Saturday, November 12, 2011

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/May/20-5-11/naan-sivanagien-preview.png 

ஒரு புது முக ஹீரோ, ஹீரோயினை வைத்து லோ பட்ஜெட்டில் ஒரு சைக்கோ த்ரில்லர் கொடுக்கும் எண்ணம் வந்ததற்காகவே இயக்குநர் வி.கே.ஞானசேகர். அவர்களை தாராளமாக பாராட்டலாம்...

சிட்டில அடுத்தடுத்து 14 கொலைகள் நடக்குது. கொலை செய்யப்படும் பெண்கள் எல்லாம் மேரேஜ் ஆனவங்க.. வயசு 30 டூ 35 அந்த ரேஞ்ச்ல.. அதாவது ஆண்ட்டீஸ்.. இதை விசாரிக்க வர்ற போலீஸ் ஆஃபீசர் மனைவியையே ஒரு கட்டத்துல ஹீரோ போட்டுத்தள்ளிடறாரு.. 

ஹீரோ ஏன் அப்டி பண்றாரு? ஒரு ஃபிளாஸ்பேக்.. ஹீரோவோட அம்மா எப்ப பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ் என அலைந்து கொண்டே இருக்கும் தன் கணவர் அதாவது ஹீரோவோட அப்பா தன்னை “ கவனிக்கறதில்லை” என்பதற்காக படி தாண்டறார்.. கள்ளக்காதலனை கணவன் போட்டுத்தள்ள, கணவனை மனைவி போட்டுத்தள்ளி மகனையே கொலையாளி ஆக பொய்க்குற்றம் சாட்டி ஜெயிலுக்கு அதாவது சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புகிறாள்...

அதான் தப்பு பண்ற பெண்கள் மீது ஹீரோவுக்கு வெறுப்பு. வரிசையா கொலை.. 

ஹீரோயினுக்கு என்ன வேலை? ஹீரோவுக்கு வேலை போட்டு குடுத்து டைம் கிடைக்கறப்ப லவ் பண்ணி , உண்மை தெரிஞ்சதும் சிம்புவை வை 9தாரா டபக்னு கழட்டி விட்ட மாதிரி எஸ் ஆகும் ரோல்.. 

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=7894&option=com_joomgallery&Itemid=50

புதுமுகம் உதய்கார்த்திக்குக்கு இயக்குநர் செல்வராகவனின் காதல் கொண்டேன் பட டி வி டியை குடுத்து இதுல தனுஷ் எப்படி நடிக்கறார்னு ஒரு உதாரணத்துக்கு பார்த்துக்கோன்னு ஃபார்மாலிட்டிக்கு சொன்னது தப்பில்லை.. அதுக்காக தாடி , கெட்டப். சட்டை நெக் பட்டன் போடறது முதல் அப்படி அட்டக்காப்பி அடித்திருக்க வேண்டாம்..அவருக்கு சிவ தாண்டவ போஸ் நல்லா வருது.. ஆனா போலீஸ் ஆஃபீசர் மேல பாம்பை ஏவி விடுவது எல்லாம் ரொம்ப ஓவர்,.. 

ஹீரோயின் வர்ஷா  ரொம்ப குண்டு முகம் , தேறாது.. இந்த ஒரு படத்துக்கு ஓக்கே.. அவரை க்ளோசப்ல பார்க்கறப்ப. ஹி ஹி முடியல.. அவ்வ்வ் 

காதல் சுகுமார்  ஓவர் ஆக்டிங்க்.. ஹீரோவின் அம்மாவாக வருபவர் இனி மலையாள கில்மா படங்களீல் நடிக்க சான்ஸ் நிறைய கிடைக்கலாம்.. 

 http://cinema.natpu.in/thiraippadam/padakaachikal/flims_list/naansivanakiren/2_full.JPG

படத்தில் ரசித்த வசனங்கள்

1.  டேய்.. மிஸ்டர் பீன் படம் ஓடுனா உம்முனு இருக்கான்.. சன் நியூஸ் கேட்கறப்ப சிரிக்கறான்.. இவன் சரியான கிறுக்கு போல..

