Friday, October 21, 2011

FOUR FRIENDS - மீரா ஜாஸ்மின் -ன் கண்ணியமான மலையாளப்படம் - சினிமா விமர்சனம்

http://www.mmdbonline.com/photos/Four%20Friends.jpgசாஜி சுரேந்திரன் கேரளாவின் சூப்பர் ஹிட் ஹாட்ரிக் ஹிட் டைரக்டர்...அவரது முதல் படம் ”இவர் விவாஹித்தவரையில்" ,  அவரது 2வது படம் ” ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் “  அவரது 3 வது படம் தான் இது.. கேரளாவுல போன வருஷமே ரிலீஸ் ஆகி  சுமாரா ஓடுச்சு.. இப்போ தமிழ்ல அன்புள்ள கமல் அப்டிங்கற டைட்டில்ல வந்திருக்கு. கமல் ஒரே ஒரு சீன்லதான்  வர்றாரு, ஆனா போஸ்டர்ல அவர் தான் ஹீரோ என்பது போல் பில்டப்பு...

விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னே இந்தப்படத்தை ரீமேக் பண்ற ஐடியா யாருக்காவது இருந்தா அவங்களுக்கு ஒரு வார்னிங்க் குடுத்துக்கறேன்.. இது தமிழ்ல ரீமேக்குனா சத்தியமா ஓடாது..  ஏன்னா ஆல்ரெடி பல வருஷங்களுக்கு முன்னால விஜய் காந்த் நடிச்ச தழுவாத கைகள் உட்பட 27 படங்கள் இதே கான்செப்ட்ல வந்துடுச்சு...இங்கே எடுபடாது.. 

படத்தோட கதை என்ன? கோடீஸ்வரர் கம் தொழில் அதிபர் ஜெயராம்,லோக்கல் ரவுடி  ஜெயசூர்யா, போபன் ஒரு இசைக்கலைஞர், மீராஜாஸ்மின் தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டு மன நிலை பாதிக்கப்பட்ட (மெண்டல் அல்ல) மன அழுத்தம் கொண்ட பெண்.. வெவ்வேறு பேக் கிரவுண்ட் உள்ள 4 பேரும் ஒரு புள்ளியில் இணையறாங்க.. 4 பேருக்கும் கேன்சர்..( (blood, liver, bone, stomach cancer) ஒரே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் நடக்குது..


4 பேருக்கும் என்ன என்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்ற ஒண்ணா கிளம்பறாங்க ( அப்போத்தானே கதை நகரும்?) ஒருத்தர்க்கு தன் காதலிக்கு கிடார் பரிசாத் தர்னும்னு ஆசை , அதுக்காக மலேசியா போறாங்க,இன்னொருத்தர்க்கு கமல்ஹாசனை நேர்ல பார்க்க ஆசை ( படத்தோட ஸ்டார் வால்யூ ஏத்திக்க).. 4 பேரும் ஜாலியா கிளம்பி போறாங்க.. என்ன நடக்குது? என்பதே திரைக்கதை.. 


ஜெயராம் தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுமா? பொண்ணுங்க எப்பவும் புத்திசாலிங்க என்பதை மீரா ஜாஸ்மின் கேரக்டர் மூலமா சொல்றார் டைரக்டர்.. அதாவது பாப்பா கோடீஸ்வரரான ஜெயராமை லவ்வுது.. ஏன் அதே ஹாஸ்பிடல்ல இருக்கற ஒரு பரதேசியை லவ்வலை? அட்லீஸ்ட் கூட இருக்கற மற்ற 3 பேரை லவ்வலை?


இடைவேளை கார்டு போடறப்ப கமல் வர்றாரு. தன்னம்பிக்கை வரிகள், தத்துவம் சொல்லிட்டு கிளம்பிடறாரு.

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/10/Four-Friends-Malayalam-Movie-Photo-Gallery-6.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. முடியைப்பிச்சுடுவேன்.. 

அது வளர்ந்திடும் பல்லைப்பிடுங்கிடுங்க, வளராது.. 

அடப்பாவி, போட்டுக்குடுக்கறியா?

2. என் கிட்டே 30 ஜோக்ஸ் கை வசம் இருக்கு.. எல்லாரையும் சிரிக்க வைக்கப்போறேன்.

