Saturday, October 08, 2011

ஈரோடு நகரம் - ஒரு பார்வை

பெரியார் பிறந்த ஊர்,மஞ்சள் மாநகரம் என்பது போக ஈரோட்டுக்கு பல பெருமைகள் உண்டு.. பல பிரச்சனைகள் உண்டு.. ஊர் வாழ் மக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் ஒரு பார்வை பார்ப்போம்.. 

1. ஆன்மீகம் - இங்கே கோட்டை ஈஸ்வரன் கோயில் ரொம்ப ஃபேமஸ்... ஈரோடு பன்னீர் செல்வம் பஸ்டாபில் இருந்து  ஒரு கி மீ தூரத்துல இருக்கு..அதுக்குப்பக்கத்துலயே பெருமாள் கோவில் இருக்கு.. இங்கே துளசி தீர்த்தம் வாங்கி குடிச்சா பல நோய்கள் குணமாவதா ஒரு ஐதீகம் உண்டு.. பொதுவா துளசியே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் நிவாரணிதான்..பெரிய மாரியம்மன் கோவில் உண்டு.. இது ப செ பார்க் அருகிலேயே இருக்கு.. வருடா வருடம் கம்பம் பிடுங்கும் விழா மிக சிறப்பா கொண்டாடப்படுது.. ஈரோட்ல இருந்து 9 கிமீ தூரத்துல திண்டல் மலை இருக்கு பேருக்குத்தான் மலை.. ரொம்ப கம்மியான படிகள் தான்.. முருகர் ஆலயம்.. இங்கே லேடீஸ் காலேஜ் 1 இருக்கு வேளாளர் மகளிர் காலேஜ்.. அதை வெச்சுத்தான் இந்த கோடில் ஃபேமஸ் ஆச்சு.. இது போக நகரை சுற்றிலும் மொத்தம் 37 கோயில்கள் உள்ளன.. 

http://www.erodeinfo.com/erode-photos/images/erode-mariyamman-kovil.jpg


2. போக்குவரத்து - டிராஃபிக் ஜாம் இல்லாத முக்கிய நகரம் எங்கே இருக்கு? எல்லா ஊர்லயும் இது பெரிய பிரச்சனைதான்.. பஸ் ஸ்டேண்ட்ல இருந்து ஒரு கி மீ தூரத்துல ஜி ஹெச் பஸ் ஸ்டாப் நால் ரோடு சிக்னல் தான் நகரின் மையமான டிராஃபிக் ஜாம் ஏற்படும் இடம்.. காலை 8 டூ 10 செம ரஷ்ஷா இருக்கும்.. மாலை 4 டூ 9 வரை கேட்கவே வேண்டாம்.. ப செ பார்க்  ரவுண்ட்டனாவுலயும் இதே அளவு டிராஃபிக் ஜாம் இருக்கும்.. மணிக்கூண்டு ஸ்டாப் - இங்கேயும் பல ஜவுளிக்கடைகள் சங்கமமா இருக்கறதால செம கூட்டம் தான் எப்பவும்.. 

3. வணிகம் -  பெட்ஷீட் சேல்சில் தமிநாடு அளவில் மட்டும் அல்ல இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்.. இது.. வாரா வாரம் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் கனி மார்க்கெட் கூடுது.. நாள் ஒன்றுக்கு சர்வசாதாரணமாக 4 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் ஆகும்.. பல மாநிலங்களில் இருந்து மொத்தமாக பர்ச்சேஸ் பண்ண இங்கே வருவாங்க.. 

