வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு, விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதை கேள்விப்பட்டதும் ஜெ முகாமில் என்ன நடந்திருக்கும் என ஒரு ஜாலி கற்பனை.. இது சும்மா காமெடிக்கு மட்டும் தான் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்காமல் ஜாலியாக சிரித்துக்கொண்டே படிக்கவும்..
போயஸ் தோட்டத்தில்
பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு # நான் தமிழ் நாட்டின் முதல்வர்,தமிழ் நாட்டை விட்டு வர முடியாது- ஜெ
----------------------------
--------------------
. போயஸ் தோட்டத்தை தாண்டக்கூடாது என MGR சத்தியம் வாங்கி இருக்கிறார்-ஜெ --------------------
-------------------------------------------------
நான் பெங்களூர் போகும் சைக்கிள் கேப்பில் தீயசக்தியான கருணாநிதி ஆட்சியைப்பிடிக்க முயலமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? - ஜெ ஆவேசம்
-------------------------------------
பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா
டவாலி - ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதா
ஜெ- புரட்சித்தலைவி என அழைத்தால்தான் வருவேன், என்னை யாரும் இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..
ஓ.பி. பன்னீர் செல்வம் - அம்மா,இது தமிழ்நாடில்லை..கர்நாடகா... எல்லாரும் படிச்சவங்க,தமிழர்கள் போல் துதி பாடிகளை இங்கே பார்க்க முடியாது.. அதுவும் இல்லாம இது கோர்ட்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்கம்மா..
ஜெ- சரி சரி.. முதல்வருக்கான அரியாசனத்தை கோர்ட் கூண்டில் கொண்டு வந்து போடுங்க.. நான் நின்னுட்டெல்லாம் பேச மாட்டேன்.. எம் ஜி ஆர் முன்னாலயே நான் உட்கார்ந்துதான் பேசுவேன்..
டவாலி - ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதா
ஜெ- புரட்சித்தலைவி என அழைத்தால்தான் வருவேன், என்னை யாரும் இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..
ஓ.பி. பன்னீர் செல்வம் - அம்மா,இது தமிழ்நாடில்லை..கர்நாடகா... எல்லாரும் படிச்சவங்க,தமிழர்கள் போல் துதி பாடிகளை இங்கே பார்க்க முடியாது.. அதுவும் இல்லாம இது கோர்ட்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்கம்மா..
ஜெ- சரி சரி.. முதல்வருக்கான அரியாசனத்தை கோர்ட் கூண்டில் கொண்டு வந்து போடுங்க.. நான் நின்னுட்டெல்லாம் பேச மாட்டேன்.. எம் ஜி ஆர் முன்னாலயே நான் உட்கார்ந்துதான் பேசுவேன்..
ஓ.பி. பன்னீர் செல்வம் - ஓக்கே அம்மா, அப்புறம் இன்னொரு விஷயம்.. (அப்படியே குனிந்து பம்முகிறார்)
ஜெ- ம் ம் சொல்லுங்க
ஓ.பி. பன்னீர் செல்வம் - இப்போ ஜட்ஜ் வருவாரு, அவர் வர்றப்ப நீங்க எழுந்து நிக்கனும்.. வணக்கம் சொல்லனும்..
ஜெ- யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?நான் ஒரு நாட்டின் முதல் அமைச்சர்.. நான் எதுக்காக ஒரு சாதாரண ஜட்ஜைபார்த்ததும் எழுந்து நிக்கனும்? வணக்கம் வைக்கனும்? அதெல்லாம் நடக்காது.. நான் கவர்னரையே மதிக்க மாட்டேன்.. பிரதமரே எதிரில் வந்தாலும் துதிக்க மாட்டேன்..
ஓ.பி. பன்னீர் செல்வம் - ( எப்படியோ இந்த கேஸ்ல அம்மா மாட்டி உள்ளே போய்ட்டாங்கன்னா நாம தான் சி எம்.. அதுவரை பம்மிக்கிட்டே நடிக்க வேண்டியதுதான்.. )
ஜட்ஜ் வருகிறார், எல்லோரும் எழுந்து நிற்க ஜெ மட்டும் அமர்ந்த நிலையில் அந்த பக்கமாக முகத்தை திருப்பிக்கொள்கிறார்.. ஜட்ஜ் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் தலை எழுத்து என மனசில் நினைத்த படியே அமர்கிறார்..