2.  அய்யய்யோ.. டேய்.. அந்த புது டி வி யை அந்த லூஸ் போட்டு உடைச்சுட்டானே..

3. கூர்க்காவுக்கு லொள்ள பாரு.. 

அவனைத்தூக்கி உள்ளே போடு.. 

டேய்.. போலீஸ்டா..

4. லவ் பண்றப்ப என்னை ஒரு மணி நேரம் மிஸ் பண்ணி இருப்பியா?மேரேஜ்க்கு முன்னால ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை ஃபோன் செய்வே.. இப்போ?

5. பெட்ரூம்ல கூட உன் திருப்தியை மட்டும் தானே நீ பார்க்கறே,.? லவ் பண்ணும்போது எத்தனை தடவை என் கிட்டே நீ அழகா இருக்கே?ன்னு சொல்வே? ஆனா மேரேஜ் ஆன பின் ஒரு தடவை கூட சொல்லலையே ஏன்? ( ஏன்னா நாங்க மேரேஜ் ஆன பின் பொய் சொல்றதில்லை)

6.  பொண்ணுங்க மேரேஜ் ஆனதும் புருஷன் கிட்டே நகை வேணும், புடவை வேணும்னு கேட்டு கேட்டு வாங்கிக்கறீங்களே, தாம்பத்யத்துலயும் இப்படி வேணும்னு கேளுங்க.. ஏன் கண்டவன் கிட்டே கேட்கறீங்க? ( ம்க்கும், அப்படியே நீங்க குடுத்துட்டாலும்.... ஃபேமிலி கேர்ள் அதை பத்தி பேசக்கூடாதுன்னு பூட்டு போட்ருவீங்க..)

7.  ஏண்டி.. 10 நிமிஷ சுகத்துக்காக  10 தலைமுறையையே ஏன் ஸ்பாயில் பண்றீங்க?

8.  போலீஸ் தப்பு பண்றவங்களை தண்டிக்கட்டும் , உனக்கு எதுக்கு இந்த வேலை?

போலீஸ் இந்த மாதிரி கள்ளக்காதலை எப்படி தண்டிப்பாங்க?


http://www.koodal.com/cinema/gallery/movies/naan_sivanagiren/naan_sivanagiren_35_111201155720123.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய விஷயங்கள்

1. ஹீரோயின் ஸ்கூட்டி வெச்சிருக்கார், ஆனா அடிக்கடி மிட் நைட்ல மெயின் ரோட்ல ஆஃபீஸ் டூ வீடு நடந்து போறார்.. ரவுடிங்க கிட்டே மாட்டிக்கறார்.. வேண்டுதலா? பஸ் ஸ்டாப்ல டவுன் பஸ்க்காக நிக்கறார்.. வீட்டுக்கு வர்றப்ப ஸ்கூட்டி அங்கே தான் இருக்கு.. நோ ரிப்பேர்.. 

2.  மிட் நைட்ல காதல் சுகுமாரன் ரூம் கதவை வந்து ஹீரோயின் தட்றார்.. டக்னு கதவு திறக்குதே,... கதவுக்குப்பக்கத்துலயே படுத்து தூங்குவாரோ?

3.  ஹீரோ சுகுமாரனோட டி வி யை திருடி வித்துடறாரு.. யாருமே அதை என்ன ஏதுன்னு கண்டுக்கலை.. மேன்ஷன் வாட்ச்மேன் கண்டுக்காதது கூட ஓக்கே, சுகுமாரனே ஏன் இப்படி செஞ்சே?ன்னு ஹீரோவை திட்டலை..

4. சினிமா தியேட்டர் ல ஹீரோவால் தாக்கப்படும் ஹீரோயினின் தோழியின் காதலன் ஏன் போலீஸ்ல புகார் சசெய்யலை ? ( செஞ்சா க்ளூ கிடைச்சிருக்குமே?)