எல்லாம் எனக்கு மனப்பாடம். நீ நெம்பரை மட்டும் சொல்லு, நான் நினைவு படுத்திக்கிட்டு சிரிச்சுடறேன்..


3. என் கடைசி நாட்களை நான் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கறேன்..

அப்டி சொல்லாதே.. இயற்கையை ரசிக்க கிளம்பறேன்னு சொல்லு..


4. உன்னோட சாவு நெருங்கிட்டு இருக்கறதா நினைக்காதே, காப்பாத்த வழி இருக்கு..

என் கிட்டே டாக்டரா நடந்துக்காதே.. ஒரு நண்பனா நடந்துக்கோ..

5.  I AM NOT OBJECT TO ENTERTAIN......

பாப்பாவுக்கு தமிழ் தெரியாது போல... ( எல்லாம் தெரியும், பசங்களூக்கு முன்னால ஃபிலிம் காட்டும்ங்க..)

6.  நான் அவ திமிரை அடக்கறேன்...

லேடி - வாடா.. நான்.. ரெடி.. அடக்கு/... ( அடங்கோ)

7.  பதுங்கி தாக்குற புலி மாதிரி மரணம் நமக்காக காத்திருக்கு

8. நெகடிவ்வை பாசிட்டிவ்வா பார்க்கனும், இனிமே கேன்சர் வியாதி உள்ள எல்லாரையும் குழந்தையா பார்ப்போம் நாம்..

9. சிம்ப்பதி ( இரக்கம்) அவளுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை ..


http://enchantingkerala.org/gallery/albums/four-friends/four-friends-malayalam-movie-stills%20(13).jpg

10.  மனசுல தைரியம் உள்ளவன் எந்த வியாதி வந்தாலும் ஃபேஸ் பண்ணுவான்..

11. இப்போ எல்லாம் இன்னும் வாழனும்கற ஆசை எனக்கு ரொம்ப வந்திருக்கு..

12. கிளம்பறப்ப தான் பிரிவோட வலி தெரியுது..

13. வெளிநாடு போய் சம்பாதிக்க வேணாம்டா மகனே.. 100 ரூபாய் சம்பாதிச்சாலும் எங்க கூடவே இருடா..

14.  டேய்.. அது ஏசியா இல்லடா.. மலேசியா..

ஓ.. ஏசியாவோட தலைநகரம் மலேசியாவா?

15.  அவங்க எப்படி ரீ ஆக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல..

அவங்க மட்டும்தான்  ரீ ஆக்ட் பண்ணுவாங்களா?நாங்களும் தான்  ரீ ஆக்ட் பண்ணுவோம்..

16. பாடம் சொல்லிக்குடுத்த ஐடியல் டீச்சர்ஸ், அம்மா, அப்பா இவங்க கால்ல மட்டும் தான் நான் விழுவேன், ஆசீர்வாதம் வாங்குவேன், வேற எவன் கால்லயும் எதுக்காகவும் விழமாட்டேன்.


17. மலையாள நடிகர் சத்யன் இருக்காரே, அவரைப்பற்றி ஒரு தகவல்.. அவர் அடிக்கடி செல்ஃப் டிரைவ் பண்ணி ஹாஸ்பிடல் போய் பிளட் ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷன் பண்ணிட்டு அவரே ரிட்டர்ன் வண்டி ஓட்டிட்டு ஷூட்டிங்க் ஸ்பாட் வருவாராம்.. எந்த அளவு மனோ தைரியம் வேணும் இதுக்கு..


18. இந்த உலகம் ஒன்லி ஃபார் மில்லியனர்ஸ்.....

19. நீங்க இருக்கற இடம் தேடி வர்றவங்க தான்  உண்மையான ஃபிரண்ட்ஸ்..

20. வினிதாவுக்கு காலேஜ் லீவ்.. இனி மண்டே (MONDAY) தான் அவளை பார்க்க முடியுமாம்..

வினிதா மண்டையை பார்த்து என்ன யூஸ்? எல்லாத்தையும் பார்ப்போம்.. ( அடப்பாவி!!)

21. அவனுக்கு வந்திருக்கற கேன்சர் நோய்க்கு மருந்து இருக்கு.. உனக்கு வந்திருக்கற இந்த சேஃப்டி லைஃப் போதும், லவ் வேணாம்கற சுய நல நோய்க்கு மருந்தே இல்லை..

