இயக்குநர் ஷங்கர் ரோபோ படத்துக்கு முதலில் கமலை செலக்ட் செய்து பின் ஷாரூக்கான் ஐ செகன்ட் சாய்ஸ்-ல் ஒப்பந்தம் செய்தார்.. சில காரனங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதும் அவர் விலகி விட்டார்.. ஆனால் அந்த சப்ஜெக்ட் பிடித்துப்போனதால் அதே சாயலில் ஆனால் உல்டா என்று சொல்ல முடியாத அளவு ஒரு படம் பண்ணத்தீர்மானித்தார். ஒரே ஒரு படத்தை உல்டா செஞ்சா கெட்ட பேர் என்பதால் அர்னால்டு ஸ்வார்செனேகர் நடித்த த டெர்மினேட்டர் 2 ( ஜட்ஜ்மெண்ட் டே) ,எந்திரன் , ஸ்பை கிட்ஸ் பாகம் 3 எல்லாம் கலந்து கட்டி ஒரு படம் கொடுத்திருக்கார்.... தமிழ் ரசிகர்கள் கிட்டே எடுபடாது என்றாலும் ஹிந்தில , மும்பைல இது ஹிட் ஆகிடும்..
ஷாருக்கான் - கரீனா கபூர் தம்பதி , அவங்களுக்கு ஒரு பையன்..அர்மான் வர்மா . ஷாருக் ஒரு வீடியோ கேம் எக்ஸ்பர்ட்...பையனுக்காக ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் ரோபோ மாதிரி இருவாக்க நினைக்கறார்.. ஆனா பையனுக்கு வில்லன் தான் பிடிக்குது.. பையனின் ஆசைப்படி ஒரு வில்லன் கேரக்டர் உருவாக்கறார்...அந்த ரோபோ தான் ரா ஒன்... அதை உருவாக்கும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு ஜி ஒன் அப்டினு ஒரு நல்ல (!!) ரோபோவை உருவாக்கி வைக்கறார்.
ஒரு கட்டத்துல ரா ஒன் தன்னிச்சையா செயல் பட்டு ஷாருக்கின் உதவியாளரை போட்டுத்தள்ளிடுது... ரா ஒன் -னை கண்ட்ரோல் பண்ற முயற்சில ஷாரூக் கொல்லப்படறார்.. ஹீரோவே இண்டர்வெல் முன்னால இறந்துட்டா படத்தோட கதி? அதனால பையன் ஜி ஒன் -னை உயிர்ப்பிக்கறான்..
இப்போ ஜி ஒன் ரோபோ ஷாரூக் மாதிரியே இருக்கு.. கரீனாவுக்கு தன் கணவன் நினைவு வந்துடுது.. 4 ரீல் கதை அப்படி ட்ராவல் பண்ண, திடீர்னு டைவர்ட் ஆகி ரா ஒன் - ஜி ஒன் மோதல் நேரடியா.... க்ளைமாக்ஸ் என்ன ஆகுது? என்பதை மக்கள் நாயகன் ராமராஜன் கூட கரெக்ட்டா சொல்லிடுவார்!!!
ஓப்பனிங்க்ல ரா ஒன் உருவாகறது, உதவியாளர் மோதல் எல்லாம் கொட்டாவி வர வைக்கும் விஷயங்கள்.. கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ரொம்ப சுமார்.. ஷாரூக் இறந்த பின் தான் கதை ஸ்பீடு எடுக்குது..
ஷாருக் இன்னும் இளமைத்துள்ளலோட நடிச்சிருக்கார்.. அவரது சிக்ஸ் பேக் பாடி செம.. டான்ஸ் , ஃபைட்னு ஷாருக்கின் சுறு சுறுப்பு எல்லா ரசிகர்களையும் கவர வைக்கும்..
கரீனா கபூர் முற்றலான முகம், இளமையான தேகம், கிளாமரான மனம்(!!!) என வித்தியாசமான கலவையில் ஜொலிக்கிறார்.. வில்லன் ஜிம் பாடி காட்றார்.. கொஞ்சூண்டு நடிப்பையும்.. அந்த சின்னப்பையன் நடிப்பு செம..