மஞ்சள் மண்டி ஸ்டார் தியேட்டர் அருகே இருக்கு.பிஸ்கெட், சோப் அயிட்டங்கள் எல்லாம் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல சீப்பா அதாவது MRP ரேட்டை விட 1 ரூபாவாவது கம்மியா இங்கே கிடைக்கும்.. மற்றபடி மளிகை சாமான்கள், பருப்பு வகைகள் எல்லாம் மணிக்கூண்டு வணிக வளாகத்தில் சீப்பாக கிடைக்கும்.. .சத்தி ரோட்டில் ஆயில் மில்களில் எண்ணெய் வகைகள் தரமாக , நியாயமான விலையில் கிடைக்கும் , பொது மக்கள் இங்கே சில்லறையாகவே வாங்கி செல்வார்கள்



4. பள்ளிகள், கல்லூரிகள் - சவீதா பஸ் ஸ்டாப் பின் புறம் உள்ள கலைமகள் கல்வி நிலையம் பாரம்பரியம் மிக்கது.. அதற்கு எதிரே உள்ள செங்குந்தர் மேல் நிலைப்பள்ளியும் அதே.. போல் ஆண்களுக்கானது , ப செ பார்க் அருகே உள்ள சி எஸ் ஐ ஸ்கூல் செம ஃபேமஸ்.. மூலப்பாளையத்தில் கார்மெண்ட் ஸ்கூல் செம காஸ்ட்லி.. அதே போல் திண்டலில் உள்ள பி வி பி ஸ்கூல் ஹை க்ளாஸ் மக்களுக்கானது..

வீரப்பன் சத்திரம் அருகே உள்ள சி என் சி காலேஜ் , சித்தோடு அருகே உள்ள வாசவி காலேஜ், ரங்கம்பாளையம் அருகே உள்ள ஆர்ட்ஸ் காலேஜ் ஆகியவை முக்கிய காலேஜ்கள்.. 

http://lh3.ggpht.com/-0Cu8aCDj-UI/S86lV2QFwnI/AAAAAAAAFgk/nTqNmWM2lvc/%25255C%25255CCentraladmin%25255Ce%25255C20.04.10%25255CLotus%252520%252520Apollo%25255Cphotostills%25255C150209%25255CDSC02564.JPG

5. ஹாஸ்பிடல்கள் - ஈரோடு ஜி ஹெச் தான் பெரும்பாலான நடுத்தர , ஏழை மக்களின் கலங்கரை விளக்கம்.. காலை 8 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை செயல் படுகிறது.. அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணிநேரமும் செயல் படுகிறது.. ஒரு நாளில் கிறைந்த பட்சம் 6800 நபர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

மூலப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல் தான் தனியார் ஹாஸ்பிடலில் செம காஸ்ட்லி.. இப்போதெல்லாம் மக்கள் காஸ்ட்லி ஹாஸ்பிடல் என்றால் அது நல்ல தரமான ஹாஸ்பிடல் அப்டினு நினைச்சுக்கறாங்க..

பெருந்துறை ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் செண்ட்டர், செந்தில் நரம்பியல் மருத்துவனை காசு புடுங்கறதுல மிச்சமான ஆளுங்க..


தொடரும்----

46 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஊர்....

MANO நாஞ்சில் மனோ said...

இரண்டாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

மூணாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

நான்காவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

ஐந்தாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

ஆறாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

ஏழாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

எட்டாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

எட்டாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்பதாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்பதாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

பத்தாவது ஊர்

MANO நாஞ்சில் மனோ said...

இரு படிச்சுட்டு வாறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டு போட்டுட்டு வாறேன்

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே....

Unknown said...

ஈரோடு பற்றி புது தகவல் அறிந்தேன் நண்பா!!

படங்களும் அருமை தகவலும் புதுமை

RAMA RAVI (RAMVI) said...

ஈரோடு நகர் வலம் அருமை. படங்களுக்கும் ஊரைப்பற்றிய தகவல்களுக்கும் நன்றி.

Unknown said...

ஓட்டும் போட்டாச்சு ஐயா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

rajamelaiyur said...

ஈரோடு பற்றிய அருமையான தகவல்கள் .. நன்றி நண்பா

rajamelaiyur said...

tamilmanam 4 th vote

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Ramya Parasuram said...

