Saturday, November 05, 2011

BLITZ - AN ACTION THRILLER MOVIE REVIEW

http://cinemagateway.com/wp-content/uploads/2011/06/Blitz-poster.jpg 

கடந்த 10 நாட்களா ஊர்ல தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 3 படங்களே எல்லா தியேட்டர்ஸ்ஸையும் ஆக்ரமிச்சுட்டு இருந்ததால  மக்கள் நொந்துட்டாங்க ( நான் தான் மக்கள்.. மக்கள் தான் நான்) இன்னைக்கு புதுசா ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆனதும் ரிலாக்ஸா கிளம்புனேன்.. 

ட்ரான்ஸ்போட்டர் ஹீரோ Jason Statham தான் இதுல ஹீரோ.. படத்தோட கதை என்ன? போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஆள்ங்களா பார்த்து வரிசையா கொலை பண்றான் ஒரு சீரியல் கில்லர்..அவன் ஏற்கனவே ஒரு சாதாரண அடி தடி கேஸ்ல ஹீரோவான போலீஸ் ஆஃபீசர் கிட்டே போலீஸ் அடி வாங்குனவன் தான்.. அந்த அடிதடி கேஸ்ல ஹீரோ வில்லனை போட்டு கும்மு கும்முனு கும்மிடறார்.. அப்பவே வில்லனுக்கு போலீஸ் மேல செம காண்டு.. 
கோபப்படறவன் நேரா போய் யார் அடிச்சாங்களோ அவனை கொல்ல வேண்டியதுதானே? அப்படி செஞ்சா 2 ரீல்லயே படம் முடிஞ்சிடுமே.. அதனால தலையை சுத்தி மூக்கை தொடற கதையா வில்லன் சுத்தி வளைச்சு கொலை செய்யறார்.. 

இதை ஒருத்தன் பார்த்துடறான்.. அவன் ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி பேரம் பேசறான்.. எனக்கு 50.000 டாலர் குடுத்தா கொலையாளி பற்றி துப்பு குடுப்பேன்னு சொல்றான்.. பரபரப்பான நியூஸ்க்கு ஆசைப்பட்டு அந்த டீலிங்க்குக்கு ஒத்துக்கிட்டு  பிரஸ் காரர் போறார்.. அந்த ஆதாரங்களை கைப்பற்றும்போது வில்லன் அந்த இன்ஃபார்மரை போட்டுத்தள்ளிடறார்..

photo


 இப்போ ஹீரோ எப்படியோ போராடி சேசிங்க் பண்ணி, துரத்தி ( 2ம் ஒண்ணுதானா?) வில்லனை பிடிச்சிடறாரு.. ஆனா கோர்ட்ல நிரூபிக்க முடியல.. அவர் அசால்ட்டா வெளில வந்துடறாரு.. ஏன்னா எந்த கொலைக்கும் ஆதாரம் இல்லை.. அப்படியே பார்த்த சாட்சி இருந்தாலும் அவங்க டாக்டர் ராம்தாஸ் மாதிரி பல்டி அடிக்கற ஆளுங்களா போயிடறாங்க.. 


இந்த மாதிரி நேரத்துல ஹாலிவுட் ஹீரோ என்ன செய்வார்? நம்ம கோடம்பாக்க ஹீரோக்கள் என்ன செய்வாரோ அதையே தான்.. எஸ் அதே தான் (என்கவுண்ட்டர்ல )போட்டுத்தள்ளிடறார்.

படத்துல வில்லனா நடிச்சவர் தான் புரொடியூசரோன்னு சந்தேகப்படற அளவு அவருக்கு அதிக முக்கியத்துவம்.. ஹீரோ வர்ற சீனை விட வில்லன் தான் அதிக சீன்ல வர்றார்.. அதைக்கூட நாங்க தாங்கிக்கத்தயார்.. ஆனா ஹீரோயினுக்கு மெடிஷனுக்கு கூட ஒரு சீன் இல்லை.. அட்லீஸ்ட் கிஸ்? ம் ம் அதுவும் இல்ல.. அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயினை புக் பண்ணனும்.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. 

