Friday, October 07, 2011

REAL STEEL - சுட்டிகளுக்கான ஜாலி ரோபோ - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://moviecarpet.com/iwave/images/1/o-two-new-real-steel-clips.jpgஹாலிவுட்டில் ஜீன் கிளாடு வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,  கோலிவுட்ல அணில் புகழ் விஜய் நடிச்ச பத்ரி , ஜெயம் ரவி நடிச்ச எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படங்களை எல்லாம் ஒரு டைம் ரிவைண்ட் பண்ணிக்குங்க.. இதுவும் அது போல் ஒரு பாக்சிங்க் பேஸ்டு ஸ்டோரிதான்.. ஆனா ரோபோ பாக்சிங்க் என்பது மட்டுமே புதுசு..

மனிதர்களை வெச்சு நடத்தற பாக்சிங்க் சூதாட்டம் ஒரு கட்டத்துல போர் அடிச்சுடுது..  மக்கள்ட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ரோபோக்கள் ஃபைட் போடற மாதிரி ஏற்பாடு பண்றாங்க.. நம்ம ஹீரோ , அவருக்கு ஒரே ஒரு ஒயிஃப் ( என்ன ஒரு சோகம்.. அந்த ஒரு ஒயிஃபுக்கும் படத்துல நோ சீன் . பிகாஸ் இது அக்மார்க் சைவபடம்). ஒரே ஒரு சன்..அவர் தன் வீட்லயே ரோபோவை ரெடி பண்றார்... 

அது கிட்டத்தட்ட , தூரத்தட்ட நம்ம ஊர் கிளி மாதிரி.. என்ன வித்தியாசம்னா கிளி சொன்னதை திருப்பி சொல்லும், ரோபோ நாம என்ன செய்யறமோ  அதை அப்படியே திருப்பி செய்யுது.. 

ஹீரோ அதுக்கு பாக்சிங்க் கத்துக்கொடுக்கறாரு.. ஹீரோவோட பையன் அதுக்கு டான்ஸ் கத்து தர்றான்..போட்டில கலந்து ஜெயிக்குது...

http://images2.fanpop.com/image/photos/13600000/Evangeline-Lilly-and-Hugh-Jackman-filming-Real-Steel-in-Detroit-Michigan-July-6-lost-13660028-500-730.jpg

ஹீரோவுக்கு ஏகப்பட்ட கடன்.. பலர்ட்ட கடன் வாங்கி இருக்கார்.. ரோபோ மேட்டர் தெரிஞ்சு எல்லாரும் அவரை நெருக்கறாங்க.. ஒரு கோஷ்டி 40 கோடி ரூபா தந்து அந்த ரோபோவை வாங்க தயாரா இருக்காங்க.. ஆனா பொடியன் சம்மதிக்கலை... அதே ரோபோவை வெச்சு நிறைய போட்டிகள்ல கலந்து நிறைய சம்பாதிக்கலாம் என்பது அவன் ஐடியா.. கிடைச்ச வரை லாபம்  கொடுத்துடலாம்கறது ஹீரோவோட நினப்பு..

 கடைசில யார் நினச்சது நடந்தது என்பதை வெண் திரையில் காண்க!!

இந்தப்படத்தை தியேட்டர்ல குழந்தைங்க எல்லாம் ஆரவாரமாய் கை தட்டி ரசிச்சாங்க.. ஆனா எனக்கு படம் பிடிக்கலை..

2 மனுஷங்க குத்துச்சண்டை போட்டா  ஒருத்தர்க்கு வலிக்கும், அதிக அடி படும், அவர் தோத்துட்டதா சொல்லலாம்.. ரோபோவுக்கு ஏது வலி? ஏது உணர்ச்சி? இந்த ஆதாரக்கேள்விகள் மனதில் வந்து நின்றதால் என்னால் ரசிக்க முடியல..  

http://www.hdimages.in/wp-content/uploads/2011/08/real-steel-evangeline-lilly-hot-photos.jpg

படத்தில் வந்த ரசனையான வசனங்கள்

1.  உங்களுக்கு வேணாம்னா தூக்கிப்போட்டுடுவீங்க.. அதானே மனிதர்களோட குணம்?



