Sunday, September 04, 2011

கற்றது தமிழ் ராம் ஏன் ரூட் மாறுகிறார்? சேரன் அதிர்ச்சி..

கற்றது பாசம்!


'தங்க மீன்கள்’ - தலைப்பிலேயே தூண்டில் இடுகிறார் இயக்குநர் ராம். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு, இயக்குநராகவும் நாயகனாகவும் 'தங்க மீன்’ பிடிக்க வருகிறார்!

சி.பி - டைரக்டரா இருந்தப்பவே ஹீரோவுக்கு பயங்கர ஒட்டு தாடி வெச்சு ஜீவாவை முடிச்சாரு. இப்போ இவரே ஹீரோவா? எவ்வளவு பெரிய தாடி வைக்கப்போறாரோ?

1. ''தமிழ் படித்த மாணவர்களின் சமூக அந்தஸ்தை 'கற்றது தமிழ்’ மூலமாக விவாதப் பொருள் ஆக்கினீங்க. இந்த மீன்களின் இலக்கு என்ன?''

''இது ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கதை. ஒரு வரியில் சொல்லணும்னா, ஒரு கெட்ட மகன்... நல்ல அப்பாவான கதை. ஒவ்வொரு மனுஷனும் தன்னோட வாழ்க்கையில் கதாநாயகனாக மாறுவது, அவன் அப்பா ஆன பிறகுதான். 

சி.பி - ஆஹா. ஹைக்கூ கவிதை மாதிரி இருக்கு நீங்க சொன்ன கடைசி வரி.. சபாஷ்..!!!

காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத்துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான். அப்படித் தன் பெண்ணுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு நின்ன ஒரு அப்பனோட வாழ்க்கை இது. ஒரு அப்பனோட கதைனு சொல்லக் கூடாது. இது இரண்டு அப்பாக்களின், இரண்டு பிள்ளைகளின், இரண்டு தலைமுறைகளின் கதை!


சி.பி - அபியும் நானும், தெய்வத்திருமகள், அன்புள்ள அப்பா பட வரிசையில்..?
சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது... ஓர் அன்பை எப்படி சிதைச்சுப்போடுதுனு யோசிச்சப்போதான் 'தங்க மீன்கள்’ உருவானது.


இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை. ஆனால், என் கல்யாணசுந்தரம் தன் இருப்பைத் தன் மகள் செல்லம்மாவுக்காக அர்ப்பணிக்கிறான். 

அதற்காக பணம், வேலை, கௌரவம்னு எதையும் கருத்தில்கொள்ளாமல் வாழ்கிறான். ஆனால், கல்யாணியின் அப்பா அவனுக்கு நேர் எதிர். அவருக்குப் பணம், கௌரவம் இதெல்லாம்தான் ஓர் ஆணின் அடையாளம். கல்யாணி என்ற மகன் செல்லம்மாவுக்கு அப்பா ஆகும்போது ஏற்படும் உணர்வுகளின் வழியாக, இரண்டு தலைமுறைகளை இந்தக் கதையில் பார்க் கிறேன்!''  


சி.பி - பொருளீட்ட குடும்பத்தை விட்டு வெளி நாடு போவதை விட கணவனின் அருகாமையும், அரவணைப்புமே மனைவிக்குத் தேவை என்பதே சரி.. 


2. '' 'கற்றது தமிழ்’னு ஆவேசமா ஒரு படம் கொடுத்துட்டு, இவ்வளவு மென்மையாக ஒரு கதையை எப்படிக் கையில் எடுத்தீங்க?''


சி.பி - ஆமா, ஆவேசமா கொடுத்து என்ன பிரயோசனம்? நம்ம ஆளுங்க அதை ஏத்துக்கலையே? மறுபடி அதே மாதிரி படம் கொடுக்க முடியுமா? அதான் அண்ணன் ரூட்டை மாத்திட்டாரு.. 

''உண்மை ஒண்ணுதான். அதைக் கோபமாவும் சொல்லலாம். கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். இது என்போன்ற பல தகப்பன் களின் உண்மைக் கதை. கோயம்புத்தூரில் குடும்பத்தை விட்டுட்டு, சினிமாவுக்காக சென்னையில் திரிபவன் நான். மகளைப் பார்க்கவே போக முடியாமல் இருந்த நாட்கள்ல ஒருநாள், என் பொண்ணு போன்ல சொன்னா... 'அப்பா, நம்ம கொல்லையில பூவெல்லாம் அவங்க அப்பாவைக் காணோம்னு என்கிட்ட அழுதுச்சுப்பா.’ உடனே நான், 'அதுக்கு நீ என்னப்பா சொன்ன?’னு கேட்டேன். ''அப்பாவெல்லாம் பணம் சம்பாதிக்க சென்னைக்குப் போயிருக்காங்க. பணம் கிடைச்சதும் வந்துருவாங்க’னு சொன்னேம்பா’ன்னா. 


எனக்குச் சட்டுனு மனசு கனத்துப்போச்சு. என்னைப் பார்க்காம இருக்கிறதையே ஒரு கதை மாதிரி சொல்லிட்டா என் மக. அவ சொன்ன அந்த வார்த்தைகள்ல இருந்துதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். இது முழுக்க முழுக்க நம் அசல் வாழ்க்கையின் பதிவு!''


3. ''தாக்கம் இல்லைனு சொல்றீங்க... ஆனா, மத்த இயக்குநர்கள் பாதையில் நீங்களும் ஹீரோவாக் களம் இறங்கிட்டீங்களே?''

சி.பி - எத்தனி நாளுக்குத்தான் அல்வாவை ஒரு ஆளுக்கு ஊட்டி விட்டு அதை சாப்பிட சம்பளமும் தர்றது? அதான் அண்ணன் அல்வாவை தானே சாப்பிட ட்ரை பண்றாரு.. இந்த வெர்ஷன்ல நான் அல்வான்னு சொன்னது ஹீரோ கேரக்டரை ... ஹீரோயினை அல்ல.. ஹி ஹி 

''என் தோழர் ரேவதி பரிந்துரைக்க... கௌதம் மேனனைச் சந்தித்தேன். என் கதையைக் கேட்ட பிறகு, கதையின் ஸ்க்ரிப்ட் புத்தகத்தைப் பார்த்த பிறகு, 'நீங்க நடிச்சா, நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எப்பவுமே நோக்கம் கிடையாது. 

அதற்கான முனைப்போ, ஆர்வமோகூடக் கிடையாது. இந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரம். இதில் இன்றைய ஹீரோவுக்கான அம்சங்கள் இல்லை. அவர்கள் விரும்பும் ஆசைப்படும் சாகசங்களுக்கும் இதில் இடமே இல்லை. அப்படியும் நானே நடிக்கலாமா வேண்டா மானு பெரிய குழப்பத்தில் இருந்த என் பயத்தைப் போக்கியது தோழர் சுபா பாண்டியன்தான். 

அவர் என்னை எடுத்த புகைப்படங்களும், நண்பர் பிஜி.முத்தையாவோடு திருவண்ணாமலைக்குப் போய் எடுத்த டெஸ்ட் ஷூட்டும் எனக்கு நம்பிக்கை அளித்தன. எழுதுகிறவனாகவும் இயக்குநராக வும் ஒருவனே இருந்தால், உணர்வுகளை உண்மையா வெளிப்படுத்தி நடிக்க முடியும்னு அப்புறம்தான் உணர்ந்தேன்!''

சி.பி - அட!!! சேரன் கூட ஆரம்பத்துல இதையே தான் சொன்னாரு.. கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடிச்சா?
4. ''கதையின் அழுத்தத்தை அறிமுகக் கதாநாயகியும் குழந்தையும் தாங்குவாங்களா?''

சி.பி - அவங்க தாங்கிடுவாங்க.. புரொடியூசர் தாங்குவாரா?ன்னு தான் டவுட்டா இருக்கு./. 

''திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. எனது வடிவை செல்லியிடம் அப்படியே அச்சு அசல் பார்த்தேன். ஆர்வத்தோடு கதையை உள்வாங்கி, கண்ணியத்தோடு அதை வெளிப்படுத்தினார் செல்லி. சாதனா என்ற குழந்தை என் மகளா நடிச்சிருக்கா.

என் மகளாகவே வாழ்ந்திருக்கானு சொல்லலாம். கதையின் முக்கியத்துவத்தை, இயல்பை இவ்வளவு சிறு வயதில் உணர்ந்து நடிப்பது ரொம்பவும் கஷ்டம். அந்தக் கஷ்டத்தை ரொம்ப எளிமையாக் கடந்து அட்டகாசப்படுத்தி இருக்கிறாள் சாதனா!''


5. '' 'கற்றது தமிழ்’ காலத்தைக் காட்டிலும் இப்போ யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷல். இங்கே என்ன விசேஷம்?''


'' யுவன் ஷங்கர்- நா.முத்துக்குமார் இல்லாம என்னால் பாடல்களை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எனக்காக பணம் எதையும் பொருட்படுத்த மாட்டார் யுவன். நேரத்தைக் கொடுத்துட்டா, அவரோட அர்ப்பணிப்பு எல்லை தாண்டும். என் மனதைப் புரிந்தவர் நா.முத்துக்குமார். சமூகப் பொறுப்பு இல்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள்!''


6. ''தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்ன சொன்னார்?''

சி.பி - போட்ட காசு திரும்ப கிடைக்குமா? ஏற்கனவே நடுநிசி நாய்கள்ல நிறைய காசு போச்சுன்னு சொல்லி புலம்பி இருப்பாரு.. 
'' 'கதையைக் கேட்கும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது... ஒரு தயாரிப்பாளராக உங்களிடம் நான் குறுக்கிடவே மாட்டேன். முதல் பிரதியைக் காட்டினால் போதும். நீங்கள் சொன்னதைப் பார்க்க ரெடியா இருக்கேன்’னு  சொன்னார். அவருடைய கனிவுக்கு மரியாதை தருகிற படமாக 'தங்க மீன்கள்’ இருக்கும்!'
 thanx - vikatan

24 comments:

Unknown said...

இரவு நேர உலா??

Unknown said...

இரவு வணக்கங்கள் பாஸ் !!அவன் அவன் என்ன செய்தா எனக்கென்ன..நான் தூங்கிரன்..கொர்ர்ர்

ஆர்வா said...

ராமின் அடுத்தபடத்தை எதிர்பார்த்திருந்தேன்.. அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி தல

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

'பரிவை' சே.குமார் said...

சரி விடுங்க... அவருக்கும் கதாநாயகனாகனுமின்னு ஆசை வந்தாச்சு.... நடக்கட்டும் ... நடக்கட்டும்... நல்ல இயக்குநரை இழக்க நாம் இப்போதே ரெடியாவோம்.

KANA VARO said...

கெட்டு குட்டி சுவராகும் இயக்குனர் வரிசையில் அடுத்தது ராமா?

நிரூபன் said...

நானும் உள்ளேன் ஐயா...
பின்னூட்டங்களோடு பின்னர் வருகிறேன்.

சுதா SJ said...

ராம் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு , நல்ல படம் என்ற திருப்தியை தருவார் என்று நினைக்குறேன்.....
கற்றது தமிழ் படம் பார்த்து ராம் மேல் மிக பெரிய மரியாதை வந்து இருக்கு, கடைசி வரை அதை அவர் காப்பற்ற வேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் எழாவது குத்தியாச்சு நாசமா போடா அண்ணா....

சுதா SJ said...

எத்தனை நாளுக்குத்தான் அடுத்தவனுக்கே அல்வாவ ஊட்டிவிடுரதாம் என்ற உங்கள் பஞ் சூப்பர், ஹீரோவாகும் இயக்குனர்களின் எண்ணமும் இதுதான், ஹா ஹா

M.Senthil Kumar said...

thala, better have a style in commenting and send it to the respective journals. Keep doing this will get their attention. I dont think those people will get a chance to know ur block. right? just for a friendly suggestion

Anonymous said...

தங்க மீன்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

இடையிடை... சி(ப்)பி முத்துக்கள் சூப்பருங்கோ!

Anonymous said...

நன்றி விகடன்...+ சி பி...

Nirosh said...

சரி பார்ப்போமே...!

ராஜ நடராஜன் said...

இயக்குநர் ராமுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்!

தனிமரம் said...

வாழ்த்துக்கள் சி.பிக்கும் ராமுக்கும் நல்லபடம் வரட்டும் தந்தை துயர்தெரிவுக்கும் படத்தை வரவேற்போம்!

செங்கோவி said...

அடடா..அவர் நல்ல இயக்குநர் ஆச்சே...போச்சா!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

முதல் கேள்வி பதிலில் படத்தின் கதையை தெரிந்துகொள்ள முடிந்தது.
சுவரசியமான கதை.படம் நன்றாக வரட்டும்.பார்க்கலாம்.

கடம்பவன குயில் said...

தங்க மீன்கள் ராமின் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்...

ஆனால் நம் மக்கள் ரசனை இன்னும் உயரணும் பாஸ்...மசாலா இல்லாமல் நல்ல உயிரோட்டமான அன்பின்இழைபின்னிய, ஃபான்டஸி இல்லாத படங்களை அவ்வளவாக வரவேற்பதில்லை என்பது கசப்பான உண்மை.

கடம்பவன குயில் said...

இயக்குநர் ராம் ஹீரோன்னா ஏன் எல்லோரும் பயப்படுறீங்க???

என்னைக்குமே கதைதான் ஹீரோவா இருக்கணும்... நம்ம மக்களுக்கு தான் ரசனை உயரலயே...என்ன செய்ய???

கடம்பவன குயில் said...

அழகர் சாமியின் குதிரை எவ்வளவு அற்புதமான படம்.. அதையெல்லாம் ரசிக்கிற அளவுக்கு மக்கள் மனநிலை இல்லையே... தங்க மீன்களுக்கு அந்த நிலை வாராதிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

Anonymous said...

Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

ராஜி said...

தங்க மீன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.