முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..
( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,
எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன்
எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு,
வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி ..
என நீண்டு செல்லும் உதாரணங்கள்...
ஆனால் (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை..
கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும் அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..
இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..
விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது..
அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்.. செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்.. நல்ல எதிர் காலம் உண்டு..
மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம் காண வைத்த வசனங்கள்
1. அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....
2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?
அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு....
3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!
4. யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?
2க்கும் என்னம்மா வித்தியாசம்?
3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..
சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..
போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)
5. வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க..
6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது..
அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்..
டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்..
7. சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..
8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..
இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்..
9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு..
ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்..
10. நீங்கதான் போஸ்ட்மேனா?
அதுக்கு ஏன்யா சிரிக்கறே?
இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்..
11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல...
12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..
13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்...
14. வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?
15. ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?
யோவ்!!!!!!!!!!!!!!
16. அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)
17. இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..
இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!
18. அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.
19. டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?
அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?
20. முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?
சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?
21. அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....
22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்...
யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்..
23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல..
24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....
25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்..
26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது..
2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில் 2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..
3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1. சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே.. போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..
4. ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ, செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் ) என ஜால வித்தை..
5. காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..
6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!
7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்
1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..
2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?
3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..
4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?
5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்.. இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்..
6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?
7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?
8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?
அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்..
ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.
ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்
டிஸ்கி -1
முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 -
JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்
டிஸ்கி -3
47 comments:
nice review.... i hopw its a good movie...
முதல் விமர்சனம், இல்லையா?
good review c p sir
அப்போ பாக்கலாம்கிறீங்க!
Tamil manam 1
நீங்க சொன்னா மாதிரியே கண்டிப்பா பார்த்துடுவோம். ஓரு டவுட்டுனே?????
பாட்டுங்கள பத்தி ஓன்னுமே சொல்லலையே ஏன்னா???
ஒரு வேளை தூங்கிட்டிங்கிளோ# டவுட்டு..
இப்படிக்கு
வெட்டி ஆபிகர்
தலைவர்.
அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம்.
சபாஷ்....
பார்க்கலாம். விழிப்புணர்வுபடம். விருதுநிச்சயம். கமர்சியல் ஹிட் இல்லைனாலும் சமூக அக்கறையோட எடுத்திருக்காங்க என்கிறீர்கள். நல்லது.
super review
@வெட்டி ஆபிசர்
அண்னே, இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள் பகுதியில் பாயிண்ட் 3 ஐ படிக்கவும்
நல்ல review...மண்வாசனைக்காகவே கண்டிப்பா பார்க்கணும் இந்த படத்தை.
Nallathoru padathai adaiyalapaduthiyamaiku nanri cp sir. Pasanga kaal paritchai leave la parka sollalam. . Pasanga kaal paritchai leave la parka sollalam.
கலக்கலான விமர்சனம்...
நல்ல படம்....ஆனா படம் தேறாதா?
வருகையும், வாக்கும்...
விமர்சனம் ஓகே...
துட்டுக்கு ரெவ்யு எழுதுற கூட்டம், ஆஹா ஓஹோ கிராங்க , நீங்க பாவம் உங்க துட்ட
போட்டு எங்கள காப்பாத்துறீங்க , மவ ராசா ,நல்லா இருக்கணும் .
ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1
இந்த படம் ஓடும் ஓடாது அப்படின்னு நீங்க எப்படி சொல்லலாம். நீங்க என்ன மொத்த தமிழ்நாட்டோட ரசனை பிரதிநிதியா?உங்க ரசனை எல்லா நேரதிலேயம் தமிழ்நாட்டு மக்களோட ஒத்து போயிருக்கா? மொதல்ல நாட்டாம வேலைய நிறுத்துங்க ....விமர்சனம் வேறு ...தீர்ப்பு சொல்றது வேறு
விமர்சனம் ஓகே...வெடி என்னாச்சு..நமத்து போச்சா
விமல் ஓடும் குதிரை ஆகிவிட்டார்
வெற்றிப்பட நாயகன் விமல்
விகடன் ரேங்க் 42 கொஞ்சம் அதிகம்தான் போல..
//சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.
அண்ணன் சொன்னா சரியாத்தான்
இருக்கும்
படத்துல காமெடி எப்புடி அண்ணே? களவாணி அளவுக்கு வெர்த்தா இருக்குமா காமெடி?
படம் சொதப்பலா??? அவ்வ
ரெம்ப எதிர்பார்த்தேன்.....
( இங்கே யாரு ஏன்மைனஸ் ஒட்டு போட்டா,,?? அவ்வ)
எனக்கு படம் பார்க்க முடியாது அதனால ஒரு திருட்டு விசிடி அனுப்பு அண்ணே...
சி.பி.செந்தில்குமார் said...
வெடிய விட்டுடீங்களே........//
எலேய் எந்த வெடிலெய் சரியா சொல்லு???
அப்ப படம் ப்ளாப்பா ?
உனக்கு எவனோ மைனஸ் வெடி வச்சிட்டான் போ...
நன்றி சி பி ...
விமல் குசும்பு இல்லியா இந்த படத்துல?
etho english padathoda thazuvalnu sonnanga unmaiya
"அப்போ நீங்க பார்த்து இடிக்காம வாங்க சார்,
யாரு நானா?" ரசிக்க வைக்கிறது.
படம் பார்க்கல விளம்பரம் தான்
Good review
”பார்க்கலாம்”
பாசாக்கி விட்டுட்டீங்க!
மாப்பிள பார்கலாம்ன்னா என்னை பொறுத்தவரை நல்ல படம்.. பார்த்திடுவோம்..
மாப்பிள பார்கலாம்ன்னா என்னை பொறுத்தவரை நல்ல படம்.. பார்த்திடுவோம்..
ஐயா மைனஸ் ஓட்டு எதுக்கு போடுறீங்கன்னு சத்தியமா எனக்கு விளங்கல.. காழ்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா..??
@மொக்கராசு மாமா
இல்ல சார்.. அந்த அளவு காமெடி இல்ல,, ஆனாலும் காமெடி இருக்கு
@’’சோதிடம்’’ சதீஷ்குமார்
ஆர்ட் டைரக்ஷன் + இசை + ஒளிப்பதிவு ஆகிய 3க்கும் விகடன்ல அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க..அதுல கலக்கி இருக்காங்களே/
@Raja
இது தீர்ப்பு அல்ல.. என் எதிர்பார்ப்பு. இது மாறுதலுக்கு உட்பட்டது
வாகை சூட வாய்ப்பு கம்மி தாங்குறிரிங்க
இந்தப்படத்தில் முந்தானை முடிச்சு, திருமதி பழனிச்சாமி படங்களின் சாயல் இருப்பது உண்மைதான். முந்தானை முடிச்சு ஓக்கே என்றாலும், திருமதி பழனிச்சாமி சத்யராஜின் பல் கடிக்கும் நடிப்பில் ஓர் மரண மொக்கை. ஆனால் வாகை சூட வா கிட்டத்தட்ட ஓர் காலத்தின் பதிவு. கி.ராஜநாராணண், சுந்தர ராமசாமி வகையறா.. கொஞ்சம் டிரைனஸ் இல்லாமல் கொடுத்திருக்கிறார். தமிழ்சினிமாவின் மைல்கல் டாப் 100 படங்களில் ஒன்றாகக் கண்டிப்பாகச் சேர்க்கப்படும்.
தல... இந்தமாதிரி படத்திற்கு இயக்குனர் பல்பு வாங்கிய இடங்களை குத்தி காட்டணுமா... நல்ல படங்கள் எடுப்பவரை நாம் பாராட்ட வேண்டாமா...
@Philosophy Prabhakaran
உண்மைதான்.. அது குத்திக்காட்டல் அல்ல, சுட்டிக்காட்டல்
கலக்கல் விமர்சனம்!
அண்ணே படம் பார்த்துட்டேன்ன..
படம் நீங்க சொன்ன மாதிரியே இருந்திச்சிண்ணா.
உங்க விமர்சனம் சூப்பர்ணா...
இப்படியே தொடருங்கனா
புதிய அனுபவத்துடன்
வெட்டி ஆபிசர்
செந்தில் குமார் உங்கள் விமர்சனத்தின் முதல் வரி மட்டும் என் கருத்தோடு ஒத்துப்போகவில்லை .....ஒரு ஆசிரியனாகவும் ,பட ரசிகனாகவும் என் பார்வையில் களவானி படத்தை விட இது சற்றும் குறைவல்ல !!!ஒரு மண்ணின் வாசனையை அழகாக நம் முன்னால் படைத்த இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்
உங்களின் விமர்சனத்தை ரசித்தேன் பாஸ்..
இந்தப் படத்தையும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
Post a Comment