Saturday, October 22, 2011

காதலிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்களா? (காதல் தத்து பித்துவங்கள்)

1.தனது இறுதி ஊர்வலத்தில் கூட வாழ்க! கோஷம் போடப்படுவதை விரும்புவனே அக்மார்க் அரசியல்வாதி

-------------------------------------

2. வாழ்க்கையில் ரிஸ்க் எடு, ஜெயித்தால் தலைவன் ஆவாய், தோற்றால் வழி நடத்தப்படுவாய்!

---------------------------

3. எப்பவும் என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கீங்க என்பதற்கு ஆதாரம் இருக்கா?

நினைக்கலைங்கறதுக்கு உன் கிட்டே ஆதாரம் இருக்கா?  # காதல் கடலை

--------------------------------

4. காதலிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்களா?

ச்சே! ச்சே! காதலியால் கைவிடப்படும் அபலை ஆண்கள் மட்டும் பைத்தியக்காரர்கள்!

------------------------------

5. சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராதாமே? நிஜமா?

சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படுவதும், உணரப்படுவதும்தான் காதல்.


-----------------------------


Fun & Info @ Keralites.net

6. தன்னிடம் கெஞ்சும் ஆண்களை சில பெண்களுக்கு பிடிக்கும் ,தன்னிடம் கொஞ்சும் பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்

-------------------------------

7. மழலைகளை கொஞ்சி மகிழாத உள்ளங்களைக்கூட மன்னித்து விடலாம்,அவர்களை கடுமையாக கண்டிக்கும், தண்டிக்கும் ஆட்களை மன்னிக்கவே முடிவதில்லை

------------------------------------

8. தினமும் மனைவிக்கு பூ வாங்கிச்செல்பவன் அன்புக்கணவன், கூந்தலில் சூடி விடுபவன் அன்புள்ளம் கொண்ட கணவன்.

---------------------------

9. என் இதயம் ஒரு வழிப்பாதை போல! உள்ளே நுழைய மட்டுமே உனக்கு அனுமதி! நீ என் வாழ்வில் எதிர்பாராமல் கிடைத்த வெகுமதி..

----------------------------------

10. அவள் ஒரு அமைதி விரும்பி. சத்தம் வராத முத்தம் மட்டுமே அவளுக்குப்பிடிக்கும், ஆனால் நான் ஒரு ஆர்ப்பாட்டவாதி # SOUND OF LOVE

---------------------------
Cutest Girl
Fun & Info @ Keralites.net
11. குழந்தைகளை எந்த வயதில் இருந்து அடிக்கலாம்? என விவாதிப்பது எப்போதிலிருந்து  குழந்தைகளை எதிர்மறை எண்ணம்கொண்டவர்கள் ஆக்கலாம்? எனகேட்பது போல

------------------------------------

12. பெண் குழந்தை பிறந்த வீட்டில் மஹா லட்சுமி குடி இருப்பாள்,எந்தக்குழந்தை பிறந்தாலும் சந்தோஷ லட்சுமி  விருந்துக்கு வருவாள்

-------------------------------

13. மழை வரும்போது மண்ணின் வாசம் கிளம்புவது மாதிரி மழலை அருகே வரும்போது பால் வாசம் தளும்புகிறது

-------------------------------

14. மனைவியுடனான சந்தோஷ தருணங்களில் விதவைத்தாயின் துக்கங்கள் நெஞ்சை நெருடும்.

-----------------------------

15. குக்கர் - நீ ஏன் இவ்ளவ் கறுப்பு? வட சட்டி - இப்பவே நீ விசில் அடிச்சு கூப்பிடறே! சிவ்வப்பா இருந்துட்டா.? # சமையல் அறை சரசங்கள்

-------------------

Fun & Info @ Keralites.net

16. நல்லவர்களோ, கெட்டவர்களோ பெரும்பாலானவர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்

------------------

17.என் ஆயுள் உள்ளவரை உன் காதல், அல்லது உன் காதல் உள்ளவரை என் ஆயுள்  இரண்டில் ஒன்று போதுமடி எனக்கு!!

---------------------------------------

18. தொட முடியாத தூரத்தில் வானம், பிடிக்க முடியாத தரத்தில் காற்று, மறக்க முடியாத ஈரத்தில் உன் கண்கள்

---------------------------------------

19. உலகின் மென்மையான வன்முறை உன் செல்ல அடியாக இருக்கும்,உலகின் சிறந்த பாதுகாப்பான இடம் எனக்கு உன் மடியாக இருக்கும்

--------------------------------

20. நான் விரும்பாததை யார் சொன்னாலும் செய்வதில்லை, நான் விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் விடுவதில்லை # தாந்தோனி தர்மா

----------------------------------

Fun & Info @ Keralites.net
21.மணமான ஆண்களின் மூளை கணினி போல.. சுயமாக சிந்திப்பதில்லை

-------------------------------

22. நான் ஆர்த்தோடக்ஸ் ஃபேமிலி - நடிகை சோனா # மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது இந்த பெட்ஷீட்டை போர்த்திக்கொள்ளவும்,நாங்க வீக்ஃபேமிலி

-----------------------------------

23. அன்பு காட்டுறவங்களிடம் ஜாலியா இருந்தேன்! - ஸ்ரேயா # வேலியா உங்கம்மா பக்கத்துல இல்லையா? மேடம்?

--------------------------------

24. கணவனும், மனைவியும் சினிமாவில் இருந்தால் பிரச்னைதான்! - நந்தா #ஒண்ணா சினிமாவுக்கு போனாலே பிரச்சனைகள் ஓராயிரம் வருது, நடிச்சா வராதா?