எந்திரன் படத்துல வர்ற ரயில் ஃபைட்டை சுட்டு ஒரு சீன் வெச்சிருக்காங்க.. அட ஃபைட் சீன்ப்பா.. நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு சீன்ல வர்றார்.. கதைப்படி ஷாருக்கை காப்பற்றுவது போல் பிளான் பண்ணி இருக்காங்க.. ஆனா அவர் உடல் நிலை கருதி சும்மா ஜஸ்ட் ஒரு ஸ்டைல் மட்டும் காட்டிட்டு போயிடறார்.. அதுக்கே தியேட்டர்ல செம விசில்..
படத்தோட ஓப்பனிங்க் சீன்ல பையனின் கனவு சீனில் அப்பா ஷாருக் சூப்பர் ஹீரோவா காட்டறது அவனோட அடி மனசு ஆசையை பிரதிபலிச்ச மாதிரியும் ஆச்சு.. படத்துக்கு கிராண்ட் ஓப்பனிங்க் கொடுத்த மாதிரியும் ஆச்சு...
படத்தில் ரசனையான வசனங்கள்
1. அப்பா.. எதுக்காக அந்த பொண்ணுங்களை கொன்னீங்க?
எனக்காக பொண்ணுங்க உயிரையே விடுவாங்கன்னு சொல்லலை? அது இதுதான்..
2. அவ கூட ஊரை சுத்தி டேட்டிங்க் போக வந்தியா? என் கூட சண்டை போட ஃபைட்டிங்க்காக வந்தியா? ( ஃபைட் - சண்டை 2ம் 1 தானே? டவுட்டு )
3. கரீனா - இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பொண்ணும் இனி நெஞ்சை நிமித்திட்டு நடக்கலாம்..
ஹீரோ - ரொம்ப நிமித்தாதே.. ஓவரா இருக்கு.. ( இல்ல கரெக்ட்டா தான் இருக்கு பை மெஷர்மெண்ட் மேக நாதன் )
4. டாடி.. ஐ லைக் வில்லன்ஸ் ஒன்லி.. ஹீரோக்கு ரூல்ஸ் இருக்கு... ஆனா வில்லன்ஸ்க்கு நோ ரூல்ஸ்..
5. கரீனா - என்னை அங்கே எல்லாம் தொடக்கூடாது..
ரோபோ - அப்போ எங்கே எல்லாம் தொடலாம்?
கரீனா - எங்கேயும் தொட வேணாம்..
6. டேய்.. அங்கே பாரு, 2 பேரையும்.. மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியப்போகுது..
ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.. அவங்க எங்கம்மா..
7. அவங்க ஏன் கீழே விழுந்தாங்கன்னா லா ஆஃப் கிராவிட்டேஷன்..
சரி.. நீ ஏன் அந்த ஃபிகரை பார்த்து சிரிக்கறே?
அது லவ் ஆஃப் அட்ரேக்ஷன்..
புரியலையே..
நீ இன்னும் வளரனும் தம்பி..
8. HE IS HANDSOME.... ( அவர் செம பர்சனாலிட்டி.. )
YES, MY HUSBAND... ( ஆமா, என் கணவர் தான்)
ஆனா அவரோட ஹேர் ஸ்டைல் தான் சகிக்கலை..
9. யூ நோ ஒன் திங்க்..? வருஷா வருஷம் 1000 பேர் சிகரெட் பிடிக்கறதை விட்டுடறாங்க..
அட!!!பாக்கெட்ல பிரிண்ட் ஆகி இருக்கற வார்னிங்கை படிக்கறதாலா?
ம்ஹூம்.. அத்தனை பேர் இறக்கறாங்க, அந்த பழக்கத்தால..
10. அவர் ஏன் இப்படி பைத்தியகாரத்தனமா நடந்துக்கறாரு?
ம் ம் .. அது பாகள் யோகா ( ஹிந்தில பாகள் = பைத்தியம்)
11. அவர் ஏன் வேடிக்கை பார்க்கறார்?
இதென்ன கேள்வி? ஆம்பளைங்கன்னா பொண்ணுங்களை பார்க்கத்தான் செய்வாங்க..