2.  அது ஒண்ணும் என் உயிரை காப்பாத்தலை.. அதுக்கு உயிர் கொடுத்ததே நான் தான்..

3. ம் ம் .. ம் ஒத்துக்கறேன், நீ புத்திசாலிதான்.. 

டாடி.. நான் உங்களை விட புத்திசாலி... அதையும் ஒத்துக்குங்க..

4. அப்பா.. எனக்கு 11 வயசு ஆகுது.. 

அப்டியா? நிஜமாவா? நான் 9 அல்லது 10 வயசுதான் இருக்கும்னு நினைச்சேன்./. 

5. எது சொன்னாலும் எதுத்தேதான் பேசறான்..

ஆமாங்க.. உங்க பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்.. 

6.  என்னை அப்படி பார்க்காதீங்க.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது... 

சரி.. பிடிக்காதுன்னா ஏன் நான் பார்க்கறதை நீ பார்க்கறே?

7.  எங்கப்பாவை என் கண்ணுக்கு முன்னால அடிக்காதீங்க.. உங்க பையன் முன்னால நீங்க அவமானப்பட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்?

http://adonismens.com/wp-content/uploads/2011/06/real-steel-release-date.jpg?547c56

 படத்தில் கை தட்டலை அள்ளிய காட்சிகள்

1.  பொடிப்பையனின் நடன அசைவுகளை ரோபோ அட்சரம் பிசகாமல் செய்து செம ஸ்டெப் போட்டு ஆடுவது டாப் ...ஒரே ஆரவாரம் தியேட்டரில்.. 

2. ஹீரோ - ஹீரோயினின் எல்லை தாண்டாத கண்ணியமான ரொமான்ஸ் காட்சி 

3. ஓப்பனிங்க் ஃபைட்டிலும், க்ளைமாக்ஸ் ஃபைட்டிலும்  ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பில்  எடுப்பட்ட ஃபைட் சீன்கள்

 http://l.yimg.com/l/im_siggM1MImfoxwWoiGd68SC1EHw---x209-y280/tv/us/img/site/55/78/0000035578_20061027052559.jpg

சில சந்தேகங்கள், சில கேள்விகள்

1. ஒரு ரோபோவை உருவாக்கவே 10 கோடி தான் எனும்போது ஹீரோவை வைத்து புதிது புதிதாய் பல ரோபோக்களை மார்க்கெட்டில் இறக்கி காசு பார்த்திருக்கலாமே? ஏன் அதே ரோபோதான் வேணும் என வில்லன் குரூப் அடம் பிடிக்குது? லோக்கல் பாஷைல சொல்லனும்னா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

2. என்னதான் ரோபோ செமஸ்பீடு என்றாலும் பொடியனின் டான்ஸ் ஸ்டெப்பை பார்த்து ஒரு செகண்ட் லேட்டாகத்தானே ரோபோவால் பர்ஃபார்ம் பண்ண முடியும்? எப்படி ஒரே டைமில் அப்படி டாண்ஸ் பண்ன முடியும்?

3. செஸ் போல் குத்துச்சண்டையையும் ஒரு புரோகிராம் போல் ஹீரோ ரோபோவுக்கு கற்றுத்தந்து மெம்மரியில் வைக்கிறார்.. பிறகு ஏன் குத்துச்சண்டை போட்டியின் போது ரோபோவுக்கே டெமோ காட்றார்?

4. 2 லட்சம் கடனுக்காக கை வசம் கோடிகளை வைத்திருக்கும் ஹீரோவை கடன் கொடுத்த வடக்குப்பட்டி ராம்சாமிகள் துன்புறுத்துவது ஏன்? அதான் அவர் கிட்டே காசு சேர்ந்துடுச்சே.. பணத்தை முகத்தில் விட்டெறியாமல் ஹீரோ ஏன் கடனாளிகளைக்கண்டதும் எஸ் ஆகிறார்?

