Wednesday, September 14, 2011

மதிகெட்டான் சாலை - சினிமா விமர்சனம்

http://isaitoday.com/songstoday.com/wp-content/uploads/2011/07/Mathikettan_Saalai_Movie2-279x300.png
 

சிலருக்கு கற்பனைல கதை வரும்,கேள்விப்பட்ட கதை யை சிலர் திரைக்கதை ஆக்குவாங்க, ஃபாரீன் டி வி டி பார்த்து கதை பண்ணுவாங்க சிலர். இந்த டைரக்டர் ஏதோ மாலை மலர்ல பார்த்த உண்மைச்சம்பவ செய்தியை படமாக்கி இருக்காரு. திரைக்கதை மகா மோசம். ஒரு கதையை எப்படி எல்லாம் சொதப்பக்கூடாது என ஃபிலிம் இண்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்சுக்கும், நாளைய இயக்குநர்கள் கேண்டிடேட்ஸூக்கும் டியூஷன் வைக்கறது மாதிரி படம் எடுத்து இருக்காரோ? # டவுட்டு

4 ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் சகஜமா எல்லார் வீட்டுக்கும் போக வர இருக்காங்க.. ஹீரோ ஆண்ட்டின்னு கூப்பிடற ஒரு லேடியோட பொண்ணை இன் சைடா லவ் பண்றாரு.. ஆனா மத்தவங்க எல்லாம் அண்ணன் தங்கை போல்தான் பழகறாங்கன்னு  நினைக்கறாங்க. தன் ஃபிரண்ட்சே இப்படி நினைக்கறாங்களேன்னு அவங்க மேல திருட்டுப்பழி சுமத்தி பிரிக்கறாரு ஹீரோ.. 

ஆண்ட்டிக்கு மேட்டர் தெரிஞ்சதும் தன் பொண்ணை விட்டே அவ வாயாலேயே நோ லவ்னு ஹீரோவுக்கு புரிய வைக்கறாங்க.  கடுப்பான ஹீரோ ஒரு ரவுடி கும்பலோட சேர்றாரு.. ஒரு கொலைக்கேஸ்ல அவங்க உள்ளே போறப்ப வாலண்ட்ரியா வடிவேல் கணக்கா நானும் ஜெயிலை சுத்திப்பார்க்கறேன்னு ( நோ காமெடி,.. சீரியஸ்) உள்ளே போகறாரு.. அங்கே ஒரு கைதி அட்வைஸ் பண்றாரு.. நாம காதலிச்ச பொண்ணு நமக்கு கிடைக்கலைன்னா அவளை கொலை பண்ணிடனும்.. ( ஆஹா!!! என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?!!)


ஜெயில்ல இருந்து  ஜாமீன்ல வெளீயே வந்த ஹீரோ ஹீரோயினைப்பார்க்க போறாரு.. வில்லன் மாதிரி பில்டப் பண்ணி கடசில ஹீரோயினுக்கு முன்னாலயே  தற்கொலை பண்ணிக்கறாரு.. ( தான் மட்டும் செத்தா பத்தாது.. மத்தவங்களை நிம்மதியா இருக்க விடக்கூடாதுங்கற நல்ல நோக்கம் தான் அதுக்கு காரணம்!!)

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfOU5tpQsyeIL5AhLQmppPxZ5YJpCP7vLoYEDrlH5ntPsYCHleepXm8eTTuaDdY0_e2OnWQBk4dsnw5gp-KPd9CDLd_3wk3kLcwJ7lGEMPPalwcDIa8miE44wkAEe3GeFnkHPcXHwkJVGb/s320/0.jpg

ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ஜி. பட்டுராஜன் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம், அண்ணன் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ,கைபேசி எண்’ படத்தில் நடித்த ஆதர்ஷ்தான் ஹீரோ.. கஷ்டம் தான் தேறுவது.. ,40க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க நடி‌த்‌த தி‌வ்‌யா‌ நா‌கே‌ஷ்‌தான் ஹீரோயின் ( 50 மார்க் தான்)

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தம்பி.. எனக்கு ஒரு டவுட். வேலை வெட்டி இல்லாத பசங்க உன் கூட சேர்றாங்களா? அல்லது வேலை வெட்டி இல்லாத பசங்க கூட நீ சேர்றியா?


2. தம்பி. வாப்பா.. இட்லி சாப்பிடலாம்.

பரவால்ல அங்க்கிள். நான் இப்போதான் சாப்பிட்டுட்டு வந்தேன். 

