இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..
1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)
ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..
ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி )
1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)
ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..
ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி )
இல்லை...
அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?
எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..
அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?
உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..
தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..
ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..
ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..
பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான், டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..
“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..
2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு..
2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு..
2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?
3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?
4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்
படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே
என் முயற்சி எப்படி சார்?
என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?
சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்..
2. பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்ஷன்)
சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..
போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்..
ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..
அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது..
இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.
இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..
இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..
ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?
2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?
3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows
3. அஸ்வத் - கார்த்திக் ஒரிஜினாலிட்டி ( காமெடி)
3. அஸ்வத் - கார்த்திக் ஒரிஜினாலிட்டி ( காமெடி)
என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க
காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..
அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..
உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..
அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..
சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..
ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க
அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு..
அடங்கோ..
அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?
எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?
எத்தனை படம் பார்க்கறோம்?
நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..
இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க..
பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....
4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)
ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..
மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?
இவன் உடனே ஷாக் ஆகிடறான்..
இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...
அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட் பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..
யூகிக்க முடியாத திருப்பம்...
ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க படமே..
இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..
21 comments:
first show...
ஆஜர்.
இரண்டாவது படத்தை திருப்பி ஒருக்கா பாருங்க
எதுக்கு அவன் நண்பனை சுட்டுட்டு காசு எடுத்துட்டு செல்லும் போது என்ன பேசினான் என்று கவனியுங்கள்
எனக்கு பிடிசிருந்த்தது
nice...
நாளைய இயக்குனர் பார்ப்பதில்ல அதனால் நோ கமெண்ட்ஸ்
நல்ல பார்வை பாஸ்.
பிகர் பாத்தை சொல்லவில்லை நாளைய இயக்குனர் பற்றி உங்கள் பதிவில் நல்ல பார்வை என்றேன்.ஹி.ஹி.ஹி.ஹி.....
ஒரே ஒரு கேள்வி எங்கே இந்தப் படம் எடுத்தீங்க? எனக்கு நல்லா பித்தது...ஆக்கம் வழமை உங்கள்பாணி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பார்வை.
// suryajeeva said...
நாளைய இயக்குனர் பார்ப்பதில்ல அதனால் நோ கமெண்ட்ஸ்//
சேம் பிளட்
என் கமெண்ட் பத்தோட பதினொன்னு
அருமை
இனிய மாலை வணக்கம் பாஸ்,
நலமா?
வீகெண்ட் எல்லாம் எப்பூடி?
இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..//
அடடா...இதையெல்லாம் உத்துப் பார்ப்பீங்களோ;-))))
விமர்சனம் வழமை போலவே அசத்தல். எனக்கு நீங்கள் விமர்சித்த குறும்படங்களில் போன்கோல் கிஷோர் தான் பிடிச்சிருக்கு.
கண்டிப்பாக பார்க்கனும்,
உலகமே இடிஞ்சி போனாலும் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் விக்கிரமாதித்தன் வாழ்க....அண்ணே உங்கள சொல்லல!
Present Sir
எலேய் மூதேவி, தமிழ்மணம் பட்டையை மாத்துலேய்....
விக்கியுலகம் said...
உலகமே இடிஞ்சி போனாலும் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் விக்கிரமாதித்தன் வாழ்க....அண்ணே உங்கள சொல்லல!//
இவன் உருப்படமாட்டான்யா....
நிரூபன் said...
இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..//
அடடா...இதையெல்லாம் உத்துப் பார்ப்பீங்களோ;-))))//
எந்த பிகர் பின்னால இப்போ ஓடிட்டு இருக்கானோ....
Judge nallarukkunna neenga nalla illangareenga. Ungalukku nalla irupathu judge ku pidikala. Naan parkathathaal unga vimarsanam patri karuththu sollamudiyala. Adutha vaarathilirunthu tv la watchpannittu solren.
http://www.techsatish.net/2011/10/kalaingar-tv-naalaiya-iyyakunar-16-10.html
Post a Comment