சத்யா கமல் போல் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என்ற ஆதங்கம் ஜீவாவுக்கு வந்ததில் தப்பில்லை.ஆனால் அதற்கு ஸ்கிரிப்ட் பக்காவாக அமைந்தால் மட்டும் பத்தாது, பாடி லேங்குவேஜில் சூர்யாவின் அர்ப்பணிப்பு, பாடி மெயிண்டெனென்ஸில் விக்ரமின் உழைப்பு , பல வருட அனுபவம் எல்லாம் வேண்டும்.. அதை எல்லாம் விட்டு விட்டு இந்த பிஞ்சு முகத்தை வைத்துக்கொண்டு அவர் புரூஸ்லீ ரேஞ்சுக்கு எதிரியிடம் அடியே வாங்காமல் பாட்ஷா ரஜினி மாதிரி ஷோ காட்டினால் எப்படி?
படத்தில் முதல் ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு .. பட்டாசைக்கிளப்புது ஃபைட்டுக்கான லீடும் ,அதை படமாக்கிய விதமும், ஸ்லோமோஷன் சண்டைக்காட்சிகளும்..
படத்தோட கதை என்ன? அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் கோப க்கார இளைஞன் தான் ஹீரோ. ( அநியாயம் எங்கே ஓடுனாலும் தட்டிக்கேப்பாரா?)அப்படி போடும் சண்டையில் எதேச்சையாக ரவுடியும் ,வில்லனும் ஆகிய கவுரிமேல் அடி பட்டு விடுகிறது.. ஆனால் கவுரி வேறு ஒரு கேஸ்க்காக ஜெயிலில் இருக்கும் சூழலில் ஸ்ரேயாவுடன் லவ்விக்கொண்டு இருக்கிறார். வில்லன் வெளியே வந்ததும் வேட்டை ஆரம்பம்..
ஹீரோயின்க்கும் , படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எவனும் கேட்கக்கூடாது என்பதற்காக அவர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகள் என்று ஆரம்பத்திலேயே இயக்குநர் நம் வாயை அடைத்து விடுகிறார்..
ஜீவாவுக்கு தங்கை கேரக்டர், ஸ்ரேயாவுக்கு தோழி கேரக்டர் என ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் பல அழகு ஃபிகர்கள்.. அனுபவி ராஜா அனுபவி..
ஜீவாவின் தங்கைக்கு மாப்ளையாக வரும் சத்யனின் காமெடி உதார் நடிப்பு படத்தை ஜாலி மூடில் கொண்டு போக ரொம்பவே யூஸிங்க்... அதே போல் வழக்கமாக ஹீரோவின் ரவுடியிசம் கண்டு பயப்படும் ஹீரோயினாக இல்லாமல் அவரைக்கண்டு ஆச்சரியம் கொள்ளும் ஹீரோயினாக ஸ்ரேயா வருவதும் , கொடுத்த சம்பளத்துக்கு பங்கம் வராமல் இயக்குநர் அவரை முழுதாக யூஸ் பண்ணியதும் ( படத்துல ) சபாஷ் போட வைக்கின்றன..
ஆக்ஷன் படத்திலும் ரசிக்க வைத்த வசனங்கள்
1. நீங்களும் தட்டி கேட்க மாட்டீங்க,கேட்கறவனையும் விட மாட்டீங்க..
2. காபி ஷாப் கூப்பிட மாட்டீங்களா?
அட! அக்கவுண்ட்ல தருவாங்களா? அப்போ போலாம்.
3. என்னடா காபி தர்றே? கட்டிங்க் மாதிரி இவ்வளவு கம்மியா?
4. இது தான் உங்க ஊர்ல காபி ஷாப்பா?
ஆமா சொல்டா!
ஆமா.. ஹி ஹி
5. எதுக்கு என் செல்லை பிடுங்கறே? அதுல பேலன்ஸ் கிடையாது..
அது மாடலை பார்த்தாலே தெரியுது.
6. உன் கிட்டே ஃபோன் இருக்கா?
ஓ. என்னுது ஐ ஃபோன்.. காஸ்ட்லி, அதனால அதை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.. ஹி ஹி
7. அப்பா பேரை உங்க பையனுக்கு வெச்சுட்டு அவனை அவரே , இவரே அப்டின்னு மரியாதையா கூபிடறதை இங்கே தாங்க பார்க்கறேன்.