ஜட்ஜ் - வாதி என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை இப்போ சொல்லலாம்...
ஜெ - சாதா வாதி இல்லை. தமிழ்நாட்டையே கதி கலங்க வைக்கும் அரசியல்வாதி.. (சாதா வாதி இல்லைன்னா சரியான சந்தர்ப்பவாதியா?)போயஸ் தோட்டத்தின் தாதாதி தாதி.. நீங்க உடனடியா நான் குற்றமற்றவள்னு தீர்ப்பு சொல்லிட்டு கிளம்புங்க, அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..
ஜட்ஜ் - :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பா உங்க கிட்டே விசாரணை பண்னனும்.. உங்க மாத வருமானம் என்ன?
ஜெ- ஒரு ரூபாய்..
ஜட்ஜ் - என்னது ஒரு ரூபாயா? ( ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சை பிடித்துக்கொள்கிறார்.. )
ஜெ - ஆமா.. முதல்வர் சம்பளத்துல ஏழைகளுக்கே தானம் பண்ணிடுவேன்.. எனக்குன்னு எதையும் வெச்சுக்க மாட்டேன்.. ( மைண்ட் வாய்ஸ் - ஊழல்ல சம்பாதிச்சது மட்டும் எனக்கு )
ஜட்ஜ் - அப்புறம் இத்தனை சொத்துக்கள், நிலங்கள், பணங்கள், தங்கங்கள் எல்லாம் எப்படி வந்தது?
ஜெ- எல்லாம் என் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் நன்கொடையாக கொடுத்தது..
ஜட்ஜ் - ஓஹோ, அந்த சொத்து மதிப்பு நிலவரத்தை தர முடியுமா?
ஜெ - வழக்கு நடக்குதுன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ஏழைகளுக்கும், பினாமிகளுக்கும் தானம் பண்ணிட்டேன்.. இப்போ என்ன பண்ணுவீங்க?
ஜட்ஜ் - இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்...
ஜெ - சாரி யுவர் ஆனர்.. எனக்கு யாரையும் மதிச்சி பழக்கம் இல்லை, ஆனானப்பட்ட எம்ஜியாரையே நான் மதிச்சதில்லை.. ஏதோ ஜட்ஜ் என்பதல் பதிலாவது சொல்றேன்..
ஜட்ஜ் - உங்க மேல சுமத்தப்பட்ட குறச்சாட்டை நீங்க ஒத்துக்கறீங்களா?
ஜெ - இதுக்கு முன்னால ஆண்ட கருணாநிதி ஆட்சில பண்ணுன ஊழலை விட நான் கம்மியாதான் பண்ணி இருக்கேன்..
ஜட்ஜ் - அது இந்த கேஸ்க்கு அப்பாற்பட்டது.. நீங்க ஊழல் பண்ணுனது உண்மையா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க..
ஜெ - வழக்கை திசை திருப்பாதீங்க? நீங்க பிராமணர்களுக்கு எதிரானவரா? சூத்திர வம்சத்தில் பிறந்தவரா?அதனால்தான் இப்படி கேள்வி எல்லாம் கேட்கறீங்க..
ஜட்ஜ் - நீங்க சொன்னதை என்னால ஜீரணிக்க முடியலை..
ஜெ - காரணம் நீங்க தமிழர் இல்லை.. இதை விட பல அந்தர் பல்டிகளை எல்லாம் இஞ்சி மொரப்பான் சாப்பிடாமலேயே தமிழன் சகிச்சுட்டு இருக்கான்.. இதெல்லாம் ஜுஜுபி..
ஜட்ஜ் - உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதுக்கு என்ன சொல்றீங்க?
ஜெ- இருக்கலாம், அந்த சாட்சிகள் இப்போ இருக்காங்களா? கூப்பிடுங்க பார்ப்போம்.. ஒரு பய வர முடியாது.. அண்ணாவின் ஆவி அவரை சும்மா விட்டிருக்காது.. அதிமுக தொண்டர்கள் அல்ப சொல்பமானவர்கள் கிடையாது..
ஜட்ஜ் - என்னம்மா, மிரட்றீங்களா?