Still of Zawe Ashton in Blitz


 ரசிக்க வைத்த வசனங்கள்

1.  ஹீரோ - ஏம்மா , ஒரு  போலீஸ் போடற டிரஸ்ஸா இது? 


லேடி - ஏன்.. உன் டிரஸ் மட்டும்?   ( இந்த சீனில் அந்த லேடி அணிந்திருப்பது ஒரு பெட்டி கோட்)

2.  என் ஃபிரண்ட் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டான், அவனை நீ தான் காப்பாத்தனும்.. 

உன் பாய் ஃபிரண்ட்டா?

ம்ஹூம்.. அவன் சின்னப்பையன்பா.. ( ஏன் பெரிய பையனைத்தான் பாய் ஃபிரண்டா வெச்சுக்கிவீங்களோ?)

3. உனக்குபிடிச்ச நெம்பர் 7? அல்லது 8? 

8

ஓக்கே.. இன்னும் 8 போலீஸ் ஆஃபீசர்ஸை நான் கொல்லப்போறேன்.. 

4.  உன்னை எல்லாரும் முரடன்னு சொல்றாங்களே..?

உன்னைக்கூட நிறைய பேரு வெத்து வேட்டுன்னு சொல்றாங்க..

5.   அது என்னனு தெரியுமா? மைக்கேல் ஜாக்ஸனோட யூரின்.. விலை மதிப்பே இல்லாதது.. சேகரிச்சு வெச்சிருக்கேன்.. 

உவ்வே ( இது மை மைண்ட் வாய்ஸ் )

6. ஃபிகரு - இதுக்கு முன்னால பொம்பளையை பார்த்ததே இல்ல போல.. எப்படி பார்க்கறான் பாரு..  ( ஹூம், ஃபாரீன்லயும் நம்மள மாதிரிதான் போல.. ஹி ஹி )

7. ஃபிகரு - நான் கூப்பிடறவரை இங்கே வராதேன்னு சொன்னேனே?

நீ தான் கூப்பிடவே இல்லையே? ( இதுல மட்டும் நாங்க தெளீவா இருப்போமில்ல?)



Still of Zawe Ashton in Blitz

8. ஃபிகரு - எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. 

அதுல எனக்கு என்ன லாபம்? 


ஓக்கே.. உனக்கு என்ன வேணும்?

நைட் வீட்டுக்கு வா.. 

சரி வர்றேன்.. ( அடிப்பாவி)

9.  யோவ் .. இந்த தகவலை உனக்கு சொல்லனும்னா எனக்கு 50000 டால்ர் வேணும்.. ஒரு பைசா குறைஞ்சாக்கூட.......

போய் போலீஸ்ல சொல்லு.. பண்றது இல்லீகல் வேலை.. லீகல் பற்றி பேசறே நீ?

10 . எனக்கு போலீஸ் புரொடக்‌ஷன் தருவீங்களா?

கண்டிப்பா.. ஆனா ஜெயில்ல வெச்சு.. 

11.  டியர்.. ஏன் சைலண்ட்டா இருக்கே?

ஃபிகரு - எனக்கு அதுதான் பிடிக்கும் ( அப்டித்தான் சொல்வாங்க.. மெரேஜ்க்கு பிறகுதான் தெரியும் வயலண்ட் கேர்ள்ஸ்னு)

12.  உண்மைலயே நீ புத்திசாலியா இருந்தா....... நீ புத்திசாலி இல்லைன்னு தெரியும்..  குற்றத்தை ஒத்துக்கோ.. 