5. ஸ்கூட்டில 45 கிமீ வேகத்துல போற ஹீரோயினை ஹீரோ 5 நிமிஷம் கழிச்சு துரத்த ஆரம்பிச்சு 3 நிமிஷத்துலயே கிட்டே வந்துடராரே? அவர் என்ன இளைய தளபதி விஜய்யா?

6.   போலீஸ் - பிரஸ் மீட்டிங்க்.. எல்லாரு கூடி இருக்கறப்ப இன்னும் மீட்டிங்கே ஸ்டார்ட் ஆகலை, ஆனா ரொம்ப சின்சியரா 2 ஃபிகருங்க நோட்ஸ் எழுதுதுங்களே..? ஏன்?  ( எடிட்டிங்க்ஃபால்ட்டா?)

7.  மாபெரும் மைனஸ்.. செகண்ட் ஆஃப்ல வர்ற ஃபிளாஸ்பேக் கதையை ஹீரோ தன் பார்வைல சொல்றார், ஆனா அந்த காட்சிகளில் ஹீரோ இடம் பிடிக்காத , அவர் கண்ணால் காணாத பல காட்சிகள் வருது.. உதாரணமா ஹீரோவின் அம்மா, கள்ளக்காதலன் சம்பந்தப்பட்ட கில்மா காட்சிகள்... அது எப்படி? அதை யாரும் ஹீரோ கிட்டே சொல்லி இருக்கவும் வாய்ப்பில்லை..

8.  ஹீரோ 28 வயசுல போட்டிருக்கற  அதே சோடா புட்டி கண்ணாடியைத்தான் ஃபிளாஸ்பேக்ல 12  வயசு சிறுவனா இருக்கறப்பவும் போட்டிருக்காரே.. அது ஏன்? ரொம்ப லோ பட்ஜெட் படமா?

9.  ஹீரோவின் ஃபிளாஸ்பேக் கதைல  ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் அவன் அபார்ட்மெண்ட்டுக்கு போறா.. ஹீரோவின் அப்பா அவளை ஃபாலோ பண்ணிட்டு  போறார்.. 10 நிமிஷம் கழிச்சு கரெக்ட்டா அந்த வீட்டை எப்படி கண்டு பிடிக்கறார்?

10. ஹீரோயினை  7 பேர் கொண்ட வில்லன் குரூப் ரேப் பண்ணிடறாங்க.. ஹீரோயின் பருத்தி வீரன் பிரியா மணி ரேன்ச்ஜுக்கு டேமேஜாகி டயர்டா இருக்கா.. ஹீரோ அவரை வீட்டுக்கு அழைத்துப்போறார்.. ஹாஸ்பிடல் போகாம அப்பவே 2 பேருக்கும் லவ் வந்துடுது.. என்ன கொடுமை சார் இது? அவளுக்கு வலி இருக்குமா? லவ் ஃபீலிங்க் இருக்குமா?

11. சைக்கோ ஹீரோ தன் ரகசிய ரூம்ல எல்லா எவிடன்ஸ், ஃபோட்டோ எல்லாம் வைச்சுட்டு அந்த வீட்டு சாவியை வாட்ச் மேண்ட்ட குடுக்கறார்.. ஏன்?