22. கமல் - எனக்கு நெருக்கமான பல ஃபிரண்ட்ஸ் நோயால இறந்திருக்காங்க.. ஸ்ரீவித்யா கூட கடுமையா நோய் கூட போராடி இறந்தாங்க.. என் கவுதமிக்கு கூட புற்று நோய் இருக்கு.. ( இது புது தகவல்)


http://1movieoneday.com/wp-content/uploads/2009/06/ever-vivahitharayal-malayalam-movie-stills-gallery-_12_.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கமர்ஷியல் சக்சஸ்க்கு சான்ஸ் இல்லை என தெரிந்தும் துணிச்சலாக இந்த கதை கருவை எடுத்துக்கொண்டது,,

2. கமலை கரெக்ட்டாக யூஸ் பண்ணிகொண்டது..

3. மீரா ஜாஸ்மின் - ஜெயராம் காதலை கண்ணியமாக காட்டியது..

4. இறக்கப்போகும் தருவாயில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தும் விதம் காட்சிகளை அமைத்து, தன்னம்பிக்கை டானிக் வசனங்கள் சேர்த்தது

http://mimg.sulekha.com/malayalam/four-friends/stills/four-friends-stills034.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே ஹாஸ்பிடலில் என காட்டும்போதே அனைவருக்கும் இந்த ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் கேன்சர் பேஷண்ட்ஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல ,நயன் தாராவின் தெளிவற்ற காதல் போல புரிந்து விடுகிறது.. பிறகு எதற்காக ஒவ்வொருவருக்கும் கேன்சர் என்று சொல்லும்போதும் ஒரு அதிர்ச்சி இசையை பின்னணியில் காட்டுவதும், அதை கேட்கும் கேரக்டர்கள் ஜெர்க் ஆவதும்?

2. மீரா ஜாஸ்மின் ஒரு பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அந்த பர்த்டே பேபி மீரா ஜாஸ்மினுக்கு கேக் ஊட்ட ஓடி வருகிறார்.. அப்போ பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்ச் 6 இடங்களை அவர் கடந்து ஸ்லோ மோஷனில் ஓடி வர்றார். பின் கேக் ஊட்டும்போது 2வது ஆர்ச்சில் 2 பேரும்.. எப்படி? கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?

3. ஜெயராம் ஒரு கோடீஸ்வரர்.. அவர் ஏன் குறிப்பிட்ட 4 பேரை மட்டும் செலக்ட் செய்து டூர் போகனும்? எல்லாரையும் கூட்டி செல்லலாமே?அல்லது அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம் ( பட்ஜெட் எகிறிடுமே..)

4. போபனின் காதலி போபனுக்கு கேன்சர் என்பது தெரிந்ததும் அவனை அவாய்ட் பண்ண மலேசியா போயிடறதா சொல்றார். அப்படி அவாய்டு பண்ணனும்னு நினைக்கறவ எதுக்காக அவளோட பேரண்ட்ஸ்கிட்டே தன் அட்ரஸ் குடுத்து அவன் வந்தா குடுங்கன்னு சொல்லனும்? ரகசியமா எஸ் ஆக வேண்டியதுதானே?

5. போபன் மரணப்படுக்கைல இருக்கறப்ப அவனோட காதலியை கடைசியா ஒரு தடவை பார்க்க ஏன் ஆசைப்படலை?

6. மீரா ஜாஸ்மின் கேரக்டர் படம் பூரா ஒரு சீன்ல கூட பொட்டு வைக்கலை.. ஏன்? அதுக்கான எந்த விளக்கமும் படத்துல இல்லை.. அவர் ஒண்ணும் விதவை கிடையாது..

7. இடைவேளை வரை கேரக்டர் அறிமுகத்துலயே படம் நகருது... ஆனா அதுக்குப்பிறகு திரைக்கதை தடுமாறுது..

8. சாகறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாரும் அவங்கவங்க பேரண்ட்ஸ்கூடத்தானே இருக்க ஆசப்படுவாங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_o7hrSF42ZJpMlOKC9eMUnt43cnj1vBWsJVR8zz8XonMr9E_KjPD5vd_-WOraJ16t_OD8CpMN231ziX2Fnd7jWHFpeWXcGm2SqbtgDuT7q9yTLw-BuwrkuylxoCZNBS2zMoa3M7fEqYn_/s640/meera_jasmine_meera_jasmine006.jpg


சி.பி கமெண்ட் - இந்தப்படம் மரண பயம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஆண்கள் அதிகம் ரசிக்க மாட்டார்கள். பொறுமை ரொம்ப அவசியம்..  பெண்களுக்குப்பிடிக்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்


http://www.topnews.in/files/Meera-Jasmine-74610.jpg

65 comments:

மகேந்திரன் said...

