நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......
1. ஸ்டீபன் - 1 4 3
கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?
1 4 3
லவ் சப்ஜெக்ட்டா?
கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?
ஓ. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்..
படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./..
ஸ்கூல் ல ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க..
பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்..
ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..
1980ல கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994ல தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...
2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )
3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும் 1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?
ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.
கே பி கமெண்ட் - எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே...
2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..
ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்.
இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க.
அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி.
இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன் பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..
கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?
3. சஞ்சய் - சத்தியம்
ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க..
ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது...
அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது..
கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி ஐ பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு..
போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்
1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..
2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க..
3. ஆ.. இவர் பெரிய ராகவன் ஐ பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா.....
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?
2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. ஆ!! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?
கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட் அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?
சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி..
4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை
ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது.
அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,
மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..
இயக்குநருக்கு சில கேள்விகள்
1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?
2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?
படத்தில் மனம் தொட்ட வசனங்கள்
1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை
2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..
கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை
ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க..
அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு..
மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது.
Living DOLL
27 comments:
Super review. Thanks cp sir
arumai super
wow nice babys
அம்மா நடிகை மாட்டர் ம்ம்ம்.....உண்மைதான்.
அட இறைவா... இந்த வாரம் நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேனே... லிங்க் இருக்கா சென்னிமலையாரே... வழக்கம் போல் நச்ன்னு எழுதியிருக்கீங்க...
LIVING DOLL னு இந்த பேபிக்கு பேரு வச்சீங்க பாருங்க ............ அது தான் அழகு
அண்ணே கலக்கல் பகிர்வு!
நைஸ் ரிவியூ!
அத்தனை பாப்பாக்களும் கொள்ளை அழகு...
திருஷ்டிபட்டுடுச்சுன்னு அடுத்த போஸ்ட்ல அரைகுறை ஆடைகளுடன் சினிமா நடிகைகள் படத்தை போட்டுடாதீங்க சார்....
இப்பதான் உங்க பிளாக் பக்கம் சுதந்திரமா வலம் வர ஆரம்பிச்சிருக்கோம்.
எக்ஸலன்ட் ரிவ்யூ!!!
கேபி கமெண்ட்டுடன் சிபி கமெண்டையும் போட்டிருக்கலாம்... பரவாயில்லை..அடுத்த முறை உங்க கமெண்டும் ட்ரை பண்ணுங்க.
குழந்தை அழகு :-)
பாப்பா நல்லா இருக்கு:)
மிகவும் அருமையான விமர்சனம்.கடைசி படம் மனதை பாதித்தது.
சி பி... நீங்க தமிழ் சினிமாவை வைத்து இரண்டாவது கேள்வியை கேட்டிருக்கின்றீர்.
99 .99 % கத்தோலிக்க கிறிஸ்தவத் தமிழ்ப் பெண்கள் பொட்டுவைத்துதான் இருப்பார்கள்.
தமிழ் சினிமாவின் cliche வில் ஒன்று... கிறிஸ்தவப் பெண்களை காட்டும்போது பொட்டில்லாமல்
பூவில்லாமல் காட்டுவது.
நான் பார்க்கவில்லை.அதனால் என்ன?படித்ததே போதும்!
டுமீல்
டுமீல்
மூன்றாவதுகுண்டு
சுடும்முன்ஓடிடுங்க
சகாதேவன்
எலேய் கொன்னியா, கீர்த்தி பல்பு வாங்கிட்டாங்கடோ...
குழந்தை வாவ்........ஸ்வீட்.....!!!
பகிர்வுக்கு நன்றிண்ணே.
வழக்கம் போல் நச்...
நிகழ்ச்சியின் அருமை உங்கள் பதிவில் தெரிகிறது..........
அருமை பதிவு .நச்
அருமையான தகவல்
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
உங்க வலைதளத்திற்கு நான் வர்றதே பிகர் போட்டோக்களை பார்க்கத்தான். அதுவும் இல்லேன்னா எப்படி அண்ணே?
விமர்சனமும், இடையிடையே பதியப்பட்ட மழலையும் அழகோ அழகு! கண்ணு பட போகுதுங்க!
வழமை போலவே நாளைய இயக்குனர் அலசல் சூப்பர்..
மீண்டும் ஓர் குழந்தை படம் பார்க்க வேண்டும் எனும் ஆவலை உங்களின் விமர்சனம் தருகிறது..
டைம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
இதைவிட பெரிய பல்ப் வாங்கினாங்களே கீர்த்தி அதை மிஸ் பன்னிட்டீங்களா நண்பரே?!
கீர்த்தி : படத்தின் தலைப்பு என்ன?
இயக்குனர் : மீண்டும் ஒரு குழந்தை
கீர்த்தி: எடுக்க ரொம்ப கஷ்டபட்டீங்களோ?!!னு
வழக்கமான கேள்வி கேட்டாங்க
கே.பி அதை கமெண்ட் செய்து கலாய்க்க பிறகு அர்த்தம் புரிந்து அசடு வழிந்தார் கீர்த்தி..
Post a Comment