8. ஒழுங்கா இருக்க முடியும்னா உன் பையனை இருக்க சொல்லு, இல்லைன்னா அவரை வீட்டை விட்டு கிளம்ப சொல்லு..
என்னடா?நம்மளை சொல்லிட்டு அவரு கிளம்பி போய்ட்டாரு?
9. உங்க பேரு அம்முவா? யார்.. உங்க அம்மா வெச்ச பேரா?
தெரில.. யார் வெச்சாங்கன்னு.. அப்போ நான் சின்ன பொண்ணு..
10. அவனுங்க 4 பேரையும் பார்டா.. எக்ஸ்பேண்டபிள்ஸ் போஸ்டர் மாதிரியே ஃபிலிம் காட்டறதை.. அடங்குங்கடா...
11. நீ இப்போ என்னைத்தானே பார்த்தே?
இல்லையே?
கண் பொய் சொல்லாது.. சிவா..
12. வில்லனிடம் பஞ்ச் டயலாக் - இதுக்கு முன்னால உன்னை நான் பார்த்ததில்லை, இதுக்கு அப்புறமும் நான் உன்னை பார்க்கறதா இல்லை..
13. அவருக்கு 28 வயசு, இது வரை 200 ஃபைட் போட்டிருப்பாரு.. உங்களுக்கு 50 வயசு இருக்கும் எத்தனை ஃபைட் போட்டிருப்பீங்க?
14. ஒரு பொண்ணு பிறந்த வீட்ல எப்படி வேணாலும் இருக்கலாம்.ஆனா புகுந்த வீட்ல ....
அய்யய்யோ நீ எப்பம்மா இங்கே புகுந்தே?
15. சாரி.. நீ சொன்னபடி 4 மணிக்கு ரெஸ்டாரண்ட் வர முடியாது, 4.05க்கு வந்துடவா?
16. என்னை எப்படி மறந்தே?
உன்னை எப்போ நினைச்சேன்?
17. அவ கண் இருக்கே, ஊதாப்பூவை பிளாக் & ஒயிட்ல பார்த்த மாதிரி இருக்கும்..
18. வரமாட்டேன்னு சொன்னியே ,ஏன் வந்தே?
வரமாட்டேன்கறதை சொல்லிட்டுப்போலாம்னுதான் வந்தேன்
19. ஜூஸ் முடிஞ்சுது, இன்னும் ஏன் உறிஞ்சிட்டே இருகே? ஸ்ட்ராவை?வேணும்னா இன்னொண்னு சொல்லவா?
நோ.. நான் சிக்ஸ் பேக்கிற்கு ட்ரை பண்றேன்.
உங்க ரேஞ்சுக்கு நீங்க எயிட் பேக்கிற்கே ட்ரை பண்ணலாம்..
20. இவ்வளவு பில்டப் தர்றீங்களே? உங்க பேரென்ன?
ராமானுஜம்
சத்தியமா உங்க பேரை யூஸ் பண்ண மாட்டேன் போதுமா?
சரி , நான் ஷார்ட் டெம்பர் என்ற மேட்டரை உங்க தங்கைட்ட சொல்லிடாதீங்க.
21. அங்கிள், நான் பெரியவங்க கிட்டே எப்பவும் ரொம்ப ரெஸ்பெக்ட்டா நடந்துக்குவேன்..
அதான் பார்த்தேனே..
22. அவ போய்ட்டாளா?
ம், அவளோட உங்க மானமும் போச்சு. உங்க சின்ன வயசுல எந்த டிரஸ்சும் போடாம பந்தாவா ஒரு போஸ் குடுத்துட்டு நிப்பீங்களே, அந்த ஃபோட்டோவை வாங்கிட்டு போறாரு..
23. சரி.. விடுங்கடா.. அழகான பொண்ணுங்கன்னா பசங்க ஃபாலோ பண்ணத்தான் செய்வானுங்க..
அதான்க்கா கேட்கறோம்.. உங்களை ஏன் ஃபாலோ பண்றானுங்க?