அட்லீஸ்ட் சட்னியாவது சாப்பிடு.. 

3. அடப்பாவி... இந்த வயசுலயே திருட ஆரம்பிச்சுட்டியா. உனக்கு 10 வயசு கூட இருக்காது போல?

எல்லாம் எங்களுக்குத்தெரியும்.. நீ மூடு.. 

http://www.viparam.com/cinema/thumbnail.php?file=Divya_Stills_036_116561924.jpg&size=article_medium

4. மேடம். உளுந்து இருக்குங்களா?

வெண்ணிற ஆடை மூர்த்தி - என் கிட்டே கேளேன்.. ஏன் என் சம்சாரம் கிட்டே கேட்கறே?

சரக்கு நல்லா இருக்கேன்னு கேட்டேன். 

5. சார்.. இது உங்க சம்சாரமா?

பின்னே ஊருக்கே சம்சாரம்னு நினச்சியா?

6.  அவன் பணம் கேட்கறப்பவெல்லாம் குடுத்து அவனை கெடுத்துடு.. 

பெத்த புள்ள கிட்டெயே மரியாதையை எதிர்பார்க்கறீங்களே? நீங்க உருப்பட்ட மாதிரிதான்

7. அவன் லவ் பண்ற பொண்ணை அவன் மேரேஜ் பண்ணிக்கறான். இதுல உனக்கென்னப்பா வருத்தம்?

 இல்ல ஆள் செம ஸ்மார்ட்டா இருக்கானே?

ஸ்மார்ட்டுக்குள்ள தான் சொம்பு இருக்கும், சொம்புக்குள்ள தான் ஸ்மார்ட் இருக்கும்.  ( ஏதாவது புரியுதுங்களா? )

8.  யாரப்பா இது புதுசா இருக்கு?

சும்மா சீன் போடாதே? உன்னை விட நல்லவங்க தான்// 

9. வெளில 1000 பேர் இருக்காங்கன்னா அதுல 100 பேர் அக்யூஸ்ட்டாதான் இருப்பாங்க. உள்ளே 100 பேர் இருக்காங்கன்னா அவங்க 200 அக்யூஸ்ட்ங்களை பார்த்தவங்களா இருப்பாங்க. ( என்ன தான் சொல்ல வர்றீங்கண்ணே?)

10.  நாம ரொம்ப நம்புனவங்க துரோகம் பண்ணுனா அதை தாங்க முடியாது..

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/16321564851.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயினை ஸ்கூலில் டிராப் பண்ணிடுப்பான்னு ஹீரோயின் அம்மா சொல்றப்ப ஒரு டூயட், ஹீரோயின் ஒரு தடவை ஹீரோ சொல்லும் மொக்கை ஜோக்குக்கு சிரிக்கும்போது ஒரு டூயட்னு வெச்சிருக்கீங்களே? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒரு சீன்லயாவது ஹீரோயின் ஹீரோவை லவ்வறாரா? இல்லையா?ன்னு தெளிவா சொன்னீங்களா?

2.  தனது காதலை நம்பவில்லை என்பதற்காக நண்பர்களை திருட்டு பழி சுமத்துவதுகூட ஓக்கே.. எதுக்காக வாலண்ட்ரியா அதை ஒத்துக்கறார் ஹீரோ.. அவர் லூஸா?

3. ஹீரோயின் தன்னை லவ்வலைன்னு தெரிஞ்சதும் ஹீரோ தாடி வளர்த்துட்டு தண்ணீ அடிக்காம எதுக்கு ரவுடிங்க கூட சேரணும்? எதுக்கு கேனம் போல் கொலைக்கேஸ்ல  தானா விருப்பபட்டு ஜெயிலுக்கு போகனும்? இதுல சும்மா சுத்திப்பாக்கன்னு ஒரு கேவலமான சமாளிஃபிகேஷன் வேற.

