Wednesday, August 10, 2011

மனசாட்சி இல்லாத கலைஞரே! அரசாட்சி செய்யும் ஜெவே! அறிஞர் அண்ணா மகனை சாக விட்டது சரியா?

ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அண்ணாவின் மகன்!


மிழக அரசியலில் அறிஞர் அண்ணா என்ற பெயர், ஒரு மந்திரம்! ஆனால், அந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி தங்களை வசதி ஆக்கிக் கொண்ட சில கட்சிக்​காரர்கள் கைவிட்ட நிலையில், கடந்த வெள்ளி அன்று இறந்துபோனார், அவரது வளர்ப்பு மகனான சி.என்.ஏ.இளங்கோவன்! 

இளங்கோவனிடம் பல வருடங்​களாகத் தனி உதவி​யாளராக இருந்த சண்முகராஜ், நெகிழ்வான குரலில் நம்முடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''பேரறிஞர் அண்ணா அவர்கள் - பரிமளம், இளங்​கோவன், ராஜேந்திரன், கௌதமன் என்று நான்கு பேரைத் தத்தெடுத்து வளர்த்தார். தன் இரண்டாவது வளர்ப்பு மகனான இளங்கோவன் மீது அவ்வளவு பிரியம் அண்ணாவுக்கு. இன்று ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் பல எம்.பி-க்கள், மந்திரிகள் எல்லோரையும் கைதூக்கி​விட்டவர் இளங்கோவன்அய்யாதான்!


தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் உள்ள பலர் கோடிகளாக சம்பாதித்த​போது, இந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் குடும்பத்தாரோ குடியிருக்கக்கூட சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்தார்கள்.

சிங்கிள் பெட்ரூம் கொண்ட அரசு வாடகைக் குடியிருப்பில் சுமார் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். இதோ, இப்போது டபுள் பெட்ரூம் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இதை வாங்குவதற்கு மூன்று ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருந்தியவன் நான்.

அண்ணாவை வெளியீட்டாளராகக்​கொண்டு வெளிவந்த 'காஞ்சி’ எனும் பத்திரிகையின் ஆசிரி​யராக இளங்கோவன் இருந்தார். மூத்த பத்திரிகையாளர் எனும் தகுதியில் மாதம் 3,000 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தார். 'அண்ணாவின் வளர்ப்பு மகன் 3,000 ஓய்வு ஊதியத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறதே... அவரின் துன்ப நிலை என்ன?’ என்பது அப்போதைய முதல்வர் யோசித்திருக்க வேண்டாமா? ஓடி வந்து உதவி செய்திருக்க வேண்டாமா?!


இரண்டு மாதங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து விட்டார் இளங்கோவன். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சரியாக கவனிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீழ் பிடித்து, அது ரத்தத்தில் கலந்து, மரண வாயிலுக்கு அவரை இழுத்துவந்துவிட்டது. அதன் பிறகு இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். 

இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவச் செலவே, இரண்டு மூன்று லட்சங்கள் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று அலைந்து, நண்பர்களின் உதவியால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. 'அண்ணாவின் மகன் மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றிதான் இறந்துபோனார்’ என்கிற உண்மை, அண்ணாவைத் தங்கள் கொடிகளில் எல்லாம் வைத்திருக்கும் கட்சிக்காரர்களுக்குத் தெரியுமா?


தேவைகளே இல்லாத மனிதர் இளங்கோவன். சட்டையைக்கூட இஸ்திரி போடாமல்தான் அணிவார். அவர்  நினைத்து இருந்தால், அரசியலில் களம் கண்டிருக்க முடியும். ஆனால், வாரிசு அரசியலை ஒருபோதும் ஆதரித்தது இல்லை அண்ணா.

தன்னால் எந்த ஒரு களங்கமும் தன் தந்தை ஆரம்பித்த கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். 'தகுதி இருந்தால் தலைவன் ஆகலாம்!’ என்றவர் அண்ணா. அதற்கு ஏற்றபடியே வாழ்ந்தும் காட்டினார்.

அந்தப் பெருமைகொண்ட குடும்பத்தாரின் மாண்பு, 'தனயனாக இருந்தால், தலைவன் ஆகலாம்!’ என்று இன்று வாரிசு அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!'' என்று வருத்தத்துடன் முடித்தார் சண்முகராஜ்.

