கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
1. விநாயகருக்கு கோயில் கட்டும் விருப்பத்துடன், அதற்கான வாஸ்து பூஜை செய்து திருப்பணி துவங்கும் நாளில், விநாயகர் விக்கிரகம் திருடுபோய் விட்டது. எங்குதேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பணிகளைத் தொடரலாமா? கோயிலில் புதிதாக ஒரு விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யலாமா?
திருப்பணியைத் தொடருங்கள். புது விநாயகர் விக்கிரகத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்யுங்கள். கோயிலில் குடியிருத்த இறையுருவம் வேண்டும். கைக்கு எட்டியது நழுவினால், மற்றொன்றை பெற்றுச் செயல்படுவது சிறப்பு. வருங்காலச் சந்ததியின ருக்கு வழிகாட்டும் அறத்தை, இறையுருவத்தின் இழப்பைக் காரணம் காட்டி தவறவிட்டுவிடக் கூடாது.
கோயில்கள் நடைமுறை என்பது, பொது அறத்தைப் போதிக்கும் மௌன குரு; ஒருவனை, பண்பட்ட குடிமகனாக வார்த்தெடுக்கும் திறன் கோயில்களுக்கு உண்டு. எனவே, இடையூறை எதிர்த்துச் செயல்படுங்கள். வெற்றி உண்டு.
2. நானும் என் கணவரும் (வயது 55) அம்மன் விரதங்களில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து வழிபட விரும்புகிறோம். எந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்?
அலுவல்களை மறந்து அம்பாளை நாடும் எண்ணம் மனதில் முளைக்கும் வேளை, வழிபாட்டுக்கு உகந்தது. அம்பாளின் பெருமைகளை விளக்கும் புராணக் கதைகள், உலகை துயரத்தில் இருந்து விடுவிப்பதற்காக அவள் செயல்பட்ட நாள்- நேரம் ஆகியன எல்லாம், மனதில் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் அம்பாளை நினைவுகூரப் பயன்படுபவை.
அம்பாளின் பெருமை சொல்லில் அடங்காது. உமாமகேச்வர விரதம், கிருத்திகா சோமவாரம், நவராத்திரி போன்ற விழாக்கள், அம்பாளின் நினைவைப் பசுமையாக வைத்துக்கொள்ள உதவும். அலைபாயும் மனதை அடக்கிவைக்கவும் பயன்படும். தவிர, நித்யமாக அவளை வழிபடும் நடைமுறையை ஏற்படுத்திக் கொண்டால், மனம் அசையாமல் அவளிடம் நின்று விடும். அது நம்மை நல்வழிப்படுத்தும்.
பண்டைய காலத்தில் பஞ்சாயதன பூஜையை நித்யமாக ஏற்று வந்தோம். சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடுவது பஞ்சாயதன பூஜை. பெருமாளிடம் மனம் லயித்தவர்கள், சாளக்கிராமத்தை நடுநாயகமாக வைத்து, மற்ற நான்கு தெய்வங்களை பரிவார தேவதையாக அமைத்து வழிபடுவார்கள். அதேபோல், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மற்ற தெய்வங்களையும் நடுநாயகமாக வைத்து வழிபடலாம். புராணங்கள், கதைகள், வரலாறுகள், கோயில் நடைமுறைகள், சிறப்புகள், சம்பிரதாயங் கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிலடங்கா வழிபாட்டு முறைகள் உண்டு.
ஆனால், நமது விருப்பத்தை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி, பிறப்பின் பலனை அடையச் செய்யும் பஞ்சாயதன முறையை ஸனாதன தர்மம் நமக்குப் பரிந்துரைக்கிறது. அது, நமக்குத் தேவையான பலனை அளிப்பதால், பஞ்சாயதனத்தை (தேவி பஞ்சாயதனம்) ஏற்று வழிபடுங்கள்; வெற்றிகள் கைகூடும்.
