போட்டுத் தள்ளியதா போலீஸ் சாதி?
பரமக்குடி... அன்று பரலோக குடியாக மாறிப்போனது. தங்களது தலைவனுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களே அஞ்சலிப் பொருள் ஆகிப்போனார்கள்!
அழுவதற்குத் திராணியும் சிந்துவதற்குக் கண்ணீரும் இல்லாமல், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் சவக்கிடங்கின் வாயிலையே பார்த்துக்கொண்டு இருந்த மனிதர்கள் மனதில் என்ன ஓடி இருக்கும் என்பதை நம்மால் உணர முடிந்தது. அது போலீஸ் மீதான கோபமாகத்தான் இருக்க முடியும்!
மெலிதாகப் பேசிக்கொண்டு இருந்த மதுரை கமிஷனர் கண்ணப்பன் செல்போனுக்கு விடை கொடுத்துவிட்டு, ஒரு முறை சுற்றிலும் பார்க்கிறார். 'சரவணன் இங்க வாங்க. முத்துக்குமார் போக வேண்டிய வண்டி எங்கே இருக்கு?' என்று கேட்க... அதிகாரி சரவணன் சில காவலர்களுடன் அவரை நோக்கி ஓடி வருகிறார்.
அடுத்த சில நிமிஷங் களில் அமரர் ஊர்தி ஒன்று வாசலுக்கு வருகிறது. பரமக்குடி கலவரத்தில் இறந்ததாக கடைசியாக அடையாளம் காணப்பட்டவர் இந்த முத்துக்குமார். இந்தப் பட்டியலில் மொத்தம் ஏழு பேர். இந்த எண்ணிக்கை கூடவும் செய்யலாம். ஆனால், கூட வேண்டாம் என்பதே நம்முடைய பிரார்த்தனை!
பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் கலவரம் என்பது 50 வயதைக் கடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1957-ம் ஆண்டின் ஒரு மதிய வேளையில் நடந்த சமாதானக் கூட்டத்துக்கு மறுநாள்தான் இன்று அஞ்சலி செலுத்த மக்கள் கூடி இருக்கும் இம்மானுவேல் சேகரன் கொல்லப் பட்டார். சாதியின் காரணமாகத் தாங்கள் அடக்கப்பட்ட, அவமரியா தைக்கு ஆளாக்கப்பட்ட விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு ஒருவர் கிடைத்துவிட்டார் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கத் தொடங்கிய மறுநாளே நடந்தது அந்தக் கொலை. அதற்குப் பிறகு நிற்கவில்லை அந்தக் கொலைகள்!
இம்மானுவேல் சேகரன் அதற்குப் பிறகுதான் தேவேந்திரர்களின் 'குலசாமி’யாகக் கருதப்பட்டார். செப்டம்பர் 11-ம் தேதி அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி வட்டாரத்தில் கூட ஆரம்பித்தார்கள். ஆண்டுகள் கூடக்கூட கூட்டமும் அதிகரித்தது.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் வரப்போகிறது என்றாலே ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொள்ளும். ஆண்டுதோறும் விழா நெருக்கத்தில் (கடந்த ஆண்டைத் தவிர) யாராவது ஒருவர் கொலையாவதும் வழக்கமாகிப் போனது. இந்த ஆண்டுகூட, நினைவு தினத்துக்கு இரு நாட்களுக்கு முன் பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டார்.
இம்மானுவேல் நினைவு தினத்துக்கு வரத் தீர்மானித்து இருந்த தமிழக மக்கள் முன்னேற் றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பள்ளப்பச்சேரி கிராமத்துக்கும் போக முடிவுஎடுத்தார். அது நடந்தால் கலவரம் ஏற்படும் என்று சொல்லித் தடுத்தது போலீஸ். ''பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போவது தப்பா?'' என்று திருப்பிக் கேட்டார் ஜான் பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார், அங்குள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். அதுவே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாகிப் போனது!
''போலீஸார்தான் முதலில் தாக்கினார்கள்'' என்று தலித்துகள் சொல்கிறார்கள். ''அவர்கள் கல்வீச்சு நடத்தியதால்தான் நாங்கள் தடியடி நடத்தினோம்'' என்கிறது போலீஸ். கடைசியில் பார்த்தால், போலீஸார் சிறு காயங்களுடன் கட்டுப் போட்டு மருத்துவமனையில் இருக்கிறார் கள். ஆனால், ஏழு தலித்துகள் பிணவறையில் கிடக்கிறார்கள். குண்டடிபட்டு இன்னும் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். லத்திகளாலும் கற்க ளாலும் மண்டை உடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை!