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை டிஸ்சார்ஜ் செய்யும் போது 30 ஆயிரம் ரூபாய் குறைந்ததாம். உறவினர் ஒருவரின் நண்பர் இந்த பரிதாப நிலையைப் பார்த்து தனது கிரடிட் கார்டு மூலமாகப் பணம் கொடுத்தாராம். இளங்கோவன் மனைவி விஜயாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாம். அந்தத் தொடர்பில் தயாளுவுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார்.

10 ஆயிரம் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்தாராம் தயாளு. சொந்த வீடும் இல்லாமல், சொத்தும் இல்லாமல், பல லட்சம் கடனை வைத்துவிட்டுப் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறார் இளங்கோவன். ''அவர்கள் வாழ்ந்த வறுமையை என் வாயால சொல்ல மாட்டேன்...'' என்று உறவினர் ஒருவர் ஒதுங்கியபடி அழுததைப் பார்த்தபோது....'அண்ணா’ ஒரு செல்லிங் பாயின்ட் என்பதை அவரது குடும்பம் மட்டும் உணரவில்லை.


பகுத்தறிவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் குடும்பம் என்பதை நிரூபிக்கும் வகையில், இளங்கோவனின் மகள் கண்மணிதான் இறுதிச் சடங்குகளைச் செய்தார். 'விட்டுட்டுப் போயிட்டீங்களே அய்யா!’ என்று கண்களில் நீர் தளும்பி நிற்கிறார், மனைவி விஜயா இளங்கோவன். இந்த இருவர் கண்ணீரையும் துடைக்க வேண்டியது அந்த இரண்டு கழகங்களும்தான்!


இதயம் கனக்குதே அண்ணா!

நன்றி - விகடன் 

சி.பி கமெண்ட் -  அரசியலில் கலைஞராகடும், ஜெ வாகட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்தது ஊருக்கே தெரியும், அவர்கள் அபிமானிகளால் கூட அதை மறுக்க முடியாது.. எப்படியோ சம்பாதிக்கட்டும்,அந்த கோடிகளில் இருந்து சில லட்சங்களை தாராளாமாக தர மனம் வரவில்லையே ஏன்? அண்ணாவின் ஓட்டு வங்கி மட்டும் வேண்டும்..????அவர்கள் இருவருக்கும் மனசாட்சி இனி உறுத்தாதா?


27 comments:

Unknown said...

காலையிலேயே மனசை கணக்கா வைச்சுடீங்க தல

Unknown said...

போஸ்டர்ல மட்டும் சிரிக்க அண்ணாவை யூஸ் பண்ணும் கட்சிகாரர்கள், ரத்தத்தின் ரத்தங்கள் உணர்வார்களா!!??

Unknown said...

மனசு எல்லாம் மரத்து போச்சு தலைவரே அவங்களுக்கு , இந்த நிலை கலைஞரின் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க ஆண்டவனை வேண்டிக்குவோம் வேற எதுவும் செய்ய யாரும் இருக்க மாட்டாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

சரியா சொன்னேடா மக்கா, யானைக்கு தன் பலம் தெரியாத மாதிரி அண்ணா குடும்பத்துக்கும் அவர்கள் பலம் தெரியவில்லையா அல்லது முடக்கி வைக்கப்பட்டார்களா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் பத்தாயிரம் பணம் கொடுத்து போன தயாளு அம்மாவே தங்களுக்கு தெரியுமா உங்கள் கணவர் பெயரில் வெளிநாட்டில் முப்பத்தி அஞ்சாயிரம் கோடி பணமிருப்பது.....??? வாழ்க உங்க குடும்பம்....ஆஆஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்....த்.....

MANO நாஞ்சில் மனோ said...

அறிஞர் அண்ணாவின் மகனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்....

'பரிவை' சே.குமார் said...

அறிஞர் அண்ணாவின் மகனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்...

மனசை கனக்க வைச்சுட்டீங்க...

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செய்தி தாள்களில் ஒருமூளையில் செய்தி வந்திருந்தது அவ்வளவுதான்....

வருந்ததக்க விஷயம்...

rajamelaiyur said...