4. ஹீரோயினுக்கு அடுத்த நாள் மேரேஜ்னு ஹீரோக்கு மாலை 4 மணிக்கு தெரியுது, உடனே அவர் வில்லனுக்கு ஃபோன் பண்ணி என்னை உடனே ஜாமின்ல எடுக்கனும்கறார். உடனே வில்லன் இப்போ முடியாது , கோர்ட் க்ளோஸ் ஆகி இருக்கும், காலைல 6 மணிக்கு அந்த வேலையை முடிச்சுடறேன்கறார், காலைல 7 மணிக்கு முகூர்த்தம். எந்த கோர்ட்ல காலைல 6 மணிக்கு ஜாமீன் தர்றாங்க?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஹீரோயினை சந்திக்கறார்.. என்னை லவ்வறியா? நாம ஓடிப்போலாம் வர்றியா?ன்னு எதுவுமே கேட்காம தற்கொலை பண்ணீக்கறார்.. அது ஏன்?
http://4.bp.blogspot.com/-Dt3UJxXLIPc/TWCj8PBbcNI/AAAAAAAAAus/BATjn0m7EC4/s1600/divya_nagesh_hot_stills_photos_01.JPG



இந்தப்படம்  எல்லா செண்ட்டர்லயும் 7 நாள் தான் ஓடும்.. ( 7 நாளாவது ஓடுமா?)

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 34

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்

சி.பி கமெண்ட் - அய்யோ, அம்மா, யாராவது பேட்டா கொடுத்து பிரியாணி வாங்கிக்கொடுத்தாக்கூட போயிடாதீங்க. 

சி.பி மார்க் - 25 

ஈரோடு  ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்


 http://4.bp.blogspot.com/-WetDJ7I38Fw/TirFPGZb05I/AAAAAAAAEFs/ygwUxzr_ft4/s1600/Divya%2BNagesh%2Bin%2BNenu%2BNanna%2BAbaddam%2B%25282%2529-752413.jpg

44 comments:

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!

இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

கிராமத்து காக்கை said...

அருமையான படங்கள்
விமர்சனமும் அருமை

rajamelaiyur said...

வெறும் பொண்ணுங்க போடோவா இருக்கு ... இருக்கங்க அண்ணிகிட்ட சொல்றேன்

rajamelaiyur said...

எண்கள் ஊரில் இரண்டு நாள் தான் ஓடுச்சு

K said...

very sorry sir! my computer shut down and i come after 10 minutes

rajamelaiyur said...

மொக்க படத்துக்கும் விமர்சனம் எழுதும் நீங்கள்.. உண்மையில் நல்லவர்தான்

K said...

சிலருக்கு கற்பனைல கதை வரும்,கேள்விப்பட்ட கதை யை சிலர் திரைக்கதை ஆக்குவாங்க, ஃபாரீன் டி வி டி பார்த்து கதை பண்ணுவாங்க சிலர். இந்த டைரக்டர் ஏதோ மாலை மலர்ல பார்த்த உண்மைச்சம்பவ செய்தியை படமாக்கி இருக்காரு. :////////

ஆஹா மொதல்லேயே டைரக்டரோட வீக் பாயிண்டைக் கண்டுபுடிச்சிட்டீங்களே!

கும்மாச்சி said...

செந்தில் எப்படி உங்களுக்கு இந்த மாதிரி மொக்கைன்னு தெரிஞ்ச படங்களை பார்க்க மனசு வருது, இல்லை எப்படி டைம் கிடைக்குது?.

ஆனால் ஒன்று எங்களுக்கு முன்னாடியே வார்னிங் கொடுக்கறீங்க, அந்த விதத்தில் உமக்கு நன்றி.

K said...

திரைக்கதை மகா மோசம். ஒரு கதையை எப்படி எல்லாம் சொதப்பக்கூடாது என ஃபிலிம் இண்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்சுக்கும், நாளைய இயக்குநர்கள் கேண்டிடேட்ஸூக்கும் டியூஷன் வைக்கறது மாதிரி படம் எடுத்து இருக்காரோ? # டவுட்டு /////////

ஹி ஹி ஹி ஹி பாவம் சார்! அவர் ஏதோ ஆர்வக்கொளார்ல எடுத்திருக்கார் போல! விடுங்க பொழைச்சுப் போகட்டும்!

K said...

4 ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் சகஜமா எல்லார் வீட்டுக்கும் போக வர இருக்காங்க.. ஹீரோ ஆண்ட்டின்னு கூப்பிடற ஒரு லேடியோட பொண்ணை இன் சைடா லவ் பண்றாரு..///////

ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே!

K said...

ஆனா மத்தவங்க எல்லாம் அண்ணன் தங்கை போல்தான் பழகறாங்கன்னு நினைக்கறாங்க. தன் ஃபிரண்ட்சே இப்படி நினைக்கறாங்களேன்னு அவங்க மேல திருட்டுப்பழி சுமத்தி பிரிக்கறாரு ஹீரோ.. /////

சரியாப்போச்சு! மேல!