12. போலீஸ் ஆஃபீசரோட சம்சாரம் ரெஸ்டாரண்ட்ல தன் கணவர் கூட சாப்பிட வர்றப்ப அவளோட காதலன் வந்து சிக்னல் தர்றான்.. உடனே அவ பாத்ரூம் போறேன்னு புருஷன் கிட்டே சொல்லிட்டு வந்து ரொமான்ஸ் பண்றா..  ஹாலிவுட் படமான அன் ஃபெயித் ஃபுல்,  பாலிவுட் படமான மல்லிகா ஷெராவத்தின் மர்டர் படத்துல இருந்து சுட்டிருக்கீங்கனு தெரியுது.. ஆனாலும் ஓவர்.. நம்ம தமிழ் நாட்ல அப்படி பயம் இல்லாம போவாங்களா? புருஷன் போலீஸா இருக்கறப்ப..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYNQL3zDbWIJt2Ke-rCCKEmju1FNksQaVtFAUYlnbrLe352z2mD63eo_toFGIUWIZjTcqpJwyf5MRk5EyblWumTePqkoqg2cVmGF-SRSiPzGqeX1cFov-AgSt_lIqvw9N1bOVAN9EO27Ht/s320/738a2edf-0d00-4ed2-8435-c406704417fd_S_secvpf.gif
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1. படத்தின் கருவும் , கதையும்  நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் என்பதால் அவருக்கு, அவரது நல்ல உள்ளத்திற்கு பூங்கொத்து

2.  ஹீரோவை எழுப்பும் சுகுமாரன் அவர் திடுக் என விழிப்பது கண்டு அதிர்ச்சி அடையும் சீன் செம த்ரில்லிங்க்.. 

3.  காதல் இல்லை காமம் இல்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம்.. 

4. ஹீரோவுக்கு அப்பா பாசம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான விளக்கம் கவிதை.. 

எல்லா செண்ட்டர்களிலும் ஆவரேஜாக 15 நாட்கள் ஓடினாலே படம் வெற்றி தான்... ஏன்னா படத்துல செலவு இல்ல லோ பட்ஜெட்.. அந்த வகையில் படம் வெற்றிப்படமே.. 

ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம்  மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - தம்பதிகள் பார்க்க வேண்டிய படம்


டிஸ்கி - 1  

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

18 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதன்முதல் நான் ஹி ஹி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பொண்ணு கொழுக் மொளுக்குன்னு அழகா இருக்கு அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

உனக்கு படம்பார்த்து விமர்சனம் போடுறதுக்குன்னே கம்பெனி சம்பளம் தருதாடா அண்ணா...?

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் விமர்சனம் சூப்பர் வழக்கம் போல...!!!

கோவை நேரம் said...

படிச்சிட்டு வாரேன்

கோவை நேரம் said...

//2 பிகருங்க நோட்ஸ் எழுதுதுங்க ..//// பிள்ளையார் சுழி போட்டு இருக்கும் ..அத பார்த்துட்டு கேள்வி கேட்க கூடாது..

கோவை நேரம் said...

எல்லா பட இயக்குனர் அவர்களே ..தயவு செஞ்சு சிபிகிட்டே படம் போட்டு காட்டிட்டு ரிலீஸ் பண்ணுங்க ...அப்போதான் படம் ஹிட் ஆகும் ..

கோவை நேரம் said...

மறக்காம சிபியை கவனிச்சு விடுங்க ..(எல்லாமும் ...)

MANO நாஞ்சில் மனோ said...

என்னப்பா தமிழ் பத்தும் யுடான்ஸ்'ம் இணைய மாட்டேங்குது...?

K.s.s.Rajh said...

ஹீரோயின் தேராது போலதான் இருக்கு.....

சரி ஒருக்கா பார்ப்போம் அட நான் படத்தை சொன்னன்

அம்பலத்தார் said...

படம் தேறவே தேறாதோ

குரங்குபெடல் said...

"ஹீரோவின் அம்மாவாக வருபவர் இனி மலையாள கில்மா படங்களீல் நடிக்க சான்ஸ் நிறைய கிடைக்கலாம்.. "


என்ன ஒரு கருத்து . . . !

Thanks

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலையில ஹாலிவுட், மாலையில கோலிவுட்... சிபி சேவையோ சேவை.

ஹேமா said...

படம் சரில்லையாக்கும் !

அம்பாளடியாள் said...

திரைப்பட விமர்சனம் நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் சார் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .........

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு சார் வாழ்த்துக்கள் .

Try 🆕 said...

அருமையான விமர்சனம்.


நன்றி.

Mano said...

ஒரு படம் விடாம விமர்சனம் எப்படி எழுதறீங்க ?