விமர்சனம் மனதை கவரும் வகையில் இருக்குது நண்பரே.

கோவை நேரம் said...

இரண்டாவது மைசூர்பா....தீபாவளி வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

பாஸ்..கண்ணியமான படம் எனில் இதுக்கு முன்னால் எதாவது கில்மா நடிச்சு இருக்காங்களா..?( உங்களுக்கு தானே தெரியும் ..ஹி..ஹி )

ராஜி said...

Pirandha naal vaazhthukkal CP sir

ராஜி said...

Happy birth to you cp sir

Nirmala said...

Four Friends என்கிற இந்த படம் கேரளாவிலே மிக பெரிய ப்ளாப், அங்கே படத்துக்கு ஏகப்பட்ட காமெடி விமர்சனங்கள் கூட இருந்துது. Bucket List என்கிற படத்தோடு மானம் கெட்ட ஜெராக்ஸ்.
A good script, poor direction - overall a below average film.

வைகை said...

வானமே இல்லைன்னு வந்த பாலச்சந்தர் படமும் இதே போலதானே? அதுல தற்கொலை பண்ணிக்க போவாங்க.... இதுல கமல் அதுல பானுப்ப்ரியா... ஆனா அந்த படமும் அவ்ளோ ஹிட் இல்லை.. படம் பார்த்தா சந்தோசம் இருக்கணும்.. பயம் வர கூடாது :-))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கௌதமிக்கு புற்று நோய் புது தகவலா? வெரி ஓல்ட். இப்போ ஷி லுக்ஸ் பெட்டெர்
2 ஆவது மனம் கவர்ந்த வசனம் ஸ்பான்சர் செய்தது சிபி யா?

ராஜி said...

Where is Birth day party CP sir

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

வானமே எல்லை சுமாரா ஓடுச்சு.. அது தன்ன்னம்பிக்கை ஊட்டும் படம்

சி.பி.செந்தில்குமார் said...

@Nirmala

தகவலுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

@கோவை நேரம்

hi hi மலையாளம் என்றால் அப்படி நினைப்பீங்கன்னு லேபிள் அப்படி போட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

@மகேந்திரன்

நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

@நாய்க்குட்டி மனசு

எனக்கு இப்போதான் தெரியும்..

Unknown said...

அண்ணே வணக்கம்னே...
மனம் கவர்ந்த வசனங்களில் சில...

10. யாருக்கு இது - தெரிஞ்சி ஆகணும்யா!

16. நச்

22. வருத்தமளிக்கிறது.,.

விமர்சனம் நல்லா இருக்கு (கோல்ட் இல்ல சில்வர் தான் ஹிஹி!)

Unknown said...

வாழ்த்துக்கள்...என்னாது உனக்கு பொறந்த நாளா - இன்னா வேணும் நண்பா!(கில்மா பட டீவீடி தவிர!)

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

ஒரு நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம், சுமாரான படம் என்பதால் வேணூம்னே சுமாரா எழுதுனேன் @ சமாளீஃபிகேஷன் ஹி ஹி

விடு விடு

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

விக்கியின் ஆஃபீசில் ஒர்க் பண்ணும் 4 ஃபிகர்கள் ஃபோட்டோவையும் மெயில் பண்ணவும்

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

விக்கியின் ஆஃபீசில் ஒர்க் பண்ணும் 4 ஃபிகர்கள் ஃபோட்டோவையும் மெயில் பண்ணவும்

>>>>>>>>>>>>>>

வயசானாலும் உங்க கில்மாவும் ஜொள்மாவும் மாறாதிருக்கு எப்படிய்யா ஹிஹி!(இதுவும் ஒரு சமாளிபிகேஷன்!)

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்


பேச்சை மாத்தாதே, சமாளீக்காதே, நல்ல நண்பனா இருந்தா அனுப்பு, சுயநலக்காரன்னு பேரு எடுக்க ஆசைன்னா அனுப்பாதே!!!!