நியாயமான கமெண்ட்

ராஜி said...

Manadhai kalanga vaitha padhivu. Annavin vaarisukku kanneer anjalikaludan annaaradhu anmaa shanthiyadaiya ellam valla iraivanai vendi kolkiren.
Arasiyal oru saakkadai nu therinjudhan nallavangalam odhungi poraanga. CP sir commentum miga sariye.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

7

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்...

சக்தி கல்வி மையம் said...

என் அனுதாபங்கள்..

ராஜ நடராஜன் said...

கண்கள் பனித்தது!இதயம் இனிக்கவில்லை:(

சேக்காளி said...

மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சி கொஞ்சம் அரட்டை-கொஞ்சம் சேட்டை.அந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற "அண்ணாத்துரை யார்" என்ற கேள்விக்கு, "புக்கெல்லாம் எழுதினாரே அவர்" என்று பதில் சொல்கிறார் ஒருவர்.
இந்த சூழ்நிலையில் அண்ணாவின் ஓட்டு வங்கி இன்னும் இருக்கிறது என்று நம்பித்தான் ஆக வேண்டுமா?

Anonymous said...

இவ்விரு கழகங்களின் நிதி உதவியுடன் வாழ்வை இவர் நடத்தாமல் இருந்ததே அண்ணா குடும்பத்திற்கு பெருமைதான். அண்ணா குறித்த எம்.ஜி. ஆர். பாடல் வரிகள் இதற்கு சாலப்பொருந்தும் : "ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்".

Anonymous said...

அண்ணாவின் ஓட்டு வங்கி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அவரைப்போன்ற கறையற்றவர்களின் பெயரை கேடயமாக பயன்படுத்தி அரசியல் தெரியாத மக்கள் ஓட்டுக்களை அள்ளுவதே இவர்களின் குறி என்பது மறுப்பதற்கில்லை. ஒரு முறை தன் வீட்டில் குளிர்சாதன பெட்டி வந்து இறங்கியபோது அதை எடுத்துச்செல்லும் வரை உள்ளே வர மாட்டேன் என்று சொன்ன அண்ணா ஆட்சி செய்த பூமி......இன்று கடற்கரை காற்றில் கூட மூன்று ஏர் கூலர்களுடன் உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு வந்துள்ளது.

ஆமினா said...

:(

Anonymous said...

இரு திராவிட கழகங்களை நாம் ஏசுவது ஒரு புறம் இருக்கட்டும். நம்மில் எத்தனை பேர் அண்ணா குறித்த புத்தகங்களை படித்திருக்கிறோம்? அவர் குறித்த பல செய்திகள் இணையத்தில் இருந்தாலும், நாம் அதை படிக்க எத்தனை நேரம் செலவழித்து இருக்கிறோம்?? எனவே சந்தேகமின்றி நாமும் குற்றவாளிகளே.

உலக சினிமா ரசிகன் said...

பத்தாயிரம் கொடுத்த தயாளுவின் தாராள மனசை பாராட்ட மாட்டீர்களா?
ரேசனில் அரிசி வாங்கி கஞ்சி குடிக்கும் அந்தம்மா இவ்வளவு கொடுத்தது வெள்ளம்.
கொடுத்தது புருசனுக்கு தெரியுமா?
மனுசன் பைசா இழக்க மாட்டாரே!!!!!!!!!

நிரூபன் said...

காலம் செய்த கோலம் என்று மனம் நோகுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
மக்கள் பணத்தில் குளிர் காயும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை,
அண்ணாவின் மகனுக்கு நிகழ்ந்த நிலமை தான் சாதாரண பொது மக்களுக்கும்...
என்று மாறுமோ இந்த நிலமை.

நண்பன் said...

அறிஞர் அண்ணா பொது நல வாதி இவர்கள் இருவரும் சுயநல வாதிகள் .

நண்பன் said...

"ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்"

நண்பன் said...

எனவே சந்தேகமின்றி நாமும் குற்றவாளிகளே

அஹோரி said...

கருமாந்திரநிதி க்கு ஒரு காப்பி அனுப்புங்க.

aotspr said...

ஆழ்ந்த வருத்தங்களும் அனுதாபங்களும்.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com