கூட்டம் கலைந்தபோது, கற்களும் செருப்புகளும் மட்டுமல்ல; மனிதர்களும் கொத்துக்கொத்தாக வீழ்ந்துகிடந்தார் கள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இரண்டு மணி நேரத்தில் சந்தி சிரித்தது!
போலீஸ் - தலித்துகளின் மோதல் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால், ஜான்பாண்டியனை அனுமதிக்காதது தவறு என்று கருணாநிதி அறிக்கை விடுகிறார். கருணாநிதி ஆட்சியில் நடந்தவற்றை ஜெயலலிதா விமர்சிக்கிறார். இந்த விதண்டாவாத அரசியலும் அதற்காக அப்பாவி மக்கள் பலியாவதும் என்று முடியும்?
பொதுமக்களின் பாதுகாவலர்களான போலீஸ் எப்போது பொறுப்புடன் நடந்துகொள்ளப்போகிறது? சாதிரீதியான ஏற்றத்தாழ்வை எதிர் சாதிகள் மட்டுமல்ல... அரசு அதிகாரிகள் சிலரே கடைப்பிடிப்பது என்று நிற்கும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலேயே இன்னும் எத்தனை அப்பாவிகளைப் பலி கொடுக்கப்போகிறோம்?\\
காவல் துறையின் சாதி வெறி!
'எவிடென்ஸ்’ கதிர்
''5 அடி நீளத்தில் பெரிய லத்திகளை வைத்து இருக்கிறது போலீஸ். ஒரு பெரிய யூரியா பை நிறைய கற்களைக் கொண்டுவந்தனர் போலீஸார். போலீஸ் எறிந்த கற்கள் எதுவும் சாலையில் கிடந்து பொறுக்கிய கல்லாக இல்லை. அத்தனையும் ரொம்ப ஃபிரெஷ்ஷாக இருந்தன. எனவே, இது போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்!
சாலை மறியல் சட்டப்படியானது அல்ல என்றால், முதலில் சாலை மறியல் செய்வோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். கேட்கவில்லை என்றால், மொத்தமாகக் கைதுசெய்து இருக்கலாம். தடியடி நடத்தப்பட்டாலும் அதன் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர, தாக்குவதாக இருக்கக் கூடாது.
அதன் பின் கண்ணீர்ப் புகை குண்டு வீசலாம். நிலைமை அதையும் மீறினால் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுடலாம். கூட்டம் அப்போதும் கலையவில்லை எனில், முட்டிக்குக் கீழே சுடலாம். ஆனால், இங்கே ஒரு பதினைந்து, இருபது பேர் வரை நெற்றி யிலும் மார்பிலும் தலையிலும் குண்டு வாங்கி இருக்கிறார்கள். இது போலீஸாரின் சாதிய வெறியையே காட்டுகிறது. அரசு சார்ந்த காவல் துறையே ஒரு சாதிய மனோபாவத்தில் நடத்திய வன்முறைதான் இந்தத் துப்பாக்கிச் சூடு.
பலர் சித்திரிப்பதுபோல இது சாதிய மோதல் இல்லை. இரண்டு சாதிகளா இங்கே மோதிக்கொண்டன? சாதியத் தாக்குதல் என்றும் சொல்லக் கூடாது. போலீஸார் சாதிய மனோபாவத்துடன் வெறிகொண்டு தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதல் இது!''
அரசியல் சதி!
கிருஷ்ணசாமி, சட்ட மன்ற உறுப்பினர்
''பொதுவாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற தலைவர்களுடைய அஞ்சலிக்குச் செல்லும்போது சிறு சிறு சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். எளிதாகவும் இலகுவாகவும் காவல் துறை இதைக் கையாண்டு இருக்க முடியும். ஆனால், காவல் துறை தவறான முறையில் கையாண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி, பரமக்குடியில் ஏழு பேர் உயிரைப் பறித்து இருக்கிறது.
