Monday, October 10, 2011

நாளைய இயக்குநர் - காதல், காமெடி கதைகள் - விமர்சனம்

கீர்த்தி - சார்.. குறும்படம் எடுக்கறதுல எந்த மாதிரி படங்கள் மேக்கிங்க்ல கஷ்டம்?

கே பாக்யராஜ் - என்னைப்பொறுத்தவரை ஆக்‌ஷன் ஃபிலிம் தான் கஷ்டம்.. ஏன்னா கொஞ்சம் மிஸ் ஆனாக்கூட காமெடி ஆகிடும்.. கரெக்ட் பேக்கேஜ்ல கொண்டு வரனும்.. 

சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. 



1. கார்த்திக் - காதல் பீஸ்சா

லவ்வர்ஸ் ஜாலியா பைக் ரைடு போறாங்க.. அப்போ ஃபிகர் சொல்லுது.. நாளை வீட்டுக்கு வா..  என் தங்கை , அப்பா வீட்லதான் இருப்பாங்க.. பேசி சம்மதம் வாங்குன்னு.. 

இவரு போனா அங்கே வருங்கால  மச்சினி மட்டும்  தனியே தன்னந்தனியே.. 

இவருக்கு சிரமம் வைக்காம அதுவே பிட்டை போடுது.. வீட்ல வேற யாரும் இல்லை..  உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் அப்டினு சொல்லிட்டே பெட்ரூம்க்குள்ள போகுது.. இது குறும்படமா? குறும்புப்படமா? அப்டினு நாம யோசிக்கறப்ப.....

ஹீரோ பைக் சாவியை மறந்து பைக்லயே வெச்சுட்டு வந்துடறார்.. அதை எடுத்துட்டு வரலாம்னு போறப்ப ஹீரோயின், மாமா வந்து மச்சினி கிட்டே சிலாகிக்கறாங்க.. மாப்ளை கேரக்டர் அருமை.. ரொம்ப நல்லவர் போல.. ஃபிகர் வாலண்ட்ரியா கூப்பிட்டாலும் ஓடிப்போய்ட்டார்..

சாவியை எடுத்துக்கிட்டு திரும்பி வர்ற ஹீரோ நமுட்டுச்சிரிப்போட நிக்கறார்..

இந்தப்படத்துல பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் மச்சினியா வர்ற ஃபிகர் தான் நல்ல முக வெட்டு ( எத்தனை வெட்டுன்னு கேட்கப்படாது) குறும்புத்தனமான அக்னி நட்சத்திரம் அமலா (அஞ்சலி) நடிப்பு.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. மாப்ளையோட கேரக்டரை செக் பண்ண சொந்த தங்கையையே மோசமா நடந்துக்கற மாதிரி நடிக்க சொல்வாங்களா? யாராவது? நாளை மேரேஜ் ஆன பின் நிஜமாவே ட்ரை பண்ணலாம்னு மாப்ளைக்கு தோணாதா?

2. இப்போதான் முதல் டைம் பார்க்கறா ஹீரோயினோட தங்கை. பார்த்ததும் காதல் ஓக்கே, பார்த்ததும் காமம்? நாட் ஓக்கே.. 

3. இது ஒரு விளம்பர படத்தோட KNOT . அதுல ஹீரோ காண்டம் எடுத்துட்டு வரப்போவாரு.. இதுல பைக் சாவி.. 

4.  மோசமான நடத்தை உள்ள மாப்ளை ஏன் மச்சினி சோபால  பக்கத்துல உக்காரும்போது விலகி விலகி செல்கிறார்?

5. மாப்ளையை பற்றி விசாரிக்கனும்னா பொதுவா ஆஃபீஸ்ல , அக்கம் பக்கம், அல்லது நண்பர்களிடம்தான் விசாரிப்பாங்க.. யாரும் இப்படி சொந்த மகளை நடிக்க சொல்லி பார்க்க மாட்டாங்க.. 




2. குணாளன் - தொடரும்

ஒரு மாடர்ன் ஆசாமி தன் லவ்வரோட பைக்ல போறான், காதுல வாக்மேன் மாட்டி பாட்டு கேட்டுட்டே... ரொம்ப தூரம் போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. பார்க்கற ஆடியன்ஸ்  டென்ஷன் ஆகற வரை போய்ட்டே இருக்கான்.. 


வழில ஒரு ஆளை பார்த்து அந்த ஃபிகரு அந்தாள் செமயா இருக்காரு அப்டின்னு சொல்ல அப்போ நானும் நாளைல இருந்து ஜிம் போறேன்னு இவன் சொல்றான்..