13.  நீ உள்ளே இருந்தாதான் சேஃப்னு அப்பவே சொன்னேனே? ( ஆ ராசா உள்ளேபோய் 6 மாசத்துக்கு மேல ஆகியும் ஏன் ஜாமீன்  கேட்கலைன்னு இப்போ தெரியுது)


http://0.tqn.com/d/worldfilm/1/0/4/w/620291_DSC_0065a.jpg

 இயக்குநர் கோட்டை விட்ட இடங்கள் ( லாஜிக் சொதப்பல்கள்)

1. நடு ரோட்ல ஒரு போலீஸ் ஆஃபீசரை சுட்டுட்டு கேசுவலா வில்லன் போறான்.. யாரும் கண்டுக்கலை.. அட்லீஸ்ட் ஒரு அலறல்.. பதட்டம்..? ம்ஹூம்

2.  நான் கேபிள் காரன் வந்திருக்கேன்.. கதவை திறங்கன்னு வில்லன் சொன்னதும் ஆல்ரெடி கொலை பயம் உள்ள போலீஸ் டக்னு கதவைத்திறந்து நான் தான் கேபிள் கனெக்‌ஷன் கட் பண்ணீ பல மாசம் ஆச்சே.. ந்னு கேனத்தனமா சொல்றாரே?

3.  ஒரு இன்ஃபார்மரு பிரஸ்காரனை கூப்பிட்டு வில்லனோட கார் டிக்கியை திறந்து அல்வா மாதிரி எவிடன்ஸ் காட்றாரு.. அதை உடனே அபேஸ் பண்ணாம அவனை கூட்டிட்டு போய் டீ வாங்கிக்குடுத்து மறுபடி வந்து பார்த்தா அதை காணோம்.. இப்படியா அசால்ட்டா பிரஸ்காரன் இருப்பான்?

4.  ஹீரோ வில்லனை துரத்திட்டு 4 கி மீ தூரம் ஓடிட்டே இருக்காரு.. 2 அடி தூரத்துலதான் வில்லன் ஓடரான்.. அப்பவே ஷூட் பண்ண வேண்டியதுதானே? சேசிங்க் சீன் வேணும்கறதாலா?

5. ஹீரோயின்க்கு 8 கோடி குடுத்து புக் பண்ணிஎன்ன யூஸ்? ரொமன்ஸ் சீன் உண்டா? ஜாலி கிஸ்ஸாவது உண்டா? தமிழ்ப்படம் பாருங்க 10 லட்சம் ரூபா சம்பளம் குடுத்துட்டு 1 கோடிக்கு ஒர்த்தாகும் அளவு எங்காளுங்க எடுக்கறதை..


http://images.dvdtimes.co.uk/protectedimage.php?image=clydefrojones/RocketScience5.jpg_30012008

திரைக்கதை பின் பாதியில் ரொம்பவே திணறுகிறது.. ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்

ஆக்‌ஷன் காட்சிகளூம் குறைவுதான்..

ஈரோடு ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் பார்த்தேன்..

 சி.பி கமெண்ட் - பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. டப்பா படம்னு தள்ள வும் முடியாது.. சுமார்.. ரகம்


டிஸ்கி 1- போஸ்டரில் ஏ சான்றிதழ் பார்த்து சீன் இருக்குன்னு யாரும் நினைக்காதீங்க.. அது வன்முறைக்கு கொடுக்கப்பட்ட்டது.. படம் அக்மார்க் சைவம்.. அப்போ நான் தான் சீன் படம்னு ஏமாந்து போய்ட்டேனா?ன்னு கேட்காதீங்க.. நாங்க எல்லாம்  போஸ்டர் டிசைன் பார்த்தே, டைட்டிலை வெச்சே கண்டு பிடிக்கற ஆளுங்க ..