என்னை கட்டிகிறன்னு சொல்லி கையவிட்ட பவுடர் http://ideamani615.blogspot.com/2011/10/blog-post_599.html

ஏன் அத்தான் நான் உண்மையை மத்தவங்க முன்னாடி சொல்ல விடறீங்க இல்லே? பின்னே என்னங்க ஐடியா மணி என்கிற நிரூபன் கட்டிக்கிறேன்னு வாக்கு தந்து ஏமாத்திட்டாரே. பன்னிக்குட்டி என்கிர நிருபனுக்கும் இது தெரியுமே. அதுதான் வையரேன். நிங்க எதுக்கு எடையில வர்றீங்க தெரியாதத எதுக்குங்க தெரிஞ்ச கோசரம் ஐடியா மண்னி சொல்றாரு? தமிழ்மனத்து முன்ண்ட்டி வலைப்பூ தெரட்டி இருந்திச்சி. தமிழ்மனத்துக்கு கொஞ்சம் டிலேயா தேன்கூடு வந்திச்சி. தமிழ்வெலி பிரகு. சங்கமம்கூட இருந்துச்சுங்க. தமிழிஷ் எப்பைய்யா வந்திச்சி? தமிழின் முதல் திரட்டி என்கிற சின்னப்பையனுக்கு கைய தட்டும் கும்மிவாலாக்கலே எங்கையா ஒங்க மூளை?

அத்தான் இதயும் இங்கே அனுமதிக்கல்லனா, அத்தனை பிரீ காமெண்ட் பாக்ஸுகளிலயும் இத போட்டுட்டு நா தற்கொலை பண்ணிடுவேன். ப்ளீஸ் மத்தவங்க என் சோககதைய கேட்க விட்ருங்க. என் வாழ்க்கைக்கு ஒரு நீதி கெடைக்க செய்யுங்க மச்சானுங்களா

SURYAJEEVA said...

அருமையான ஊர், அருமையான மக்கள்...

Unknown said...

நண்பா நல்ல பகிர்வு...நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனுக்கு ஊர்ப்பாசம் ஜாஸ்திதான்.......

Astrologer sathishkumar Erode said...

ஜூவி..மேட்டர் ஏன் போடலை..? தைரியமா போடுங்க..அல்லது எனக்காவது மெயில் அனுப்புங்க..ஏன் வேஸ்ட் பண்றீங்க..சந்தாவை..?

Unknown said...

பெட்ஷீட் (சமுக்காளம்) வணிகத்தில் சமுக்காளம் நகரம் என்று அழைக்கப்படுகின்ற பவானிதான் சிபி,ஈரோடு மாவட்டம் என்பது சரி

K.s.s.Rajh said...

இந்தியாவின் ஒரு ஊரைப்பத்தி தெரிந்து கொண்டேன் நன்றி பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க ஊர்.. நல்ல ஊர்... பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

பயனுள்ள தகவல்……
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ஆர்.வேணுகோபாலன் said...

நண்பரே! இந்தியாவின் எந்த மூலைக்கும் செல்ல ஈரோட்டிலிருந்து ரயில் வசதியுள்ளது; ஈரோடு என்ற பெயர்வரக் காரணமான காவிரியாறு; ஈரோட்டின் மையத்தில் அமைந்துள்ள பெரியார் நகர்; ஈரோட்டின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - என இன்னும் சில சிறப்புகளைக் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.

லோட்டஸ் மருத்துவமனை (லோட்டஸ் அப்போலோ அல்ல!) குறித்து பொதுப்படையாக ஒரு கருத்தை எழுதியிருக்கிறீர்கள். இப்படியொரு கருத்து பரவலாயிருப்பதை நானறிவேன் - அங்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அதே மருத்துவமனையில் எனக்குத் தெரிந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் எட்டாயிரம் பேர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணமான நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஈ.கே.சகாதேவனையும் டாக்டர்.சாந்தி செல்வனையும் ஒரு முறை சந்தித்தால், உண்மை விளங்கும். மருத்துவத்துறையில் உயர்தொழில் நுட்பத்தை உடனுக்குடன் ஈரோட்டுக்குக் கொண்டுவந்ததிலும், நெடுஞ்சாலை விபத்துக்களில் சிக்கியவர்களைக் காப்பாற்றியதிலும், ரோட்டரி கிளப் உறுதுணையோடு பல ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி அளித்ததிலும் லோட்டஸ் மருத்துவமனையின் பங்கு மகத்தானது.

நான் ஈரோட்டிலிருந்து குடிபெயர்ந்து பல வருடங்களாகிவிட்டது. எனவே, அவர்களைக் காக்காய் பிடிப்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. :-)

டாக்டர்.ஈ.கே.சகாதேவன், டாக்டர்.சாந்தி, டாக்டர்.ஈஸ்வரமூர்த்தி போன்றோர் மனிதாபிமானத்தின் சிறந்த உதாரணங்கள்.

சென்னை பித்தன் said...

நல்லாச் சுத்திக் காட்டுங்க!

Mohamed Faaique said...

அவ்ளோ பெரிய ஊரை இவ்ளோ சிறுசா சொல்லி முடிச்சுட்டீங்களே!!

கோகுல் said...

ஈரோட்டில் நானும் சில நாட்கள் சுற்றி இருக்கிறேன்.குறிப்பாக வீரப்பன் சத்திரத்தில்.
எனக்கு பிடித்த ஊர்களில் இதுவும் ஒன்று!
அனுபவங்களை நினைவூட்டியமைக்கு நன்றி!

ஆமினா said...

ஈரோடு சுத்தி பாத்துட்டே ஒரே பதிவில்

Sivakumar said...

கண்ணன் டிபார்ட்மன்ட் ஸ்டோர் சாமான்களை பார்சல் பண்ணி விடுங்க சார்.

Anonymous said...

அண்ணே ஈரோட்ல இருக்குற பதிவர்கள மத்தி ஒரு வார்த்த கூட சொல்லலியே?
ஒரு வேளை தொடரும் அடுத்தபாகத்தில் வருமோ?

அம்பலத்தார் said...

25 வருடத்திற்குமுன்னைய ஞாபகங்களை நினைவூட்டிவிட்டீர்கள். எத்தனையோதடவைகள் வாரக்கணக்கில் ஈரோட்டின் வீதிகளில் அலைந்துதிரிந்ததையும் அந்த மக்கள் எமக்கு தந்த ஆதரவையும் மறக்கமுடியாது.

Unknown said...

ஈரோடுன்னா இப்போ எனக்கு பெரியார விட ஈமுக்கோழி தான் ஞாபகத்துக்கு வருது! எப்படி தான் அதை சாப்பிடுறீங்களோ?
அடுத்தது ஆம்வே!ஈரோட்டில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஐந்தாம் நபர் ஆம்வே முகவராகத் தான் இருப்பார்!

குறையொன்றுமில்லை. said...

என்மகன் அங்க வேலை பார்ப்பதால் நானும் அங்க அடிக்கடி வருவேன் போனவாட்டி லோட்டஸ் போகவேண்டிய சந்த்தர்ப்பம். நல்லா வே கவனிக்குராங்க.

குடிமகன் said...

சித்தோடு வாசவி கல்லூரி பத்தி சொல்லிருகிங்க ஆனால் பக்கத்தில இருக்கிற சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிய சொல்லவே இல்லை.. நான் படிச்ச கல்லூரி பாஸ்..

குடிமகன் said...

சித்தோடு வாசவி கல்லூரி பத்தி சொல்லிருகிங்க ஆனால் பக்கத்தில இருக்கிற சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிய சொல்லவே இல்லை.. நான் படிச்ச கல்லூரி பாஸ்..

'பரிவை' சே.குமார் said...

ஈரோடு பற்றிய அருமையான அலசல்.

ஈரோடு சுரேஷ் said...

ஹோட்டல் மற்றும் திரையரங்கு பற்றி சொல்லாம விட்டுடீங்களே பாஸ்....

நிரூபன் said...

உங்களிடமிருந்து நீண்ட நாளின் பின்னர் வித்தியாசமான ஒரு பதிவு.

ரசித்தேன் பாஸ்.

நாளொன்றுக்கு நான்கு கோடி வியாபாரம் நடை பெறும் ஊரின் சிறப்பினை அழகு தமிழில் சிறப்பாகத் தொகுத்திருக்கிறீங்க;
அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.