அடுத்த நாள் காலைல 6 மணிக்கு இவன் ஜிம்முக்கு போறப்ப பாலத்துல  2 ரோடு பிரியுது.. எந்த ரோடுல போலாம்கற அறிவுப்புப்பலகை மேல் யாரோ ஏதோ போஸ்டர் ஒட்டி இருக்காங்க.. அதனால இவன் தவறுதலா ராங்க் ரூட்ல போறான்.. ஆக்சிடெண்ட்.. ஸ்பாட் அவுட்.. அவன் இறந்த ஃபோட்டோவை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுது.. 

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. அண்ணே, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லவும்.. ஏன் சுத்தி வளைக்கறீங்க?

2. ஹீரோ படம் பூரா வாக்மேன் கேட்டுட்டே வர்றது எதுக்கு? ஆடியன்ஸை டைவர்ட் பண்ணவா? ம்ஹூம்..

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  லவ் பண்ற பொண்ணை யாராவது 2 மணி நேரம் காக்க வைப்பாங்களா?

2. நீ மட்டும் இல்ல... அவனை துவம்சம் பண்ணி இருப்பேன்..

சரி விடு.. அவன் உடம்பை பார்த்தியா? அம்சமா இல்ல?



3. குகன் சென்னியப்பன் - உயிர் வாசம் 

கோயில், திருவிழாக்களில் ஆடு , கோழிகளை பலியிடும் வேலையில் இருக்கும் ஒருவர் நேரில் ஒரு விபத்து கம் கொலை யை பார்க்கும்போது நெஞ்சில் ஈரம் பொங்க , மனித நேயத்தை வெளிப்படுத்துகிறார்.. கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற KNOT..  நீட் 

படத்துல முக்கியமான மேட்டர் டயலாக்ஸே கிடையாது. ஒரே ஒரு சீன்ல செல்ஃபோன்ல குழந்தை வாய்ஸ் மட்டும் கேட்கும்.. ஒருத்தனை நடு ரோட்ல ஒரு கும்பல் வெட்டி போட்டிருக்கும்.. அந்த பாடில இருக்கற ஃபோன் ஒலிக்கறப்ப ஹீரோ எடுத்து அட்டெண்ட் பண்றார்.. அந்த குழந்தை அப்பா சீக்கிரம் வாங்க.. நான் கேட்டதெல்லாம் வாங்கி வந்தீங்கதானே? அப்டினு கேக்கும்

ரோட்ல பேக் சிதறி கிடக்கும், அதுல ஹார்லிக்ஸ், பொம்மை பொன்ற குழந்தைகள் அயிட்டமா இருக்கும்.. எங்கேயும்  எப்போதும் படத்துல இதே மாதிரி சீன் வந்துட்டதால எஃப்க்ட் கம்மி, ஆனாலும் மனதை தொட்டது..

 படத்துக்கு பின்னணி இசை அழகு.. உடுக்கை அடிக்கும் ஒலி.. கோயில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி

1. கேரக்டர்கள் ரவுடிகள், கெட்டவர்கள் என்பதை காட்ட சரக்கு அடிப்பது போல், தம் அடிப்பது போல் அவ்வளவு விலா வாரியாக காட்ட வேண்டுமா?




4. சந்த்ரு - ஆதாயம்

2 ஃபிரண்ட்ஸ்.. 2 பேருமே எழுத்தாளர்கள்... ஒருத்தன் சொல்றான்.. ரவுடி மேட்டர் கேட்டு பத்திரிக்கைல  ஃபோன் வந்திருக்கு.. எப்படி ரெடி பண்ண?
கவலைப்படாத, எனக்கு தெரிஞ்ச ரவுடி இருக்கான். அவனை பிடிப்போம்னு ஃபிரண்ட் சொல்றான்...மனசுக்குள்ள ஃபிரண்டுக்கு பொறாமை, தனக்கு கிடைக்காத பேரும் , புகழும் அவனுக்கு மட்டும் கிடைச்சிருச்சேன்னு.. 

ரவுடியை மீட் பண்ணி தகவல் சேகரிச்சு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணிடறாங்க.. பப்ளிஷ் ஆகுது.. 

இப்போ ரவுடியோட இடத்துல பார்ட்டி.. சரக்கு அடிக்கறாங்க எல்லோரும்.. திடீர்னு ரவுடி தன்னை பற்றி ஆர்டிகிள் எழுதுன ரைட்டரை கொலை பண்ணிடறான்,,. கொல்றப்ப என்னைப்பற்றியாடா எழுதுனே? அப்டி ஒரு பஞ்ச் டயலாக் வேற.. அப்புறம் பார்த்தா அவனை கொலை பண்ணச்சொன்னதே ரைட்டரோட நண்பன் தான் , பொறாமையின் காரணமா அப்டி பண்ண வெச்சுட்டானாம்.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ராஜேஷ்குமார் மாதிரி பிரபலமான ஒரு எழுத்தாளரை கூடவே இருக்கும் நண்பர் கம் ரைட்டர்  பொறாமையின் காரணமாய் கொலை செஞ்சா ஏத்துக்கலாம்... ஊரில் உள்ள 1000க்கணக்கான ஃபிரீ லான்ஸ் ரைட்டரில் இவரும் ஒருவர், இவரைக்கொல்வதால்  அவருக்கு சான்ஸ் கிடைச்சுடுமா? என்ன? இதுக்காக ஒரு கொலையா? அவ்வ்வ்

2. பணம் வாங்கிட்டு கொலை பண்ணும் ரவுடி எதுக்காக கொலை செய்யறப்ப என்னை பற்றியாடா எழுதுனே? அப்டினு டயலாக் பேசறாரு?