24. அண்ணே, என் பையன் ஒருத்தனை அடிச்சுட்டான், நீங்க தான் காப்பாத்தனும்..
சரி , விடு.. இன்னைக்குத்தான் கவுரி ( வில்லன்) ரிலீஸ் ஆகறாரு.. அவர் கிட்டே சொல்லிக்கலாம்..
என் பையன் அடிச்சதே அந்த கவுரி யைத்தான்..
25. நாங்க எல்லாம் பொத்திக்கிட்டு இருக்கோம்,உனக்கு மட்டும் ஏண்டா பொத்துக்கிட்டு வருது?
அதுக்குப்பேருதான் ரவுத்திரம்
26. என் தங்கை கல்யாணத்துக்கு கூப்பிடலை, ஓக்கே, அட்லீஸ்ட் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லை?
27. அவனை தூரத்துல இருந்து ரசிச்சாலே போதும் எனக்கு..
28. அவன் மாறமாட்டான்மா..
எதுக்கு மாறனும்?
29. கவுரிக்கு எதிரா அரெஸ்ட் வாரண்ட் வாங்கியாச்சு, இப்பவே போய் அரெஸ்ட் பண்றேன்..
நாளை காலை வரை வெயிட் பண்ணுங்க சார்..
மிஸ்டர் அசிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்க மாப்பிள்ளை சிவாவை ரவுடி கவுரி கொன்னுடுவான்னு பயப்படறீங்களா?
இல்லை, ரவுடி கவுரியை மாப்பிள்ளை சிவா கொன்னுடுவான்னு பயப்படறேன்..
30. அரசியல்வாதிங்க நாம தான் ரவுடிகளை யூஸ் பண்ணனும், அவனுங்க நம்மை யூஸ் பண்ண நாம் விடக்கூடாது
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. இடைவேளை வரை படத்தோடு இணைந்து செல்லும் காமெடி
2. கையேந்திபவனில் ஸ்ரேயா தன் கையால் ஜீவாவுக்கு தோசை சுட்டுப்போடுவது..
3. குடும்பத்தில் உள்ள அனைவர் பெயர்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கும் ஸ்ரேயா.. அதை பெருமையாக ஜீவாவிடம் காட்டுவது..
4. அடியே என் நேசம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு அழகை அள்ளியது.
5. ஓப்பனிங்க் ஃபைட் சீனும், தியேட்டர் பைக் ஸ்டேண்டில் நடக்கும் ஃபைட் சீனும் கலக்கல் ஸ்டண்ட் அமைப்பு. ( ஓப்பனிங்க் ஃபைட்டில் கூடவே ஸ்ரேயா குலுங்க குலுங்க ஓடி வருவது செம கிளாமர்)
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. ஜீவா தன் தங்கைக்கு மிட்நைட் 3 மணிக்கு ஃபோன் பண்றாரு, அடுத்த ரிங்க்லயே எடுக்கறாரே, அது எப்படி? ( புது மணத்தம்பதிகள்னு சால்ஜாப்பு சொல்ல வழி இல்லை, மாப்ளை தூங்கிட்டு இருக்காரு, பொண்ணு மட்டும் விழிச்சுட்டு இருக்கே?)
2. ஜீவா பைக்ல பெட்ரோல் குண்டு போடறாங்க , 15 நிமிஷமா பைக் எரியுது, ஜீவா ஃபைட்டா போடறார், ஆனா பைக் பெட்ரோல் டேங்க் வெடிக்கவே இல்லை.. ஏன்?
3. ஜீவா வீட்டுக்கு அவரோட அப்பா வர்றப்போ வீட்ல எதுவுமே இல்லை, பால் உட்பட.. ஆனா வீட்ல ஃபிரிட்ஜ் உட்பட எல்லா வசதியும் இருக்கு. அர்த்த ராத்திரில ஹீரோவை வெளில கிளப்பி விட வேற ஐடியா கிடைக்கலையா?
4. ஜீவா படம் பூரா 67 பேர்ட்ட ஃபைட் போடறார், எல்லாரையும் ஒரே அடில வீழ்த்திடறார், அவர் அடியே வாங்கலை. அவர் என்ன அர்னால்டு ஸ்வார்ஷெனேகரா?