K said...

ஆண்ட்டிக்கு மேட்டர் தெரிஞ்சதும் தன் பொண்ணை விட்டே அவ வாயாலேயே நோ லவ்னு ஹீரோவுக்கு புரிய வைக்கறாங்க.//////

பின்ன மேட்டருக்கு அவசரப்பட்டா, பெத்த தாய்க்கு கோபம் வரும்தானே!

K said...

கடுப்பான ஹீரோ ஒரு ரவுடி கும்பலோட சேர்றாரு.. ஒரு கொலைக்கேஸ்ல அவங்க உள்ளே போறப்ப வாலண்ட்ரியா வடிவேல் கணக்கா நானும் ஜெயிலை சுத்திப்பார்க்கறேன்னு ( நோ காமெடி,.. சீரியஸ்) உள்ளே போகறாரு.. /////

ஓகே!சீரியஸ்னு சொல்லீட்டீங்க! அதுனால சிரிப்பை அடக்கிக்கறேன்!

K said...

அங்கே ஒரு கைதி அட்வைஸ் பண்றாரு.. நாம காதலிச்ச பொண்ணு நமக்கு கிடைக்கலைன்னா அவளை கொலை பண்ணிடனும்.. ( ஆஹா!!! என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?!!)/////

இதுதான் சார், டைரக்டர் நிக்குறாரு! பார்த்தீங்களா, எம்புட்டு வித்தியாசமா சொல்லியிருக்காரு!ஹா ஹா ஹா!!!!

K said...

ஜெயில்ல இருந்து ஜாமீன்ல வெளீயே வந்த ஹீரோ ஹீரோயினைப்பார்க்க போறாரு.. வில்லன் மாதிரி பில்டப் பண்ணி கடசில ஹீரோயினுக்கு முன்னாலயே தற்கொலை பண்ணிக்கறாரு.. //////

ஷப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா.... எப்புடி சார், பொறுமையாப் பார்த்தீங்க?

K said...

ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ஜி. பட்டுராஜன் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம், /////

கெட்டுத்தான் திருந்துவார் பட்டு!

K said...

,கைபேசி எண்’ படத்தில் நடித்த ஆதர்ஷ்தான் ஹீரோ.. கஷ்டம் தான் தேறுவது../////

எதுல சார்?

K said...

குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க நடி‌த்‌த தி‌வ்‌யா‌ நா‌கே‌ஷ்‌தான் ஹீரோயின் ( 50 மார்க் தான்)///////

வெறும் 50 மட்டுமா?

K said...

1. தம்பி.. எனக்கு ஒரு டவுட். வேலை வெட்டி இல்லாத பசங்க உன் கூட சேர்றாங்களா? அல்லது வேலை வெட்டி இல்லாத பசங்க கூட நீ சேர்றியா? //////

ரெண்டும் ஒண்ணுதானே!

K said...

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஹீரோயினை சந்திக்கறார்.. என்னை லவ்வறியா? நாம ஓடிப்போலாம் வர்றியா?ன்னு எதுவுமே கேட்காம தற்கொலை பண்ணீக்கறார்.. அது ஏன்?//////

“ சொன்னால்தான் காதலா? “ அப்டீங்கறத, இயக்குனர் தப்பா புரிஞ்சுக்கிட்டார் போல!

K said...

சி.பி கமெண்ட் - அய்யோ, அம்மா, யாராவது பேட்டா கொடுத்து பிரியாணி வாங்கிக்கொடுத்தாக்கூட போயிடாதீங்க. ////

சொல்லீட்டிங்கல்ல! போகவே மாட்டோம்!

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ பிரடியூசர் தலையில துண்டை தூக்கி போட்டுட்டான் இந்த மூதேவி ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ டைரக்டருக்கு ஆப்பு வச்சிட்டான் சனியன் பிடிச்சவன்...

MANO நாஞ்சில் மனோ said...

படங்களை மட்டும் வக்கனையா போட்டுருக்கான் பன்னாடை...

ராஜி said...

சி.பி கமெண்ட் - அய்யோ, அம்மா, யாராவது பேட்டா கொடுத்து பிரியாணி வாங்கிக்கொடுத்தாக்கூட போயிடாதீங்க.
>>
ஆனா சிபி சொந்த காசை செலவு பண்ணி போய் பார்ப்பார்.

காட்டான் said...

