோபிநாத்தை எதோ சினிமா பட வில்லன் ரேஞ்சில் காட்டுவதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது ...கோபிநாத்தின் நிகழ்ச்சி போன்ற வேறொரு நிகழ்ச்சியை தமிழ் தொலைக்காட்சிகளில் உங்களால் காட்ட முடியுமா ?....இதற்காக கோபிநாத்தின் செயல்கள் ௧௦௦% சரி என்ற விதத்தில் நான் கருத்துக்கூற வரவில்லை ...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ..நான் ஒரு புதிய பதிவர் உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன் http://venkkayam.blogspot.com/2012/04/blog-post_26.html
@ஆமினா என்னத்தங்க பண்றது.....
yes i agree the london friends. gopi is not neutral now.
It is really true machi.
http://tamil.oneindia.in/movies/television/2012/10/neeya-naana-vijay-tv-talk-show-program-162791.html
நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போகும் போதே பிரேக் விடும் கோபிநாத், அனல் பறக்கும் இந்த விவாதம் பற்றி பேசலாம் இன்னும் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு என்று சொன்னாலும் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட கோபிநாத்தான் அதிகம் பேசினார் என்கின்றனர் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள்.
Post a Comment