5. ஜீவா அநியாயத்தை தட்டிக்கேட்கறதையே ஃபுல் டைம் ஜாப்பா வெச்சிருக்காரே? அவர் பூவாவுக்கு என்ன பண்றார்? ( ரயில்வே வேலை வந்ததையும் வேணாம்கறாரு)
இந்தப்படம் தெலுங்குல டப் பண்ணுனா நல்லா ஓடும்னு தோணுது.. தமிழ்ல சுமாராதான் போகும், ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடலாம்..
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - ஃபைட் & ஆக்ஷன் பிரியர்கள் பார்க்கலாம்..
ஈரோடு அபிராமி,அன்னபூரணி, ஸ்ரீசண்டிகா, ஸ்ரீநிவாசா என 4 தியேட்டர்ஸ்ல போட்டிருக்காங்க. நான் அபிராமில பார்த்தேன்..
51 comments:
அதுக்குள்ள படத்தை பார்த்து விமர்சனம் எழுதியாச்சா...ம்ம்ம்
ஹை,இன்னிக்கு நான் தான் பர்ஸ்ட்..
so/
hit?
thanks
senthil,doha
ஜஸ்ட் மிஸ்.....
அப்போ ஈரோட்ல நாலு தியேட்டர்லேயும் இந்தப் படத்த பார்க்க போறீங்களாண்ணே?
வர வர ஷ்ரேயாவ பாத்தா கிக்கே வரமாட்டேங்கிதே அது ஏண்ணே?
@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னது? பாத்தா கிக் வர்லையா? அப்போ நீங்க......
@S.Menaga
விமர்சனம் பற்றி கருத்து சொல்லாம இப்படி எஸ் ஆனா உங்க தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் கபர்தார்
////// சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னது? பாத்தா கிக் வர்லையா? அப்போ நீங்க......
///////
யோவ் ஷ்ரேயாவா பாத்தா மட்டும்னு சொன்னேன்... விட்டா சேலத்துக்கே அனுப்பி வெச்சிடுவீங்க போல?
@பன்னிக்குட்டி ராம்சாமி
சேலத்தை பற்றி தப்பா பேசறீங்களே? வெங்கட் கோவிச்சுக்க மாட்டாரா?
/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
சேலத்தை பற்றி தப்பா பேசறீங்களே? வெங்கட் கோவிச்சுக்க மாட்டாரா?
/////////
அவர் பேரைச்சொன்னா டிஸ்கவுண்ட்டே உண்டாம்... அடுத்தவாட்டி போகும் போது ஞாபகம் வெச்சுக்குங்கண்ணே...!
//
சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனம் பற்றி கருத்து சொல்லாம இப்படி எஸ் ஆனா உங்க தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் //
அய்யய்யோ...நல்லா இருக்குண்ணே..நல்லா இருக்கு!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வர வர ஷ்ரேயாவ பாத்தா கிக்கே வரமாட்டேங்கிதே அது ஏண்ணே?//
ஸ்ரேயா சிடி ஏதாவது பாத்துட்டீங்களாண்ணே?
///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வர வர ஷ்ரேயாவ பாத்தா கிக்கே வரமாட்டேங்கிதே அது ஏண்ணே?//
ஸ்ரேயா சிடி ஏதாவது பாத்துட்டீங்களாண்ணே?
////////
சிபியவிட வில்லங்கமான ஆளா இருப்பாரு போல இருக்கே?
@செங்கோவி
அப்படிப்பார்த்திருந்தா கிக் ஜாஸ்தியாதானே வரும்? த்ரிஷா சி டி பார்த்தப்ப ராம்சாமி ஆஃபீஸுக்கு 7 நாள் போகவே இல்லையாம்./
////// சி.பி.செந்தில்குமார் said...