3. வீணையை வீட்டில் வைத்திருந்தால் விருத்தி கிடையாது என்கிறார்களே... அப்படியா?
வீணையை வீட்டில் வையுங்கள்; அதனால் விருத்தி ஏற்படும். வீணையில் அலைமகள் குடிகொண் டிருக்கிறாள். எனவே, அதை வைத்துக்கொள்வது சிறப்பு; வீடு, செல்வச் செழிப்புடன் விளங்கும் என்கிறது வேதம் (ச்ரியாவா எதத்ரூபம். யத்வீணா. ச்ரியமேவாஸ்மின்...).
'வீணையை வாசி. ஐஸ்வர்யம் கொட்டும்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. கலைமகள், வீணையும் கையு மாகக் காட்சியளிப்பாள். ஸீமந்தோன்னயனத்தில் வீணையை வாசிப்பார்கள். தர்மசாஸ்திரமும், வீணை வாசிக்கச் சொல்கிறது. வேதம் அறிமுகம் செய்த வாத்தியம் அது. எனவே, வீணையை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
4. சில மாதங்களில், ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகிறது. அந்த மாதத்தில் பிறந்த நாள் வரும் நிலையில், ஜன்ம நட்சத்திரமாக எதை எடுத்துக் கொள்வது?
இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வது சிறப்பு. சாஸ்திரமும் அதை ஏற்கும். நட்சத்திர மாதம் 27 நாட்களில் முடிவடையும். நாம் ஸெளரமானத்தை ஏற்கிறோம். ஒரு ராசியில் சூரியன் நுழைந்து மறு ராசியில் காலெடுத்து வைக்கும் நாள் வரை கணக்கிட்டு, ஒரு மாதமாக ஏற்கிறோம்.
இதன்படி, மாதங்களில் 29 நாளிலிருந்து 32 நாள் வரை வித்தியாசம் காணப்படுவதுண்டு (அதாவது, ஒரு மாதத்தில் 29 நாட்கள் வரும்; இன்னொரு மாதத்தில் 32 நாட்கள் இடம்பெறும்).
நாட்களின் அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட, 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஸெளரமானம், நட்சத்திரமானம், ஸாவனம் - ஆகிய மூன்று அளவையில் இருக்கும் மாதங்களை... செய்யும் சடங்குக்கு ஏற்ப, பொருத்தமானதை தேர்ந்தெடுப் போம்.
உதாரணத்துக்கு... மகப்பேறு மாதத்தைக் கணக்கிடும்போது, நட்சத்திர மாதத்தை ஏற்போம். அங்கு ஸெளரமானமோ, ஸாவனமோ பொருந்தாது. ஸெளரம் 29-ல் இருந்து 32 வரை இருப்பதும், ஸாவனம் 30 நாளாக இருப்பதும் கணக்கிடுவதற்கு இடையூறாக இருக்கும். ஆகவே, அதற்கு நட்சத்திர மாதம்தான் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.
27 X 10 = 270 நாட்கள் தாண்டினால் மகப்பேறு நடைபெறுவது உண்டு. பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்கிற கோட்பாடு, நட்சத்திரமானத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஸெளரமானாலும் ஸாவனமானாலும் 30X10 = 300; 31X10 = 310 என்று தெளிவில்லாத காலத்தைக் குறிப்பிடும்.
ஓர் அயனம்- 6 மாதங்கள் (30 நாள் கொண்டது), ஒரு பருவ காலம், 2 மாதங் கள் ( அதாவது 60 நாள்கள்), ஒரு மாதம் (30 நாட்கள்), ஒரு பஷம் (15 நாள்), ஒரு நாள், ஒரு முகூர்த்தம் ஆகியவற்றைக் கூட்டினால்... அதாவது, 6 2 1 அரை மாதம் ஒரு நாள் மூன்றரை நாழிகை ஆகியவற்றைச் சேர்த்தால்... 9 மாதம், 16 நாள், 1 மணி, 24 நிமிடம் கழிந்தால்... குழந்தை வெளிவர ஆயத்தமாகிவிடும் என்று ஜோதிடம் தகவல் அளிக்கும் (அயனக்ஷணமாஸ...). 270 நாட்கள் நட்சத்திர மாதம்.அதையும் தாண்டும் மகப்பேறு, 300 நாட்களுக்கு முன்பே நிகழ்ந்துவிடும்.
இங்கு ஸெளரமோ நட்சத்திரமானமோ பொருந்தாது ஸாவனம்தான் பொருந்தும் என்பது கண்கூடு. அதுபோல், ஸெளரத்தை அளவுகோலாக வைத்து பிறந்த நாளைக் குறிப்பிடும் முறையை நாம் பின்பற்றுவதால், 2-வதாக வரும் நட்சத்திர நாள், முழு வருஷம் வந்து விட்டது என்பதை ஏற்கும் வகையில் பொருத்தமாக இருக்கும். முதலில் வரும் நட்சத்திரத்தை ஏற்றால், நாட்களின் அடிப்படையில் வருஷம் முடியாமலும் இருக் கும். ஆகவே, 2-வதாக வரும் நட்சத்திரத்தை ஏற்பது சிறப்பு.
5. திருக்கோயில்கள் பலவற்றில், நீலோத்பல மலரை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் அம்பாள். இதற்கான தாத்பரியம் என்ன?
அலைமகள் கையில் செந்தாமரைப்பூ இருக்கும். கலைமகளோ வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். இயற்கை யின் செல்வமான பூக்கள், இறைவன் ஆராதனைக்கு உகந்தவை. மென்மை யான மனமும் மென்மையான அணுகு முறையும் சேர்ந்து வாழும் நமக்கு சிறப்பை அளிக்கும்.
கவிஞர்கள், கண்களைப் பெருமைப் படுத்த அவற்றை நீலோத்பல மலரோடு ஒப்பிடுவார்கள். புஷ்பங்கள், இயற்கை அழகை நிலைநிறுத்துகின்றன. அவை, வண்டினத்துக்கு உணவளிக்கின்றன; புஷ்பாதிவாசத்துக்கும் பயன்படுகின்றன. இரண்டு கைகளாலும் பூக்களை அள்ளி சமர்ப்பித்து இறையுருவத்தை வழிபடுவோம்.
அதன் வாசனை, நுகர்பொருளாகப் பயன்படுகிறது. அயர்ந்த நித்திரைக்கு புஷ்பப் படுக்கை பயன்படுகிறது. காமதேவன், புஷ்ப பாணத்தால் இளம் உள்ளங்களில் ஆசையை விதைக்கிறான். காதலனைப் பிரிந்த காதலியர், பிரிவின் தாக்கத்தைத் தணிக்க புஷ்பங்களைப் பயன்படுத்துவர். 'மென்மையான உள்ளங்கள் சடுதியில் என்னை வந்து அடையலாம்’ என்று சொல்லாமல் சொல்லுகிறாள் அம்பாள்.
6. குறிப்பிட்ட தலங்களில் வேண்டு தலின் பொருட்டு பெண்களும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சுமங்கலிகள் எக்காரணம் கொண்டும் மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது என்கிறார்களே... சரியா?
பெண்ணினத்தின் இலக்கணத்தில் ஒன்றாக கேசத்தைப் பார்க்கிறது சாஸ்திரம் (ஸ்தன கேசவதீநாரீ). முடியைத் துறந்த பெண்ணானவள், மாற்றுத் திறனாளியாகக் கருதப்பட்டாள்.
கணவனையே பறிகொடுத்த பிறகு, அவன் கையால் வருடப்பட வேண்டிய கூந்தல் இனி எதற்கு? எனும் நோக்கத்தில் முடியைத் துறந்த பெண்மணிகள் பண்டைய காலத்தில் உண்டு.
முடி, தாதுவின் கழிவுப்பொருள். அதை கடவுளுக்கு அளிப்பதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. ஒருபக்கம் முடி வளர்வதற்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகளைத் தேடி அலைகிறோம். இன்னொரு பக்கம்... வளர்ந்த முடியை வெட்டி அழகுப்படுத்துகிறோம். அன்றாடம் அலுவல்களின் சுமை அழுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும், முடியை துறப்பதும் வளர்ப்பதும் தடங்கல் இல்லாமல் நடந்துகொண் டிருக்கிறது.
காலாவதியான தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைப் புதுப்பிக்க முற்படுவது சரியில்லை. இதைவிட உயர்ந்த கோட்டுபாடுகள் எல்லாம் நினைவில் இருந்தே விலகிவிட்டன! கவலைப்படாதீர்கள்... காலத்தின் கோலம் அது!
thanx - sakthi vikatan
25 comments:
Me the firstu../\
இனிய காலை வணக்கம் குருஜி...
என்ன ஒரே பெண்கள் சமாச்சாரமா இருக்கு...நேற்றும் அந்த மாதிரி விடயம் போட்டீங்க.
இப்போ போய்ப் படிச்சிட்டு வாரேன்.
பெண்கள் சமாசாரம்னா பெண்களும் வாசிக்க்ராங்கள்ளே!!அது தான்!!
எல்லா தரப்பு மக்களையும் கவரனும்யா!!
பகிர்வுக்கு நன்றி!
அட!!!!!!
நல்ல ஆன்மீக பதிவு !
வீணை பற்றிய கேள்வியை படித்ததும் பயந்துவிட்டேன். நல்லவேளையாக பதில் திருப்தியாக உள்ளது.
முடியிறக்கம் செய்வது கடவுளுக்கு உகந்தது என்பதைவிட ,நமக்கு நல்லது. திடீரென்று தோன்றும் உருவமாற்றம் நம்மீது விழும் பொறாமை பார்வைகளை மாற்றிவிடும் என்பார்கள். பெண்களைப் பொறுத்தவரை, பூமுடி தருவது உண்டு. கணவருக்கு உடல் நலம் இல்லாத போது முடியிறக்குவது, தாலி வேண்டிக் கொள்வது (sort of reverse formula) ஆகியன பலன் தருகிறது. இது போன்ற வேண்டுதல்கள் சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட கிராமப்புறத்து கோவில்களில் நடைபெறுகின்றன.
அருமையான பகிர்வு பாஸ்,
சமூகத்தில் மூட நம்பிக்கைகளாக கருதும் பல விடயங்களுக்கான தெளிவான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன.
நோ கமெண்டஸ்..
Great . . . Super question and answer
மாப்ள மறுபடியும் ஒரு ஹிட்டா ?
தலைப்பு ராக்ஸ்!
வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க!
பொதுவா நமக்கு இந்த சமயம், சடங்கு, சம்பிரதாயத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை ஸார்!
இதுல கருத்து சொல்லுறதுன்னா, எதிர்க்கருத்துதான் சொல்லணும் ஸார்! எதுக்கு வீணா, எதிரான கருத்துக்கள் சொல்லி, அடுத்தவங்க மனச புண்படுத்தணும்?
அப்புறம் நீங்க கூட, இறை நம்பிக்கையும், பக்தியும் நிறைந்த ஒருத்தர்! உங்கள இந்த விஷயம் ஈர்க்கப்போய்த்தான் இப்படி ஒரு பதிவு போட்டிருக்கீங்கன்னு நெனைக்கிறேன்!
நமக்கு இதெல்லாம் செட் ஆவாது ஸார்! குறிப்பா பொண்ணுங்க மொட்டை......
வேணாம் ஸார்! எதுக்கு அத இத சொல்லி, அடுத்தவங்க மனச புண்படுத்தணும்!
ஸார், நீங்க ஒரு காமெடி போஸ்ட் போடுங்க! வந்து பின்னி பெடல் எடுத்துடறோம்!
அப்புறம் எல்லாத் திரட்டியிலையும் ஓட்டுப் போட்டிருக்கேன் ஸார்! நமக்கு பதிவில உள்ள மேட்டர் புடிக்கல அப்டீங்கறதுக்காக, மைனஸ் ஓட்டெல்லாம் போட மாட்டேன்! எப்பவுமே!
ரொம்ப நன்றி ஸார்! கும்புடுறேனுங்க!
அண்ணே டேய் அண்ணே நானும் வந்துட்டேன் ஹி ஹி...
கில்மா பதிவை நிருத்திட்டியாடா.....[[திருந்திட்டானோ]]
இது பெண்கள் வாரமா சிபி சார். நீங்கள் கலக்குங்க....
//உயர்ந்த கோட்பாடுகள் எல்லாம் நினைவிலிருந்தே விலகிவிட்டன.//
இப்படிச் சொல்வதைவிட சில பகுத்தறிவாளர்களால் மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்படுகின்றன என்று சொல்வதே பொருந்தும்.
MANO நாஞ்சில் மனோ said...
//கில்மா பதிவை நிருத்திட்டியாடா.....[[திருந்திட்டானோ]]//
ஏன் மனோ சார் சிபியிடம் பழசையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு... ஏதோ இரண்டு நாள் ஒரு வித்தியாசமாய் இருக்கட்டுமேனு தன் பாணியை கஷ்டப்பட்டு மாத்திக்கிட்டு பதிவுபோட்டுக்கிட்டிருக்கிறார்.
அவர் மாறினாலும் நீங்க விடமாட்டீங்க போலயே.....
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
முதலில் எழுதிய பதில்களில் தர்ம சாஸ்திரங்களை சம்ஸ்கிருதத்திலே எழுதிப்போற்றுகிறார். இறுதியில் எழுதிய பதிலில், "காலாவதியான தர்ம சாஸ்த்திரங்களைப்" புதுப்பித்தல் தவறென்கிறார். எவை காலாவதியானவை என்று எவர் சொல்வது? இவருக்குப்பிடித்தவை காலாவதியானவை. இல்லாதவை இப்போதும் வேண்டும். ஏன் இந்த முரண் ?
பெண்கள் - ஆண்கள் எனப் பிரித்து மதங்கள் தத்தம் கொள்கைகளைப் புகுத்துகின்றன. வைதீக இந்து மதம் விதவைகளையும் மென்சுரேட்டும் பெண்களையும் பாடாய்ப்படுத்துகின்றன. அவைகள் இன்றும் உள்ளன. ஆனால் அவைகளை இவர் போற்றுவார். காலாவதியாக்க மாட்டார்.
பெண்களுக்குக் கேசம் அழகு. ஆனால் இறைவன் வழிபாட்டிலுமா ? முடிகாணிக்கை என்பது திருப்பதியும் பழனியிலும் அதிகம். பெண்களும் முடி காணிக்கை கொடுக்கிறார்கள். இக்கோயில்கள் கிராமத்துக்கோயில்கள் அல்ல.
இவர் என்ன சொல்கிறார்?, இறைவன் முன் ஒரு பெண் தன் பெண்மையழகை இறைவனைவிட பெரிதாகப்பேண வேண்டுமென்பதே. இறைவன் முன் நாம் அற்பர்கள் என்ற உணர்வே ஆன்மிகமாகும். இறைவனே பெரியவன். அவன்முன் தாழ் பணிவோம். இல்லை ! இல்லை !! எனக்கு என் மேனியழகுதான் வேண்டுமென்றால் இறைவழிபாடே தேவையில்லை உங்களுக்கு.
ஒரு ஆன்மிகவாதியின் பேச்சா இது?
ஆஜர்.
ஆஜர்.
உள்ளேன் ஐயா
முடிக்காணிக்கை பற்றி பதிவிட்டதால் உம்மாச்சி உங்க கண்ணை குத்தப் போகுது.
Post a Comment