பொதுவா நல்ல படத்துக்கு அவார்டு குடுத்துப்பார்த்திருப்பீங்க... ஃபிலிம் ஃபேர் அவார்டு, நேஷனல் அவார்டு, ஆஸ்கார் அவார்டுன்னு பல அவார்டுகள்.. ஆனா ஒரு சினிமா விமர்சனத்துக்கு ஜனாதிபதி அவார்டு குடுக்கறதைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்களா? டிஸ்கில டீட்டெயில் சொல்றேன்.. இப்போ படத்துக்கு விமர்சனம்.
ரீமா சென் நடிச்ச கில்மாப்படம்கறதால செம கல்லா கட்டலாம்னு நினைச்ச படத்தோட புரொடியூசர் ஆசைல மண்ணள்ளிப்போடற மாதிரி ரீமா சென் சமீபத்துல ஒரு பேட்டி குடுத்தாங்க.. அதுல இந்தப்படம் 12 வருசத்துக்கு முன்னே வந்த படம். ஆனா ஏதோ சீன் படம் கணக்கா போஸ்டர்ல என்னை அவமானப்படுத்திட்டாங்க.. அப்டினு ஒரே அழுகாச்சி.. இதுலயே மக்களுக்கு பாதி கிக் போயிடுச்சு..
சரி.. அதை எல்லாம் விடுங்க.. படத்தோட கதை என்ன?
ஒரு ஆசிரமத்துல கமலி கமலின்னு ஒரு ஃபிகரு.. ( நோ 2 பேர், ஒன்லி ஒன் )பார்க்க பவுனு பவுனுதான் ரோகினி மாதிரி ஆனா வைதேகி காத்திருந்தாள் ரேவதி கெட்டப்ல...அப்புறம் தேவதாசியா நம்ம (!!!) ரீமா சென்..
தகர டப்பாவுக்கு பவுடர் அடிச்ச மாதிரியும் , சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே புகழ் பாபா ராம் தேவுக்கு ஷேவிங்க் செஞ்ச மாதிரியும் ஒருத்தர் வர்றார், அவர் தான் ஹீரோவாம். அடங்கோ.....
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத டப்பா முகத்தை வெச்சிருக்கற அந்த கேவலமான ஆளை தேவதைகள் மாதிரி இருக்கற இந்த 2 ஃபிகருங்களும் லவ்விங்...
இரண்டு பேரையும் ஏமாத்திட்டு ஹீரோ ( நல்ல ஹீரோக்கள் மன்னிக்க) டபுள் கேம் ஆடறாரு.. என்ன நடக்குதுங்கறது தான் மீதிக்கதை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/.....
படத்தில் ஆங்காங்கே நடந்த காமெடி கலாட்டாக்கள்...
1. படத்துல அடிக்கடி ( அநேகமா 8 இடங்கள்ல) ரீமா சென் தோழிகளிடம் , “ பெட்ரூமை ரெடி பண்ணு என்கிறார்.. ( அதுல ரெடி பண்ண என்ன இருக்கு?) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....( ஆனா கடைசி வரை பெட்ரூமையே காட்டலை... )
2. அந்த தகர டப்பா தலை ஹீரோவுக்கு ஒரு தடவை சாதா காய்ச்சல் வந்துடுது, அவரை பார்க்க வரும் டாக்டரிடம் ரீமா சென் “ டாக்டர்.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. அவரை காப்பாத்திருங்க” அப்டிங்கறாங்க.. ஏம்ப்பா டைரக்டர். உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?
3. நான் தெரியாம ( சீன் எதுவும் தெரியாம) தான் கேட்கறேன், இந்தப்படத்தை 8 வயசுப்பையன் கூட பார்க்கலாமே? எதுக்கு சென்சார் U/A சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க? பணம் விளையாடி இருக்குமோ?
4. படத்துல 4 இடங்கள்ல ஒரிஜினல் பாட்டை கட் பண்ணிட்டு ஃபேம்ஸான தமிழ் ஹிட் சாங்கை சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி போட்டு கொடுமை பண்ணி இருக்காங்க.. 1. அந்தி மழை பொழிகிறது 2. மார்கழித்திங்கள் அல்லவா? 3. பாண்டியா ஆட்டமும் ஆட.. 4. உஅமுனை ஆற்றிலே...
அந்தப்பாடல்கள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் கொதிப்படைந்து சீட்டை கிழிக்கறாங்க..