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்


பேச்சை மாத்தாதே, சமாளீக்காதே, நல்ல நண்பனா இருந்தா அனுப்பு, சுயநலக்காரன்னு பேரு எடுக்க ஆசைன்னா அனுப்பாதே!!!!"

>>>>>>>>>>>>

பதில் போடுவதற்கு முன்னாடி நல்லா யோசிச்சி பதில் போடு...இப்போ சமீபத்துல நடந்த பதிவுலக மோதலுக்கு ஆரம்பம் எங்கன்னு யோசி...ஹிஹி...இப்போ உன் பதிலை மீண்டும் படி...நாங்களும் கோப்போம்யா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி! சே எஸ் ஆர் நோ, அனுப்ப முடியுமா? முடியாதா? கண்டபடி திட்டி எதிர் பதிவு போடவா?

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி! சே எஸ் ஆர் நோ, அனுப்ப முடியுமா? முடியாதா? கண்டபடி திட்டி எதிர் பதிவு போடவா?

>>>>>>>>>>>

அத செய்டா முதல்ல...தில் இருந்தா என்ன திட்டி பதிவு போடு ஹிஹி!

settaikkaran said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல! தூள் கிளப்புங்க!

சி.பி.செந்தில்குமார் said...

@சேட்டைக்காரன்

நன்றிகள் அண்ணே!!!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

hi hi ஹி ஹி ஹி , போடறேன்,ஆனா எப்போ?ன்னு கேட்காதே

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
உங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

நிரூபன் said...

சுமாரான படம் பற்றிய விமர்சனம்..


பொழுது போக்கிற்காக பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

வழமையான ஸ்டைலில் விமர்சனம் கலக்கல்.

Ponchandar said...

மீரா ஜாஸ்மின்-னுக்கு நீங்க பொட்டு வச்சு அழகு பார்த்துட்டீங்க ஸ்டில்ஸ் மூலம் (ஒரே ஒன்றைத் தவிர)

rajamelaiyur said...

Super movie review

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஜெயராம் படம்னாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, அதுக்கு உங்க முதல் மூணு வசனமும் சாட்சி, அப்புறம் பதிவரிடம் ஒரு கேள்வி, மூணாவது படம் சுமாரா போனிச்சின்னா எப்புடி ஹட்ரிக் அடித்த டைரெக்டர்? ஆமா வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு மூணு மெகா ஹிட் அடிச்சு தளபதி ஹாட்ரிக் குடுத்தத நம்புவீங்க, இத நம்பமாட்டீங்களா?

CS. Mohan Kumar said...

உங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தல... உங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

Mathuran said...

அசத்தலான விமர்சனம்

Astrologer sathishkumar Erode said...

happy birthday

Astrologer sathishkumar Erode said...

சாயந்திரம் எப்பொ பார்ட்டி..சிப்ஸ் வாங்கி தரப்படாது...

K.s.s.Rajh said...

என்னது மீராஜஸ்மின் கன்னியான சாரி சாரி கண்ணியமான படமா?இருங்க படிச்சிட்டு வாரன்.

சென்னை பித்தன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

K.s.s.Rajh said...

இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளா பாஸ் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

விமர்சணம் அருமை..அதைவிட மீராஜஸ்மின் ஸ்டில் அழகு.....அவ்..

Yoga.S. said...

வணக்கம்!இன்னிக்கு ஒங்க பொறந்த நாளா,சொல்லவேயில்ல?காலண்டரிலையும் ஒண்ணும் காணம்?ஹி!ஹி!ஹி!!!நல்ல விமரிசனம்,வாழ்த்துக்கள் பொறந்த நாளுக்கும்!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஐ லைக் ஜாஸ்மின்....

மகேந்திரன் said...

இனிய நண்பர் சி.பி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீடூழி வாழ்க நண்பரே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்னண்ணே கண்ணியமான படம்......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி இருந்தாலும் மீரா ஜாஸ்மினுக்காக மன்னிச்சி விடுறேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
ஐ லைக் ஜாஸ்மின்..../////

சொல்லிட்டாருய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////josiyam sathishkumar said...
சாயந்திரம் எப்பொ பார்ட்டி..சிப்ஸ் வாங்கி தரப்படாது...//////

அப்போ டீ மட்டும் போதுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, நானும் வாழ்த்திக்கிறேன்......