@செங்கோவி
அப்படிப்பார்த்திருந்தா கிக் ஜாஸ்தியாதானே வரும்? த்ரிஷா சி டி பார்த்தப்ப ராம்சாமி ஆஃபீஸுக்கு 7 நாள் போகவே இல்லையாம்./
/////////
அண்ணன் கரெக்டா கண்டுபுடிக்கிறாரே? அங்கேயும் அதே எஃபக்ட்டா இருக்குமோ?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
@செங்கோவி
அப்படிப்பார்த்திருந்தா கிக் ஜாஸ்தியாதானே வரும்? த்ரிஷா சி டி பார்த்தப்ப ராம்சாமி ஆஃபீஸுக்கு 7 நாள் போகவே இல்லையாம்./
/////////
அண்ணன் கரெக்டா கண்டுபுடிக்கிறாரே? அங்கேயும் அதே எஃபக்ட்டா இருக்குமோ?//
இல்லைண்ணே..நமக்கு கொஞ்சம் புஷ்டியா இருந்த்தாத் தானே பிடிக்கும்..அதான் ஸ்ரேயா மேல பெருசா அட்ராக்சனே வர மாட்டேங்குது.
// சி.பி.செந்தில்குமார் said...
@செங்கோவி
அப்படிப்பார்த்திருந்தா கிக் ஜாஸ்தியாதானே வரும்? //
அப்படியா..என்னய்யா இது இப்படிச் சொல்றீங்க..அப்போ பன்னிக்குட்டிகிட்டத் தான் ஏதாவது கோளாறா?
//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
@செங்கோவி
அப்படிப்பார்த்திருந்தா கிக் ஜாஸ்தியாதானே வரும்? த்ரிஷா சி டி பார்த்தப்ப ராம்சாமி ஆஃபீஸுக்கு 7 நாள் போகவே இல்லையாம்./
/////////
அண்ணன் கரெக்டா கண்டுபுடிக்கிறாரே? அங்கேயும் அதே எஃபக்ட்டா இருக்குமோ?//
இல்லைண்ணே..நமக்கு கொஞ்சம் புஷ்டியா இருந்த்தாத் தானே பிடிக்கும்..அதான் ஸ்ரேயா மேல பெருசா அட்ராக்சனே வர மாட்டேங்குது.
//////
அப்போ த்ரிஷா புடிக்குதே?
எப்படியோ ..விமரிசனமும் அருமை ..ஷ்ரேயா படங்களும் அருமை ...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ த்ரிஷா புடிக்குதே?//
அதுகிட்ட என்ன இருக்குன்னு பிடிக்குது?..இதைக் கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்றேன்!
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஸ்ரேயா கிட்டே முகத்\துல ஓவர் ரிச் லுக் இருக்கு, அதனால முடிஞ்ச வரை முகத்தை பார்க்காதீங்க.
@செங்கோவி
அவரும் உங்களை மாதிரிதான், நோ கோளாறு, ஒன்லி ஆர்வக்கோளாறே
//////செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ த்ரிஷா புடிக்குதே?//
அதுகிட்ட என்ன இருக்குன்னு பிடிக்குது?..இதைக் கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்றேன்!
//////
என்னய்யா இது த்ரிஷா புடிக்குதுன்னாலும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க, அஞ்சலி புடிக்குது ஸ்டில்லு போடுங்கய்யான்னாலும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க..... நாங்கள்லாம் என்னதான்யா பண்றது...?
மாப்ள நான் காலையிலே நினைச்சேன்..
அட்ரா அட்ரா அப்படித்தான்.. ஹிஹி!
//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஸ்ரேயா கிட்டே முகத்\துல ஓவர் ரிச் லுக் இருக்கு, அதனால முடிஞ்ச வரை முகத்தை பார்க்காதீங்க.
//////
அப்போ முகத்த யாரும் பாக்குறாங்களா என்ன? என்ன கொடும சார் இது?
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி...பாட்டு கேக்குத்துய்யா ஹிஹி!
@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ், கண்ணீயமான ஆம்பளைங்க கழுத்துக்கு மேல தான் பார்ப்பாங்க, விக்கி மாதிரி
////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ், கண்ணீயமான ஆம்பளைங்க கழுத்துக்கு மேல தான் பார்ப்பாங்க, விக்கி மாதிரி//////
என்னமா உள்குத்து வெக்கிறாருய்யா மனுசன்....!
அழகான விமர்சனம்
சூப்பர் அண்ணே...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ், கண்ணீயமான ஆம்பளைங்க கழுத்துக்கு மேல தான் பார்ப்பாங்க, விக்கி மாதிரி//////
என்னமா உள்குத்து வெக்கிறாருய்யா மனுசன்....!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அண்ணே முடியல முடியல ஹிஹி
நுப்பது வசனங்களை நோட் பண்ணி , இயக்குனரை ஐந்து இடங்களில் பாராட்டி ஐந்து இடங்களில் பல்ப் கொடுத்து விமர்சனம் எழுத உங்களால் தான் முடியும்..