12. சாரி.. சக்சஸாஃப் சர்வைவல் 0.01 % மட்டும் தான் இருக்கு..
பரவால்ல.. நாம ட்ரை பண்ணிதான் ஆகனும்.
13. சந்தோஷத்துலயும், துக்கத்துலயும் மனுஷங்களுக்கு கண்ணீர் வருது.. ஆனா நான் ரோபோ.. எனக்கு உணர்ச்சிகளே இல்லை.. ஐ ஆம் ட்ரை (DRY)
14. சுட்டிப்பையன் - ஆஹா, சூப்பர்..
. எது? நான் அடி வாங்குனதா?
15. ஏய்.. என்ன பண்றே?
பார்த்தா தெரில? அவன் அடி குடுக்கறான், நான் வாங்கறேன்..
16. கேம்ஸ்லயும், லைஃப்லயும் நாம எதிர்பார்க்காததுதான் நடக்கும்..
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. ஷாருக்( ரோபோ) ஏர்போர்ட்டில் செக்கிங்கை ஏமாற்ற கையாளும் தந்திரம்.. பெண்களை நெளிய வைக்கும் சீன் என்றாலும் செம காமெடி.. .
2. ரோபோக்களின் அடிதடி தான் படம் என்ராலும் புத்திசாலித்தனமாக திரைக்கதையில் கணவன் - மனைவி, அப்பா பையன் செண்ட்டிமெண்ட்டை புகுத்தியது..
3. கரீனாகபூரை, ரஜினியை சரியாக யூஸ் பண்ணிகொண்டது..
4. புதுசாக எழுதப்பட்ட கதையோ என சில சமயம் நம்ப வைத்தது..
5. ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சுவரை உடைத்து நிற்கும் பிரம்மாண்ட சீன் வெல்டன்..கிராஃபிக்ஸ்
இயக்குநர்க்கு சில கேள்விகள் ( ஐ ஜாலி அவருக்கு தமிழ் தெரியாது)
1. ஷாருக் ரோபோவை உருவாக்கும்போதே எம்ர்ஜென்சி பீரியடில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து ஆல்டெர்நேடிவ் ரூட் ஏன் செலக்ட் பண்ணி வைக்கலை?
2. ரோபோ ஷாருக் மனிதரைப்போலவே கண்கள் இருக்கே எப்படி? எந்திரனில் இதை சமாளிக்க ஷங்கர் கூலிங்க் கிளாஸ் மாட்டிவைத்தார்..
3. தானாக சிந்திக்காத ரோபோ ஒரு சீனில் மட்டும் பொடியன் சொல்வதை மீறி, அவன் கட்டளைக்கு எதிராக வில்லனை தாக்குவது எப்படி?
4. சாவே இல்லாத ரா ஒன் ஷாருக் - கரீனா மும்பை போய் 4 ரீல்கள் ரொமான்ஸ் பண்ணும் வரை சும்மா இருப்பது ஏன்?
5. வில்லன் ரோபோ ஃபாரீனில் இருந்து மும்பை வந்தது எப்படி? அதை காட்டவே இல்லையே? பஸ்போர்ட், விசா எப்படி எடுக்க முடிந்தது? ஷாருக் வர அவ்வளவு திணறி இருக்கும்போது வில்லன் மட்டும் எப்படி ஈஸியாக வர முடிந்தது?
சி.பி கமெண்ட் - ஷாருக் ரசிகர்களும் , சின்னப்பசங்களும் பார்க்கலாம்.. லைக் காமிக்ஸ் ஃபிலிம்..
ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணால படம் பார்த்தேன்.. ஒரே சேட்டாங்க கூட்டம்.. அதுல ஃபிகர்ங்க இருந்தாங்களான்னு நான் பார்க்கவே இல்லப்பா... 2 மணி நேரம் 40 நிமிஷம் படம் ஓடுது..
ஆக்டிங்க் - Shah Rukh Khan, Kareena Kapoor, Arjun Rampal, Shahana Goswami, Armaan Verma
A
32 comments:
நன்றி.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
diwali vadai gone !
கலக்கல் மச்சி .. இன்னைக்கே மூணு படமும் பாக்குற ஐடியா வா?