Sen22 said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

விக்கியின் ஆஃபீசில் ஒர்க் பண்ணும் 4 ஃபிகர்கள் ஃபோட்டோவையும் மெயில் பண்ணவும்//

அண்ணே எனக்கும் காப்பி அனுப்புன்னே...

அம்பாளடியாள் said...

பதிவும் படங்களும் அருமை !...உங்களுக்கு எனது இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

விக்கியின் ஆஃபீசில் ஒர்க் பண்ணும் 4 ஃபிகர்கள் ஃபோட்டோவையும் மெயில் பண்ணவும்

>>>>>>>>>>>>>>

வயசானாலும் உங்க கில்மாவும் ஜொள்மாவும் மாறாதிருக்கு எப்படிய்யா ஹிஹி!(இதுவும் ஒரு சமாளிபிகேஷன்!)//

முதல்ல போட்டோவை அனுப்புய்யா மற்றதை அப்புறம் பாத்துக்கலாம்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

விக்கியின் ஆஃபீசில் ஒர்க் பண்ணும் 4 ஃபிகர்கள் ஃபோட்டோவையும் மெயில் பண்ணவும்

>>>>>>>>>>>>>>

வயசானாலும் உங்க கில்மாவும் ஜொள்மாவும் மாறாதிருக்கு எப்படிய்யா ஹிஹி!(இதுவும் ஒரு சமாளிபிகேஷன்!)//

முதல்ல போட்டோவை அனுப்புய்யா மற்றதை அப்புறம் பாத்துக்கலாம்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்


பேச்சை மாத்தாதே, சமாளீக்காதே, நல்ல நண்பனா இருந்தா அனுப்பு, சுயநலக்காரன்னு பேரு எடுக்க ஆசைன்னா அனுப்பாதே!!!!//

பிறந்தநாளும் அதுவுமா திட்டு வாங்கி நாறாதே....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்


பேச்சை மாத்தாதே, சமாளீக்காதே, நல்ல நண்பனா இருந்தா அனுப்பு, சுயநலக்காரன்னு பேரு எடுக்க ஆசைன்னா அனுப்பாதே!!!!"

>>>>>>>>>>>>

பதில் போடுவதற்கு முன்னாடி நல்லா யோசிச்சி பதில் போடு...இப்போ சமீபத்துல நடந்த பதிவுலக மோதலுக்கு ஆரம்பம் எங்கன்னு யோசி...ஹிஹி...இப்போ உன் பதிலை மீண்டும் படி...நாங்களும் கோப்போம்யா ஹிஹி!//

ஆமாய்யா நச்சுன்னு உடச்சிட்டியே மேட்டரை....

Senthil said...

happy birth day!!!

senthilkumar,doha

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி! சே எஸ் ஆர் நோ, அனுப்ப முடியுமா? முடியாதா? கண்டபடி திட்டி எதிர் பதிவு போடவா?

>>>>>>>>>>>

அத செய்டா முதல்ல...தில் இருந்தா என்ன திட்டி பதிவு போடு ஹிஹி!//

பிறந்தநாள் அதுவுமா எதுக்குடா அடிச்சிக்குறீங்க பரதேசிகளா, இந்தா இந்த அருவாளை கையில வச்சிகிட்டு சண்டை போடுங்கடா ஹே ஹே ஹே ஹே [[ஏதோ நம்மால முடிஞ்சது]]

Unknown said...

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
பச்சே விமர்சனம் சூப்பர்ராயிட்டு உண்டு சேட்டா அதன்கில் குட்டி மீராஜாஸ்மின்னூட போட்டா அடிபொலி

செங்கோவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிபி.

செங்கோவி said...

அப்போ படத்துல மரணபயத்தைக் காட்டீட்டாங்களா?

RAMA RAVI (RAMVI) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
செந்தில்குமார். உங்க வயசு என்னான்னு முடிவு பண்ணியாச்சா?

இன்றைய திரைப்பட விமர்சனம் நன்றாக இருக்கு.

உலக சினிமா ரசிகன் said...

சிபி...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்து...!
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
thanks-கவிஞன் *ராஜா*

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்து...!
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
thanks-கவிஞன் *ராஜா*

கார்த்தி said...

அன்புள்ள சிபி அண்ணே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே....