Monday, September 26, 2011

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

1.குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்

-----------------------------

2. குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கத்தெரியாதவன் தான் இந்த உலகின் மிகச்சிறந்த ரசனை கெட்டவன் ஆவான்

--------------------------------

3. நெருக்கமான தோழமையின் கறுப்புப்பக்கங்கள் தெரிய வரும்போது மனதில் வெறுப்புத்தோன்றி ஏன் தான் தெரிய வந்ததோ என எண்ணத்தோன்றுகிறது

-----------------------------

4. என்னிடம் நீ நிறைய எதிர்பார்க்கிறாய், உன்னிடம் நான் உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறேன்

------------------------------

5. பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் தப்பில்லை # டி = டியர், டா = டார்லிங்க்

--------------------------




6. விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஆரம்ப நிலைக்காதலர்கள்,  ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் பேசினால் அது பக்குவம் பெற்ற காதல்

---------------------



7. உனக்காக வாழ்கிறேன் என்று ஒரு உயிர் சொன்னால் அது காதல், உன்னால் வாழ்கிறேன் என பல உயிர்கள் சொன்னால் அது தியாகம்

---------------------

8. தன்னிடம் பேசவில்லை என்றால் கண்டுக்காமல் விடுவது பெண்களின் பழக்கம், தன்னிடம் பேசவில்லை என்றால் அவதூறு சொல்வது ஆண்களின் பழக்கம் # சைக்காலஜி

---------------------------
9. உன் கண்களில் கண்ணீர் சுரக்கும்போது உன் கைகளை விட என் கைகள் 10 மடங்கு வேகத்துடன் செயல்படுகின்றன

----------------------------

10. தோல்வி என்பது முடிவல்ல, வெற்றி என்பது எளிதல்ல

-----------------------------




11. நேர்மறை சிந்தனையாளனை எந்த விஷமும் கொன்று விட முடியாது, எதிர்மறை சிந்தனையாளனை எந்த  மருந்தும் குணப்படுத்தி விட முடியாது

---------------------

12. உன் கண்ணீரை கொடுத்து வாங்கும் காதல் பின் ஒரு நாளில் கண்ணீர் சிந்த வைக்கும் மோதல் ஆகும்

----------------------------------

13. அழகு ஒரு உண்மையான காதலை ஏற்படுத்தி விட முடியாது, ஆனால் உண்மையான காதல்  அழகானது

----------------------------

14. மேடம்,இந்தப்படத்துல உங்களுக்கு ரொம்ப நீளமான ரோல்.

நிஜமாவா? தாங்க்ஸ். ஆமா, பழநி மலை உச்சில இருந்து படிக்கட்டு வழியா உருண்டு வர்றீங்க

------------------------

15. ஆண்களை விட பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்,ஒருவர் கூட பழகாமலேயே அவர்களால் ஒருவர் கேரக்டரை கணிக்க முடிகிறது # லேடீஸாலஜி

----------------------



16. ஒரு பெண்ணால் நேசிக்கப்படும்போது கண்கள் இல்லாதவன் கூட கவிதை எழுதுகிறான்

----------------------------------

17.எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல, எது நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு..

--------------------------
18. வாழ்க்கை ஒரு கண்ணாடி போல,நாம் புன்னகைக்கும்போது  அதற்கான பலன்களை உடனே பிரதிபலிக்க காணலாம்

--------------------------------

19. நேசித்த பெண் தன்னை வெறுக்கும்போதுதான் கண்கள் உள்ளவன் கூட விழி இழந்தவன் நிலை அடைகிறான்

--------------------------------
20. வாழ்வில் யாரையும் சார்ந்து இருக்காதே. ஏன் எனில் உன் நிழல் கூட நீ வெளிச்சத்தில் இருக்கும் வரை தான் துணைக்கு வரும்..

------------------------------


21. உன் தோளில் சாய்ந்து கை கோர்த்து நடக்கும்போது உணர்ந்தேன் “ ஓவரா சரக்கு அடிச்சுட்டேனா?”

-----------------------------

22. ஒரு வைரம் உருவாக பல வருடங்கள் ஆகும் என அறிவியல் சொல்கிறது, நீ மட்டும் எப்படி 10 மாதங்களில்? # மொக்க கவித ஃபார் எ சக்க ஃபிகர்

-------------------------

23. மழைச்சாரலில் உன் கைகளைப்பிடித்து நடந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் கண்களை நனைத்த நாட்களே அதிகம்

--------------------------

24. இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி # என்ன தலைவரே? நீங்களும் அம்மா புகழ் பாட ஆரம்பிச்சுட்டீங்க?

-------------------------------


25. அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' # பிசாத்து 10% க்கு ஆசைப்பட்டு 200% வருமானத்தை விடச்சொல்றீங்களா?

---------------------------------------




-

47 comments:

நிரூபன் said...

மீண்டும் இனிய காலை வணக்கம் பாஸ்.

வைகை said...

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்////

பெற்றோரிடம் செலவழிக்கும் நேரம் நரகம் என்று குழந்தைகள் நினைப்பதால் அந்த நிலையை நம் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம் :)))

நிரூபன் said...

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?//

அவ்...அந்த ஆராய்ச்சியெல்லாம் இருக்கட்டும்,
ப்ளாக்கை திறந்தா பயமுறுத்துற மாதிரி கால் ஆடுற படத்தைப் போட்டு ஏன் பாஸ் எனக்கு பீதியை வர வைக்கிறீங்க?

நிரூபன் said...

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்//

அடிங்...அப்போ உங்களுக்கு என்ன வேலை பாஸ்?

நிரூபன் said...

நெருக்கமான தோழமையின் கறுப்புப்பக்கங்கள் தெரிய வரும்போது மனதில் வெறுப்புத்தோன்றி ஏன் தான் தெரிய வந்ததோ என எண்ணத்தோன்றுகிறது//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சிட்டுவேசன் கடி...

நிரூபன் said...

4. என்னிடம் நீ நிறைய எதிர்பார்க்கிறாய், உன்னிடம் நான் உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறேன்//

இது நல்லாத் தான் இருக்கு...

மனம் விட்டுப் பேசுவதற்கு இதுவும் ஓர் அழகான வாக்கியம்.

வைகை said...

நெருக்கமான தோழமையின் கறுப்புப்பக்கங்கள் தெரிய வரும்போது மனதில் வெறுப்புத்தோன்றி ஏன் தான் தெரிய வந்ததோ என எண்ணத்தோன்றுகிறது//

வெள்ளைப்பக்கம் இருந்தால் மட்டுமே கருப்பு பக்கம் தெரியவரும்! அதனால் வெள்ளையை மட்டுமே பார்க்க முயற்சி செய்வோம் :))

நிரூபன் said...

5. பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் தப்பில்லை # டி = டியர், டா = டார்லிங்க//

ஹையோ.........ஹையோ.......

பாஸுக்கு காதல் முத்திடுச்சு....

வீட்டுக்கு ஒரு போன் போட்டு அண்ணிக்கிட்ட சொல்லி
வைக்கனும்;-))))))))))

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்தும் வழமை போலவே அரசியல், காமெடி, தத்துவம், பஞ்ச் என்று அசத்தலாக கலந்து வந்திருக்கிறது.

வைகை said...

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் தப்பில்லை # டி = டியர், டா = டார்லிங்க்///

அப்ப.. எப்பிடி கூப்பிட்டா தப்பு? :))

வைகை said...

. விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஆரம்ப நிலைக்காதலர்கள், ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் பேசினால் அது பக்குவம் பெற்ற காதல்//

ஒருவரை ஒருவர் விட்டுட்டு போனால்... அது முறிந்த காதல் :))

வைகை said...

தன்னிடம் பேசவில்லை என்றால் கண்டுக்காமல் விடுவது பெண்களின் பழக்கம், தன்னிடம் பேசவில்லை என்றால் அவதூறு சொல்வது ஆண்களின் பழக்கம் # சைக்காலஜி//

தன்னிடம் மட்டும் பேசவில்லையோ என்று சந்தேகப்படுவது பெண்கள் # சைக்காலஜி :))

Unknown said...

அண்ணே கலக்கல்...அதுவும் 8, 11 யாருக்கோ சேதி சொல்றீங்க புரியுது!

Mathuran said...

டுவீட்ஸ் சூப்பர்...
படங்கள் அசத்தல்

Anonymous said...

1 டாப்

டி. (டியர்) டா (டார்லிங்) க்கு இவ்ளோ அர்த்தமா? அதனாலதான் குழந்தைங்க் டாடின்னு கூப்பிடுறாங்களா அப்பாவ :)

rajamelaiyur said...

5 th one super . .

rajamelaiyur said...

@ஷீ-நிசி correct . .

கடம்பவன குயில் said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

14 and 19 ஒரே ட்விட்ஸ்...ஏன் இப்படி?? என்ன குழப்பம் திடீரென்று???

கடம்பவன குயில் said...

21. உன் தோளில் சாய்ந்து நடக்கும்போது....ஓவரா சரக்கு அடிச்சுட்டேனோ...?

லேடீஸாலஜிகள் உள்பட அனைத்து ட்விட்ஸ்ம் வழக்கம் போல செம.

கடம்பவன குயில் said...

”நெருக்கமான தோழமையின் கறுப்பு பக்கங்கள் தெரியவரும்போது....”.

”எது நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு”

இரண்டும் முரண்படுகிறதே.

யாருக்கும் மெஸேஜா????

கவி அழகன் said...

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

கவி அழகன் said...

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

கவி அழகன் said...

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

குறையொன்றுமில்லை. said...

” வாழ்வில் யாரையும் சார்ந்து இருக்காதே. ஏன் எனில் உன் நிழல் கூட நீ வெளிச்சத்தில் இருக்கும் வரைதான் துணைக்கு வரும்.”

எனக்குப்பிடித்த வரிகள்.

வெளங்காதவன்™ said...

:)

அம்பலத்தார் said...

வணக்கம் பாஸ் நலமா?

அம்பலத்தார் said...

டா போட்டுக் கூப்பிடுவதும் டி போட்டுக்கூப்பிடுவதும் வேறு எதற்கு டாடி மம்மி விளையாட்டு விளையாடத்தான்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

நவரசங்களும் இன்னைக்கி
கலக்கல் அண்ணே

செங்கோவி said...

கலக்கல் ட்வீட்ஸ்.

இந்திரா said...

“டி“ “டா“ ஆராய்ச்சி சூப்பர்.

படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு.

முதலாவது இருக்குற படம் பார்க்கும்போது தான் கொஞ்சம் கண்ணு வலிக்குது.

சசிகுமார் said...

//டி-டியர் டா -டார்லிங் //

எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா

மகேந்திரன் said...

//நேர்மறை சிந்தனையாளனை எந்த விஷமும் கொன்று விட முடியாது, எதிர்மறை சிந்தனையாளனை எந்த மருந்தும் குணப்படுத்தி விட முடியாது//

என் மனதில் பதிந்த வரிகள்.
ஆழ ஊன்றி விதையிடும்
வாக்கியம்.

MANO நாஞ்சில் மனோ said...

கில்மா படம் ஏதும் போடாமல் தப்பிச்சிட்டான்டா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நேற்று ஞாயிறு ஆச்சே, அந்த சினிமா பார்க்க போகலையா???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா எல்லாம் ஜூப்பரா இருக்கு அண்ணே...

IlayaDhasan said...

முதல் ஐடெம் ரொம்ப நச் தல

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

சக்தி கல்வி மையம் said...

எல்லாமே வழக்கம் போல கலக்கல்..

Mohamed Faaique said...

///குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்///

அருமையான கருத்து..

'பரிவை' சே.குமார் said...

செந்தில் அண்ணா டுவிட்டினால் நல்லா இல்லாமலா இருக்கும். எல்லாம் சூப்பர்...
டா,டிக்கு இதுதான் அர்த்தமா?

Zero to Infinity said...

I am seeing CROSS in that foot wear...take care in future....silly peoples are waiting in blog world to create issues out of small things...

Zero to Infinity said...

appreciate your prompt correction

சித்தாரா மகேஷ். said...

//விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஆரம்ப நிலைக்காதலர்கள், ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் பேசினால் அது பக்குவம் பெற்ற காதல்//

ஏன் அது நிச்சயமா காதலாத்தான் இருக்குமா?நட்பு கூட அப்பிடி இருக்கலாம்தானே.

சித்தாரா மகேஷ். said...

அருமையான கருத்துக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

துபாய் ராஜா said...

பதிவின் தலைப்போடு பொருந்தும் எனது பழைய கவிதை ஒன்று.

காதல் அகராதி.... http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_18.html