ஜெ - இப்போ உங்க செல் ஃபோனுக்கு ஒரு வீடியோ க்ளிப்பிங்க் வந்திருக்கும் பாருங்க.. அதை பார்த்துட்டு தீர்ப்பு சொல்லுங்க..
ஜட்ஜ் ( நடுங்கும் கைகளுடன் செல் ஃபோனை எடுத்துப்பார்க்கிறார்.. அவரது முகம் மாறுகிறது.. )
ஜெ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாட்சிகளுடன் நிரூபிக்கப்படிருந்தாலும் அந்த சாட்சிகள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என ஆணித்தரமாக கூறுவதால் அவரது நேர்மையை சந்தேகிக்க முடியாது.. அவர் அது போல் ஊழல் செய்திருந்தால் புரட்சித்தலைவி ஆகி இருக்க முடியாது.. எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்க்கையில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லி அவரை விடுதலை செய்கிறேன்...
ஜெ- வெற்றி வெற்றி , இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. தமிழ் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வெற்றி.. பன்னீர் செல்வம்.. ஜட்ஜோட ஃபேமிலியை ரிலீஸ் பண்ணிடுங்க.. நமது எம் ஜி ஆர் பத்திருக்கைல ஸ்கூப் நியூஸா இந்த வெற்றி செய்தி வரனும்.. கேன்சல் ஆல் புரோகிராம்ஸ் ஆஃப் ஜெயா டி வி..
வெற்றி வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் மக்களீன் அறியாமையையே சாரும்..
35 comments:
"....".
அது என்னண்ணே ரகசியம். ஒரு நாள் ஒரு பொழுது கூட உங்க ஆர்வம் ஓய மாட்டேங்குது. பதிவுகள் சும்மா துள்ளிக்குதிச்சிக்கிட்டு வந்து விழுது.
செல்லாத்தா எங்க மாரியாத்தா..எங்க சிந்தையில் வந்து பாராத்தா..கண்ணாத்தா கொஞ்சம் காணாத்தா..அய்யோ சாமி மலயேருது டோய்!
Ok, Ok
பாஸ்.. நீங்க..தலைமறைவாயிட்டதா கேள்விப்பட்டேன்... உண்மையா....
இப்போதான் உங்க மெயில் அட்ரஸ் , போன் நம்பர் எல்லாம் முதல்வர் தனிபிரிவுக்கு அனுப்பி இருக்கேன் ..அனேகமா தீபாவளி உங்களுக்கு புழல் தான்...(ஹி ..ஹி ..ஹி )தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போகணும்னு புலம்பிட்டு இருந்தீங்களே ..இப்போ நிஜம்மாலுமே ....ஹி ..ஹி ..ஹி )
நடப்பதை அப்படியே சொல்லிட்டீங்களே அண்ணே!
அருமை..அருமை...ராஜ தந்திரங்களை கரைத்து குடித்துள்ளீர்...
கலக்கிட்டீங்க..ஆனாலும் ஜாக்ரதையா இருங்க.
செம காமெடி !...இருந்தாலும் அண்ணனுக்கு தைரியம் அதிகம்தான் !
ஈரோட்டுக்கு ஆட்டோ வருதாம்... தெறிச்சு ஓடுங்க...
கார்ட்டூன்ஸ் சூப்பர்... அதுவும் கொலைஞ்சறு மல்லாக்க படுத்த கார்ட்டூன் அற்புதம்...
நான் ஏதோ வேலாயுதம் படத்தை நீதிபதிக்கு MMS செஞ்சிட்டாங்களோ என்று நினைத்துவிட்டேன்
காலை வணக்கம்!சரி,இந்தியாவில தானே இருக்கீங்க?(சும்மா!)
என்னமோ போங்க இவ்ளோ தில்லு எங்க இருந்து வந்தது....
ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே தைரியமுங்க. சுவையான ரசிக்கும் படியான நல்லதொரு கற்பனை
கலக்கிட்டீங்க...
கலக்கிட்டீங்க...
ரத்தத்தின் ரத்தமே, என் இனிய உடன்பிறப்பே.. இது நமக்கு தேவையா? சரி விடுங்க பாஸ், எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துருவோம்..
ஜட்ஜோட குடும்பத்த கட்டி வச்சு வேலாயுதம் படம் தான காட்டி கிட்டு இருந்தாங்க...