ஈரோடு வி எஸ் பி யில் இந்தப்படம் பார்த்தேன்.

இங்கே ஒரு வாரம் தான் ஓடும் போல.. ஏன்னா 14.10.2011 வேற படம் வர்றதா அவங்களே போஸ்டர் ஒட்டி இருக்காங்க..

சி.பி கமெண்ட் - குழந்தைகள், சின்னப்பசங்க பார்க்கலாம் ( அதான் நான் பார்த்தேன்)

22 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

கோகுல் said...

உண்மைய சொல்லுங்க சைவப்படம்னு தெரியாமத்தானே போய்டிங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது குழந்தைகள் பார்க்கும் படமா? எனி ஸ்பெல்லிங் மிஸ்டேக்?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ் ராவடி.. கண்ணியமான பிளாக்ல , என்ன கமெண்ட் இது>? ராஸ்கல் ஹி ஹி

ராஜி said...

:-)

ராஜி said...

:-) :-)

aotspr said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ம.தி.சுதா said...

இந்தா பார்ரா பால் வடியும் முகத்தை குழந்தைகள் படமுண்ணோண்ணை பாத்தாராம் நம்மாளு..

ம.தி.சுதா said...

மனுசன் வேணாமுண்ணா தூக்கி போட்டடுவான்ணு இவ்ளவு சுலபமா தத்துவம் சொல்லுதே..

ம.தி.சுதா said...

சீபி முன்னைய பதிவுகளுக்கான விமர்சனத்துக்கு அப்புறம் வாறன் ஒன்றும் இன்னும் நான் படிக்கல.

RAMA RAVI (RAMVI) said...

Hugh Jackman னோட படம்ன்னு சொல்லாம விட்டுடீங்களே.
நீங்க போஸ்ட் பண்ணியிருக்கற படத்தை பார்த்துதான் கண்டு பிடிச்சேன்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, இன்னைக்கு வெள்ளிகிழமை ஆச்சே, பிட்டு படம் பார்க்க போகலையா?

சசிகுமார் said...

அட!!!

Unknown said...

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் தான் வேணும்னே....உங்க விமர்சனம் சூபர்ன்னே

Unknown said...

விமர்சணம் சூப்பர்

Anonymous said...

எங்களுக்காகவே படம் பார்க்கும் அண்ணனுக்கு நன்றி...

விமர்சனம் சூப்பர்...

Anonymous said...

அண்ணே, விஜய் நடிச்ச பத்ரியும் ரோபோ பேஸ்ட் பாக்சிங் ஸ்டோரிதான்... வேணும்னா இன்னொரு வாட்டி பாருங்க,,, மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஷனும் இருக்காது...

Anonymous said...

////இந்தப்படத்தை தியேட்டர்ல குழந்தைங்க எல்லாம் ஆரவாரமாய் கை தட்டி ரசிச்சாங்க.. ஆனா எனக்கு படம் பிடிக்கலை..//////

இது எங்களுக்கு தெரியும்....
கொழந்தைகளுக்கு புடிச்ச படம் எப்புடி ஒங்களுக்கு புடிக்கும் அண்ட் வைஸ் வேர்சா.....

Anonymous said...

கடைசில ஒரு சி.பி கமெண்ட் போட்டு அண்ணன் தப்பிக்க பார்க்குராறு....அண்ணன் இந்த படத்த பார்த்ததுக்கு பின்னாடி எதோ ஒரு ரகசிய காரணம் இருக்கு...

சென்னை பித்தன் said...

சின்னப் பையனுக்கு வாழ்த்துகள்!

ananthu said...

விமர்சனம் அருமை...என்னுடைய பதிவு 50 ...http://pesalamblogalam.blogspot.com/2011/09/50.html ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...

Ravikumar Tirupur said...

அப்பா ஜெயிக்காதுனு சொல்ற கோழியை சாரி! ரோபோவை சண்டைபோட வெச்சு மகன் ஜெய்க்கறான். அப்பாவும் மகனும் நல்ல நடிப்பு. இது பேன்டஸி படம் லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாது.