சுமார் எட்டு மாதங்களுக்கு முன் எங்கள் ஊர் பெண்ணின் மர்ம மரணம் குறித்து எனக்கு தோன்றிய சில கேள்விகளை கேட்டிருந்தேன்.. அவர் சன் டி வி யில் பணி புரிந்தவர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகி விட்டது..அது பற்றி படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும்
சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
பதிவு போட்டு 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணுடன் சென்னையில் பணி புரிந்தவர்கள் வாயிலாகவும், பெண்ணின் பெற்றோர், தோழிகளை விசாரித்த போதும் சில கசப்பான உண்மைகள் தெரிய வந்தன.. அப்போதே அது பற்றி விளக்கப்பதிவு போட நினைத்திருந்தேன்..ஆனால் பெண்ணின் பெற்றோர் கொஞ்ச நாளுக்கு அது பற்றி எதுவும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். காரணம் துக்கம் விசாரிக்க வருபவர்கள் அது பற்றியே பேசி எங்கள் வேதனையை மேலும் அதிகரிப்பார்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அது பற்றி பதிவு போடுவதை தள்ளி வைத்தேன்..
இப்போது எல்லாம் ஆறிப்போய் இருப்பதால் வெளியிட சரியான தருணம் என தோன்றியது
சன் டி வியில் நிருபராக வேலை பார்த்த சங்கீதாவுக்கு அவரது அறைத்தோழி ஒருவருடன் ஓர் பால் உறவு ஏற்பட்டது.. தனது லெஸ்பியன் சிநேகம் குறித்து அவர் எந்த வித தயக்கமும் இன்றி தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.. எந்த பெற்றோர் தான் தமிழகத்தில் அதை ஒத்துக்கொள்வர்கள்?அவசர அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்..
சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையிடம் பெண்ணின் ஆஃபீஸ் அட்ரஸ் சொல்லி பார்க்க சொல்லி விட்டார்கள்.. பெண்ணிடம் கண்டிப்பாக திருமணம் செய்தே தீர வேண்டும் என கொஞ்சம் அழுகை, நிறைய கண்டிப்புடன் மிரட்டி இருக்கிறார்கள்.. சங்கீதாவுக்கு ஆணுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை.இருந்தாலும் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையிடம் அவர் எந்த உண்மையையும் சொல்லாமல் பெற்றோரின் விருப்பம் போல் மாப்பிள்ளையுடன் பேசி இருக்கிறார்..
அது வரை சங்கீதாவுக்கு தினமும் வெளியே சென்று ஃபீல்டு ஒர்க் வேலையாக இருந்த பணி அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஃபீஸ் விட்டு வெளியே போக முடியத படி ஆஃபீஸ் ஒர்க்காக மாற்றப்பட்டது.. சங்கீதாவின் தோழி சங்கீதாவின் பெற்றோரால் மிரட்டப்பட்டு வேறு இடம் அனுப்பப்பட்டார்.
சங்கீதாவால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. திருமணத்தில் இஷ்டம் இல்லை.. எனவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..
தற்கொலை என்றால் என்ன காரணம்? என வெளியே சொல்வது? என்ற நியாயமான ஒரு பெற்றோருக்கே உரிய அச்சத்தில் விபத்தாக மாற்றப்பட்டது.. மற்றபடி சன் டி வி நிர்வாகத்துக்கும், அந்தப்பெண்ணின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை
19.02.2011 சனி அன்று தான் சம்பவம் நடந்தது.. ஞாயிறு அன்றே அவரது உடல் சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டது.. அடுத்த நாளே அதாவது 21.02.2011 அன்றே அந்த பெண்ணின் குடும்பத்தார் நடத்தும் ஜவுளிகடை, ஃபேன்சி ஸ்டோர் எல்லாம் இயங்கியது.. பொதுவாக இது போல் துக்க சம்பவம் நடந்தால் குறைந்த பட்சம் 3 நாட்களாவது லீவ் விடுவார்கள். எனவே எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது தான் மற்ற தகவல்கள் தெரிய வந்தன..
மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் அல்லது தனது தோழியுடன் எங்காவது போய் விடுவார் என எதிர்பார்த்தே அவர்கள் இருந்திருகின்றனர்..
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை செய்யத்தூண்டுகிறது..
2. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக தோன்றினாலும் குழந்தை நலன் கருதி படிக்கவோ, பணி புரியவோ வெளியூர் போகும் பெண்ணுடன் கூடவே அம்மாவும் போனால் நல்லது..
3. ஒரே அறையில் இரு ஆண்கள், அல்லது இரு பெண்கள் தங்குவது இந்தக்காலத்தில் தேவை அற்ற சர்ச்சைகள், பிரச்சனைகள் தோற்றுவிக்கும் என்பதை உணர வேண்டும்.. நான் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை..
4. வெளியூரில் வேலை செய்தால் ரூ 30,000 சம்பளம் , உள்ளூரில் வேலை செய்தால் ரூ 10,000 சம்பளம் என்றால் எல்லோரும் வெளியூர் செல்லவே ஆசைப்படுகிறோம்.. பணத்தை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர வேண்டும்..
5. எல்லாவற்றையும் மீறி இது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது.. அவர்களே பட்டு தெரிந்து கொள்வார்கள்... இளம் வயதில் இப்போது தற்கொலை எண்ணங்கள் பட் பட் என வந்து விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. மன உறுதியுடன் பல ஆண்களும், பெண்களும் தனிமையில் , அல்லது கம்பைன் ஸ்டடி, கம்பைன் ஒர்க் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எல்லோரும் அப்படி அல்ல.. மன உறுதி இல்லாதவர்கள் தடம் புரள வாய்ப்பு உண்டு அவ்வளவுதான்
டிஸ்கி - ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்த கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
39 comments:
மாப்ள எச்சரிக்கை பதிவா?
செந்தில் நல்ல பதிவு, பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.
"Better to be safe than sorry"
நல்ல பதிவு செந்தில்குமார்.
இந்த காலத்திய குழந்தைகளின் நடவடிக்கைகளையும்,உடன் பழகும் நட்புகளையும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.
ரைட்டு!
உளவியல் ரீதியாக எவ்வளவோ பேசலாம், ஆனால் நீ அப்படி செய்ய மாட்ட என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று ஆணித்தரமாக சந்தேகம் இல்லாமல் சொன்னால் எந்த பிள்ளைகளும் இப்படி தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்...
பிறர் சொல்லி திருந்துவதை விட அனுபவத்தில் பட்டு திருந்துவதுதான் நல்லது.
இவ்வளவுதூரம் ஃபாலோ அப் செய்து பதிவிட்டதற்கு நன்றி...!
மிகவும் வருந்தத்தக்கவிடயம் பாஸ்.
அனைத்து வயதினருக்குமான எச்சரிக்கை பதிவு.
இந்த புதிய சி பி ரொம்ப பிடித்திருக்கிறது...
உஷாராத்தான் இருக்கனும்...
வாழ்கை - வா இழுக்கை அளவுக்கு போயிருப்பது வருந்தற்குரியது...உங்க முயற்சிக்கு நன்றி நண்பா!
பொறுப்புணர்வோடு உண்மையை தோண்டி விசாரணை செய்து வெளியிட்டதற்கு உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள். கவுன்சிலிங் கொடுத்து சரிபண்ணியிருக்கலாம். உயிரின் மதிப்பு தெரியாத மக்கள். வேறென்ன சொல்வது?
சினிமா விமர்சனம் மட்டுமல்ல, உண்மை சம்பவத்தையும் நடுநிலையோடு மட்டுமல்லாமல் பொறுப்புணர்வோடும் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!!(சத்தியமா ஐஸ் இல்லைங்க...உண்மைதான்)
சிபி யின் மற்றும் ஒரு பக்கம். பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை அல்லவா வளர்க்க வேண்டி இருக்கிறது அவர்கள் திருமணம் முடியும் வரை
வீட்டைவிட்டு வெளியே வந்தால் நல்லதும்,கெட்டதும் கலந்தே காணப்படும்! ஊரகப் பகுதியில் இருந்து வருபர்கள் நகரத்தின் அசிங்கம் முகத்தில் பளீரென அடிக்கும்: அதனை எதிர்கொள்ள மன உறுதியும், சுயநலமும் கட்டாயம் வேண்டும்!
முழுமையாக ஆராய்ந்து பதிவிட்டு இருக்கிறீர்கள்...
நானும் நீ [[சன் நிர்வாகத்துக்கு]]பயந்து போயிதான் அந்த மேட்டரை அப்பிடியே விட்டுட்டியோன்னு நினைச்சேன், இதுதான் மேட்டரா...??? எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி...
புலனாய்வு புலி'யடா நீ...!!!
விஷயத்தை வெளிக்கொண்டுவந்தற்கு நன்றி
சிபி...மிகவும் மனிதநேயத்துடன்,ஒரு தந்தைக்குறிய அக்கறையுடன் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அடங்கிய இப்பதிவின் மூலம் சென்னிமலையளவு உயர்ந்துவிட்டீர்கள்.
நல்ல பதிவு:)
@கடம்பவன குயில் correct . . .
படித்த பெண்..எதிர்த்துப் போராடி வாழ்ந்திருக்கலாம்....
பகிர்வுக்கு நன்றி...
படிக்கும் அனைவரும் கவனத்தில் இருத்த வேண்டிய தகவல். பிள்ளை வளர்ப்பின் ஒரு அங்கமாக சில முக்கியமான விசயங்களை மனம் விட்டு பேசி விளக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு இருக்கிறது.
தகவல் சேகரித்து பதிவிட்டமைக்கு நன்றிங்க, சிபி.
இந்த பதிவு பாடமாக இருக்கும் நிறைய பேருக்கு.....
கூடா நட்பு, கூடா உறவு எல்லாம் சிலருக்கு விளையாட்டாக தான் எடுத்து கொள்கின்றார்கள், பெண்கள் வளரும் வயதில் இதை புரிய வைக்க வேண்டும். இதில் அவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியைகளுக்கு நல்ல பங்கு உண்டு. எல்லா பிரச்சனையில் இருந்து விடுபட சுயஒழுக்கம் ஒன்றே தீர்வு. தன்னை நம்பும் பெற்றோருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது என்று ஒவ்வொரு பெண்ணும் முடுவு எடுக்க வேண்டும்!
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய கருத்துக்கள் நன்றி மாப்ஸ்...
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.
நான் தங்களின் தளத்தை நீண்ட காலமாக வாசித்து வருபவன் (சைலண்ட் ரீடர்). அருமையான கருத்துக்கள். ஒருவரின் இழப்பு எந்த விதத்திலும் ஈடு செய்ய இயலாது. இளைஞர்களிடம் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். குழந்தைகள் வளர்ப்பு முறையில் சிறிது மாற்றம் வேண்டும். கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி பழக்கி வளர்க்கவேண்டும் என்பது என் எண்ணம். தற்கொலையை முற்றிலூம் தவிர்க்க வேண்டும்.
லிங்கேஷ்
http://lingeshkk.blogspot.com/
நல்ல படிப்பினை மற்றவர்களுக்கு , பாவம் அந்த பெற்றோர்,இதே அமெரிக்காவா இருந்தா ,சரி வேணாம் விடுங்க ...
ஏழாம் அறிவு , இப்ப Online ல் available
இத எல்லாம் என்னா பாஸ் சொல்றது? நீங்க சொன்ன மாதிரி பட்டுத்தான் திருந்தனும்... வேற வழியே இல்ல... நல்ல பதிவு..
நல்ல ஆய்வு சிபி சார் ..ஆனா பொண்ணு எடுத்த முடிவு சரியல்ல ..(
நம்ப முடியலை பாஸ்
தன்னுடைய அந்தரங்கங்களை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண் போராடி வாழ்ந்திருக்கலாம்.
தங்கள் மகள் தங்களிடம் இவ்வளவு ஓப்பனாக பேசியதால், பெற்றோரும் கொஞ்சம் பேசியிருக்கலாம். அதை விட்டு விட்டு மிரட்டல், அவசரத் திருமணம் என தவறாக அணுகியிருக்கிறார்கள்.
அக்கறையில்லா பெற்றோர்... அறிவில்லா நங்கை...
வேறென்ன சொல்வது?
- நுண்மதி
nalla samooha akkarai ulla pathivu Well Done
BY Fazul
ஆணோ, பெண்ணோ, அவர்கள் வளர்ந்து விட்ட பிறகு அவர்தம் வாழ்க்கையை தீர்மானிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. பெற்றோரோ..யாருமே..அறிவுரை மட்டும் செய்யலாம். அவர் மீது நமது கருத்துகளைத்திணித்து, அல்லது அவர் வாழ்வில் அத்துமீறி நுழைவது அது பெற்றோராக இருந்தாலும் தவறே. மொத்தத்தில் வருத்தமான விஷயம். அந்த பெண்ணின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாருமே இல்லாத போதும் ஒழுங்கா நடந்துக்க அவங்கள தயார் பண்ணும்.இப்படி ஒரு விஷயம் தெரிய வரும் பொழுது அவங்க ரொம்ப பக்குவமா கையாண்டு இருக்கணும்.கல்யாணம் ஒரு நல்ல முடிவு தான் ஆனா அதுக்கு முன்னாடி பொண்ணு கிட்ட பேசி புரிய வச்சு இருக்கணும்.இப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சும் அவங்க அத தவிர்க்க முயற்சி ஏதும் பண்ணாம இருந்தகங்கனு தான் தோணுது.பெற்றோர்கள் தெளிவா இல்லாம இருக்காங்க.அவங்க தெளிவா இருந்த தான் பசங்க தெளிவா இருபாங்க.சும்மா எமொஷினால் ப்ளாக் மைலிங் பண்றதால ஒரு பயனும் இல்ல.
Post a Comment