பெஸ்ட் ஃபிலிம் உயிர் வாசம்

பெஸ்ட் டெக்னீஷியன் -ஆதாயம் கேமரா மேன்

பெஸ்ட் ஆக்ட்ரஸ் - காதல் பீஸ்சாவில் கில்மா மச்சினியா வந்ததே ஒரு 70 மார்க் ஃபிகரு அதுக்கு

டிஸ்கி - கே பாக்யராஜ் சொன்ன ஒரு மலரும் நினைவு.. வளர்ந்து வரும் எல்லா இயக்குநர்களூம் மனசுல வெச்சுக்கனும்.. வீட்ல விஷேசங்க படத்துல அவரோட மனைவி இறந்ததும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்கப்போறார்..

சார்.. என்னோட முதல் மனைவி இறந்துட்டாங்க....

அந்த சீனை பார்த்துட்டு ஒரு ரசிகர் கேட்டாராம்.. சார்.. நீங்க இப்போ மனைவியை இழந்திருக்கீங்க, முறைப்படி மனைவி இறந்துட்டாங்கன்னுதானே கேஸ் தரனும், முதல் மனைவி இறந்துட்டாங்கன்னா அப்போ 2 வது மனைவிக்கு ஆல்ரெடி பிளானா?ன்னு கேட்டாராம்.. 

டைரக்டர்கள், அசிஸ்டென் டைரக்டர்கள்க்கு தோணாத பல லாஜிக் அத்து மீறல்கள் சாதாரண ரசிகனுக்கு தோணலாம்.. அதனால ஜாக்கிரதை என்றார்..

20 comments:

கவி அழகன் said...

உலகிலேயே குறைந்த பரப்பளவில்
அதிக கலர் பெயின்ட் அடிக்கப்படும் இடம்
பெண்களின் முகம் தான் ..............

kobiraj said...

இப்போதும் ரசிகர்களால் கேள்வி கேட்கப் படும் லாஜிக் மீறல்கள் பல படங்களில் உள்ளன .தவிர்ப்பது கடினம்

Unknown said...

அண்ணே வணக்கம்னே

MANO நாஞ்சில் மனோ said...

டேய் எத்தனை கேள்விதாம்டா கேப்பீங்க..????

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அண்ணே வணக்கம்னே//

பாரு எல்லார் பதிவிலும் போயி இந்த வணக்கத்தை மட்டுமே இன்னைக்கு சொல்லிட்டு அலையிறான் ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

மரியாதையா என் பிளாக்குக்கு வந்து சேருடா மூதேவி.....

ராஜி said...

விமர்சனம் நல்லா இருக்கு. ஆனால், இன்னிக்கு உங்க பதிவுல நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே. கவனிக்கலையா சிபி சார்?

rajamelaiyur said...

உயிர்வாசம் எனக்கு பிடித்து இருந்தது

தமிழ்வாசி பிரகாஷ் said...

மக்கா சொன்னது போல எத்தனை நாள் தான் கேள்வி கேட்பிங்க.. ஹி..ஹி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழு...

Anonymous said...

///சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. ////

அடப்பாவி... இவருதான் அன்பே சிவம் படத்த டைரெக்ட் பண்ணாருன்னு இன்னுமோ இந்த ஒலகம் நம்புது... அதுவும் கமலும் மதனும் சேர்ந்து எடுத்த படம்ண்ணே... இவரு ஒக்காந்து வேடிக்கை மட்டும்தான் பார்த்தாரு...

Menaga Sathia said...

என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒன்னும் புரியல...

SURYAJEEVA said...

படங்களை அலசி, இயக்குனர்களை பிழிந்து, பதிவாக காயப் போட்டுட்டீங்களே

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

செங்கோவி said...

பாக்கியராஜ் ஜட்ஜாவும் கலக்குறார்யா.

Unknown said...

சூப்பர் பாஸ்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோகுல் said...

டிஸ்கி மேட்டர் சூப்பர்!

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு...

நிரூபன் said...

காத்திரமான கேள்விகள், புதிய இயக்குனர்களுக்கு மேலும் மேலும் வளர வேண்டும் எனும் ஆவலைக் கொடுக்கும் அலசலாக இப் பதிவு அமையும் என்பதில் ஐயமில்லை.