மாப்பிள உங்களுக்கு கண்ணில ஏதும் பிரச்சனையாய்யா...?? ஹிரோயினுக்கு 50மாக்ஸ் கொடுத்திருக்கீங்க.. ரெம்ப கேவலமா இருக்கையா.. தமிழ் மணத்தில ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன்யா.. ஹி ஹி

காட்டான் குழ போட்டான்..

test said...

ஆமா..ஹீரோயின் பத்தி ஒண்ணுமே சொல்லல! எங்கேயிருந்து புடிச்சாங்க?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படம் போர் அடிச்ச அரைமணி நேரம் கூட உட்கார முடியிறதில்லை எப்படி சி பி இப்படி படத்தை எல்லாம் பார்க்கிறீங்க. பார்த்திட்டு அதுக்கு நேரம் செலவழிச்சு பதிவு வேற போடுறீங்க. முடியல்ல்ல!

Unknown said...

மதி கெட்டான் சாலை ரொம்ப குண்டும் குழியுமா இருக்குன்னு சிபி சொல்லிட்டாரு இன்னைக்கு போலான்னு இருந்தேன்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
தூக்கம்.... வருது வீட்டுக்கு போறேன் குட் நைட்

Anonymous said...

அய்யய்யோ பிரடியூசர் தலையில துண்டை தூக்கி போட்டுட்டான் இந்த....

ஆமென் மனோ...

செங்கோவி said...

அப்போ மதி கெட்டான்ங்கிறது தயாரிப்பாளரா?

ananthu said...

நல்ல விமர்சனம்...படம் மொக்கைனு தெரிஞ்சு தான் இயக்குனர் "மதிகெட்டான் சாலை" ன்னு பேர் வச்சிருப்பாரோ ?

அனந்து...
http://pesalamblogalam.blogspot.com

Anonymous said...

இதுக்கு மேலயும் படம் பாக்க போறன் என்பவர்கள் தியேட்டருக்கு தலையிடி மாத்திரையுடன் செல்க )))

சுதா SJ said...

பாஸு பார்த்துங்க , படம் எடுத்தவன் உங்க மேலே கேஸ் போடா போறான்... அவ்வவ்

சுதா SJ said...

அப்புறம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும் என்று நான் நினைக்குறேன்.
காரணம் இப்படியான மொக்கை படங்களின் தகவல்களை முதலே தந்து எங்களை இவர்களிடம் இருந்து காப்பாற்று வதற்காக
தேங்க்ஸ் பாஸ்

சுதா SJ said...

படங்கள் மவமை போல் கிளு கிளு தான்
ஹீ ஹீ

M (Real Santhanam Fanz) said...

ஆமா இது அருந்ததில நடிச்ச பொண்ணுல்ல?

பிரசன்னா கண்ணன் said...

இந்த படத்தோட பாட்டெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது தல..
மதிகெட்டான் சோலை-ன்னு பேர் கூட நல்ல catchy-a இருந்துதா.. படம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தான் எதிர் பார்த்தேன்..

kobiraj said...

இந்த படங்களை எல்லாம் மினக்கெட்டு பார்க்க உங்களால் எப்பிடித்தான் முடியுதோ .உங்கள் சேவை மகத்தான சேவை சார்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

செங்கோவி ஐ லைக் யுவர் கமெண்ட்

IlayaDhasan said...

இப்படி பட்ட படமா பாத்துகிட்டே இருந்தீங்க ,அப்புறம் அந்த சாலையில் தான் உங்களை அடிக்கடி பார்க்க வேண்டி வந்துரும் போலங்க.

ரஜினி , கமல் இணையும் புதிய படம்

RAMA RAVI (RAMVI) said...

நன்றி படத்த பாக்காதீங்கன்னு எச்சரிக்கை பண்ணதுக்கு.

”தளிர் சுரேஷ்” said...

பேரு வித்தியாசமா இருக்கே படம் நல்லா இருக்குன்னு நினைச்சேன்! இதைத்தான் பெரியவங்க சொன்னாங்களோ ஆளபாத்து எடை போடாதேன்னு!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்,

காமெடியோ, மொக்கையோ அல்லது சூப்பர் ஹிட் படமோ- எப்போதுமே விமர்சனப் பாணி அசத்தல்.

நமக்காக காசு செலவளித்துப் படம் பார்த்த அன்பு உள்ளமாகிய உங்களுக்கு எப்பூடி நன்றி சொலவதற்னே தெரியலை.