-------------------------------

25. நானும், மகத்தும் நல்ல நண்பர்கள், மகத் என் காதலர் அல்ல, சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர் - டாப்ஸி # குழப்பாதீங்க!

--------------------------

Río Negro

28 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

ஒன்னாவது படமும் அஞ்சாவது படமும் ஒண்ணா இருக்கே

Anonymous said...

அத்தனையும் கலக்கல் ................................

காட்டான் said...

வணக்கம் மாப்பிள 11வது எல்லா பெற்றோர்களையும் சிந்திக்க வைக்கும்.... வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் எல்லாம் ரொம்ப அழகு.
7,16 சிறப்பு.

Unknown said...

to 24 SUPER
அண்ண எப்ப சைவத்துக்கு மாறினீங்க ஒரு கில்மா படத்தையும் கானம் எல்லாம் குழந்தை படம்
சிபி : யப்பா திருந்த விடுங்கப்பா

M.R said...

படங்கள் அருமை நண்பரே ,அதிலும் கடைசி படம் மிகவும் அழகு ,(அமைதி)

K.s.s.Rajh said...

அட அட அண்ணன் என்னமா தத்துவம் பொழுயுறார்..

Mohamed Faaique said...

குழந்தை, தாய்மை’னு உருக்கமாகவும் கலக்கலாகவும் இருக்கு...

14வது சூப்பர்..

படங்கள் அருமை

ராஜி said...

மணமான ஆண்களின் மூளை கணினி போல.. சுயமாக சிந்திப்பதில்லை
>>
என்ன சொன்னாலும் கேட்க ஆளில்லை என்னும் நினைப்பா உங்களுக்கு? சுயமா சிந்திக்காமத்தான் இத்தனை ட்வீட், ஜோக்ஸ்லாம் எழுதுறீங்களா?

Unknown said...

ஆகா அனைத்தும் அருமை...எப்புடி இப்பூடி...

கடம்பவன குயில் said...

Azhakaana padangal, athenna anbu kanavan. , anbullam konda kanavan??? Anaithum arumaiyaana twits.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா...ங்க!

KANA VARO said...

அனுபவம் பேசுதோ

வெளங்காதவன்™ said...

:-)

சி.பி.செந்தில்குமார் said...

@கடம்பவன குயில்

அன்புக்கணவன் = மனைவி அன்பாக இருந்தால் அவனும் அன்பாக இருப்பான், அன்புள்ளம் கொண்ட கணவன் = மனைவி எப்படி இருந்தாலும் அன்பாக இருப்பான்

சேகர் said...

epidinga ipadi thathuvaatha alli thelikureengaa..

விச்சு said...

கலக்கல் தத்துவம் தலைவரே!!

Jaganathan Kandasamy said...

வாழ்க்கையில் ரிஸ்க் எடு, ஜெயித்தால் தலைவன் ஆவாய், தோற்றால் வழி நடத்தப்படுவாய்!
Fact...............!!!!!!!





வாழ்த்துக்கள்...............

Unknown said...

அத்தனையும் அருமை
அடைந்தீரே பெருமை
முத்தனைய மாலை
முத்தமிழின் சோலை
செந்திலவர் சக்கை
செப்பவில்லை மொக்கை
தந்ததெலாம் நன்றே
தகுதிமிக்க ஒன்றே

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,
நலமா?

நிரூபன் said...

1.தனது இறுதி ஊர்வலத்தில் கூட வாழ்க! கோஷம் போடப்படுவதை விரும்புவனே அக்மார்க் அரசியல்வாதி//

ஆமா அதான் கலைஞர் இப்பவுமே ஆட்சியில் இருக்கனும் என்று ஆசைப்படுறாரா/..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

7. மழலைகளை கொஞ்சி மகிழாத உள்ளங்களைக்கூட மன்னித்து விடலாம்,அவர்களை கடுமையாக கண்டிக்கும், தண்டிக்கும் ஆட்களை மன்னிக்கவே முடிவதில்லை//

சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பலமான குரல்...

நிரூபன் said...

8. தினமும் மனைவிக்கு பூ வாங்கிச்செல்பவன் அன்புக்கணவன், கூந்தலில் சூடி விடுபவன் அன்புள்ளம் கொண்ட கணவன்.
//

இந்தக் காலத்தில பூவைச் சூடிட யாருக்கு பாஸ், டைம் கிடைக்குது...
ஹே...ஹே...

நிரூபன் said...

11. குழந்தைகளை எந்த வயதில் இருந்து அடிக்கலாம்? என விவாதிப்பது எப்போதிலிருந்து குழந்தைகளை எதிர்மறை எண்ணம்கொண்டவர்கள் ஆக்கலாம்? எனகேட்பது போல//

சரியான கருத்துக்கள்.

சிட்டுக்குருவியின் சிறகினை ஒடித்து விட்டு அதனைப் பறக்கச் சொல்லுவது போன்றதற்கு ஒப்பானது தான் குழந்தைகளைத் தண்டித்து வளர்த்து அவர்களிடமிருந்து நாம் ஏதாவது ஒரு செயலை எதிர்பார்த்து நிற்பது.

நிரூபன் said...

காதல், பரிவு, குழந்தைகள் மீதான அக்கறை, இரக்கம், தேடல், செல்லக் கடிகள் ஆகியவற்றைத் தாங்கிச் சுவையாக வந்திருக்கிறது இப் பதிவு.

ஹேமா said...

சிபி...ஒட்டுமொத்தமாக அத்தனை பொன்மொழிகளும் அருமை.படங்களும்கூட அழகு !