கேவலமான இந்தப்படத்துல சுமாரான வசனங்கள்
1. காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத அந்த வயசுல நான் என்னை தொலைச்சுட்டேன்... ( ஏம்மா நீ தொலைச்சதுக்கு ஏன் எங்களை பழி வாங்கறே? )
2. ஒருத்தர் மனசு எப்படி?ங்கறது அவரது முகத்துல தெரிஞ்சிடும்.. ( யோவ் டயலாக் ரைட்டரே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பழமொழியோட உல்டா தானே இது? அடிங்கொய்யால.. )
3.மனம் பக்குவம் அடைஞ்சுட்டா உயிரும் பக்குவம் அடைஞ்சுடும்,அதுக்குப்பிறகு எதுக்கும் பயப்படத்தேவை இல்லை.. ( மகா ஜனங்களே!.. ஏதாவது புரியுதா? ரைட்டர் பின் நவீனத்துவம்னு நினைச்சு எழுதி இருப்பாரோ? )
4. எல்லார் கிட்டேயும் உடம்பை கொடுத்தேன்,உன்கிட்டே மட்டும் தானே மனசை கொடுத்தேன்?உனக்கு என் உடம்பு தான் வேணும்னா சொல்லு, காசை உன் கிட்டே வாங்கிட்டு அதையும் தந்துடறேன், காட்டிடறேன்.. ( அப்பவும் காசுல குறியாவே இருக்கீங்களே?)
5. உடம்பை வித்து காசாக்கறவ கிட்டே கற்பை பற்றி பேசறது தப்பு.. ( டேய் நாயே, காசு குடுத்து உடம்பை வாங்குனியே உனக்கு மட்டும் கற்பு இருக்காடா? )
6. ஆம்பளை மட்டும் பல பெண்கள்ட்ட போலாம்? அதை பெருமையா சொல்லிக்குவீங்க. பெண்கள் அப்படி போனா தேவதாசியா?
7. ஆம்பளைங்க சுகத்தை மட்டும் அனுபவிப்பீங்க? சொந்தம் ஆக்கிக்க தயக்கம்?
8. டியர்.. அதெப்பிடி? ஆசை வந்தாலும் உனக்கு அதிகமாவே வருது? கோபம் வந்தாலும் உனக்கு அதிகமாவே வருது?
9. சுகம் 5 நிமிஷம் தான் ,அதுக்குப்பிறகு திரும்பிக்கூட பார்க்க மாட்டீங்களே?
10. நீ ஒரு தேவதை.
நிஜமாவா?
ம்....
எல்லாரும் இப்படி பொய்யா வர்ணிச்சுத்தான் வாழ்க்கைல நான் ஏமாந்தேன்..
11. பட்டுப்போன இந்த ரோஜாவை பட்டு ரோஜா ஆக்கிட்டீங்களே? ( இந்த சீன்ல பட்டு வண்ண ரோஜாவாம், பார்த்த கண்ணு மூடாதாம் பாட்டு ஒலிக்கிது கொடுமை.. )
12. ஆம்பளைங்களை நம்ப முடியாது..
13. நேசிக்கிறவங்க கிட்டே மட்டும் தான் அன்பை தர முடியும்?
14. டைரில என்ன எழுதிட்டு இருக்கீங்க?
பர்சனல்..
டோண்ட் ப்ளே...
இது ஒண்ணும் பெட்ரூம் இல்ல..
அப்போ தனியா படுத்துக்குங்க..
இவளுக்கு வாழ்க்கைல எல்லாமே பெட்ரூம் தான் போல..
15. எங்கே போய்ட்டு வர்றீங்க?
உனக்குத்தான் பூ வாங்க போனேன்..
எங்கே பூ?
நிறைய இடம் தேடியும் கிடைக்கலை..
16. என் கிட்ட இல்லாதது அவ கிட்டே என்ன இருக்கு?
தெரில..
படம் மொத்தமே 90 நிமிஷம் தான்...
செம கடி .. படம் சாரி.. நமக்கெல்லாம் ஒரு பாடம்..
ஒரு சீன் கூட கிடையாது..
ஈரோடு தேவி அபிராமில இந்தப்படம் பார்த்தேன்..
நான் பார்த்ததிலேயே மிக மோசமான குப்பைப்படம் இதுதான்...
டிஸ்கி - 1. போர்க்காலத்துல, தீ விபத்துல, வெள்ளம் வரும் டைம்ல ஒரு ஊரை காப்பாத்துனா அந்த ஆளுக்கு ஜனாதிபதி அவார்டு தர்றாங்க.. என் சாதா போஸ்ட் 200 பேர் ப்[அடிச்சா, சினிமா விமர்சனம் 2000 பேர் படிக்கறாங்க. அப்போ இந்தப்பட விமர்சனமும் 2000 பேரால் படிக்கப்படும்.. அவங்க யாரும் போக மாட்டாங்க.. அவங்களை காப்பாத்தி இருக்கேன்.. இதுக்காக பாராட்டி ஜனாதிபதி அவார்டு கொடுப்பார்னு எதிர்பார்க்கறேன்.. ஹி ஹி
டிஸ்கி - 2 - இங்கே போடப்பட்டிருக்கும் ஸ்டில்ஸ் சும்மா உங்களை ஆசுவாசப்படுத்த.. படத்துல அதெல்லாம் கிடையாது..
33 comments:
good..
மாப்ள ரைட்டு..
தல, ஒரு படம் வுடறதில்லே போலிருக்கு! :-))
பல்பு வாங்கினாலும், பொறுமையா விமர்சனம் எழுதறது எப்புடீன்னு ஒரு இடுகை போட்டு, தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ஒரு தொண்டு ஆற்றுங்களேன். புண்ணியமாப் போவட்டும்!
பாஸ் நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் போவேனா ....
கேவலமான படத்தை பார்த்துட்டு வந்து கேவலமா பதிவு போடுறியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி...
நான் அப்பவே சொன்னேன் நீ முதல்ல இந்த படத்தைதான் போயி பார்ப்பேன்னு சரிதானே...? கர்மம் கர்மம்...
அந்த படங்கள் ஹி ஹி...
ஹா..ஹா...நாம எதிர்பார்ப்பது இந்தப் படத்தில் இருக்காதுன்னு எதிர்பார்த்தேன்..சரியாப் போச்சு!
எங்க மனசை புரிஞ்சுகிட்டு படத்தை போட்டு ஒரு விமர்சனம் நல்லா இருக்கு அண்ணே!!
ரைட்டு .
ஹீ ஹீ, பாஸுக்கு ஆப்பா???? அவ்வவ்
டிஸ்கி இரண்டை படிச்ச எவனும் படம் பார்க்க போகானே )))
ஒண்ணும் இல்லாத படத்துக்கா இவ்வளவு அலட்டல்.
உந்த தயாரிப்பாளர் மட்டும் என் கையில் கிடைச்சான் சங்குதான், ஆமா சொல்லீட்டேன்....
விமர்சனம் - அட்டகாசம்!
ரெண்டாயிரம் பேரைக் காப்பாற்றிய எங்கள் அஞ்சா நெஞ்சன், செந்தில் சார், வாழ்க!
////ஆம்பளை மட்டும் பல பெண்கள்ட்ட போலாம்? அதை பெருமையா சொல்லிக்குவீங்க. பெண்கள் அப்படி போனா தேவதாசியா? ////
ஆம்பளை எத்தனை பொண்ணுக்கிட்ட போனாலும் ஆம்பளைக்கு இதுவரை குழந்தை பொறக்க வில்லையே...
ஆனா பொம்பளை ஒரு ஆம்பளை கிட்ட படுத்தாலும் குழந்தை பொறந்துடுதே...
ஆம்பளை பல பெண்கள்ட்ட போனா தேவன்(or) தேவ தாசன் ???
பெண்கள் அப்படி போனா தேவதாசி.....
என் லாஜிக் கரெக்ட் தானே :)
அப்போ திருட்டு சீடில கூட பாக்க லாயக்கு இல்லையா ..ஹய்யோ..ஹய்யோ :-)))
Pooja video link verungurravanga ellam mail id sollunga
ரிமாவுக்கும் ஒரு கூட்டமே இருக்கா
என்ன கொடுமை சார் இது வடை போச்சே
தமிழில் SEO தகவல்கள்
செங்கோவி said...
ஹா..ஹா...நாம எதிர்பார்ப்பது இந்தப் படத்தில் இருக்காதுன்னு எதிர்பார்த்தேன்..சரியாப் போச்சு!
இவருக்கு சந்தோசமா துக்கமா?
அப்போ படம் படு மொக்கைன்னு சொல்லுங்க
எலேய் எனக்கென்னமோ இந்த பழக்கம் உமக்கு சின்ன வயசுல இருந்து ஒட்டுவா ரொட்டி கணக்கா இருக்கு போல ஹிஹி!
ஒரு ஜாலி விமர்சனம்
நன்று....
சி பி அண்ணே இது கூட பரவால நம்ப லத்திகா புகழ் டாக்டர்.சீனிவாசனோட அடுத்த படம் ஆரம்பிச்சுட்டாங்க,
சென்னை சுவர்களில் விளம்பரம் கொடுத்து கொல்றாங்க,
படம் பேரு ஆனந்த தொல்லை.
சிபி சார் நீங்க கொடுத்த காசுக்கு ரெண்டு சீன் பார்க்கலாம்ன்னு போனா இப்படி அநியாயமா ஏமாத்திட்டானுங்களே அவனுங்கள.... அதான 2000 பேரு மூலமா ஆப்படிச்சாச்சே விட்டுத்தள்ளுங்க..
அம்புட்டு மொக்கையா .சரி சரி 2000 பேரு தப்பிப்பாங்க
அப்போ படம் பார்க்க வேண்டாமா சார்?
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
[email protected]
இந்த மாதிரி படங்கள் வந்தால்தான் நல்ல படங்களின் அருமை தெரியும்.
நல்ல பதிவு.
"பாபா ராம்தேவுக்கு சேவிங்க் செஞ்சமாதிரி"
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி
@சி.கிருபா கரன்
அட்ரா சக்கை...அட்ரா சக்கை...அட்ரா சக்கை...அட்ரா சக்கை...
eppo Padam Parka poringa sir neenga kupita nagalum varvomlaaaaaa
Post a Comment