இனிமேல்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக் கடிதம் தயார் செய்வார்கள். சென்னை அடையாரில் பணியில் இருக்கும் செந்தில்வேலன் என்கிற காவல் துறை அதிகாரி எதற்காக பரமக்குடிக்குப் பணிக்குச் சென்றார்? சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்ட செந்தில்வேலன், சந்தீப் பட்டீல் இருவரையும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அமர்வு உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். நடந்தவற்றை சாதிக் கலவரம் என்று கூறினார் முதல்வர். இது ஏதோ இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல்போல முதல்வர் சித்திரித்து தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அராஜகத்துக்கு சாதி வண்ணம் பூசுகிறார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஒரு சில அதிகாரிகளுக்கு இதில் விருப்பம் இல்லை. இப்படி ஒரு துப்பாக்கிச்சூட்டை நடத்தி, அந்தப் பகுதியையே கலவர பூமியாக மாற்றிவிட்டால், அரசு விழாவாக இதை அறிவிக்க முடியாது என்பதற்காக செய்யப்பட்ட சதியாக இது இருக்கலாமோ என்று தோன்றுகிறது!'
நன்றி - விகடன்
44 comments:
எனக்கு வடை
இட்லி
முதல் குத்து
என்று என் வலையில்
உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?
tamilmanam first vote
வியாழன் விடியும் போதே வேதனையையும் கொண்டு வருகிறதே. இந்த மாதிரி நேரங்களில் மட்டும் காவல் துறையினருக்கு எங்கிருந்து தான் வருமோ இப்படி ஒரு வேகம்
விசாரணை கமிஷன் முடிகிற வரையாவது இந்த பத்திரிகைகள் அடக்கி வாசிக்கலாம். ஏன்னா கலவரம் இன்னும் முழுமையா முடியாத பட்சத்தில் இவர்களின் கட்டுரைகள் ஏதாவது ஒரு தரப்பு கோபத்தை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.. இவர்களுக்கு உண்மை சொல்வது முக்கியமில்லை.. கலவர பூமியுளும் காசு பார்க்கணும்! :((
சார் எங்க ஏரியாவிலும் இதனால கலவரம் ...
Right action by police department
நெஞ்சத்தை கனக்க வைத்த செய்தி.
துப்பகிச்சுடு நடத்தும் அளவுக்கு ஏன் கலவரம் நடந்தது என்பது யாருக்கோ வெளிச்சம்
இப்பிடியான கலவரம் வருத்தத்துக்கு உரியது .ஓட்டு போட்டாச்சு
தப்பு யார் மீது என்று விசாரணை நடந்துகொண்டிருக்கும் பொது விகடனுக்கு இந்த கட்டுரை தேவைதானா?
ஏன் இந்த துப்பாக்கி சூடு கலவரம்.வருத்ததை தான் அளிக்கிறது
கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க
4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!
இந்த பரமக்குடி கலவரத்தினால் தான் ., கூடங்குளத்தில் நம் சகோதர்கள் 127 பேர் உண்ணாவிரதம் இருப்பது வெளியே சரிவர தெரியவில்லை..
குறிப்பிட்ட ஜாதியின் "ஜெயந்தி" விழாவினில்! போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வாகனத்தில் 7+1 செல்ல வேண்டும்... 14 பேர் கத்தி கூச்சல் போட்டு கொண்டு தொங்கிக்கொண்டு தாறுமாறாக மது போதையில் செல்கின்றார்கள், காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது
அப்பாவி வேன் ஓட்டுனர் கிட்ட ஒரு ஆள் அதிகமா இருந்தா கூட 300௦௦ ரூபாய் புடுங்கி வயத்துல அடிப்பாங்க, இப்ப மட்டும் என்ன கடமை உணர்ச்சி....!
നിന്നെ വെടി വക്കുംമ്പോളറിയാ.......
(உங்களை சுட்டா தெரியும்.....)
all votted
நண்பரே டிவியில் இறந்தவரின் எண்ணிக்கை பதிமூன்று என்று சொன்னார்களே .
கவலை தரும் செய்தி நண்பரே
கரெக்ட் தான்... நேரில் நடந்ததை கண்ட ஆமினாவின் குட்டி சுவர்க்கம் வலை பூவிலும் இது பற்றி அருமையாக எழுதியிருக்கிறார்..
அருமையான பகிர்வு. ஜாதிக் கலவரங்கள் எங்கு நடந்தாலும் அதனால் மரணங்கள் நிகழ்ந்ததைக் கேள்விப்படும் போதெல்லம் மனம் கனத்துப் போகும் எனக்கு. மதங்கள் ஒழிந்து மனிதம் தலை தூக்கும் நாள் எப்போது வருமோ?
ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.
என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே...குறிப்பாக..செங்கோவி.நிரூபன்.சி.பி.செந்தில்குமார்.பன்னிக்குட்டி ராம்சாமி.காட்டான்.தமிழ்வாசி போன்றவங்கள்..வந்து உங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்...இவங்க பெயர் மட்டும் தெரிஞ்சதால சொன்னன்...எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.
Good post! why write as idly vadai it confuse us. Comment box meant for interaction!!!!
இதழ் விற்பனைக்காக கண்டதை எழுதுவதே இப்பொழுது விகடனின் தலையாய கடமையாக உள்ளது....
முன்பு பரமக்குடி எனறதுமே நினைவில் வருவது உலகநாயகன்தான் ஆனால் இன்று????
intha pathivuku idli, vadai comment thevaiya raja?
ஒரு புது மீட்பர் வந்து அன்புலகத்தை ஆக்க மாட்டாரா?.அல்லது மக்கள் மனதை அன்பின் பிறப்படமாக்க வேண்டும்..தில்லு முல்லு வாழ்வு மாற்வேண்டும்.ஓம் சாந்தி!
வேதா. இலங்காதிலகம்.
என்ன உலகம் அண்ணே!!
கேட்டகவே அருவருப்பா இருக்கு, இந்த செய்தி !!
என்று தீரும் இந்த வெறி??
என்னமோ நடக்குது உலகத்தில......
എടാ സിപി, നിന്റെ പതിവിനെ മലൈയാലത്തില് കമെണ്ട്സ് വന്നു, എന്താ നീ കേരലാവിലും വല്ലിയ ആളാണോ ഹി ഹി...
[[டேய் சிபி, உன் பதிவுக்கு மலையாளத்துல கமெண்ட்ஸ் வந்துருக்கு, என்ன நீ கேரளாவிலும் பெரியா ஆளா]]
ஹி ஹி நாங்களும் மலையாளம் எழுதுவோம்ல....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
எனக்கு வடை
September 15, 2011 8:36 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
இட்லி
September 15, 2011 8:36 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
முதல் குத்து//
என்னய்யா இது, எங்கே வடை, போண்டா கேக்குறதுன்னு தெரியாதாக்கும்...!!!
எலேய் அண்ணா, பரமக்குடி கலவரத்துல ஏதோ சரியான உள்குத்து இருப்பதாக தெரியுதுலேய்...!!!
கூடங்குளம் போராட்டம் பற்றி எப்பம்லேய் எழுதப்போறே...???
கொடுமை கொடுமை கொடுமை
மனுஷ பயலுக மட்டும் தான் தன்னோட இனத்தை தானே அழிப்பான்.
விகடனின் கட்டுரையில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், அதிகப்படியாக அவசரமே தெரிகின்றது... என்னை பொறுத்தவரை தப்பு ரெண்டு பக்கமும் இருக்கு.. ^_^
வருத்தமாகத்தான் இருக்கிறது. 21ம் நூற்றாண்டிலும்... இப்படியா?
மிகவும் வேதனையான சம்பவம்.
இம்முறையும் நீதி தேவதை கண்ணைக்கட்டிக் கொண்டுதான் இருப்பாள்."தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"--சொல்லவே நா கூசுது.
:-(
ஜாதி வெறி பிடிச்சு அலையும் நாதாரிகள் வெறிபிடிச்சு கலவரம் பண்றானுங்க,..மாமப்பயல் விகடன் தே..பயல் இதில குளிர் காயிறான்...அதை ஒரு செய்தின்னு போடுறீங்க...விகடன் என்ற பலான பத்திர்க்கையை விரட்டி அடியுங்கள்...
பெருசு பண்ண சதின்னு கூட சொல்றாய்ங்க , உண்மையா,பொய்யா ?
டி ராஜேந்திரா கொக்கா
ஜாதிகளற்ற உலகம் வேண்டும் என்பதனை மீண்டுமொரு தரம் பரமக்குடிச் சம்பவம் நினைவுபடுத்தியிருக்கிறது.
இம்மானுவேல்சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்கிறது.
தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது
- நல்லையா தயாபரன்
nenjai urukum sambavam. iththunai pinangalai paartha pinnarum, saathi veriyarkalukku ithu keali koothakave irukirathu!! vantha vimachanangalaithan solkiren!! ooruku ulaitha ulavan seththu madinthal, avan ulaipil unnum kalavanikalukku ethanai aanantham!! vaalka thamilar otrumai,..
Post a Comment