சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...
நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!
செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்...
சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்துகொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.
சி.பி - அவங்க ஆட்சில இருந்தப்ப என்னமா ஆட்டம் போட்டிருப்பாங்க?எத்தனை பேரை மிரட்டி இருப்பாங்க? உலகம் ஒரு வட்டம்..
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க.
சி.பி - முதல் டைம் கேட்டப்பவே ஒழுங்கா பதில்சொல்லி இருந்தா அவங்க ஏன் திரும்பத் திரும்பக் கேட்கப்போறாங்க?
'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.
சி.பி - என்னது ? பார்த்தது கூட இல்லையா? அடங்கோ!!!கேட்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுது, சங்கவி கொண்டைல சன் டி வி தெரியுதுன்னு சொல்வீங்க போல!!
தங்களை போலீஸார் தாக்கியதாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!
சக்சேனா, அய்யப்பனின் வழக்கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டுசென்றுள்ளார். அவரை சந்தித்தோம்.
''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.
சி.பி - அத்தனை வழக்கு போடற அளவுக்கு ஏம்ப்பா அட்டூழியம் பண்றீங்க?
இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரையும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.
சி.பி - அதானே? பகல் பூரா பின்னி பெடல் எடுத்தா நைட் தூக்கம் தன்னால வந்துடும், அதுக்கு அனுமதி கொடுத்தாத்தானே அடித்த நாள் மறுபடியும் கும்ம முடியும்?
கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது.
சி.பி - வால்டர் வெற்றிவேலுக்கே வார்னிங்க் மெசேஜா?ன்னு உங்களை உள்ளே தள்ளி கும்மி எடுக்கலையா? அடடா!! வட போச்சே!!!!
'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.
சி.பி - போலீஸ் லாக்கப் போனா கும்மத்தான் செய்வாங்க... ஃபிகரை பக்கத்துல உக்கார வெச்சு கொஞ்ச சொல்வாங்களா?
அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.
சி.பி - யோவ்.. அவங்க முறுக்கையும் பிடிக்கலை, ஜிலேபியும் பிடிக்கலை .. அண்ணன் தப்பி ஓடக்கூடாதுன்னு கெட்டியா பிடிச்சிருப்பாங்க..
'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார்.
வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.
இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.
எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடந்துகொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சி.பி - ஹா ஹா, போலீஸ் எந்தக்காலத்துல சட்டப்படி நடந்திருக்கு?
எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.
''அப்படியானால் அய்யப்பனின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.
பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?
சி.பி - சன் டி வி நடக்காது, படுத்துக்கும்னு நினைக்கறேன்..
'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதியாரின் ஆவேசக் கவிதைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’
சி.பி - வறுமையும், புலமையும் உடன் பிறந்தவை.. நம் நாட்டில் எழுத்தாளர்களும் சரி, கவிஞர்களும் சரி உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கிடைக்கப்பெறாதவர்கள் ( விதி விலக்குகள் இருக்கலாம்..)
2. சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா?
சி.பி - ஜால்ராக்கள் நம்மை கொல்லப்போகும் காலராக்கள்
3. உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...?
உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?
சி.பி - அதிகாரம் ஆட்சியில் இருக்கும் , அன்பு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்..
4. தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா?
திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும்.
எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!
சி.பி - உணர்ச்சி வசப்படுவது கலைஞனின் உடன் பிறந்தது..
5. இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?
ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!
இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!
சி.பி - பொது மக்கள் அப்பாவிகள்.. சட்டமும், அதிகாரத்தில் இருக்கும் சில நல்லவர்களும் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.. இந்தியாவில் ஊழல் வளர காங்கிரஸ் மிக முக்கிய காரணம்..
6. கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து?
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்!
சி.பி - தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
7. சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே?
மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!
சி.பி - அதானே? அவரோட கூட்டாளிகளைப்போய் பார்க்கறதுல என்ன தப்பு? பார்க்காம விட்டா அவன் காட்டி கொடுத்துடுவானே?
8. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா?
இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!
சி.பி - அவங்க 2 பேரையும் விட ஓ. பன்னீர் செல்வம் தான். அண்ணன் என்னமா பம்பறார்? எல்லாம் எதிர்கால அரசியலை குறி வைத்துத்தான், ஆனா அண்ணன் நினைப்பது, சசிகலா இருக்கும் வரை நடக்காது..
9. உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா?
'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!
சி.பி - எந்தப்புத்தாண்டை கொண்டாடினாலும் ஏழைகளின் நிலை மாறப்போவதில்லை!!
10. தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?
அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!
சி.பி - காலையில் வெறும் வயிற்றில் மரணிக்கும்போது அவஸ்தைகள் கம்மி என்று உளவியலும், மருத்துவ இயலும் சொல்கிறது..
11. முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..?
மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியா
சி.பி - சீமான் சீன் போடறார்னு எனக்குத்தோணுது..
THANX - JU VI
37 comments:
ரொம்பவே கலாய்த்து இருக்கிஈர்கள் .சக்சேனா வின் நிலையை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது
என்று என் வலையில்
உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
ஆஜர் .
அண்ணே... ஓவரா கலாயிக்காதிங்க
காமெடி கும்மி கலக்கல் கும்மி
காமெடி கும்மி கலக்கல் கும்மி
வழக்கம் போல கலக்கல் கும்மி
உங்களோட காமெடி கமெண்ட்கள் பிரமாதமா இருக்கு.
ஆடிய ஆட்டமென்ன...நியூட்டன் விதி என்ன சொல்லுதுன்னா!
கலக்கல் காக்டைல் உங்க கமெண்ட்ஸ்
ஆமா உங்களுக்கு சன் டிவி பிடிக்குமா அண்ணா!!??
//சி.பி - பொது மக்கள் அப்பாவிகள்.. சட்டமும், அதிகாரத்தில் இருக்கும் சில நல்லவர்களும் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.. இந்தியாவில் ஊழல் வளர காங்கிரஸ் மிக முக்கிய காரணம்..
மேலே இருக்குறது கொஞ்சம் நெருடல்.. இங்கே யாரையும் தனியாக குறிப்பிட முடியாது..
நாம சரியில்ல அண்ணே நமக்கு பிடிச்சவரு / நம்ம ஜாதிகாரரு / நம்ம சொந்தக்காரரு / தேர்தல்-ல நிக்கிறாருன்னு ஓட்டு போடுறோமே, அவரு நல்லவரா எல்லோருக்கும் நல்லது பண்ணுவாரா இல்லை நாலு பேருக்கு மட்டுமே நல்லது பண்ணுவாரான்னு இது வரைக்கும் யோசிச்சு இருப்போமா?
அங்கே தானே எல்லாம் ஆரம்பிக்குது
மாப்ள தமிழ்மணம் ஏழு...வழக்கம் போல அசத்தல் கமெண்ட்ஸ்...
சி.பி!கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுவே பெரும் தண்டனை.குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும் அதற்கும் மேல் மனிதனை போலிஸ் துன்புறுத்துவதை கண்டனம் செய்கிறேன்.
ஒரு காலத்தில் காக்கிச் சட்டையென்றால் கௌரவம் என்ற நிலை போய் இப்பொழுது மனித உரிமை மீறல்காரர்களாய் போலிஸ் மாறுவதால் காவலதுறையில் பணிக்கு சேருவது ஒன்றும் பெருமையான விசயமில்லை.
தி.மு.க மாற்றி அ.தி.மு.க ஆட்சியென்று வன்முறைக் கலாச்சாரம் வளர்வதை தவிர்ப்போம்.
//சி.பி - அவங்க ஆட்சில இருந்தப்ப என்னமா ஆட்டம் போட்டிருப்பாங்க?எத்தனை பேரை மிரட்டி இருப்பாங்க? உலகம் ஒரு வட்டம்..//
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அவர்கள் மறந்துட்டாங்க, அதன் விளைவு தான் இப்போ அனுபவிக்கிறாங்க.
உங்க கமெண்ட்ஸ் சூப்பர்!
அப்போ கலாநிதி கைது கன்பார்ம்....!!!
வறுமையின் கலை, அது அப்போ இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாயிங்க, நம்ம வைரமுத்துவுக்கே சுவிஸ்'ல பணம் இருக்காமே....!!!!
டேய் அண்ணா, நீயும் ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சிருடா..
விக்கி உனக்கு மைனஸ் ஓட்டு போட சொல்றான் போடவா...?
வணக்கம் பாஸ்,,,
செமையாத் தான் கலாய்ச்சிருக்கிறீங்க.
உலகம் உருண்டைன்னு சொல்லுவாங்க சார்! அதுதான் நடக்குது!
கலைஞர் பார்முலாவா?
ஹீ ஹீ, செமையா தாக்குறீங்க பாஸ், உங்க பேர பேசாம
கமெண்ட்ஸ் கந்தசாமி என்று மாத்திரலாம் போல
ஹீ ஹீ
என்னா கமேட்ஸ்! கலக்கல் தம்பி!
இந்த ஐயப்பன் போன்ற ரவடி எதனை பேரை இது போல அடித்திருப்பானோ? இந்த வக்காலத்து செய்தி மூலம் ஜூ.வீ மீண்டும் நான் கேடி சகோதரர்களின் பத்திரிக்கை தான் என்று தன்னை நிருப்பித்து கொண்டது.
என்னய்யா சொல்ல வரீங்க? இந்த மாதிரி போலீஸ் கஸ்டடி அராஜகத்தை நியாயப்படுத்திரீங்களா? இந்த மேட்டர் எந்த பேப்பரிலும் வரல. நடுநிலைமையா எழுதுங்க.பதில் போடுங்க.
கலக்கல் கும்மி.
கமெண்ட்ஸ் கலக்கல்...
ஓ பண்ணீர் செல்வத்தை ஓவராக கடாய்க்கின்றீர்கள் கலக்கல் பதிவு அது எப்படி சங்கவி கொண்டையில் சன் டிவீ! குசும்புதான்!
எப்படி இருந்த நான் , இப்படி ஆயிட்டேன் , ஒரு நல்ல உதாரணம் இந்த சாக்ஸ்
ரஜினி , கமல் இணையும் புதிய படம்
மதுரை தினகரன் அலுவலகத்தை தீக்கிரையாக்கிய, மூன்று அப்பாவிகளை அழித்தொழித்த அயோக்கியர்களை தண்டித்தே தீருவோம் என முழக்கமிட்டார்கள் இந்த கேடி பிரதர்ஸ். ஆனால் நடந்ததென்ன? யாருக்காக உயிரை விட்டார்களோ எந்த அப்பாவிகளுக்கு நியாயம் பெற்றே தீருவோம் என முழங்கினார்களோ அவர்கள் அதே கொலைகார கொள்ளைக்கார கும்பலுடன் சேர்ந்து கும்மி அடித்தார்கள். இதெல்லாம் தெரிந்தும் ஐயப்பன் எதற்க்காக அந்த நன்றி கெட்ட கேடிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் ?
ஈழத்தில் தமிழன் குலை குலையாக கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போதெல்லாம், ஒரு செகண்டு கூட ஒளிபரப்பாத இந்த கேடிகள், தமிழனின் ரத்தத்தை உறுஞ்சி குடித்துக்கொண்டு , ஐயப்பனின் குண்டி வீங்கி தொங்கியதை(!!!?????) ஐந்து நிமிடங்களுக்கு மேல் காட்டி ரீல் ஓட்டுகிறார்கள் என்றால் தமிழனின் ஏமாளித்தனத்தை என்னவென்று சொல்லுவது...!!!????
thinai vithaithavan thinai aruppan
vinai vithaithavan ethai aruppan
enbathukku ithu oru utharanam.
nanru
Post a Comment