டிஸ்கி 2 - blitz அப்டின்னா என்ன அர்த்தம்னு  படம் பார்க்கும்போதே ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.. 2 அர்த்தம் சொன்னாங்க.. 1. A PERIOD OF GREAT ACTIVITY FOR SAOME SPECIAL PURPOSE ( INFORMAL) 2. GERMANN (NOUN)

ஆனா படத்துல வில்லனோட பேருதான் ப்லிட்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://content.internetvideoarchive.com/content/photos/7283/30589602_.jpg

20 comments:

RAMA RAVI (RAMVI) said...

first??
படிச்சுட்டு வருகிறேன்

RAMA RAVI (RAMVI) said...

jason statham என்றாலே action படம் தான்.
விமர்சனம் நன்னயிருக்கு.

Unknown said...

அண்ணே வணக்கம்னே விமர்சனத்தோட படத்தை பாத்து பழகிப்போச்சி இப்ப பாருங்க உங்க பதிவுல படம்(போட்டோ) வரல! ஹிஹி!What to do!

ராஜி said...

Yarunga andha Girl friend cp sir?!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

superb

MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்பிச்சிட்டான்ய்யா கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, ரெண்டே ரெண்டு படம்தான் கண்ணுக்கு தெரியுது வேற ஒன்னும் தெரியலை...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம்ம்ம் அனுபவி ராசா நல்லா அனுபவி, நமக்கு படம் பார்க்க லீவும் கோப்பும் கிடையாது நீ அனுபவி...!!!

விச்சு said...

விமர்சனம் நல்லாயிருக்கு...

கோகுல் said...

நானும் blitz-ன்னா என்னன்னு ஆவலா இருந்தேன் கடைசியில பல்பு கொடுதுட்டிங்களே!

Anonymous said...

உங்க பதிவுல படம் வரல...

காசு குடுத்து போய் பாருன்னு symbolic aa சொல்றீங்களோ...ஏற்கனவே பார்த்து சகிச்சாச்சு இந்த சொதப்பலை..மறுபடி Transporter வராது...

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்போ கொஞ்ச நாளா சிபி இங்கிலீபீச்சு படமா பாக்கறாரே? ஏன்?


நம்ம தளத்தில்:
மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்

Unknown said...

நாளைக்கு பார்க்கலாம்ன்னு இருக்கேன்...

K.s.s.Rajh said...

சீன் ஓன்றும் இல்லை என்று நீங்களே சொல்லிட்டீங்க அப்பறம் என்னத்துக்கு படத்தை பார்த்து.......

மகேந்திரன் said...

விமர்சனம் நல்லாயிருக்கு நண்பரே,,,,

Unknown said...

வேலாயுதம் - இடைவேளை விமர்சனம்
http://aagaayamanithan.blogspot.com/2011/11/blog-post_05.html

சுதா SJ said...

அண்ணே நாங்கள் இங்கிலிஸ் படம் எல்லாம் பாக்கிறது இல்ல... ஏதோ உங்கட புண்ணியத்தில் விமர்சனம் படிக்கிறதோட சரி... விமர்சனம் நல்லா இருக்கண்ணே

IlayaDhasan said...

படம் பாத்து சீனே இல்லன்னு சொல்றீங்க...ஆபரட்டருக்கு தள்ளியிருந்தா , ரெண்டு மூணு பிட் போட்டு உங்க ஆசைய
தனிச்சிருப்பாரே, மிஸ் பண்டீங்க

என்னை ஏதோ செய்கிறாள் - கிரைம் தொடர் - பாகம் 1

ஸ்ரீராம். said...

//"வில்லனா நடிச்சவர்தான் அதிக சீன்ல வர்றார்!"//

ஒரு வேளை அவர்தான் ஹீரோவோ என்னமோ...மங்காத்தா மாதிரி.

நிரூபன் said...

விமர்சனம் சூப்பர் பாஸ்,

இந்தப் படத்தோட கதை எனக்கு இன்னோர் ஆங்கிலப் படக் கதையினை நினைவுபடுத்துகிறது.

படத்தின் பெயர் நினைவிற்கு வருதில்ல.