எல்லாமே அருமையாக இருந்தது, ஆனால் அதை எல்லாம் விட சூர்ய ஜீவாவின் கமெண்ட் அற்புதம்
சரிதான்...ஒரு ஆடுகசாப்புகடை தேடி தானா போகுது....
ஏன் திமுககாரங்க தைரியமிருந்தா அதிமுகவை கிண்டல்பன்னிபாருன்னு சவால்விட்டாங்களா? அய்யோ...சிபி உலகம் தெரியாம இருக்கீங்களே
எல்லாம் என் பிறந்தநாளுக்கு அமைச்சர்கள் தந்த நன்கொடை//
அண்ணே முடியல அண்ணே....
செத்தேடா நீ இன்னைக்கு, கொஞ்சம் உன் ஆபீசுக்கு வெளியே பாரு, ஆட்டோ லாரிஎல்லாம் வந்து நிக்குதாம், வளர்மதி உருட்டு கட்டையோட வந்துட்டு இருக்காங்க...
அம்மா என்று உள்ளே போவார், நான் முதல் அமைச்சர் ஆகுரதுக்குன்னு ஒரு டீம் அலைஞ்சிகிட்டுதான் இருக்கா அவ்வ்வ்வ்...
செமையான கும்மி, சூப்பரா ரசிச்சேன் ஹா ஹா ஹா ஹா....!!!
ஹா.ஹா.ஹா.ஹா. செம காமெடி கும்மி
பிரமாதம் சகா,
உங்கள் தில்லுக்கு என் வணக்கங்கள்
எதுக்கும் மெடிக்கல் இன்சுரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துகொள்ளவும்
ஆட்டோ வருதா என்று வாசலைப் பார்க்கலாம்
வணக்கம் பாஸ்,
நலமா?
உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு...
ஜெ அவர்களை இப்படித் தாழிச்சிட்டீங்களே..
பாஸ்..இப்படி வெரைட்டியான பல பதிவுகளை தினமும் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் பாஸ்..
விரிவாகப் பின்னூட்டமிட முடியலை.
சாரி.
அண்ணே அருமை. கலக்கல். செம. டாப்பு.
காமெடி கும்மி --கலாட்டா.
குறிப்புகளுடன் படங்கள் சிறப்பாக இருக்கு.
ரொம்ப தில்லுதான்.
பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி கோர்ட் சீன் எல்லாம் தத்ருபமா இருக்கு. நல்ல கற்பனை. .... உங்க கற்பனைக்கு எல்லையே இல்லை சிபிசார்....அதோட உங்க தைரியத்துக்கும்தான்.
இப்படி அம்மாவை வைத்து சூப்பராக நிஜத்தை கும்மியடித்திருக்கிறீங்க. ஆட்டோ வரும் கவனம் பாஸ் அம்மா கட்சி அளுகின்றது.
கலக்கல் காமெடி பதிவு
நன்று! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பாஸ்.. நீங்க..தலைமறைவாயிட்டதா கேள்விப்பட்டேன்... உண்மையா....
இப்படி அம்மாவை வைத்து சூப்பராக நிஜத்தை கும்மியடித்திருக்கிறீங்க. ஆட்டோ வரும் கவனம் பாஸ் அம்மா கட்சி அளுகின்றது.
பிரமாதம் சகா,
உங்கள் தில்லுக்கு என் வணக்கங்கள்
எதுக்கும் மெடிக்கல் இன்சுரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துகொள்ளவும்
ஆட்டோ வருதா என்று வாசலைப் பார்க்கலாம்.
செத்தேடா நீ இன்னைக்கு, கொஞ்சம் உன் ஆபீசுக்கு வெளியே பாரு, ஆட்டோ லாரிஎல்லாம் வந்து நிக்குதாம், வளர்மதி உருட்டு கட்டையோட வந்துட்டு இருக்காங்க...
இப்போதான் உங்க மெயில் அட்ரஸ் , போன் நம்பர் எல்லாம் முதல்வர் தனிபிரிவுக்கு அனுப்பி இருக்கேன் ..அனேகமா தீபாவளி உங்களுக்கு புழல் தான்...(ஹி ..ஹி ..ஹி )தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போகணும்னு புலம்பிட்டு இருந்தீங்களே ..இப்போ நிஜம்மாலுமே ....ஹி ..ஹி
Post a Comment