Rajini on the movie ?
ஒழிந்தான் ஒரு எதிரி... ஹீ ஹீ.. தமிழ்ல அவ்வளவு போகாது எண்டுறியள் ok,,,
ரஜினி படம் போதாததுக்கு கடும் கண்டனங்கள்....!!!
டேய் இன்னைக்காவது பதிவுக்கு லீவு குடுக்கப்புடாதா...???
நான் ஹிந்தி படம் பார்த்து வருஷம் பல ஆச்சு...!!!!
கரீனா கபூரைப் பற்றிய அரிய(?) உண்மையைக் கண்டுபிடித்த அண்ணன் சிபி வாழ்க....
எந்திரன்ல சிட்டி ரஜினி கண்ணாடி போட்டிருந்தத ஸ்டைலுக்குன்னு நெனச்சிருப்பாங்க.....
முத்தலு தொத்தலுன்னு சொல்லிக்கிட்டே எல்லாப்படத்தையும் போட்டுக்கிட்டாருய்யா....
அண்ணே உலவு'ல இணைச்சி ஓட்டும் போட்டாச்சு இனி உன் ஓட்டை குத்து....
////// MANO நாஞ்சில் மனோ said...
டேய் இன்னைக்காவது பதிவுக்கு லீவு குடுக்கப்புடாதா...???/////
இன்னிக்குத்தானே முக்கியமான வேலையே....?
இனி அடுத்து அந்த கில்மா படம் விமர்சனமா....?
Happy diwali
ஆள் வச்சு படம் பார்ப்பீங்களா? விமர்சனம் நல்லாயிருக்கு...
இந்த படமும் பார்த்துட்டீங்களா ?
ரா ஒன் விமர்சனம்
ரா வா ஒன் விமர்சனம்
நண்பா..எப்டி நண்பா எல்லா படத்தையும் தியேட்ட்ர்லையே பாக்குறீங்க?ரொம்ப தப்பாச்சே!!!!
அருமையான பதிவு.
விமர்சணம் சூப்பர்
ராவா இருக்கு விமர்சனம்!
படம் சின்ன பசங்க பாக்குற மாதிரி இருக்குன்னு சொன்னாங்க...
பதிவுலகின் பிதாமகனே வணக்கம்!
இந்த படத்தை பார்ப்பதாக எனக்கு எண்ணம்
இருக்கவில்லை.
ஆனால் உங்கட விமர்சனத்த பார்த்த பிறகு
கட்டாயம் பார்க்க வேணும் போல இருக்கு.
(சத்தியமாய் விமர்சனத்த மட்டும் தான்..... நம்ம
கரீனாவின் படத்தை அல்ல.) {யப்பா.... எனனே ஒரு FIGAR}
தல, இந்தப் படம் பெரிய்ய்ய்ய ஏமாற்றம்! வெறும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுகளை மட்டுமே நம்பி எடுத்திருக்காங்கன்னு தோணுது! ஷாருக் சொதப்பிட்டாரு! :-(
சார் உங்க விமர்சனத்த விமர்சிக்க எனக்கு என்ன சார் தகுதி இருக்கு(!)...இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இந்த பதிவுல படங்கள் தான் வாசகர்களை அதிகம் கவருதோன்னு எனக்கொரு டவுட்டு!
விமர்சணம் பின்னிபெடலடுத்திருக்கீங்க சகோ
ரா ஒன் - ஏ ஒன் விமர்சனம்
எங்க ஊரில் இந்தப்படம் இன்னும் வரவில்லை........உங்கள் விமர்சணம்..மூலம் படம் பற்றி அறிந்து கொண்டேன்
nice re-view....
mano
தமிழ் தீபாவளி ரிலீஸ்களை விட இந்த படத்தின்மேல் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.இந்த விமர்சனம் பாத்தப்பறம் அதுவும் காலி :))
நா... படத்துக்குப் போகும்போதே பேப்பரும் பேனாவோட தான் போவீங்களோ..?? இத்தனை விமர்சனத்தை அப்படியே லபக்கிகிட்டு இங்க வந்து கொட்டி இருக்கீங்க.. எப்டிங்ணா... சூப்பர்...
Post a Comment