படம் எத்தனை முறை பார்பீங்க ?தியட்டரில் தான் பார்பீங்களா?
சி.பி. ..அண்ணே ஷ்டில்ஸ் இன்னும் எதிர்பார்தேன்னே....
ப்ச்...ஏமாத்தமா...இருக்கு ...
விமர்சனத்தைப் படிக்கிறதுக்கு முன்னாலேயே ஓட்டை முதல்லேயே குத்திட்டேன். இம்புட்டு ஸ்ரேயா படம் போட்டதுக்கப்பாலே வேறென்ன வேணும்ணேன்? :-)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வர வர ஷ்ரேயாவ பாத்தா கிக்கே வரமாட்டேங்கிதே அது ஏண்ணே?//
பானா ராவன்னா, உங்களுக்கு வராட்டி பரவாயில்லை. எனக்கு ஒரு ஃபுல் அடிச்சா மாதிரி இருக்கு! :-)
//செங்கோவி said...
ஸ்ரேயா சிடி ஏதாவது பாத்துட்டீங்களாண்ணே?//
ஏதாவது வந்திருந்தா சொல்லுங்க, நானும் பார்க்கணும். நான் பார்க்கிறதெல்லாம் ’கொமரம் புலி’ தெலுங்குப்படத்துலே வர்ற "டோச்சே டொரிகிண்டி டோச்சே" பாட்டுத்தான். (இசைப்புயலோட இசைக்காகத்தான்!)
:-))
//கோவை நேரம் said...
எப்படியோ ..விமரிசனமும் அருமை ..ஷ்ரேயா படங்களும் அருமை ...//
உங்க ரசனையை நான் பாராட்டுகிறேன். ஷ்ரேயா படங்கள் அருமையோ அருமை! :-)
//சி.பி.செந்தில்குமார் said...
ஸ்ரேயா கிட்டே முகத்\துல ஓவர் ரிச் லுக் இருக்கு, அதனால முடிஞ்ச வரை முகத்தை பார்க்காதீங்க.//
இதைக் கண்டித்து நான் ஒரு மணிநேரம் லாக்-அவுட் செய்கிறேன்.
வழக்கம்போல் விரிவான விமரிசனம்!’’’சிபி முத்திரை!
Next hit a jeeva ku?
ஆமா நடிகை படங்களை எங்க புடிக்கிறிங்க....?எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க
nice!
>>>>>செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வர வர ஷ்ரேயாவ பாத்தா கிக்கே வரமாட்டேங்கிதே அது ஏண்ணே?//
ஸ்ரேயா சிடி ஏதாவது பாத்துட்டீங்களாண்ணே?<<<
ண்ணே வந்திட்டுதாண்ணே எனக்கு ஒரு சி.டி. பார்சல்!:-)
>>>>>செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ த்ரிஷா புடிக்குதே?//
அதுகிட்ட என்ன இருக்குன்னு பிடிக்குது?..இதைக் கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்றேன்!<<<<
எல்லாத்தையும் பாத்திட்டு என்ன இது நன்றி கெட்ட பேச்சு! எனக்கு இது பிடிக்கல! :-)
வன்மையாகக் கண்டிக்கிறேன்!
ஹீ...ஹீ...ரைட்டு
Jeevakuthan charecter suit agaliye. Ezhundhu varama padathai muzhusa ukandhu indha padathai parthutu varanuma?
அண்ணாச்சி கமெண்ட் போடா மறந்திட்டன். விமர்சனம் சூப்பரா இருக்கு
ஆக்ஷன் படத்திலும் ரசிக்க வைத்த வசனங்கள் ரசிக்க வைக்கின்றன்.
வசனங்களை அருமையாக கவனித்து எழுத்திய திறமைக்கு பாராட்டுக்கள்.
sandika la deivathirumagal dhan innum odudhu!!
படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஒரு திருப்தி இல்லை கிளைமாக்ஸ் நல்லாருக்கு
Post a Comment